ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஜுராசிக் வேர்ல்ட் படத்திற்கான படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கையாண்ட யுக்தி ஊரடங்கு உத்தரவு தான். தற்போது பல மாதங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பிற பகுதிகளிலும் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, ஹாலிவுட்டை […]
Tag: Hollywood
பிரபல ஹாலிவுட் நடிகை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை அனைவரும் கண்டிருப்போம். அந்தவகையில், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு திரைப்படம் குவாண்டம் ஆப் சோலஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்ஒல்கா கரிலெங்கா. இவர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு உள்ளதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு அங்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நான்கு வகை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். அனைவரும் உங்களது […]
சினிமாவில் வில்லன்களாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு படத்தில் ஆப்பிள் மொபைலை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுவதாக பிரபல பாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆப்பிள் நிறுவனம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக சினிமாக்களில் ஹீரோக்களுக்கு மட்டுமே ஐபோனை உபயோகிக்கும் அனுமதியை வழங்கி உள்ளதாகவும், வில்லன்கள் ஐபோனை பயன்படுத்தக்கூடாது என்று கூறி அனுமதியை மறுத்து வருவதாகவும் தெரிவித்தார். சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் […]
புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த பார்த்திபன் தனது படத்தை பற்றிய தகவல்களை கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் தான் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டதோடு தனது ஒத்த செருப்பு திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். தனது திரைப்படத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை அது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அடுத்ததாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருப்பதாகவும் இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் […]
ஹாட் தம்பதிகள் என உசுப்பேற்றியவர்கள் முன்னிலையில் லிப்கிஸ் செய்து தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினர் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியினர். வாஷிங்டன்: கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்கு ஜோடியாக வருகைதந்த பிரியங்கா – ஜோனஸ் தம்பதியினர், பேட்டியின்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்த்தி அனைவரையும் பரவசப்படுத்தினர். ஹாலிவுட் ஹாட் தம்பதிகளாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் – அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸும் வலம்வருகின்றனர். இதில் பிரியங்காவைவிட ஜோனஸ் 10 வயது குறைந்தவராக இருந்தாலும், இருவருக்குள்ளான […]
வாஷிங்டன்: 2005ஆம் ஆண்டு பிரிவுக்குப் பிறகு விடுமுறை நாளில் ஒன்றாக இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார் ஜெனிபர் அனிஸ்டன் – பிராட் பிட் : நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னாள் காதலர்களான ஜெனிபர் அனிஸ்டன் – பிராட் பிட் மீண்டும் தங்களுக்குள்ளான உறவை புதுப்பித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் நட்சத்திர காதலர்களாக வலம் வந்த அனிஸ்டன் – பிராட் பிட் 2000ஆவது ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இதையடுத்து 2005ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதைத்தொடர்ந்து ஹாலிவுட் நடிகை […]
தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் த்வெயின் ஜான்சன் கூறியுள்ளார் . ஹெர்குலஸ், ஃபாஸ்ட் & ப்யூரியஸ் போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் புகழ்பெற்ற ராக் என அழைக்கப்படுபவர் த்வெயின் ஜான்சன். இவர் ஒரு முன்னாள் குத்துசண்டை வீரர் என்பது ஆவர் . மேலும் இவருக்கு இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்நிலையில் அடுத்து ஜுமான்ஞ்சி தி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் இவரது நடிப்பில் வெளியாக […]
பிரான்ஸ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுதிய நடிகை,கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவர் என்று பெயர் பெற்ற அமெரிக்க நடிகை ஜீன் செபர்க் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டது. அவரது அரசியல் ஈடுபாட்டால் எஃப்பிஐயின் உளவு வளையத்துக்குள் சிக்கி பல்வேறு டார்ச்சர்களை அனுபவித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தில் செபர்க் என்ற படத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட். இந்தப் படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ்: எஃப்பிஐ-ஆல் உளவு வளையத்துக்குள் […]
டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு : ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, லின்டா ஹாமில்டன், கேப்ரியல் லூனா, மெக்கன்ஸி டேவிஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் வெளியானது. டெர்மினேட்டர் பட வரிசையில் வெளியான இத்திரைப்படத்திற்கு பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இம்முறை கதை மற்றும் திரைக்கதை எழுதியிருந்தார். டிம் மில்லர் இயக்கத்தில் வெளியான இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. டெர்மினேட்டரை […]
1982ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அமிதாப் பச்சனுக்கு ஏற்றப்பட்ட ஒரு வித வைரஸ் தொற்றால் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்தியா முழுவதும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர், சினிமா மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார். பிக் பி என்று […]
நடிகை மேகா ஆகாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘சாட்டிலைட் ஷங்கர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், இன்று அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகா ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். சாட்டிலைட் சங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சூரஜ் பன்சோலிக்கு காதலியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். […]
புதிய படமான Spider-Man, Far From Home டிரெய்லர் வெளியானது. மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனின் புதியபடமான Spider-Man, Far From Home வெளியாகியுள்ளது . ஸ்பைடர் மேனாக நடித்துள்ள டாம் ஹாலந்து லண்டன் வெனிஸ் நகரங்களில் தமது புதிய படத்தின் டிரெய்லர் பற்றிய ரசிகர்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளார் . இந்த படம் ஜூலை 2ம் தேதிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது .
தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எந்திரன் படத்தை அடுத்து தற்போது ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரஉள்ளார். இந்த படத்தை பொன்னியின் செல்வன் நாவலை வைத்து திரைப்படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் கவனம் முழுவதும் ஹாலிவுட்டின் பக்கம் […]