பிரபல தொழிலதிபர் தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தினை ரூ. 7 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். உலகளவில் மக்கள் மத்தியில் வீடு, நிலம் வாங்குவதில் பெரும் போட்டி நிலவுகிறது. அதன் விளைவுதான் ஹாங்காங்கில் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிலதிபர் ஜானி சியுங் ஷுன் யீ (Johnny Cheung Shun-yee) தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் இடத்தினை ரூ.7 கோடிக்கு விற்பனை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஹாங்காங்கில் மிக விலை உயர்ந்த 79 அடுக்குமாடிக் கட்டடமான […]
Tag: HongKong
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ் பெறப்படும் என ஹாங்காங் அறிவித்தது. கடந்த 3 மாதங்களாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்லும் திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான். ஆகவே அரசின் முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. மேலும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலககோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் […]
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக செயல்பட்டு வந்த 210 யூடுயூப் சேனல்களை கூகுள் முடக்கியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலமாக மற்ற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது சீனாவும் அதேபோல பின்பற்றுவதாக வலைதள ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் அதிக சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருபவர்களை ஐ எஸ் ஐ எஸ் (ISIS) தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்தும், சமூகத்தின் கரப்பான்பூச்சிகள் போல் சித்தரித்தும், யாரோ பின்புலமாக இருந்து ஒருங்கிணைத்தது போல் செயல்பட்ட 1000 கணக்குகளை […]
ஹாங்காங்கை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் சீனா தங்களது படைகளை குவித்துள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்கிறது. ஆகவே அரசின் இந்த முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அரசு தனது முடிவை திரும்ப பெற்றது. இருப்பினும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் […]