காதலர் தினம் நெருங்குவதை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீன நாட்டு மலர்களை வாங்குவதற்கு வெளிநாடுகள் தயக்கம் காட்டுவதால் ஓசூர் ரோஜா மலர் தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரோஜா பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக அங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள் வாங்குவதில் வெளி நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து இந்தியாவில் தமிழகத்தின் ஓசூரிலிருந்து சாகுபடி […]
Tag: Hosur
ஓசூர் அடுத்து யூ.புரம் கிராமத்தில் கஞ்சா விற்றுவந்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் மாணவர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பனை செய்துவந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், கெலமங்கலம் காவல் துறையினர் யூ.புரம் கிராம பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக சிறு சிறு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சாவை நிரப்பி […]
ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர் என்பவரை காமராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டி சாய்த்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சூளகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு ஓசூரில் பிரபல ரவுடி ஜான் பாஷா ரயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்றபோது […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 4 ஆயிரம் கிலோ கறியுடன் பிரம்மாண்டமான அசைவ விருந்து நடைபெற்றது. ஓசூர் அருகே திம்மஞ்சந்திரம் கிராமத்தில் ஸ்ரீசப்பல் அம்பாள் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் கறி விருந்து பரிமாறப்பட்டது. இதற்காக 60 ஆடுகள் ,2டன் கோழிக்கறி மற்றும் 1டன் வெண்பன்றி இறைச்சி வெட்டப்பட்டு சமைக்கப்பட்டன இதில் கேழ்வரகு களி அரிசி சாதம் ஆகியவற்றுடன் மூன்று வகைகளிலும் உணவு விருந்தாக பராமரிக்கப்பட்டது .ஓசூர் சுற்றுவட்டாரங்களில் 50 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த கறி விருந்தில் […]
ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]
ஓசூரில் மக்கள் சேவைகள் குறித்து விளக்கப்பட்ட அறிமுக கூட்டத்திலேயே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை உரிய முறையில் எவ்வாறு பயன்படுத்துவது ? நீரில் உள்ள சத்துக்கள் , டெங்கு போன்ற காய்ச்சலை தடுக்க சாக்கடைகளை சுத்தம் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3 1/2 வயது குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவரை பிரிந்து தனது 3 1/2 வயது மகளுடன் வசித்து வந்தவர் நந்தினி. இந்த நிலையில் கள்ளக்காதலனுடன் மதுபோதையில் இருந்த நந்தினி தன் மகளுக்கு மது கொடுத்ததோடு, பலமாக மகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரத்த வாந்தி எடுத்ததால் குழந்தையைக் […]
ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சோதனைச் சாவடி சாலையில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அதில், ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவுக்கு 550 கேன்களில் கடத்திச் சென்ற 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை […]
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இச்சட்டம் மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தமிழ்நாட்டில் பல்வேறுப் பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் […]
கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் புகுந்த 60 காட்டுயானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 60 காட்டுயானைகள் கர்நாடகாவில் இருந்து வந்திருப்பதால் அந்த யானைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு செல்லாத வகையில் வனத்துறையினர் தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானைகள் அனைத்தும் இரவு நேரங்களில் தேன்கனிக்கோட்டை, ஊடேத்துர்க்கம் வழியாக வந்து சானமாவு வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் சானமாவு வனப்பகுதியை சுற்றிலும் தென்பெண்ணை ஆற்று […]
ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓசூரை அடுத்த கருப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் சதீஷ் ஆகியோர் ஓசூர் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பல்சர் பைக்கில் சென்றுள்ளனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி முனிவர்மன் என்பவருடன் சின்ன ரத்தினம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வளைவில் வாகனத்தை இரு திறப்பினரும் வேகமாக திருப்பியதில் எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு […]
கிஷ்ணகிரியில் ரஜனி ரசிகர் மன்றத்தினர் ஏரியை தூர்வாரியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பழமை வாய்ந்த ஏரியை ரஜினி ரசிகர் மன்றத்தினர் தூர்வாரி சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அச்சாகி பள்ளி கிராமத்தில் உள்ள பழமையான எம் பி ஆர் பிரகாரம் ஏறிகள் தூர்வாரினார்கள். முன்னதாக தூர்வாரும் பணிகளுக்கு முன்பு ரஜினி ரசிகர்கள் அனைவரும் மழைநீரை சேமிப்போம் நீர் நிலைக்களைக் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர் இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு ஏரி […]
ஓசூரில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த மனைவி சாந்தியை கொலை செய்து விட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியில் இளையராஜா மற்றும் சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து தம்பதியினர் இருவரும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் […]
பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கயிருக்கிறது. STRR திட்டம் என சுருங்க அழைக்கப்படும் சாட்டிலைட் நகர வட்ட சாலை திட்டத்தின்கீழ் ஓசூரிலிருந்து ஆனேக்கல்,கனகபுரா,ராம்நகர்,மாகடி வழியாக பெங்களூருக்கு 6 வழி அதிவிரைவுச் சாலை அமைய இருக்கிறது .இதற்கு தேசிய நெடுஞ்சாலை 948-A என பெயரிடப்பட்டுள்ளது.மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் 4,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.சாலையின் மொத்த நீளம் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து சுற்றி வருவது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஓசூருக்கு அடுத்துள்ள உள்ள போடூர் ,அத்திமுகம் போன்ற பகுதிகளில் 16 காட்டு யானைகளும், ஓசூர் பகுதியில் 7 காட்டு யானைகளும் கிராமங்களுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகமாக காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து விரைவில் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட […]
பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கின் தண்டனையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது . 1998_ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியத்தை எதிர்த்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர் . ஒரு கட்டத்தில் இந்த போராட்டத்தில் கல்வீச்சு , பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி தீவைப்பு வைப்பது என வன்முறை வெடித்தது. இது தொடர்பாக காவல்துறை 108 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை M.P,M.L.A_க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரித்ததில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் […]