வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடுக்கூடலூர் பகுதியில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதேபோல் சில வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் இருக்கிறது. இதனால் வீடுகளில் தங்க முடியாமல் […]
Tag: house destroyed
பலத்த மழை பெய்ததால் வீடு இடிந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பெருமாள்கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் சின்னகாமு என்பவரது தோட்டத்தில் இருக்கும் வீடு இடிந்து விழுந்தது. அந்த சமயம் சின்னகாமு தனது மனைவி பெருமாயியுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டுள்ளனர்.
தொழிலாளியின் வீட்டு மேற்கூரை ஓடுகள் நொறுங்கி விழுந்து விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முருகனின் குடும்பத்தினர் காலை 7 மணியளவில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவரது வீட்டு மேற்கூரை ஓடுகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து விட்டது. மேலும் வீட்டு […]