வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில், மேலாளர் முத்துராமன் முன்னிலையில் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து உள்ளனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற […]
Tag: human chain
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்பை வட்டார மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக இஸ்லாமிய மக்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மனித சங்கிலி போராட்டத்தை தற்போது தொடங்கியுள்ளனர். இந்த மனிதச்சங்கிலி போராட்டமானது சேரன்மகாதேவி ஜும்மா பள்ளிவாசலில் தொடங்கி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்து போராட்டம் நடத்த உள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் காந்தி தேசம் இது காவியமயம் ஆக்க விடமாட்டோம் என கோஷமிட்டபடி செல்கின்றனர். இஸ்லாமியர் மட்டுமின்றி […]
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மனித சங்கிலியின் ஒரு பகுதியாக சென்னையில் 40 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக ஒற்றுமை மேடை சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட இம்மனித சங்கிலியில் தமிழகத்தின் […]
பிகாரில் மனிதச் சங்கிலி நிகழ்வை பதிவுசெய்ய ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து பொதுமக்களின் பணத்தை வீணடித்துவிட்டதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ், பிகாரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “பிகார் மாநிலத்தில் கடுமையான வேலையின்மை உள்ளது. ஆனால் மனிதச் […]
சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கிமீ நீள மனித சங்கிலி பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. வரதட்சணை, குழந்தை திருமணம் உள்ளிட்டவைக்கு எதிராக நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இதன் ஒரு அங்கமாக, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கி.மீ நீள மனித சங்கிலி அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி உள்ளிட்ட பல […]