ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பணத்தை எலக்ட்ரீசியன் நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். சேலம் மாவட்டத்திலுள்ள அய்யந்திருமாளிகை பகுதியில் எலக்ட்ரீசியனான முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னங்குறிச்சி செல்லும் சாலையில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் கார்டை எந்திரத்தில் சொருகிவிட்டு ரகசிய எண்ணை பதிவு செய்வதற்கு முன்பு 4000 ரூபாய் எந்திரத்தில் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து சிறுது நேரம் அங்கேயே பணத்துடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் […]
Tag: humanity
சாலையோரம் கிடந்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல புத்தநேரி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பொன்னம்மாள் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது சாலையோரமாக ஒரு கைப்பை கிடந்துள்ளது. அதில் 26 ஆயிரத்து 380 ரூபாய் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். […]
ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தனது ஆட்டோவில் பெண் தவறவிட்ட 2 1/2 பவுன் தங்க சங்கிலியை நேர்மையாக ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ரமேஷ் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12 மணி அளவில் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் 3 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு […]
ரோட்டில் கீழே விழுந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மினி ஆட்டோ டிரைவரை போலீஸார் பாராட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் சந்திர மோகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு மினி ஆட்டோ வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரமோகன் அவிநாசி தாலுகா அலுவலகம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவரது வாகனத்திற்கு முன்பு பல இருசக்கர வாகனங்கள் அவிநாசி வடக்கு ரத […]
பண்ணாரி அருகே ஏற்பட்ட வாகன விபத்து ஏற்பட்டதில், உயிருக்கு போராடிய டிரைவரை மீட்காமல், சாலையோரம் சிதறிக்கிடந்த தக்காளிப் பழங்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் மனித நேயம் காற்றில் பறந்துவிட்டது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து தக்காளிப் பழங்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி, சரக்கு வாகனம் ஓன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வாகனம் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்த சமயம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் பலத்த […]