சிகிச்சைக்காக லண்டன் வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவரை சுட்டுக் கொல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. பானாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிஃப், சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் பேட்ரியாட்டிக் ஃப்ராண்ட் ( Pakistan Patriotic […]
Tag: Imran Khan
உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் சர்ஃப்ராஸ் அகமது பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படுவார் என அந்நாட்டு பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவும், பயிற்சியாளராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பதவியேற்றதில் இருந்து, பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. […]
கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு நவம்பர் 9ஆம் தேதியை இம்ரான் கான் தேர்ந்தெடுக்க காரணம் வெளியாகியுள்ளது. சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் கா்தார்பூரில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதி சுதந்திரத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் வசம் சென்றது. இதையடுத்து இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தும் நோக்கில், பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் […]
பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசை கலைக்குமாறும் இல்லையெனில் அந்நாட்டை முடக்கிவிடுவோம் எனவும் ஜமித் உலெமா இ இஸ்லாம் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி (நவாஸ்), அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பெஷாவர் நகரில் இன்று நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜமியாத் உலெம் இ இஸ்லாம் – […]
சவுதி அரபியாவிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. […]
பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினத்தையடுத்து பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையடுத்து இந்திய பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். மோடி அனுப்பியுள்ள கடிதத்தில் பாகிஸ்தானின் தேசிய தினத்தை முன்னிட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். பயங்கரவாதமும் , வன்முறையும் இல்லாத நிலையில், நாட்டின் ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றிற்காக தெற்காசிய மக்கள் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்று மோடி தெரிவித்துள்ள […]