பாகிஸ்தானில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு, கொரோனா பரவ பெண்கள் தான் காரணம் என மேடையில் பேசியதற்கு அந்நாட்டு பிரதமர் எதுவுமே சொல்லாததால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் எத்சாஸ் டெலிதான் எனும் நிதி திரட்டும் விழா இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த விழாவானது பல முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கொரோனா வைரஸில் இருந்து நாட்டை காக்க மக்களிடம் நிதி திரட்டும் பெரும் நிகழ்வாக கருதப்பட்ட இந்த விழாவில் பிரதமர் முன்னிலையில் […]
Tag: #imrankhan
பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் தங்களது குழந்தைகள் பசியால் வாடும் சூழல் நிலவியுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை தடுப்பதற்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோதுமை பயிர்களை தின்று அழித்து நாசம் செய்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் […]
பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறது பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் அதிரடியாக தேசிய நெருக்கடி நிலையை (அவசர நிலை) அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுவாக வெட்டுக்கிளிகள் குளிர் காலங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் இந்த முறை, அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாக வெட்டுக்கிளிகள் அங்கேயே டேரா போட்டு தங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்னசெய்வதென்று […]
பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் செய்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் கூட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவாசயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்நாட்டில் விவசாயத்தை அதிகமாக நம்பியிருக்கும் பஞ்சாப் மாகாணம் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது . வெட்டுக்கிளிகளின் வேட்டையால் கடந்த ஜனவரி மாதத்தில் மாவுகளின் விலைகள் 15 சதவிகிதமும், சர்க்கரை விலை […]
70 ஆண்டுகளில் இல்லாத வகையில், வெட்டுக்கிளிகள் கூட்டம் பாகிஸ்தானைத் தொடர்ந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் படையெடுத்து சென்று வேளாண் பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளையெல்லாம் சிறிய ரக விமானங்கள் மூலம், பூச்சிமருந்து தெளித்து விரட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பார்க்கும் போது நமக்கு கண்டிப்பாக நியாபகம் வருவது சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “காப்பான்” படம் தான். அந்த படத்தில் வில்லன் தரப்பில் இருந்து, வெட்டுக்கிளிகளை வளர்த்து ஏவி, வேளாண் […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து சென்று பயிர்களை நாசம் செய்து வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து, தெற்கு பஞ்சாப், கைபர் பக்துன்க்வா உள்ளிட்ட பல பகுதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 9 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வெட்டுக்கிளிகள் பரவி பயிர்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் […]
பல்வேறு சூழ்நிலைகளில் தங்கள் நாட்டுக்கு சீனா உதவி செய்திருப்பதால், இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அமைதி காத்துவருகிறது. ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்தார். அப்போது, உய்குர் இஸ்லாமியர்களின் நிலை சீனாவில் மோசமாக இருந்தபோதும், அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு காரணம் என்ன? என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு பதிலளித்த இம்ரான் கான், “இந்தியாவில் நடைபெறுவதற்கும் சீனாவில் நடைபெறுவதற்கும் வேறுபாடு உண்டு. சீனா தங்களுடைய நெருங்கிய […]
அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் தலையிடாது என அந்நாடு பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல் கவலை அளிப்பதாக […]
இந்திய இஸ்லாமியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அசாதுதீன் ஓவைசி பதில் அளித்துள்ளார். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் நிறுவனரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, “வங்கதேசத்தில் நடந்த ஒன்றை, இந்தியாவில் நடந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் காணொலிக் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். முகமது அலி ஜின்னாவின் தவறான கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்கள் என்பதில் […]
கர்தார்பூரின் அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறான ஒன்று என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. நரோவல் மாவட்டம் கர்தார்பூரிலுள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வர். இந்தாண்டு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல சீக்கியர்கள் கர்தார்பூர் செல்லவுள்ளனர். இந்நிலையில், நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளதாகவும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், இந்தத் தகவல்களைப் பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. […]
பாக்.பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு வாலிபர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவதாரம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரைக்கும் எடுத்து சென்றது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி தோல்வி […]
பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் உறுதியாக இணைவோம் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் 3 நாட்கள் அரசு பயணமாக அமெரிக்கவிற்க்கு சென்றார். அங்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்று இரு வரும் பேசி உறுதி செய்துகொண்டனர்.பின்னர் இம்ரான்கான், அமெரிக்காவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பணியாற்றுகின்றது என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்காவிலுள்ள இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் இல்லையென்றும் பல்வேறு அமைப்புகள் கொண்ட 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றது என்றும் […]
அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு எந்தவித பாதுகாப்பும், முன் வரவேற்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வாஷிங்டன் சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான உள்நாட்டு விமர்சகர்களுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்டித்து பாகிஸ்தான் நாளிதழ்களில் வெற்றுத் தாள்களை தலையங்கமாக அச்சிட்டு வருகின்றனர். இதையடுத்து அமெரிக்காவின் ஊடகங்களையும் புறக்கணிக்க இம்ரான் […]
இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் அதிபர் அதிபர் டொனால்டு டிரம்பை நாளை சந்தித்துப் பேசுவதற்கு இம்ரான்கான் 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இம்ரான் கான் தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல் சிக்கன நடவடிக்கையாக பயணிகள் விமானத்தில் சென்று டல்லாஸ் விமான நிலையத்தில் இறங்கினார். ஆனால் இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை. பாக். வெளியுறவு அமைச்சர் குரேஷி, மற்றும் அமெரிக்காவுக்கான பாக். […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடியும் , இம்ரான்கானும் 9 மணி நேரம் ஒரே அறையில் இருந்து எவ்வித பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் பரஸ்பரம் சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு […]