தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 283 பேர் குணமடைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல மாநில அரசாங்கங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமிருக்கிறது. […]
Tag: India
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மும்பையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,120 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகபடியாக பாதித்துள்ளது. மேலும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. ஊரடங்கு ஆதரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு 24வது நாளாக அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதின் காரணத்தால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு […]
கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது. அதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கொரோனா பிடியில் இருந்து அதிவிரைவாக மீண்டு வரும் மாநிலம் என்றால் […]
ஏப்ரல் 20 க்கு பின் 50% ஊழியர்களை கொண்டு அலுவலகங்களை செயல்படுத்தலாம் என அரசு அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென்று பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏப்ரல் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதால் IT மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலகத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் பொது போக்குவரத்து […]
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இல்லாத போது கொரோனா பாதித்தவர்களின் இரட்டிப்பு விகிதம் சுமார் 3 நாட்களாக இருந்தது. ஆனால், ஊரடங்கு அமலில் இருந்த பிறகு, குறிப்பாக கடந்த 7 நாட்களில் எடுத்த தரவுகளின் அடிப்படையில், கொரோனா பாதித்தவர்கள் இரட்டிப்பு விகிதம் 6.2 நாட்களாக ஆக உள்ளது என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளது. இதிலிருந்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுமார் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் […]
குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று 163 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 92 பேருக்கு கொரோனா புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து குஜராத்தில் மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 929-ல் இருந்து 1,021 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் குஜராத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 1,021 பேரில் […]
நாடு முழுவதும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. அதில், 11,201 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 1,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். சீனாவில் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடத்த சில நாட்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில், மீண்டும் […]
அரசி, கோதுமை, ரூபாய் நோட்டுகளை தட்டுப்பாடு ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இணையப் பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற தேவை அதிகரித்துள்ளது. அரிசி கோதுமை ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருக்காது. இந்தியாவில் அரிசி கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு இருக்காது. தட்டுப்பாடு ஏற்படக்கூடாது […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் முதல் மாநிலம் கேரளாவாக இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உலகமே அதிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவின் முதல் அடியை தான் வாங்கினாலும், கேரளா அதற்கு அஞ்ச இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவலை தடுக்க போராடி வரும் இந்தச் சூழ்நிலையில் கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவை கையாள திக்குமுக்கு ஆடிக்கொண்டிருக்கும் போது, கேரளா மட்டும் கொரோனாவை […]
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டினர் பாகிஸ்தான் திரும்ப இந்தியா உதவியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதிவரை இந்தியா முழுவதும் அமல்படுத்தியிருந்த ஊரடங்கு உததரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஆகிய பகுதிகளில் சிக்கியிருக்கும் 41 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு திரும்புவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதனை உடனடியாக […]
முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.245 கோடி பெறப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பிரதமர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டதை போல, அனைத்து மாநிலங்களிலும் முதல்வர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. அதில், பெரிய நிறுவனங்கள், பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.130 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்து. நாடு […]
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,489ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 414ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று […]
புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. […]
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 165 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3081 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 23வது நாளாக அமலில் உள்ளது. மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவதை கட்டுப்படுத்த […]
கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, பாதிப்பு குறைவாக உள்ள பகுதி, பாதிப்பு இல்லாத பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் […]
இந்தியாவின் சுமார் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். மேலும், கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டள்ளது என அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” ஜனவரி 7ம் தேதி சீனாவில் முதல் […]
கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் மாற்று மருத்துவத்தை தற்போது சோதித்துப் பார்க்க முடியாது என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருங்கள் என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மனுவை நிராகரித்தது. உலக அளவில் கொரோனா வைரசால் […]
ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது கம்பெனி அலுவலகங்களை 50% ஊழியர்களுடன் இயக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 50 சதவிகிதம் ஊழியர்களை மட்டும் வேலைக்கு வர சொன்னாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையான அலுவலங்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை ஊழியர்களை கடைபிடிக்க செய்தல் உள்ளிட்டவற்றில் நிர்வாகம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மத்திய […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 117 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கையானது 10,815ஆக அதிகரித்துள்ளது. இதில் 9272 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1190 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வைரஸ் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை […]
திருச்சியில் இனி வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய கூடாது என 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குட்செட் யாரட்க்கு நாள்தோறும் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சரக்கு ரயில் மூலம் வந்து சுமை தூக்கும் தொழிலாளர்களால் இறக்கப்பட்டு பின் லாரியில் ஏற்றி அரசு குடோனுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஊரடங்கு காரணமாக சுமார் 350க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றி செல்வதால் லாரி ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் […]
கொரோனா தொற்று அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் பாலியல் கொடுமைக்கு உட்பட்டு மரணமடைந்துள்ளார். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் இரண்டு மாத சிசுவை கருக்கலைப்பு செய்து விட்டு தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் அதிக ரத்தப் போக்கின் காரணமாக அனுராக் நரேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தனர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து கொரோனா தொற்று இல்லை என […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,421லிருந்து 4,789ஆக உயர்ந்துள்ள நிலையில் 353 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா […]
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். சமண மக்கள் மகாவீரர் ஜெயந்தியை இன்று சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து […]
கொரோனா வைரஸ்சால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன . இந்தியாவிலும் கொரோனா தாக்கத்தால் நாளுக்கு நாள் பலி […]
நாளை முட்டாள் தினத்தை பயன்படுத்தி கொரோனா குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். நாளை ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் தற்போது நிறைய பேர் கண்டெண்ட் ரெடி செய்து இருப்பார்கள். எதற்காக என்றால் தற்போது நாடே அச்சத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயம் கொரோனா மக்களின் அறியாமையையும், பயத்தையும் பயன்படுத்தி சிலர் வீண் வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் மக்களிடையே பரப்பி மேலும் பீதியை உண்டாக்கி வருகின்றனர். நாளை ஏப்ரல்-1 இதற்காகவே தனியாக கண்டன்ட் தயார் செய்திருப்பார்கள். ஆனால் […]
வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஜூன் மாதத்திற்குள் நாற்பதாயிரம் செயற்கை வெண்டிலெட்டர்களை தயார் செய்து தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழிற்சாலைகளில் கட்டாயமாக வென்டிலேட்டர் களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாக இருக்கிறது. ஆகவே முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில […]
இந்தியாவில் சிறிது காலத்திற்கு ஊர் திருவிழா, திருமண நிகழ்வு உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டாம் நிலை கட்டத்தில் மட்டுமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்த பட்சத்தில், தற்போது அதிகரித்து வருகிறது. இத்தனை பாதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் திருமண நிகழ்வுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்றது தான் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து திருமண நிகழ்ச்சிகள், மத வழிபாடு தொடர்பான பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை […]
கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க ரோபோ ஒன்று புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க மக்கள் 21 நாள்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் தங்களது வேலையை திறம்பட செய்து வருகின்றனர். அதிலும் மருத்துவர்களை விட செவிலியர்கள் அதிகநேரம் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அவர்களுடனே இருந்து […]
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு உழைக்க வந்த உழைப்பாளிகளே, விருந்தினர்களை உங்களுக்காக கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்துள்ள வசதிகளை அறிந்து கொள்க, நீங்கள் குடியிருக்கும் வீட்டின் அல்லது கட்டிடத்தின் உரிமையாளர் உங்களை வெளியேற்ற முயற்சி செய்தால் உள்ளூர் பஞ்சாயத்தில் முனிசிபாலிட்டி புகார் தெரிவிக்கலாம். அவர்களால் இப்போதைய சூழ்நிலையில் வெளியேற்ற முடியாது. உணவு பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உங்கள் உள்ளூர் பஞ்சாயத்தில் மக்கள் உணவகங்கள் மூலம் 20 ரூபாய்க்கு உணவு தயார் செய்து தரப்படுகிறது. இதற்கு உங்கள் லோக்கல் […]
முகக்கவசங்களை ரூபாய் பத்துக்கு மேல் இருக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனுடைய பதற்றம் தற்போது இந்திய மக்களிடையே பெரும் அளவில் பரவி கிடக்கிறது. ஆகையால் மக்கள் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் இதன் மூலம் லாபம் ஈட்ட முயலும் சிலரோ மருந்து கடைகளில் முக கவசங்களை ரூபாய் 25 லிருந்து 50 வரை […]
மேற்கு வங்கத்தில் 7 தொழிலாளர்கள் தங்களைத்தாங்களே மரக்கிளையில் தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதைத் தவிர தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. இதை முன்கூட்டியே அறிந்த சென்னையில் பணிபுரிந்த ஏழு மேற்குவங்க தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த சுகாதார மருத்துவர்கள் உங்களை நீங்களே சுய தனிமைப் படுத்திக் கொள்ளுதல் நல்லது […]
ஆந்திராவில் அன்னதானத் திட்டத்தின் கீழ் ஆதரவற்றோருக்கு உணவு அளிக்க கோரி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார் ஆந்திர மாநிலத்தில் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கு கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் உணவளிக்க ஏற்பாடு செய்யுமாறு அம்மாநில கமிஷனர் பணீந்திர ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மாநிலமெங்கும் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரித்து வீடற்றோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு வழங்கி சேவை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இவரது இந்த யோசனை அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டெல்லியில் உத்தரபிரதேச தொழிலாளர்கள் பலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் அவரவர் மாநிலம் செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட மாநில அரசாங்கம் அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, உணவளித்து கவனித்துக் கொள்கிறது. தலைநகர் டெல்லியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல், பேருந்து இன்றி, உணவின்றி சாலைகளில் தங்கி […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 46 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 935ஆக அதிகரித்துள்ளது. கேரளா – 176, மகாராஷ்டிரா – 164, கர்நாடகா 74, தெலங்கானா 59, குஜராத் 54, ராஜஸ்தான் 54, டெல்லி 40, தமிழ்நாடு 40, பஞ்சாப் 38, ஹரியானா 33, உத்தரபிரதேசம் 45, […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி உலக நாட்டு மக்களின் உயிர்களை பறித்து அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 19 பேர் பலியாகியிருப்பதாகவும், 873பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
144 கடைபிடிக்க படுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் உணவு சமைத்து வழங்கி வருகிறார்கள். கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீடின்றி, சாலையோரம் வாழ்பவர்களுக்கும் வேலை இழப்பால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கும் உணவு வழங்க மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காவல்துறையினர் உணவு சமைத்து எடுத்துச் சென்று வெட்டவெளியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளவர்களுக்கு வழங்கினர். இதேபோல உத்தர […]
ஊரடங்கு உத்தரவு நிலுவையில் உள்ள இந்த சமயத்தில் கன்டெய்னர் லாரி மூலம் சொந்த மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட 300 தொழிலாளர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். கொரோனா பாதிப்பால் ஏப்ரல் 14 முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல நினைப்போர் செல்ல முடியாதபடி போக்குவரத்து முற்றிலுமாக மாவட்ட மாநில எல்லைகளுக்கு இடையே தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநில […]
கேரளாவில் சிறைக்கைதி ஒருவர் மது என நினைத்து கைகழுவும் சுத்திகரிப்பானை அருந்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறை ஒன்றில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக கவசம், கை கழுவுவதற்கு பயன்படும் சனிடைசர் உள்ளிட்டவற்றை கைதிகளை வைத்து சிறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் கைகழுவும் சுத்திகரிப்பான்-இல் ஆல்கஹால் வாசனை வருவதை உணர்ந்து விட்டு மது என நினைத்து ராமன் குட்டி என்ற கைதி கைகழுவும் சுத்திகரிப்பான் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]
பஞ்சாப்மாணவர் கை கழுவ நியாபகப்படுத்தும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் முதல் தமிழக சுகாதாரத்துறை வரை அனைத்து துறையும் கூறும் ஒரே விஷயம் அடிக்கடி கை கழுவுங்கள், உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள், குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பழகுங்கள் என்பதையே மிக அதிகமாக கூறிவருகின்றனர். அடிக்கடி கை கழுவுவதன் மூலம் நோயை […]
கொரோனா பரிந்துரைக்கப்பட்ட மருந்தை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாக்கு எதிராக மத்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் என்ற மருந்தை பரிந்துரை செய்தது. இந்த மருந்தானது பக்க விளைவுகளை கொண்டது என்றும், இதனை மருத்துவர்களின் ஆலோசனையின்றி எடுத்துக்கொண்டால், பின்விளைவுகள் ஏற்படும் என்பதால் அதனை தன்னிச்சையாக மக்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு பரிந்துரைத்ததை அடுத்து பல்வேறு நபர்கள் மருந்தகங்களுக்கு சென்று ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் மருந்தை வாங்கி உள்ளதால் இந்த எச்சரிக்கையை […]
கொரோனா அச்சுறுத்தி வரும் இந்த காலகட்டத்தில் மருந்தகங்களில் ஆணுறை விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருந்தகங்களில் கூட்டங்கள் நிறைந்து வழிகின்றன. இக்கட்டான காலகட்டத்தில் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் அதே சூழலில் ஆணுறை, கருத்தடை ஏற்படுத்தும் மருந்துகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளதாக மருந்தகங்கள் மற்றும் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.
கொசுக்கள் மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொசுக்கள் மூலம் டெங்கு போன்ற கொடிய உயிர் கொல்லி நோய்கள் பரவி பாதிப்புக்குள்ளான மக்களிடமிருந்து கொசு மூலம் பரவும் என்று அச்சம் அடைந்து தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கொசுக்களால் கொரோனா பரவாது என்று உறுதி அளித்துள்ளது. மனிதர்களால் மட்டுமே அது மற்ற மனிதர்களுக்கு […]
கொரோனா குறிப்பிட்ட சீசன் வியாதியாக மாறி விடக்கூடாது ஆகையால் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என புற்றுநோயியல் தலைமை விஞ்ஞானி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சீசன் தோறும் பரவக்கூடிய வைரஸாக கொரோனா மாறலாம். என்பதால் தடுப்பு மருந்தையும் எதிர்ப்பு மருந்தையும் பிரித்து கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தென் கோலார் பகுதியில் குளிர்காலத்தில் வேரூன்றிய வைரஸ் பாதிப்பு குளிர் காலத்தை கடந்து எதிர் நோக்கும் நாடுகளில் அதிகரித்தும் இருப்பதாக […]
கொரோனாவை தடுக்க லாக் டவுன் திட்டம் மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 4.5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதனை உலக நோய் தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மொத்தம் 150 நாடுகளில் 100க்கும் குறைவான நாடுகளே கொரோனாவால் பாதிக்கப் படாமல் இருக்கின்றன. இந்நிலையில் […]
144 தடை உத்தரவை முன்னிட்டு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் கடைகள் மட்டும் 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 144 தடை உத்தரவை இந்தியாவில் பிறப்பித்தார். இதனை ஏற்று பொதுமக்களும் தங்களது வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கிடைக்கும் கடைகள் மட்டுமே திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் […]
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு பிரபல தொழிலதிபர் தனது 30 பங்களாக்களை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வரக்கூடிய ஒரு தொற்றுநோய் கொரோனா வைரஸ். இது ஒரு நாட்டில் பரவத் தொடங்கினால் விரைவாக ஏராளமானோரை பாதிக்கும் என்பதால், இது பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் […]
ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல் சுற்றித்திரிந்த 2,535 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எண்ணிக்கையை காட்டிலும், அங்கு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது போலவே, கேரள முதல்வர் பினராய் விஜயனும் அதனை கடுமையாக அமல் படுத்தி வருகிறார். ஆனால் கேரள மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் […]
குஜராத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு […]