Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்த பள்ளி!

மகாராஷ்டிராவில் காதல் திருமணத்திற்கு எதிராக மாணவிகளை உறுதி மொழி ஏற்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்திய சமூகத்தில் ஊடுருவி இருக்கும் சாதிய கட்டமைப்பை உடைத்தெறிவதற்கு காதலின் பங்கு மிக முக்கியமானது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் மாணவிகளை காதல் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காதலில் ஈடுபட […]

Categories
தேசிய செய்திகள்

செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை… காவல் நிலையத்திலிருந்து தப்பிய மருத்துவர்..!!

ஆந்திராவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருந்த அரசு மருத்துவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரவீந்திரநாத் தாகூர் என்பவன் மருத்துவராகப் பணியாற்றி வந்தான். இவன் அங்கு வேலை பார்க்கும் செவிலியர்கள் இருவருக்கு அடிக்கடி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, வியாழக்கிழமை (நேற்று) செவிலியர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவனை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அஹ்மத்நகரில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி !

மகாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத்நகர் அருகே கே.கே.ரேஞ்சு என்ற பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், அக்ஷய் நவ்நாத் கய்வாட், சந்தீப் பொவ் சாஹிப் திவாடடே உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிர்பயா வழக்கு – குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி …!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் , கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.  முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: குற்றவாளிக்கு வாதாட புதிய வழக்கறிஞர் நியமனம்.!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் பவன் குப்தாவின் புதிய வழக்கறிஞராக ரவி காஸியை நியமித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் பவன் குப்தா. இவர் தரப்பு வாதங்கள் தாமதமாக முன்வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. தனது தரப்புக்காக வாதாட புதிய வழக்கறிஞரை நியமிக்க அவகாசம் வேண்டும் என பவன் குப்தா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய வழக்கறிஞராக ரவி காஸியை நியமித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்குத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘டெல்லி தோல்விக்கு வெறுப்பு அரசியலே காரணம்’ – அமித் ஷா

பரப்புரைகளின்போது முன்வைக்கப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சுக்களே டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்குக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளில் தெரிவித்தபடியே, ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. ஆம் ஆத்மி 62 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றின. இதையடுத்து, தேர்தல் தோல்விக்குக் காரணம் வெறுக்கத்தக்க பேச்சுக்களே என உள்துறை அமைச்சர் அமித் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – இன்று விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 14..!!

இன்றைய நாள்                 : பிப்ரவரி 14ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 45 -ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு           : 320ம் நாட்கள் உள்ளன. நெட்டாண்டு                        :  321 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 748 – அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர். 1014 – திருத்தந்தை எட்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரம்ப் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – யெச்சூரி தகவல்.!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். ஒடிசா மாநிலத் தலைநகர் புபனேஸ்வரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் இடதுசாரி தொண்டர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பயணத்துக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். அது டெல்லியாகவோ அல்லது குஜராத்தாகவோ இருக்கலாம். முதலில் அமெரிக்கா அழுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

தூதரகம் மூலம் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி..!

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் “டைமண்ட் பிரின்சஸ்” என்ற சொகுசுக் கப்பல் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட பயணிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். அதில் 162 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பு அரசியல் கட்சிகள், பொது […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கைது!

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜம்மு காஷ்மீர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்ததாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஜம்மு காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, ஒருவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், பயங்கரவாதியின் பெயர் தவுஃபிக் அகமது பட் எனவும்; அவர் மோங்கமா பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

பீச்…. பார்க்…. வசதியா இல்லை….. இது தான் BETTER…. 97% காதலர்கள் ரூம் புக்கிங்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு அதிக ஜோடிகள் ரூம் புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பிப்ரவரி 14 காதலர் தினம் இதற்கு முந்தைய காலகட்டங்களில் எல்லாம் காதலர் தினம் என்றாலே பீச், பார்க், சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்கு  தான் ஜோடிகள் செல்வார்கள். ஆனால் தற்போது OYO என்னும் ரூம் புக்கிங் செயலியில் காதலர்கள் பிப்ரவரி14 ஐ முன்னிட்டு அனைத்து இடங்களிலும் அதிக அளவில் ரூம் புக்கிங் செய்துள்ளனர். அனைத்து மாநிலங்களையும் கணக்கில் வைத்துப் பார்க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. போட்டோஸ் எல்லாம் பத்திரம்….. தனிநபர் விஷயங்களில் கை வைக்கும் மத்திய அரசு…!!

சமூகவலைத்தளங்களில் உள்ள தனி நபர்  கணக்குகளை மத்திய அரசு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் உள்ள தனித்தனி அக்கவுண்ட்களையும் அரசிடம் உங்களின் முழுவிவரத்தையும் அரசிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அரசும் அந்தந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் ஸ்டேட்டஸ் என்கின்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறோம். அதன்படி இனி நாம் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி..!!

வருகின்ற ஏப்ரல் 15-ஆம்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சிக்குள் பேசப்படுகிறது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தானாக முன் வந்து ராஜினாமா செய்தார். ராகுலை அக்கட்சியினர் சமாதானப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனாலும் முடிவில் பின் வாங்காமல் மீண்டும் பதவியை ஏற்க மாட்டேன் என மறுத்து விட்டார். இதையடுத்து சோனியாகாந்தி, கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் […]

Categories
தேசிய செய்திகள்

வேறு ஒருவருடன் தொடர்பு… மனைவியை நடு ரோட்டில்…. தர தர வென இழுத்து போட்டு… வெளுத்து வாங்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் அதிகாரி தனது மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் சரமாரியாக அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தார் (Dhar) நகரில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் பொறுப்பாளராக இருப்பவர் நரேந்திர சூர்யவன்ஷி. இவர் தனது மனைவியை நடுத்தெருவில் தர தரவென தள்ளி இழுத்து போட்டு தாக்குகிறார். அப்போது சக காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்துகின்றனர். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – நாளை விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வீட்டில்அழுகிய நிலையில் 5 சடலங்கள் … போலீசார் விசாரணை..!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியின் பஜன் பகுதியில் நேற்று ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஷம்பு (43) என்பவரின் குடும்பம் என தெரியவந்துள்ளது. மேலும் அவரது மனைவி சுனிதா(37), மகன்கள் சிவம் (17), சச்சின் (14) மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : லக்னோ நீதிமன்றத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு ….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் தீடிரென நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் 2 வழக்கறிஞ்சர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  இதுகுறித்து நடைபெறும் விசாரணையில் வரக்கறிஞ்சர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் மேலும் 3 நாட்டு வெடிகுண்டுகளை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“இந்திய தூதரகம் தேவையான உதவிகளை அளித்து வருகிறது”… ஸ்டாலினுக்கு ட்விட்டரில் ஜெய்சங்கர் பதில்..!!

இந்தியர்களுக்கு டோக்கியோவில் இந்திய தூதரகம் தேவையான உதவிகளை அளித்து வருகிறது என  ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்  சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை 1367 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனிடையே சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ […]

Categories
தேசிய செய்திகள்

சுற்று சூழல் பாதிப்பு… ஆண்டுக்கு 10,00,000 பேர் மரணம்… ஆய்வறிக்கையில் அதிர்ச்சி..!!

இந்தியாவை பொறுத்த வரை சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய பசுமை அமைப்பு சுற்றுச்சூழல் தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அணல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரி பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து மோசமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழப்பதுடன் பலர் நோய்க்கு ஆளாவதும் அதிகரித்து இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிர்பயா வழக்கு – குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி …!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் , கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.  முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு செக்…. உச்சநீதிமன்றம் உத்தரவால் அலறும் அரசியல் கட்சிகள் ….!!

குற்றப்பின்னணி வேட்பாளர்கள் விவரத்தை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் குற்றப்பின்னணி வேட்பாளர்களின் விவரங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக கூடிய அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் , […]

Categories
தேசிய செய்திகள்

கெஜ்ரிவால் பதவியேற்பு – பிற மாநில தலைவர்களுக்கு அழைப்பில்லை.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிற மாநில முதல்வர்கள் அழைக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.  கடந்த 8-ஆம்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி (நேற்று முன்தினம்) நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில்  வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்..!!

கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு தனியார் துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

2000 ரூபாய் நோட்டுக்கள் எங்கே ? ரிசர்வ் வங்கி அறிக்கையால் அதிர்ச்சி …!!

2000 ரூபாய் நோட்டுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்திலிருந்து குறைந்துவிடுகின்றன அதன் காரணமாக என்னவென்று பார்க்கலாம். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைகடந்த 2016ஆம் ஆண்டு செல்லாது என்று திடீர் என மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது.கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இதுவும் பார்க்கப்பட்டது.ஆனால் 2000 நோட்டுகள் வெளியிடப்பட்ட பிறகு தான் கருப்பு பணம் நடவடிக்கைகள் அதிகரித்ததாக புகார்கள் எழ தொடங்கின. அதனை உறுதிப்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவில் மூன்று நாள் பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு

இஸ்ரோவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ள மூன்று நாள் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ”பெங்களூருவிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் நிகழ்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் இயக்குநரானார் ராபின் சிங்

ஐக்கிர அரபு அமீரக கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநராக இந்திய வீரர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் சில மாதங்களுக்கு முன்னதாக அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த டக்கி பிரவுனை நீக்கியது. அவர் 2017ஆம் ஆண்டிலிருந்து அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். திடீரென பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஐக்கிய அமீரக அணியின் புதிய இயக்குநராக முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஹாங்காங், […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கொரோனா வைரஸ் தாக்கியதாக நினைத்து ஒருவர் தற்கொலை

சித்தூர் அருகே பாலகிருஷ்ணா என்பவர் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை அடுத்த எஸ்.என்.கந்திரிகா கிராமத்தில் வசிக்கும் பாலகிருஷ்ணா (50) என்பவர், உடல் பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர ராம்நாரயண் ருயா அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு வாயில் தொற்று நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை அவர் வீட்டில் உள்ள நபர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் ‘வாயில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 13 …!!

இன்றைய நாள் – பிப்ரவரி 13ம் நாள்  கிரிகோரியன் ஆண்டு :  44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு:  321 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 322நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 962 – உரோமின் ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1322 – இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது. 1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 1575 – பிரான்சின் மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார். 1633 – திரிபுக் கொள்கை விசாரணையை எதிர்கொள்ள கலீலியோ கலிலி உரோம் நகர் வந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கைகலப்பில் ஈடுபட்ட வீரர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்: கபில், அசார் சாடல்

வங்கதேச வீரர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட இந்திய வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான கபில் தேவ், அசாருதீன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி முடிந்தபின், இந்திய – வங்கதேச வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் களத்தில் ஓடிவந்த வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களிடம் சற்று எல்லை மீறி நடந்துகொண்டனர். இதனால், இரு அணிகளின் வீரர்களுக்கிடையே களத்தில் கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலை – அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..!!

மகாராஷ்டிரா அரசு பிப்ரவரி 29ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள் வேலையை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், அரசு உள்ளாட்சி அமைப்புகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிப்ரவரி 29-ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலையை அறிவித்துள்ளது. மேலும், இதர பிற்படத்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்புகள் ஆகியவை […]

Categories
தேசிய செய்திகள்

முத்தலாக் கூறிவிட்டு, பணம் கொடுத்து குழந்தையை அபகரிக்க முயற்சி!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தானா என்ற பெண், தனது கணவர் தன்னை துன்புறுத்திவிட்டு முத்தலாக் கூறியதாகவும்; தன்னிடமிருந்து தனது குழந்தையை அபகரிக்க முயற்சிப்பதாகவும் பாகத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுல்தானா என்ற பெண், தனது கணவர் தஸ்தகீர் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, தனக்கு முத்தலாக் கூறியதாகவும்; தன்னிடமிருந்து தனது குழந்தையை அபகரிக்க முயற்சிப்பதாகவும் நிஷா பாகத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணான சுல்தானாவின், கணவரான தஸ்தகீருக்கு ஏற்கெனவே ஒரு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : ஜப்பானில் நிறுத்தப்பட்ட கப்பலிலுள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா..!!

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனிடையே சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற […]

Categories
தேசிய செய்திகள்

எப்போதுதான் நீதி கிடைக்கும்? நிர்பயாவின் தாயார் நீதிமன்றத்தில் கண்ணீர்

எனது மகள் மரணத்துக்கு  எப்போதுதான் நீதி கிடைக்கும் என்று  நிர்பயாவின் தாய் ஆஷா தேவி நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.  டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

‘வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ – சுனில் அரோரா

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு பயன்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ்வின் கருத்தரங்கில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசிய அவர், தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்கள், மாதிரி குறியீடு குறித்து எதிர்வரும் நாள்களில் ஆலோசனையில் ஈடுபடும் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நுகர்வோர் பணவீக்கம் 7.59%ஆக அதிகரிப்பு …!!

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக நுகர்வோர்  பணவீக்கம் 7.59 %அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் 7.35 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2020 ஜனவரியில் 7.59 % ஆக அதிகரித்துள்ளது. காய்கறி , பழங்கள் , பருப்பு வகைகள் , எரிபொருள் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. கடந்த டிசம்பரில்  1.8%ஆக இருந்த தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஜனவரியில் -0.3%ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : FASTag பயன்படுத்துவோருக்கு ரூ 100 கட்டணம் தள்ளுபடி..!!

தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய சுங்கச்சாவடிகளில் மட்டும் ரூ 100 கட்டணம் தள்ளுபடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  சமீபத்தில் மத்திய அரசு பாஸ்டேக் (FASTag) முறையை கொண்டு வந்தது. அதன்படி வாகனத்தின் முன் பகுதியில் FASTag ஸ்டிக்கரை ஒட்டி விட்டால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சென்று கொண்டே இருக்கலாம். காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவே சுங்கச்சாவடிகள் மின்னணுமயமாக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக்கை அமேசான் மற்றும் எஸ்பிஐ, எச்டிப்சி மற்றும் ஐசிஐசிஐ, கோடக் மஹேந்திரா, […]

Categories
தேசிய செய்திகள்

” சொன்னா கேளுங்க உங்களுக்கு இந்த நோய் இல்லை” – பீதியில் நிகழ்ந்த சோகம்..!

ஆந்திர மாநிலத்தில் கொரானா  வைரஸ் தாக்கி இருப்பதாக நம்பிய நபர் ஒருவர் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவ விடக் கூடாது என்ற அச்சத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரமாநிலம் தொட்டு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதான பாலகிருஷ்ணய்யா இவர் மருத்துவ ஆலோசனைக்காக சனிக்கிழமை அன்று அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் கூறியதை தவறாக புரிந்து கொண்ட பாலகிருஷ்ணய்யா. தனக்கு  கொரானா வைரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – நாளை மறுநாள் விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

BREAKING : சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு …..!!

ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஐ.எப்.எஸ் , ஐ.ஆர்.எஸ் உட்பட 796 பணியிடங்களை நிரப்பபட இருக்கின்றன.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மார்ச் 3ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று UPSC தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வங்கி மோசடிகளை கையாள்வது எப்படி ?

அன்மையில் நடைபெற்ற பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கி மோசடி குறித்தும், வங்கி மோசடிகளை கையாள்வது எப்படி என்பது குறித்த சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ… மண்பானை உண்டியல்களில் அல்லது குழந்தை வங்கிகளில் தங்கள் பாக்கெட் பணத்திலிருந்து குழந்தைகள் கூட வீட்டில் சேமிக்க ஊக்குவிக்கப்படும் ஒரு சமூகத்தில், சாதாரண வங்கிகள் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் உருவகமாக கருதப்படுகின்றன. இன்னும் கொஞ்சம் ஆர்வத்தினால் ஈர்க்கப்பட்டு, வங்கி என்றாலே நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கை என்ற அடிப்படையில்,லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக சம்பாதித்த பணத்தை கூட்டுறவு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்துக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதம் விநியோகம் ?

ரூ. 39 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தளவாட தொழிற்சாலை வாரியம், ராணுவத்துக்கு விநியோகம் செய்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் : ஒடிசா மாநிலம் கொபால்பூரில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம், போர் விமானங்களைத் தாக்க பயன்படுத்தப்படும் ‘கே’ ரக ஆயுதத்தை ராணுவம் சோதனையிட்டது. இந்த சோதனையின்போது விபத்து நேர்ந்ததால்,’கே’ தயாரிப்பை உடனடியாக நிறுத்துமாறு தளவாட தொழிற்சாலை வாரியத்திடம் (Ordinance […]

Categories
தேசிய செய்திகள்

வடிவேலுவை மிஞ்சிய சம்பவம்… 4,50,000 டாய்லெட்டை காணோம்… அதிர்ச்சி புகார்..!!

 மத்தியபிரதேசத்தில் 4.5 லட்சம் கழிவறைகள் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு  வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே இருக்கும் 62 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கழிவறைகளை கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்  நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் ஒரு பேரதிர்ச்சி. அதாவது, சுமார் நான்கரை லட்சம் கழிவறைகள் கட்டப்படாமலேயே கணக்கு காட்டப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ 540 கோடி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு திடீர் பயணம் ஏன்? : அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

இந்தியாவுக்கு திடீர் பயணம் மேற்கொள்வது ஏன்? என்பது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று விளக்கமளித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். அதிபா் டிரம்ப்பின் 2 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அவருடைய மனைவி மெலானியா டிரம்ப்பும் உடன் வருகிறார். இந்தப் பயணம் தொடர்பாக அதிபர் டிரம்ப்  கூறியதாவது :- பிரதமர் மோடி எனது நண்பர், நல்ல […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW: டெல்லி ஆளுநருடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார்.   கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: வரும் 16ஆம் தேதி கெஜ்ரிவால் பதவியேற்பு விழா

கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது முறையாக  ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் வரும் 16 தேதி கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா – பாக். கிரிக்கெட் தொடர் நடக்க வேண்டும்’: யுவராஜ் சிங் விருப்பம்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர்கள் நடந்தால், அது கிரிக்கெட்டுக்கு நல்லது என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். முன்பு ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடர் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ரசிகர்கள் மத்தியில் இவ்விரு அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், சமீப ஆண்டுகளாக பல்வேறு அரசியல் காரணங்களால் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கிறது. இறுதியாக, […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பாஜக எம்எல்ஏ.. .உ.பி.யில் அரங்கேறிய மற்றொரு சம்பவம்

உதவிகேட்டுச் சென்ற பெண்ணை, பாஜக எம்எல்ஏவும் அவரின் உறவினர்கள் 6 பேரும் கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான வல்லுறவுக் குற்றங்கள் அதிகம்நடக்கும் மாநிலமாக பாஜக ஆளும்உத்தரப்பிரதேசம் உள்ளது. அதிலும்,ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், முன்னாள் மத்திய அமைச்சர்சின்மயானந்தா உள்ளிட்டோர் ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பத்ரோகி பகுதியைச் சேர்ந்த- கணவரை இழந்த பெண்ஒருவர், பாஜக எம்எல்ஏ ரவீந்திரநாத்திரிபாதியிடம் கடந்த 2014-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 1,50,000,00,00,000 பிரீமியம் வசூலித்து எல்ஐசி சாதனை…சொத்துமதிப்பு ரூ.32 லட்சம் கோடியைத் தாண்டியது …!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation) எனப் படும் எல்ஐசி-யின், புதிய பிரீமிய வருவாய் முதல் முறையாக ரூ. 1 லட்சத்து50 ஆயிரம் கோடியைத் தாண்டி சாதனைபடைத்துள்ளதாக, அந்த நிறுவனத்தின்தலைவர் எம்.ஆர். குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:எல்ஐசி நிறுவனம் புதிய வர்த்தக நடவடிக்கைகளின் மூலமாக 1.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.முதல் முறையாக இந்த மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், இதன்மூலம் எல்ஐசி நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 77.61 […]

Categories

Tech |