இன்றைய நாள்: பிப்ரவரி 12 கிரிகோரியன் ஆண்டு : 43 -ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 322 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு: 323 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.[1] 1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். 1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். 1593 – ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை […]
Tag: India
இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் மனைவி மெலனியா ட்ரம்ப்புடன் அகமதாபாத்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணித்தின் போது, தலைநகர் டெல்லிக்கும், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கும் செல்ல உள்ளனர். […]
திட்டங்களை செயல்படுத்தியது மட்டுமில்லாமல் பல அரசியல் நகர்வுகளை சாதூர்யமாக நகர்த்தி மோடிக்கு எதிராக சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்டமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. இதனிடையே, ஆம் ஆத்மி அலுவலகத்தின் வெளியே அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் ஒரு பதாகையை ஏந்தி நின்று கொண்டிருந்தார். அதில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை போட்டியானது கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையே என எழுதப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு 4 […]
வளர்ச்சிக்கான புதுவிதமான அரசியலில் ஈடுபட்டது தேர்தலில் வேலை செய்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி 63 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “‘டெல்லி மக்களை நேசிக்கிறேன். புதுவிதமான அரசியல் […]
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதை உறுதி செய்வதற்கு அன்னிய நேரடி முதலீடு, ஜிஎஸ்டி வரி வருமானம் என 7 காரணிகள் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் இல்லை என்றார். அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு, தொழில்துறையில் உற்பத்தி அதிகரிப்பு, அந்நிய செலவாணிகளின் உச்சம் என 7 காரணிகளை நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார். கடந்த […]
புத்த பிட்சு வேடத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற இரண்டும் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து இலங்கைக்கு போலியான இந்திய பாஸ்போா்ட்டில் செல்லமுயன்ற வங்காள தேசத்தைச் சோ்ந்த (Tutul) டியூடுல் (24),(Minto) மின்டொ (26) என்ற இருவரை சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையில் கண்டுபிடித்து கைது செய்தனா். மேலும் அவா்கள் இருவரும் புத்த பிட்சு வேடத்திலிருந்தனா். எனவே அவர்கள் கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொடர்ந்து இருவரும் […]
சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், டெல்லி […]
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.திமுக , மதிமுக , கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு , அமர்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகிற 24 மற்றும் 25 ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்ப் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துதல், ராணுவ […]
70 சட்டப்பேரவை உறுப்பினர்களைக்கொண்ட டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 62 சதவீத வாக்குப்பதிவு பதிவாகிய நிலையில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட இருக்கின்றன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்கியுள்ளது.
வீட்டில் தனியாக இருந்த சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த கரிம்நகரைச் சேர்ந்தவர் ராதிகா. பள்ளி மாணவியான இவர் தனது பெற்றோர்களுடன் வித்யாநகர் காலனியில் வசித்துவருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டில் நுழைந்து அவரைப் படுகொலை செய்துள்ளார். இதையடுத்து, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ராதிகாவை இறந்த நிலையில் கண்டு அதிர்ந்துள்ளனர். பின்னர், ராதிகாவின் பெற்றோருக்கும் காவல் துறையினருக்கும் அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். […]
சமீபத்தில் முடிவடைந்த டெல்லி சட்டப்பேரவையின் முடிவுகள் எப்படி இருந்தாலும் சிஏஏ, என்ஆர்சி தொடர்பான போராட்டங்களின் முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விளக்ககுகிறார் மூத்தப் பத்திரிகையாளர் சஞ்சய் கபூர். டெல்லி தேர்தலைப் பொறுத்தவரை அதில் பல்வேறு சவால்கள் உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியைப் பெறும். இதுவே, தொங்கு சட்டப்பேரவையோ அல்லது சுமாரான வெற்றியோ பெறுமேயானால், நாடு முழுவதும் பெரும் […]
சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு விழுக்காடு குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தேர்தல் அலுவலர் ரன்பீர் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி மாலையே அறிவிக்கப்பட்டது. முன்னதாக தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வாக்குப்பதிவு நடைபெற்று பல மணி நேரங்கள் ஆன பிறகும் அதுகுறித்த விவரங்கள் […]
ஸ்ரீரம்பூர் பகுதியின் பெண் கவுன்சிலர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மேற்குவங்க மாநிலத்தின் ஸ்ரீரம்பூர் நகராட்சியின் பெண் கவுன்சிலர் நாத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான இவர், நீண்ட காலமாக அக்கட்சியின் உறுப்பினராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், இத்தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து, சந்தன்னகர் காவல் ஆணையர் ஹுமாயூன் கபீர் கூறும்போது, “தற்கொலை செய்துகொண்டவர் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள குடிமை அமைப்பின் வார்டு எண் 16இன் பெண் கவுன்சிலர் […]
மத்திய பிரதேச மாநிலம் ராம்கிரியா கிராமம் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தின் ராம்கிரியா கிராமத்தின் அருகே பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை 10 மணியளவில் பன்னாவிலிருந்து பஹடிகெடா கிராமத்துக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றதாக துணை காவல் ஆய்வாளர் சித்தார்த் ஷர்மா தெரிவித்தார். இந்த விபத்தில் ராம் […]
இன்றைய நாள் – பிப்ரவரி 11ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 42- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 323 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 324 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: கிமு 660 – யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள். 55 – உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது. 244 – சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார். 1534 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். 1626 – எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் […]
கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரால் உருவாக்கப்பட்டது என்ற தகவல் இதுவரை புதிராகவே இருந்து வருகிறது . அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சி எனப்படும் […]
விமானத்திலிருந்து இறங்குவதற்கு நாற்காலி உதவி கேட்ட மூதாட்டியை மிரட்டிய குற்றத்திற்காக இண்டிகோ விமானத்தின் பைலட் மூன்று மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் பயணம் செய்த பெண், தனது 75 வயது தாயார் விமானத்திலிருந்து இறங்குவதற்கு, பொத்தன் மூலம் நாற்காலி வேண்டுமென்று உதவி கேட்டுள்ளார். ஆனால், விமான ஊழியர்கள் நாற்காலியுடன் தாமதமாக வந்துள்ளனர். அப்போது, அந்தப் பெண் ‘தாயாருக்காக நான் முன்னரே நாற்காலி உதவி கேட்டிருந்தும், ஏன் தாமதம் செய்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். அப்போது, […]
சமஸ்கிருதம் செத்த மொழி என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நடைபெற்றுவருகிறது. அப்போது, மத்திய சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பாஜக அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்தார். திருக்குறளை அடிக்கடி குறிப்பிட்டு பேசும் மத்திய அரசு, உலகின் மிக […]
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டைச் சேர்ந்த மற்றொரு குழு காஷ்மீருக்கு பயணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் உட்பட பலர் காஷ்மீருக்கு கடந்த வாரம் சென்றனர். இந்நிலையில், மற்றொரு வெளிநாட்டு குழு இந்த வாரம் காஷ்மீர் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வளைகுடா நாட்டைச் சேர்ந்த தூதர்கள் ஆகியோர் இந்தக் […]
ஹார்வார்டு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கலந்து கொள்ளவுள்ளார். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஹார்வார்டு பல்கலைக்கழகமும் ஒன்று. இந்தப் பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்படும் கருத்தரங்குகள் மிக பிரபலமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயக இந்தியாவில் சாதியும் அரசியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் மாணவர்கள் சார்பாக நடத்தப்படும் இந்த மிகப் பெரிய கருத்தரங்கில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கலந்து கொள்ளவுள்ளார். ஹார்வார்டு வணிக பள்ளி […]
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் தந்திருக்கிறது. வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனால் இட ஒதுக்கீட்டை நம்பி இருக்கக்கூடிய பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சீராய்வு மனு […]
கொரானோ வைரஸ் பாதித்த வுகாண் மாகாணத்தில் இருந்து 5 மில்லியன் மக்கள் மயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரானோ வைரஸினால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள சீனாவின் வுகான் மாகாணத்தில் வாழ்ந்து வந்த சுமார் 5 மில்லியன் சீனர்கள் தீடிரென மாயமாகி விட்டதாக வுகாண் மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச ஊடகமான ஏபி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கொரானோ வைரஸ் வுகாண் மாகாணத்தில் மிக வேகமாக பரவி , பல நூறு […]
ஒருதலைக்காதலால் தீவைத்து கொளுத்தப்பட்ட அங்கிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில் கடந்த வாரம் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. 24 வயதான அங்கித்தா பிட்ச்சு கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரை விக்கி நக்ரால் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை பலமுறை அங்கிதா கண்டித்துள்ளார். அங்கிதா காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த விக்கி நக்ரால் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து அங்கிதா மேல் ஊற்றி தீயை வைத்துள்ளார். இந்த […]
ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடந்துவருகிறன.இந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக்கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் நந்த் கிஷோர் கார்க் மற்றும் அமித் சஹானி ஆகியோர் தங்களின் வழக்குரைஞர் ஷாசாந்த் தியோ சூகி வாயிலாக பொதுநல மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற […]
நகராட்சி , மாநகராட்சி தேர்தலை நடத்த வில்லை என கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் , தமிழக அரசுக்கு எதிராக ஜெய சுகின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நகராட்சி , மாநகராட்சி தேர்தல் நடத்தாதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.
டெல்லி கார்கி கல்லூரியின் நிகழ்ச்சியின் போது நுழைந்த சில சமூக விரோதிகள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கார்கி கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சிக்கிடையே கல்லூரியின் இரும்பு கேட்டை தாண்டி வந்த சில சமூக விரோதிகள் அங்கிருந்த மாணவிகளின் உடலைத் தவறான முறையில் தொட்டும், கட்டிப்பிடித்தும் அநாகரீகமாக மிருகம் போல் அவர்கள் நடந்து கொண்டதாக மாணவிகள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி இரவில் நடைபெற்ற […]
இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் மந்தமாக இருக்கும் 20 நகரங்களுக்கு வழிகாட்டி உதவுவதற்காக சிறப்பாக செயல்படும் பிற 20 நகரங்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. வழிகாட்டும் 20 நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் திருப்பூர், வேலூர் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் 100 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மிகவும் மந்தமாக பணிகள் நடைபெற்று வரும் கடைசி 20 இடங்களில் உள்ள நகரங்களில் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. […]
ஜார்கண்ட்டில் மர்மநபர்கள் காந்தி சிலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹஸாரிபாக் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலையை சமூக விரோதிகள் சிலர் அடித்து நொறுக்கி சுக்கல் சுக்கலாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போய் உடனே காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர […]
இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்களால் உடைக்க முடியவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தெய்வ இதய பூமியான இந்தியாவின் சகோதரத்துவத்தை கற்றுக் கொள்வதற்காக உலகமெங்கிலும் இருக்கும் மக்கள் வருகின்றனர் என்றார். இந்தியாவுக்கான விடுதலைப் போராட்டத்தின் போது ஊடகங்களை சுதந்திர போராட்டகாரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறிய ஓம்பிர்லா வலுவான ஜனநாயகத்திற்கு ஊடகங்கள் தனி தன்மையுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றார்
சரக்கு, சேவை வரி விதிப்பில் அடிக்கடி மாற்றம் கொண்டுவரும் நடைமுறை மாற்றப்பட்டு ஒராண்டுக்கு ஒரு முறை சீரமைப்பு மேற்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதிநிலை அறிக்கை மற்றும் அரசின் பொருளாதாரக் கொள்கை குறித்த விளக்க விழாவில் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, “ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் தொடர்ச்சியாக மாற்றம் கொண்டுவருவதால் பல்வேறு நடைமுறை […]
2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரியல்மி 263 விழுக்காடு உயர்ந்துள்ளநிலையில், ரெட்மி வெறும் 9.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. சர்வதேச அளவில் இரண்டாவது மிகப் பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக திகழும் இந்தியாவில், சீன நிறுவனங்களான ரெட்மி, விவோ, ஓப்போ, ரியல்மி ஆகிய நிறுவனங்களே தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு, ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கிடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் தற்போதைய நிலை குறித்து விளக்கிய ஐடிசி (International Data Corporation) […]
இறக்குமதி செய்யப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களின் வரி 200 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து, இறக்குமதியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள விளையாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றில் 75 விழுக்காடு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் சுமார் 130 கோடி மதிப்புள்ள பொருள்கள், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், அடுத்த நிதியாண்டில் இறக்குமதி செய்யப்படும் […]
சீனா தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கும் தொடர்ந்து வரும் நிலையில், இந்திய மருத்துவச் சந்தையில் இதன் தாக்கம் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் நிலையில், அதன் தாக்கத்தை இந்தியா மருத்துவ நிறுவனங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவப் பொருட்களில் 67 விழுக்காடு சீனாவில் இருந்தே வருகிறது. எனவே, சீனாவை மையமாக வைத்து இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நிலைமை எப்போது […]
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ராமோஜி குழுமம் சார்பில், குடும்பஸ்ரீ, ‘I Am For Alleppey’ ஆகிய திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை 121 குடும்பங்களுக்கு கேரள முதமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார். கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட 121 குடும்பங்களுக்கு ராமோஜி குழுமம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் பயனாளர்களுக்கு இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார். கேரள அரசின் வீடு புனரமைப்புத் திட்டதிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரியத் திட்டத்திற்கான நிதி பொதுமக்கள், குழும ஊழியர்கள் […]
மடகாஸ்கர் நாட்டை சூறாவளி தாக்கியபோது உதவியாக இருந்த இந்தியா, மிகச்சிறந்த நண்பன் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார். லக்னோவில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சி 2020இல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மடகாஸ்கர் பாதுகாப்புத் துறை அமைச்சர் லெப்டினென்ட் ஜெனரல் ரிச்சர்ட் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து ஈடிவி பாரத் உடனான ஒரு பிரத்யேக உரையாடலில், “இந்தியாவை ஒரு சிறந்த நண்பர்” என்று அவர் குறிப்பிட்டார். கடந்த சில வாரங்களில் இந்திய கடற்படை, பாதிக்கப்பட்ட […]
ஆர்.எஸ்.எஸ். மூத்த சிந்தனையாளர் பரமேஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 93. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர். பாரதிய விசர்ய கேந்திரம் என்ற அமைப்பை தொடங்கி நடத்திவந்தார். இந்நிலையில் அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள், ஆயுர்வேத சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் உயிர் பிரிந்தது. பரமேஸ்வரன் மிகச்சிறந்த பேச்சாளராக அறியப்படுகிறார். 1957ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தில் மாநிலத் தலைவராக இருந்தார். அதன்பின்னர் 1982ஆம் […]
இன்றைய தினம் : 2020 பிப்ரவரி 10 கிரிகோரியன் ஆண்டு: 41 -ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 324 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு: 325 – ம் நாள் இன்றைய நிகழ்வுகள்: 1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது. 1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர். 1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார். 1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது. […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சார்ஸ் தொற்று வைரஸ் பலி எண்ணிக்கையை தாண்டியது என்று சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.வைரஸ் பாதிப்பால் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை […]
ஒருநாள் போட்டிகளில் ஏழாவது வரிசையில் களமிறங்கி அதிக அரைசதங்கள் அடித்த முன்னாள் கேப்டன் கபில்தேவ், தோனி ஆகியோரது சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கோலி, பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் சொதப்பிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, நவ்தீப் சைனி ஆகியோர் அணியின் வெற்றிக்காக […]
யு19 உலகக் கோப்பை தொடர் மூலம், எதிர்வரும் காலங்களில் இந்திய அணிக்காக விளையாடவிருக்கும் வீரர்கள் குறித்து பார்ப்போம். யு19 உலகக் கோப்பை தொடரின் மூலம் இந்திய சீனியர் அணியில் என்ட்ரி தந்த வீரர்களில் சிலர் சிறந்த வீரர்களாக மாறியுள்ளனர். யுவராஜ் சிங், முகமது கைஃப் முதல் பிரித்வி ஷா, ஷுப்மன் கில் வரை இந்த பட்டியல் நீளும். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நாளை நடைபெறவுள்ள யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய […]
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சில பகுதிகள் நாடாளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கடந்த 6ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, அரசு நலத்திட்டங்களை சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க தேசிய மக்கள்தொகை பதிவேடு உதவும் என்றார். மேலும், அதனை கொண்டுவந்தததே காங்கிரஸ் கட்சி தான் என்றும் தற்போது அவர்கள் பல்டி அடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், பிரதமர் மோடியின் உரையில் […]
“உலகமே உடல், டெல்லி அதன் ஆன்மா” என்றார் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல உருது கவிஞர் மிர்சா காலிப். டெல்லி ஒரு இடமாகவும், ஒரு கற்பனையாகவும் எப்போதும் முக்கியத்துவத்துடன் இருக்கும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவர். அவரது அர்த்தம் பொதிந்த வரிகள் எந்த அளவுக்கு நிதர்சனமானவை என்பதை தற்போதைய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. சமூக – அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெறும் இந்தத் தேர்தல், டெல்லி […]
மோடி, ராஜபக்ச இடையேயான சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தக் கூட்டத்தில் இருநாட்டு பாதுகாப்பு, வணிகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மஹிந்த ராஜபக்ச சந்தித்து பேசினார். மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதிவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் […]
பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திவால் சட்டம் மூலம் இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஐ.சி.ஏ.ஐ அமைப்பின் 70ஆவது ஆண்டுவிழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைத்தப்பின், வங்கியில் உள்ள வாரக்கடன் சிக்கலை தீர்க்க பல்வேறு முக்கிய முடிவுகள் […]
டெல்லியில் ஆண் போலீஸ் அதிகாரி அவருடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் 26 வயதான ப்ரீத்தி அகலாவத் என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று இரவு பணி முடிந்து, ரோஹினி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து […]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் அறிவிக்கப்பட்டிருந்த மாநில பேரிடர் தளர்த்தப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளத்திலும் மூன்று பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத சூழலில், முன்னர் அறிவித்த மாநில பேரிடர் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், […]
பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்குவங்கம் மாநிலம் தெற்கு கொல்கத்தாவில் உள்ள எக்பால்பூரில், 12 வயது சிறுமியை நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ […]
2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளால் நாட்டின் பொருளாதாரம் உடனடியாக மேம்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று ‘கிரிசில்’ (Crisil) நிறுவனம் கூறியுள்ளது.2019 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலேஇந்தியப் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குறைவான உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சனைகளோடு, பொருளாதார மந்த நிலையும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமாகக் குறைந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி, அதற்கடுத்த ஜூலை […]
ராகுல் காந்தியை சந்தித்த ராஜபக்ச!
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்ச காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியையும் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் அனந்த் சர்மா உடனிருந்தார். அண்ணல் காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டிற்கு சென்று ராஜபக்ச மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து […]