Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கில் புதிய தடை- மேலும் ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் …!!

நிர்பயா வழக்கில் மூன்றாவது குற்றவாளியான அக்சய் குமார் சிங் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன. 5 குற்றவாளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை.. இதுவே முதல் முறை என பெருமிதம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு முறைப் பயணமாக பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் டொனால்டு ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ட்ரம்பின் சுற்றுப்பயணம் குறித்து இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் அமெரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராஇண்டிகோ விமானத்தில் பயணிக்க 6 மாதங்கள் தடை..!

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவை 6 மாதங்கள் இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மும்பையில் இருந்து லக்னோவுக்கு அண்மையில் இன்டிகோ விமானத்தில்  பயணம் செய்தார். அப்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் கம்ரா பல கேள்விகளை கேட்டுள்ளார்.  ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார். மேலும் நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”நிர்பயா குற்றவாளி மனு தள்ளுபடி” தூக்கு தண்டனை உறுதியானது ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனுவை தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.   5 குற்றவாளிகளில் 32 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கை கடிகாரத்தில் போன்பேசலாமா?.ஆச்சிரியத்தில் வாடிக்கையாளர்கள்

இந்திய சந்தையி்ல் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை  சியோமி ரெட்மி நிறுவனம் அறிமுக படுத்துவதாக அறிவித்துள்ளது .   சமீபத்தில் ரெட்மி  நிறுவனம் புதிதாக ரேடார் மற்றும் பவர் பேங்க் போன்ற சாதனங்களை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் படுத்தியது . இதனை தொடர்ந்து  இந்தியாவிலும் புதிய சாதனங்களை அறிமுகபடுத்தப்படும்   என அறிவிக்கப்படுள்ளது  . இதற்கு முன்னதாக ரெட்மி லேப்டாப் மாடல்களின்  விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இந்நிலையில் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளது.   ரெட்மி […]

Categories
தேசிய செய்திகள்

பிரிவினை வேண்டாம்…. இந்திய ராணுவத்தில் இணையும் போடோ போராளிகள் …!!

நீண்ட நாட்களாக பிரிவினை கோரிக்கையை முன்வைத்து போராடிவந்த போடோ அமைப்பு தற்போது இந்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த அமைப்பின் வீரர்கள் விரைவில் இந்திய ராணுவத்தில் இணைந்த பணியாற்றவுள்ளதாக என்.பி.எஃப்.டி. (NBFD) பொதுச்செயலாளர் கோபிந்தா பசுமதாரி தெரிவித்துள்ளார். தனக்கென்று ஒரு தனிப்பிரிவுப் படை கோரிக்கையை தவிர்த்துவிட்டு போடோ கொரில்லா படையினர் சுமார் 1,500-2,000 பேர் இந்திய ராணுவம், துணை ராணுவப் படை, காவல் துறையில் சேரவுள்ளனர். கடந்த வியாழக்கிழமை, சுமார் 1,500-2,000 போடோ கிளர்ச்சிப்படை வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து கோவில் சிலையை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது..!!

பாகிஸ்தானில் இந்து கோவில் சிலையை சேதப்படுத்திய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரிலுள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

நாசிக்: கிணற்றுக்குள் பாய்ந்த பஸ், கூடவே இழுத்து சென்றது ஆட்டோவையும் … 15 பேர் பலி! 

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேகமாக வந்த மாநில போக்குவரத்து (எஸ்.டி) பஸ் ஒரு ஆட்டோரிக்ஷா மீது மோதியதில் இரு வாகனங்களும் சாலையோர கிணற்றில் விழுந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு மகாராஷ்டிரா மாவட்டத்தில் மாலேகான் தியோலா சாலையில் உள்ள மேஷி பாட்டாவில் மாலை நடந்த விபத்தில் 18 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேகமான எஸ்.டி பஸ், பயணிகளால் நிரம்பியிருந்தது, ஆட்டோ ரிக்‌ஷாவில் மோதியது, காயமடைந்தவர்கள் பெரும்பாலும் பஸ் பயணிகள்  என்று போலீஸ் அதிகாரி கூறினார். மோதலின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW : ”ஆளுநருக்கு எதிராக போராட்டம்” கேரளா பேரவையில் பரபரப்பு …!!

கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வாசகத்தை ஆளுநர் உரையில் வாசிக்க மறுத்ததால் ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டின. இந்நிலையில் இன்று கேரளா சட்டசபையில் ஆளுநர் வாசித்த உரையில் குடியுரிமை […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே, சீனாவில் தவித்து வரும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கு  ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார் நிலையில் உள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில்  சுகாதாரமற்ற இறைச்சி  மூலமாக மனிதர்களை தாக்கும் இந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: ‘சாமானியர்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

பொருளாதார மந்த நிலையை சரிசெய்யவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் சாமானியனின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் சேகர் ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய சிறப்பு கட்டுரை இதோ..  இந்திய மக்களின் பார்வை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது தான் இருக்கும் என்றே சொல்லலாம். […]

Categories
உலக செய்திகள்

இலங்கையிலும் கொரோனோ…. மிகுந்த எச்சரிக்கையுடன் இந்தியா …!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ்  இலங்கை பரவியுள்ளதால் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தி , உலகநாடுகளை பீதியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அங்குள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அடுத்தடுத்து என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் சவாலாக பார்க்கப்படுகின்றது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கி […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கா இல்ல கருணையா ? இன்று உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம் …!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.   5 குற்றவாளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

33 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை

குஜராத்தில் 33 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 33 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் 17 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் 14 பேரை விடுவித்தும் குஜராத் உயர் நீதிமன்றம் தீர்பளித்தது. இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 17 பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

தேசதுரோக வழக்கில் ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் கைது ..!!

ஷஹீன்பாக் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில், சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்த ஜேஎன்யுவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான ஷஹீன்பாக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் டெல்லி காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியத் தலைநகர் டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு …!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன. 5 குற்றவாளிகளில் 32 […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

Man vs wild : ”முற்கள் கால்களில் குத்தின” அவ்வளவு தான் – ரஜினிகாந்த்

Man vs wild நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக வெளியான செய்தியை ரஜினி மறுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘Man vs Wild’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கடந்தாண்டு பிரதமர் மோடி பியர் கிரில்ஸுடன் இணைந்து வன பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பியர் கிரில்ஸுடன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: எண்கள் சொல்லும் கதை

சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோயால் எந்தெந்த நாட்டில் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து பார்ப்போம். சீனா கொரோனா வைரஸ் நோயால் சீனாவில் மட்டும் மூன்றாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் ஹூபே நகரில் மட்டும் இரண்டு ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று 26 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், பலி எண்ணிக்கைய 106ஆக உயர்ந்துள்ளது. ஹாங் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 29…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 29   கிரிகோரியன் ஆண்டு : 29_ ஆம் நாளாகும்.   நெட்டாண்டு : 337_ஆம் நாள்   ஆண்டு முடிவிற்கு  : 336_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 904 – பதவி நீக்கம் செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை கிறித்தோபரிடம் இருந்து திருத்தந்தை பதவியைக் கைப்பற்றிய மூன்றாம் செர்ஜியசு புனிதப்படுத்தப்பட்டார்.[1] 946 – புதிதுப் பேரரசின் மன்னரினால் கலிபா அல்-முசுதாக்பி குருடாக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அல்-முத்தி அப்பாசியாவின் புதிய கலிபாவாக நியமிக்கப்பட்டார்.[2] 1258 – மங்கோலியர்கள் வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எனக்கு காயமா? ரஜினிகாந்த விளக்கம் …..!!

எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது வதந்தியே. காட்டுப் பகுதியில் இருந்த ஏராளமான முற்களால் கொஞ்சம் சிரமப்பட்டேன் என்று காயம் குறித்து உலா வரும் தகவலுக்கு நடிகர் ரஜினி விளக்கமளித்துள்ளார். காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: Man vs Wild படப்பிடிப்பு பந்திப்பூரில் நடைபெற்றது. அதை முடிந்துவிட்டு வருகிறேன். எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அப்படி எதுவுமில்லை. […]

Categories
உலக செய்திகள்

உடனே வெளியேறுங்க…. ”சீனாவை காலி செய்யுங்க” … வெளியுறவுத் துறை நடவடிக்கை …!!

சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலில், அந்நாட்டின் ஹூபே மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியை இந்திய வெளியுறவுத் துறை தொடங்கியுள்ளது. சீனா மற்றம் பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த அபாயகரமான சூழலில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் சீனாவில் ஹூபே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யு-19 உலகக் கோப்பை – ஆஸியை துவம்சம் செய்த இந்தியா

யு-19 உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. யு-19 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து சூப்பர் லீக் காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பாச்செஃப்ஸ்ட்ரோமிலுள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 62, அன்கோல்கர் 55 ரன்கள் அடித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரவி பிஷ்னோய் 30 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யஷஸ்வி, அதர்வா அரைசதம்… ஆஸி-க்கு 234 ரன் நிர்ணயித்தது இந்தியா …!!

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 234 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. யு-19 உலகக்கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து ப்ளேட் காலிறுதிப் போட்டிகள், சூப்பர் லீக் காலிறுதிப் போட்டிகள் இன்று நடந்துவருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் லீக் காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஹார்வி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

Man vs wild நிகழ்ச்சி படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்..!!

Man vs wild நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘Man vs Wild’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கடந்தாண்டு பிரதமர் மோடி பியர் கிரில்ஸுடன் இணைந்து வன பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பியர் கிரில்ஸுடன் கர்நாடக மாநிலம் பந்திபூரில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர ஆய்வுக்கு பின்…. ஆப்ரிக்க சிறுத்தைகளுக்கு இந்தியாவில் அனுமதி…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!

ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா செய்திகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தீவிர ஆய்வுக்குப் பிறகு ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை உரிய பாதுகாப்புடன் இந்திய காடுகளில் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வனவிலங்கு ஆர்வலரான ரஞ்சித் சிங் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திறமைக்கு மதிப்பில்லை…. கேவலமான நிலை இந்தியாவில் நிலவுகிறது…. நீதிபதி கிருபாகரன் பேச்சு…!!

ஆளைப் பிடித்து உயரவேண்டும் என்ற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைப்படுகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் வார இதழ் துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார். மேலும் ஒருவன் உடல் நலத்தோடு   வாழ்ந்தால் அதைவிட செல்வம் எதுவும் கிடையாது எனவும், உடற்பயிற்சி விளையாட்டு பற்றி தெரியாத குழந்தைகளாக இன்றைய தலைமுறையினர் உள்ளனர் எனவும் சமூக வலைதளங்கள் மக்களின் கவனத்தை மாற்றுவதாகவும் அவர் கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

உணவுப் பொருள் உற்பத்தி… முதல் 3 நாடுகளில் இந்தியா… பிரதமர் மோடி பெருமிதம்..!!

உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக கூறி உள்ளார்.  10 வருடங்களுக்கு ஒருமுறை ‘சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு’  நடத்தப்படும். இதில்  உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அதில் உள்ள சவால்கள், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும். கடைசியாக 2010 ஆம் ஆண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்தநிலையில் நடப்பு ஆண்டுக்கான 3 நாட்கள் மாநாடு குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் தொடங்கியுள்ளது. இந்தமாநாட்டில் பிரதமர் மோடி காணொலி […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமனம்..!!

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ள ஹர்ஷவர்தன் சிறிங்கலா (Harsh Vardhan Shringla) வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்துவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான சந்து, 2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான இந்திய தூதராக உள்ளார். அதற்கு முன்னர் பல ஆண்டுகள் வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தரண்ஜித் சிங் […]

Categories
உலக செய்திகள்

“காலிஸ்தான்” படை தலைவர் கொலை…!

இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் படை தலைவன் ஹர்மீத் சிங் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் விடுதலை படையின் தலைவர் ஹர்மித் சிங்  பாகிஸ்தானில் சுட்டு கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்ட  வழக்கில் தேடப்பட்டு வந்தவராவார்.  2018 ஆம் ஆண்டில் அமிர்தசரசில் மத  வழிபாட்டின்போது  குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்ட  வழக்கில் தொடர்புடையவர். சர்வதேச  இன்டர்போல் கடந்த அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிருந்து போங்க… ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்…. வேதனையில் மேற்குவங்க ஆளுநர்..!!

மேற்குவங்க மாநில ஆளுநரின் காரை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, பாதுகாப்புப்படை வீரர்களுடன், பல்கலைக்கழகங்களின் வேந்தரான மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் வருகை புரிந்தார். ஆனால், அவரது காரை நுழைவு வாயிலில் மடக்கிய கொல்கத்தா பல்கலை கழக மாணவர்களில் ஒருபிரிவினர், கும்பலாக நின்று நிகழ்ச்சிக்கு வர விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப்  கூறுகையில், […]

Categories
மாநில செய்திகள்

ரஜினியுடன் கிரில்ஸ் …. ”மாஸ் காட்டும் ரசிகர்கள்”…. ட்வீட்_டரில் ட்ரெண்டிங் …!!

மேன் விஷஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறகு இந்தியளவில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கின்றார். பொழுதுபோக்குக்காக நாம் பல்வேறு நிகழ்ச்சி தொடர்களை பார்த்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியை கண்டு கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பார்வையாளர்களின் ரசனையை உணர்ந்த சேன்னல்கள் பல்வேறு புதுப்புது நிகழ்ச்சியை புகுத்தி வருவதை நாம் அறிந்திருக்கின்றோம். அந்தவகையில் டிஸ்கவரி சேன்னல் ‘மேன் Vs வைல்ட் என்ற ரசனை மிக்க நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

12 அடி நீளமுள்ள ராஜநாகம்… பீதியடைந்த மக்கள்… லாவகமாக பிடித்த வனத்துறையினர்..!!

கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை வனத்துறையினர் தைரியமாக பிடிக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.   பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பலமொழிக்கேற்ப நாமும் பாம்பு என்றால் நடுங்கத்தான் செய்வோம். ஆனால் ஒருசிலர் சர்வசாதாரணமாக பாம்பை பிடித்து கையில் வைத்து விளையாடுவர். அதேபோல வனத்துறையினருக்கும் பாம்பை கண்டு பயம் இருக்காது. காரணம் வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனே பொதுமக்கள் அவர்களை தான் முதலில் கூப்பிடுவார்கள். அவர்களும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் – பாஜக எம்.பி பர்வேஸ் வர்மா சர்ச்சை பேச்சு…!

துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாஜக பாரதிய ஜனதா எம்பி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதாவை சேர்ந்த டெல்லி மேற்கு தொகுதி எம்பியான பர்வேஸ் வர்மாவின் மத மோதலை உண்டாக்கும் இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளனர். விகாஸ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய பர்வேஸ் வர்மா டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் – தற்காத்துக் கொள்வது எப்படி?

கொரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த வைரஸ் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது. இவ்வைரஸ் தாக்கப்பட்ட பின் ஏற்படும் அறிகுறிகள், தற்காப்பு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். அறிகுறிகள்: இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் […]

Categories
தேசிய செய்திகள்

பதுங்கி கிடந்த 19 வயதான பயங்கரவாதி… சுற்றி வளைத்து மடக்கிய போலீசார்..!!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் லஷ்கரே தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் இந்தியராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து எல்லையில் தாக்குதல் அவ்வப்போது நிகழ்கிறது. அதன்படி புல்வாமாவின் அவந்திபோரா என்ற பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு கமாண்டர் உட்பட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“தேச துரோகிகளை சுட்டுத்தள்ளனும்”…. சர்ச்சையாக பேசிய அமைச்சர்… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!

தேர்தல் பிரச்சாரத்தின் போது தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முழக்கமிட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற  பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் […]

Categories
தேசிய செய்திகள்

தனி நாடாக்குங்க… சர்ச்சையாக பேசிய JNU மாணவர்… பல இடங்களில் தேடும் போலீசார்..!!

தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம் என்பவரை பல இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம். இவர் மீது அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், உ.பி  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில்  பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காரணம் அஸ்ஸாம் மாநிலத்தை இந்தியாவை விட்டு தனியாக துண்டித்து தனிநாடாக்க வேண்டும் என ஷர்ஜில் இமாம் போராட்டம் நடத்தினார். இவரது […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதம்… மர்மநபர்களை தேடும் போலீசார்..!!

பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த  மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரிலுள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராகப் போராட பணம் வாங்கினேனா?’ – மூத்த வழக்கறிஞர் ஆவேசம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் பணம் பெறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார். சமீபத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு கடும் விமர்சனத்துக்குள்ளானவர் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை சோனியா காந்தி மன்னித்ததை மேற்கோள் காட்டிய அவர், அதேபோல் நிர்பயா தாயார் ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஆஷா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 28…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 28 கிரிகோரியன் ஆண்டு : 28_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 338_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 337_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் 814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார். 1077 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் திருச்சபைலிருந்தான வெளியேற்றத் தீர்மானம் இத்தாலியின் கனோசாவில் திருத்தந்தை ஏழாம் கிரகோரியின் முன்னால் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டபின் நீக்கப்பட்டது. 1393 – பல நடனக் கலைஞர்களின் உடைகள் தீப்பிடித்த நிலையில் பிரான்சிய மன்னர் ஆறாம் சார்லசு மயிரிழையில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் பயங்கரம்: காவலர்கள் வேடத்தில் சென்று பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ஜோய் நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் காவலர்கள் வேடமிட்டு சென்று சகோதரிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகி-வருகின்றன. இந்நிலையில், சம்பல் மாவட்டத்தின் பஹ்ஜோய் நகரில் உள்ள ஒரு வீட்டில் சகோதரிகள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலைப் பொழுதில் திடீரென அவர்களின் வீட்டிற்குள் காவலர்கள் வேடத்தில் இரண்டு பேர் நுழைந்துள்ளனர். சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகவும் இது குறித்து […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கால் பண்ணு….. மெசேஜ் பாரு…. செல்போனில் CONTROL … அசத்தும் TVS iQube …!!

TVS நிறுவனம்t TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு சந்தையில் களம் இறக்கியுள்ளது . இந்தியாவில பல்வேறு இடங்களில் காற்று  மாசுபாடு மிக பெரும் பிரச்சனையாக உள்ளது . இதனால்  மக்கள்  பார்வை  மின்சார வாகனகள்  பக்கம்  திரும்பியுள்ளது . வாகன  உற்பத்தி  நிறுவனகள் மின்சார வாகனகள் உருவாக்குவதில்  ஆர்வம் காட்டி  வருகின்றன. BAJAJ , HERO ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களை  உருவாக்கிவருகிறது . இதனை தொடர்ந்து TVS  நிறுவனமும் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஈராக் மாணவர் மர்ம மரணம்!

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஈராக் மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் அலிகார் நகரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பி.ஹெச்.டி. மாணவராக இருந்தவர் ஏ. ஏ. ஹமித். ஈராக் நாட்டைச் சேர்ந்த இவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தார். நீண்ட நேரமாகியும் சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு இவர் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்டை வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

NRCஇல் திருநங்கைகள் நீக்கம் – மத்திய அரசுக்கு நோட்டீஸ் …!!

தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து திருநங்கைள் நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமான முறையில் குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதுப்பிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற புதிதாக […]

Categories
தேசிய செய்திகள்

பாதாளச் சாக்கடையில் குழந்தையின் சடலம்: தாய் கைது

காணாமல்போன பெண் குழந்தையின் சடலத்தை பாதாள சாக்கடையிலிருந்து மேற்கு வங்க காவல் துறையினர் மீட்டனர். குழந்தையைக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் பெலியகட்டா பகுதியில் வீட்டிலிருந்து காணாமல்போன இரண்டு மாத பெண் குழந்தையின் சடலம் அருகிலுள்ள பாதாள சாக்கடையிலிருந்து இன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் குழந்தையில் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் தாய், “நானும் குழந்தையும் வீட்டில் தனியாக இருந்தபோது 26ஆம் தேதி மதியம் […]

Categories
தேசிய செய்திகள்

”முதல்வருக்கு நேர்ந்த கதி” வைரலாக போட்டோவால் அதிர்ச்சி ….!!

வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்கள் எப்படி உள்ளார்கள் என்பது குறித்து கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதையடுத்து, வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தாடியுடன் இருக்கும் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிர்பயா வழக்கு: குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்!

நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ்சிங்கின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. தண்டனைக் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

அற்புதமான அமைப்புகளுடன் ”TVS BS6 ஸ்டார்சிட்டி பிளஸ் ”

 TVS கம்பெனி  புதிதாக தயாரித்த ‘ BS 6 ஸ்டார் சிட்டி பிளஸ்’ மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது . TVS  மோட்டார் கம்பெனி  இந்தியாவில் புதிதாக தயாரித்த  ” BS .6 ஸ்டார் சிட்டி பிளஸ்’ மாடல் ‘மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது .  இதன்  ஷோரூம்  விலை ரூ. 62,034  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .இதன் விலை முந்தைய மாடலை விட RS .7,600 அதிகமானது TVSஇன்  புதிய  மாடல்கள்  மோனோடோன் மற்றும் டூயல் டோன் என […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா டியாகோ , டிகோர் ஃபேஸ்லிஃப்ட்  இந்தியாவில் அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ்  தனது  டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை இந்தியாவில்  முதல்முறையாக வெளியிட்டுள்ளது . புதிய  வடிவமைப்பு : டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்  கார்கலில் ஒரு  மாற்றத்தை  ஏற்படுத்துவதற்காக  காரின் முன்புறம்  உள்ள  கிரில் லை புதிதாக மாற்றி  அமைத்துள்ளனர் . மேலும்  இந்த  கார்களின்  வடிவமைப்பிலும்  சில  மாற்றங்களையும்  கொண்டுவந்துள்ளன. இந்த காரின் இரு பபுறத்தின்  பக்கவாட்டு மற்றும்  பின்புறங்களில் அலாய் வீல்கள், பியானோ பிளாக் ஃபினிஷ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ORVMகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் விழுப்புரம்

இந்தியாவிலையே முதல்முறை…. மனு வேண்டாம்… MESSAGE போதும்….அசத்திய விழுப்புரம் MP…!!

மக்களை இணைக்கும் புள்ளியாக இருந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார். விரல் நுனியில் தொழில்நுட்பம் உள்ள இந்த காலத்தில் மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். டாக்டர் ரவிக்குமார் எம்பி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியின்  தொடக்க நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் ஜிஎல்யு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் […]

Categories

Tech |