Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குடியரசு தினவிழா : சிறப்பு விருந்தினராக டெல்லி வந்தடைந்த பிரேசில் அதிபர்

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்க டெல்லி வந்தடைந்த பிரேசில் அதிபரை தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா வரும் 26-ஆம் தேதி வெகு விமர்சியாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகின்றது. ஆண்டு தோறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டி சிறப்பிப்பது வழக்கம். அதன்படி இந்தமுறை பிரேசில் அதிபர் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

அமராவதி போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது போலி கேஸ் போட்ட போலீஸ்!

ஆந்திர தலைநகரில் விவசாயிகள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த மூன்று ஊடகவியலாளர்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று ஊடக புகைப்படக்காரர்கள் மீது ஜெகன் அரசு பொய் வழக்கு பதிவுசெய்துள்ளது. விவசாயிகளின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அமராவதி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

சட்டத்தின்படியே நீதிமன்றம் செயல்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்

நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சட்டத்தின்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தூக்கு தண்டனைகள் காலதாமதமாக நிறைவேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, காதலருடன் சேர்ந்து தனது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: டெல்லியில் பாதுகாப்பு தீவிரம்!

 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அங்கமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துணை ஆணையர் விக்ரம் போர்வால் கூறுகையில், “மத்திய தொழில் […]

Categories
தேசிய செய்திகள்

‘அதிகாரத்தில் இருப்பவர்கள் ஜனநாயகத்தைத் துண்டாடுகிறார்கள்’ – சிதம்பரம்!!

ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை துண்டாடுவதாக சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என்று ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்தது. தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, […]

Categories
மாநில செய்திகள்

“முதலிடம் பிடித்த இந்தியா”… கிண்டல் ட்விட் செய்த கனிமொழி.!

2018ல் இணையதள சேவை அதிகமுறை துண்டிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்ததை கனிமொழி கிண்டல் செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அதிக முறை  இணையதள சேவை முடப்பட்ட 8 நாடுகளை உலக குறியீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதில் இந்தியா 134 முறை  இணையதள சேவை முடப்பட்டு முதலிடத்தில் உள்ளது.  இதனை டேக் செய்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், வெல்டன் டிஜிட்டல் இந்தியா என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

71வது குடியரசு தினம்… ஜொலிஜொலிக்கும் டெல்லி…..!!

டெல்லி இந்திராகாந்தி விமனநிலையத்தில் அமைந்துள்ள ஏ.டி.சி டவர்  தேசிய கொடியை பிரதிபலிக்கும்  மூவர்ணத்தால் ஜொலிஜொலிக்கிறது. நாட்டின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடபடவுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக டெல்லியில் உள்ள நாட்டின் மிக உயரமானஆப்ட்ராபிக் கண்ரோல் டவர்  நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண கொடி போல வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புலிக்கு பயந்து வில்-அம்புடன் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

ஜார்கண்ட் மாநிலம் ஜம்செத்பூர் அருகே உள்ள மலை கிராமங்களில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் புலிக்கு பயந்து வில்-அம்பு, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்றுவருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம், ஜம்செத்பூரில் உள்ள காட்ஷிலா மற்றும் மிரிகிடாங் கிராமங்கள் சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு அடர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றன. இக்கிராமத்திலிருந்து கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டுமானால் வனப்பகுதி வழியே ஆபத்தான முறையில் பயணிக்கவேண்டியுள்ளது.இந்தப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக வனத்துறையினர் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – இம்ரான் கானுக்கு வலியுறுத்தல் …!!

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் பெஷாவர் பகுதியில் வசித்து வருபவர் ராதேஷ் சிங் தோனி. கல்சா என்ற அமைதி நீதி அமைப்பின் தலைவராக இவர் இருந்துவருகிறார். இவரின் உயிருக்கு பாகிஸ்தானில் உள்ள சில அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானின் லாகூரை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். இதுகுறித்து அச்சம் தெரிவித்து பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

அமைதி காக்கும் நிர்பயா குற்றவாளிகள் …!!

டெல்லி: குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் உண்டா என நிர்பயா வழக்கு குற்றவாளிகளிடம் கேட்டபோது, அவர்கள் அமைதி காத்ததாக மூத்த சிறைத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளான வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (31), முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25) ஆகியோர் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படவுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தனி அறை சிறை எண் மூன்றில் வைக்கப்பட்டுள்ளனர். தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

இந்து மகாசபையை எதிர்த்தவர் நேதாஜி – மம்தா புகழாரம்

இந்து மகாசபையின் பிரித்தாளும் அரசியலை முற்றிலும் எதிர்த்தவர் நேதாஜி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார். சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் நகரில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நேதாஜி தனது போராட்டங்கள் மூலம் அனைவரின் நம்பிக்கைகளையும் ஒருவர் மதிக்க வேண்டும் என்பதையே […]

Categories
தேசிய செய்திகள்

அரசு, பெருநிறுவன பத்திர வெளிநாட்டு முதலீடு உச்சவரம்பு உயர்வு ….!!

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (வியாழக்கிழமை) அரசு மற்றும் பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான (எஃப்.பி.ஐ) முதலீட்டு வரம்பை உயர்த்தியது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று  (வியாழக்கிழமை) அரசு மற்றும் பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான (எஃப்.பி.ஐ) முதலீட்டு வரம்பை உயர்த்தியது. இதனால் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முந்தைய விதிகளின்படி, ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரின் குறுகிய கால முதலீடுகள் 20 விழுக்காட்டை தாண்டக்கூடாது. இந்த விதி பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

பக்கத்து கடையிலிருந்து காசு எடுக்கலாம் – ஃபோன்பே ஏடிஎம்

ஃபோன்பே செயலி மூலம் அருகிலுள்ள கடைகளிலிருந்து பணத்தை பெற உதவும் ஃபோன்பே ஏடிஎம் என்ற புதி வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முன்னனி பண பரிமாற்ற செயலிகளில் ஒன்றான ஃபோன்பே, புதிதாக ஏடிஎம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த ஃபோன்பே ஏடிஎம், சாதாரண ஏடிஎம்கள் போல இருக்காது. சொல்லப்போனால் இதில் இயந்திரங்களே இருக்காது. மாறாக பயனாளர்கள், தங்கள் மொபைலிலுள்ள ஃபோன்பே செயலியிலுள்ள ‘Stores’க்கு செல்லவேண்டும். அதிலுள்ள ‘PhonePe ATM’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 24…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 24 கிரிகோரியன் ஆண்டு : 24_ ஆம் நாளாகும் நெட்டாண்டு :  342_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 341_ நாட்கள் உள்ளன   இன்றைய நாள் நிகழ்வுகள் 41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். 914 – எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது.[1] 1458 – மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார். 1624 – எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார். 1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1739 – மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க தலை முடியை விட…. ”அதிகமா என்னிடம் இருக்கு”…. கிண்டல் செய்த அக்தர் …!!

பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியினரைப் பாராட்டுவது பற்றிய சேவாக்கின் கருத்திற்கு, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் 2016ஆம் ஆண்டு பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், இந்தியா வீரர்களைப் பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டுவது பணம் பெறுவதற்காகவே எனப் பேசியிருந்தார். பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதில், ”சேவாக் தலையில் உள்ள முடியோடு ஒப்பிடுகையில், என்னிடம் அதிகமான பணம் உள்ளது. நான் கிரிக்கெட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி… அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல் பரிசு – விமர்சித்த அமித்ஷா.!

பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி நடத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முதல் பரிசு பெறுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்துள்ளார். வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி  டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகின்றது. அதேசமயம் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என காங்கிரஸ், […]

Categories
தேசிய செய்திகள்

நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு, கே4 ஏவுகணையில் சாதித்த இந்தியா!

அண்மையில் இந்தியா நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தில் சாதித்துள்ளது. கே.4 ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து கட்டுரையாளர் சி.உதய் பாஸ்கர் விவரிக்கிறார். அதுகுறித்து பார்க்கலாம். ஆந்திராவின் கடற்கரைப் பகுதியில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கே-4 (எஸ்.எல்.பி.எம்) ஏவுகணை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.19ஆம் தேதி) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையானது மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள எதிரி இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

குவியல் குவியலாக ஆயுதம்….. ”வெடிபொருட்களுடன் 644 பயங்கரவாதிகள் சரண்”…. அசாமில் அதிரடி ….!!

அசாமில் எட்டு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 644 பேர் தங்களின் ஆயுதங்களை துறந்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அசாமில் பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 644 பேர் மனம் திருந்தி தங்களின் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். இந்த நிகழ்வு கவுகாத்தி மருத்துவமனையில் உள்ள அரங்கத்தில் நடந்தது. இதில் மாநில முதலமைச்சர் சர்வானந்த சோனாவால், உயர் காவல் அலுவலர்கள் மற்றும் மூத்த அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இவர்கள் முன்னிலையில் அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளான போடோலாந்து தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

”வெடிகுண்டு பார்சல்” எல்லை பாதுகாப்பு முகாமில் அதிர்ச்சி…. படைவீரர் கைது …..!!

தனது உதவி படைத்தலைவரை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை முகாமில் வைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பில் அவர் கைது செய்யப்பட்டார். சமர்பல் என்னும் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் கைது செய்யப்பட்டார். வெடி பொருள்களை கையாள்வதில் நிபுணரான சமர்பல், ஜம்மு – காஷ்மீரில் உள்ள தனது முகாமில் வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை வைத்துச் சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விவசாயம் மூலம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும் – வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா …!!

வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா இந்தியாவின் பொருளாதாரத்தை விவசாயத் துறையின் மூலம் உயர்த்த என்ன தேவை என்பதை விளக்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஒரு சீரான பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் என கருதப்படுகிறது. பட்ஜெட் தொடர்பான அனைத்து விவாதங்களுக்கிடையில், விவசாய பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா பேசிய போது நொறுக்கப்பட்ட பொருளாதாரத்தை விவசாயத்தால் எவ்வாறு புதுப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு …..!!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசு தினம் வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் குடியரசுத் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து அப்பகுதி அருகே பல தடுப்புகள் அமைத்து காவலர்கள் சோதனை நடத்துகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் துணை இயக்குனர் (டிஜிபி) தில்பாக் சிங் கூறும்போது, “அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ரோஹித்துடன் இணைந்த சர்ஃபராஸ் கான்” டிராவில் முடிந்த மும்பை – உபி ஆட்டம் …!!

ரஞ்சி டிராபி தொடரில் மும்பை – உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 2019-20ஆம் ஆண்டுகளுக்கான ரஞ்சி டிராபி சீசன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் பிரிவு போட்டிகளில் மும்பை – உத்தரப் பிரதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய உத்தரப் பிரதேசம் அக்‌ஷ்தீப் நாத், உபேந்திர யாதவ் ஆகியோரின் சிறப்பாக ஆட்டத்தால் 8 விக்கெட்டுகளை இழந்து 625 ரன்களைக் குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 128 ரன்களுக்கு 4 […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

ஒரே கிக்… ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கேரள சிறுவனின் கோல்!

சமூக வலைதளங்களில் வைரலான கேரள அரசுப் பள்ளி சிறுவர்களின் மிரட்டலான ஃப்ரீகிக் கோல் வீடியோ கால்பந்து ஜாம்பவான்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டாலும், கேளரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கால்பந்து போட்டிகள் விளையாடப்படுவதைதான் பார்க்க முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு கேரளா, மேற்குவங்கத்தில் கிரிக்கெட்டை விட கால்பந்து போட்டிக்கே ரசிகர்கள் முன்னிரிமை அளிப்பார்கள். அதிலும், கேரளாவில் கால்பந்து போட்டிக்கு எப்போதும் தனி மவுஸ் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தானில் தீர்மானம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போன்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாநிலத் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை காட்ட உரிமை உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

வரலாற்று சின்னமா..? ராமர் பாலம்….. மத்திய அரசு நிலைப்பாடு என்ன…? உச்சநீதிமன்றம் கேள்வி…!!

இந்தியா இலங்கைக்கு இடையே அமைந்துள்ள ராமர் பாலத்தை பழங்கால வரலாற்றுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளான  பாலம் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்ல ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த பகுதியில் சேது சமுத்திரக் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது இந்து மதத்தின் அடையாளம் என்பதால் பண்டைய கால வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாநில செய்திகள்

“தஞ்சை குடமுழுக்கு” தமிழர்கள் கோரிக்கை நியாயமானது தான்…… ராமதாஸ் ட்விட்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக பாமக கட்சி தலைவர் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகமவிதிகள் இந்த கோரிக்கைக்கு எதிராக இல்லை எனவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றில் முதல்முறை” 8 அமைப்பு…. 644 தீவிரவாதிகள்…. 177 ஆயுதங்களுடன்… போலீசில் சரண்….!!

அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் 177 ஆயுதங்களுடன் காவல்நிலையத்தில்  சரணடைந்துள்ளனர். அசாம் மாநிலம் குவாஹாத்தி பகுதியில் முதலமைச்சர் சர்பானந்த சோனோவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் NDS, PRL, LM,மாவோயிஸ்ட் உள்ளிட்ட 8 அமைப்புகளைச் சேர்ந்த 644 பேர் சரண் அடைந்தனர். AK 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர். அசாமில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்திருப்பது இதுவே முதல் முறை […]

Categories
தேசிய செய்திகள்

தீ விபத்து….. உயிரை பணயம் வைத்து….. 10 பேரை காப்பாற்றிய….. 12 வயது சிறுமிக்கு வீர தீர விருது…!!

மும்பையில்  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையில் கிறிஸ்டில்  55 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்டு 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பில் சென்று பத்து பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் வைத்து தீயில் சிக்கியவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

இடிந்து விழுந்த மசூதியைக் கட்ட ஒன்றிணைந்த இந்து மக்கள்!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் புதிய மசூதி ஒன்றைக் கட்ட இந்து – இஸ்லாமிய மதத்தினர் ஒன்றிணைந்தனர். இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக, கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு பழைய மசூதி இடிந்து விழுந்தது. இதனை அறிந்த இந்து சுவாமிஜி மசூதி இடிந்த இடத்தைப் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மகாநந்த சுவாமி என அழைக்கப்பட்ட அவர், அந்த இடத்தில் பூமி பூஜை செய்து புதிய கட்டுமானத்தை […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு பால்… இந்தியாவுக்கு சுண்ணாம்பு – பாகிஸ்தானின் இரட்டை வேடம்!

பல்வேறு சூழ்நிலைகளில் தங்கள் நாட்டுக்கு சீனா உதவி செய்திருப்பதால், இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அமைதி காத்துவருகிறது. ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்தார். அப்போது, உய்குர் இஸ்லாமியர்களின் நிலை சீனாவில் மோசமாக இருந்தபோதும், அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு காரணம் என்ன? என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு பதிலளித்த இம்ரான் கான், “இந்தியாவில் நடைபெறுவதற்கும் சீனாவில் நடைபெறுவதற்கும் வேறுபாடு உண்டு. சீனா தங்களுடைய நெருங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

இராமர் சேது பாலம்: 3 மாதங்களுக்குப் பின் பரிசீலிக்கிறோம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ..!

இராம சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்  பாஜக மூத்த தலைவரும்  சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என  உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. இராமர் பாலம்  அல்லது ஆதாமின் பாலம் (Adam’s Bridge) என்று அழைக்கப்படும். இது  தமிழ்நாட்டில்  உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் உருவான ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ நீளம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மத்திய பட்ஜெட்… ஒரு வரலாற்று பார்வை….. !!

இந்தியாவின் தேவைகள் என்ன ? என்பதை வகைப்படுத்தி அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கும் பட்ஜெட் முதலில் எப்போது ? தொடங்கியது யார் ? முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம் என்ற பெயர் ”பூசெட்டி”  பிரெஞ்சு சொல்லிலிருந்து உருவானது. பூசெட்டி என்ற பிரெஞ்ச் சொல்லுக்கு லெதர் பேக் என்று பொருள். இந்தியாவில் ஈஸ்ட் இந்தியாகம்பனி தான் முதன் முதலில் பட்ஜெட் என்ற விஷயத்தை துவங்கியது. 1860 ஆம் ஆண்டு ஜான் வில்சன் என்ற ஆங்கிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

‘பிரதமர் அலுவலகத்திற்கு அஞ்சாமல் முடிவெடுத்த ராஜ்நாத்’ – காங்கிரஸ் வாழ்த்து!

டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களைத் தயார் செய்வதற்காக அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து சமர்ப்பித்த ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்த நிலையில், அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘திட்டம் 75I’ (Project 75I) என்பது ஆறு டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களை 45,000 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இதனை அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து தயாரிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், சில […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

2020 பட்ஜெட் – எதிர்பார்ப்புகள் என்ன? சிறப்பு தொகுப்பு …!!

பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட்க்கான எதிர்பார்ப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலை உள்ளதால் அதை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு உள்ளது. முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்றும் , உள்கட்டமைப்பில் அதிக […]

Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பின்…. ”பொது விடுமுறை தினம்”… ஜார்கண்ட் அரசு அறிவிப்பு ..!!

விடுமுறை தின பட்டியலில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதியை மீண்டும் பொது விடுமுறை தினமாக ஜார்கண்ட்  மாநில அரசு அறிவித்தது . ஜார்கண்ட் மாநிலத்தில் நேதாஜி பிறந்த நாளை கடந்த 2014ஆம் ஆண்டு வரை விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் இந்த தினம் பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரான்சில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் …..!!

வருகின்ற பிப்ரவரியின் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கின்றார். உலகின் தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கீழ் நோக்கு பார்வையில் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் இந்திய பொருளாதாரமானது  3.5% வளர்ச்சியை மட்டும்தான் அடைந்துள்ளது என்று அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.  காலகட்டத்தில் தான் நிதியமைச்சர் நீர்மலாசீத்தராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இதனால் நாடே உற்று நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றது. இந்திய பொருளாதாரம், இந்திய வணிகம் என அனைத்து சேவைகளும் இந்த பட்ஜெட்டை […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையங்களில் 10 ஆயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் சோதனை..!!

இந்திய விமான நிலையங்களில் சுமார் பத்தாயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக செயலர் ப்ரீத்தி சூடான் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலர் ப்ரீத்தி சூடான் கூறும்போது, “இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் 43 விமானங்களில் வந்த ஒன்பதாயிரத்து 156 பயணிகளுக்கு இதுவரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக, காங்கிரஸ்சுக்கு….. ”தமிழர் என்றாலே கிள்ளுக்கீரை தான்” …. வேல்முருகன் …!!

7 பேர் விடுதலையில் ஆளும் பாஜகவும் , ஆண்ட காங்கிராஸ்ஸும் அரசியல் செய்வதாக வேல்முருகன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுங்கியில் , மத்தியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் , பிஜேபி க்கு எந்த வேறுபாடும் இல்லை. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே கிள்ளுக்கீரை . 7 பேர் விடுதலை , பரோல் விடுப்பு என தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி  நீதிமன்றம் தான் வழங்குகின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிரிவு 161ஐ  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சவாலுக்கு நாங்க ரெடி – நீங்க ரெடியா…? அமிஷா நோக்கி பாயும் தலைவர்கள் ..!!

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடும்பத்தின் மூத்த பிள்ளைபோல் வேலை செய்தேன் – கெஜ்ரிவால்

வீட்டிலுள்ள மூத்த மகனைப்போலவே வேலை செய்தேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சியினரும் சுறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இன்று பத்லி தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களிடையே பேசியபோது,”கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தோம். குடிநீரையும், மின்சாரத்தையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் அல்வா அல்ல…… காரமான மிளகாய் ….. பாஜகவை விளாசிய ஓவைசி …!!

நான் இனிப்பான அல்வா அல்ல. காரமான சிவப்பு மிளகாய் என்று பாஜகவை கண்டித்து மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி  பேசியுள்ளார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ கிடையாது. […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகள் நிச்சயம் இருக்கும்!

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிச்சயம் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தேவையான அறிவிப்புகள் இருக்கும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி முன்பு கணித்ததைவிட தற்போது குறைவாக(4.8) இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரகாஷ் ஜவடேகர், “வரும் பிப்ரவரி ஒன்றாம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி முதலமைச்சருக்கு கருப்புக்கொடி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற பேரணியில் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான செவ்வாய்கிழமை (ஜனவரி 21), புது டெல்லி தொகுதியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், இன்று மட்டும் இரண்டு பிரமாண்ட பேரணிகளில் பங்கேற்றார். முதல் பேரணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அல்வா என்ற சொல் எங்கிருந்தது வந்தது? பாஜகவுக்கு ஓவைசி கேள்வி

பொதுப் பட்ஜெட் (நாட்டின் வரவு-செலவு திட்டம்) கூட்டத் தொடருக்கு முன்னதாக நடக்கும் அல்வா கிண்டும் நிகழ்வு குறித்து அசாதுதீன் ஓவைசி கேள்வியெழுப்பினார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 23…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 23   கிரிகோரியன் ஆண்டு : 23_ ஆம் நாளாகும்   நெட்டாண்டு : 343_ ஆம் நாள்   ஆண்டு முடிவிற்கு : 342_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் 393 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு ஒனோரியசு என்ற 8-அகவை மகனை துணைப் பேரரசராக அறிவித்தார். 1368 – சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது. 1556 – சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் நண்பரின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன்: சச்சின்

’புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ போட்டிக்காக தனது நண்பர் பாண்டிங்கின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன் என சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் வனவிலங்குகள் கணக்கிட முடியாத அளவிற்கு பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதுமட்டுமின்றி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காட்டுத் தீயால் உருக்குலைந்த ஆஸ்திரேலியாவுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏராளமான பிரபலங்கள் உதவி செய்துவரும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ் என கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர். அதில் வரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நீங்க லோக்கல பாருங்க போதும்”…. பாண்டியாவுக்கு பிசிசிஐ ஆலோசனை …!!

உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்துமாறு இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சில நாள்களுக்கு முன்னதாக ஹர்திக், உடல்தகுதி சோதனையில் தன்னால் எளிதாக வெற்றிபெற முடியும் எனக் கூறியிருந்ததால், தற்போது இந்தச் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பேசுகையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’பெங்காலின் ஜடேஜாவாக இருக்க விருப்பம்’ – ஹாட்ரிக் நாயகன் அகமது!

ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிவரும் ஷாபாஷ் அகமது, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ஹாட் ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பாண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கடந்த 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய போட்டியில் பெங்கால் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இதையடுத்து அந்த அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய மனோஜ் திவாரி முற்சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 21 ஆண்டுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம்?…. வைரலாகும் மோடியின் மனைவி!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி போராட்டத்தில்  கலந்து கொண்டதாக புகைப்படம்  வெளியாகி வைரலாகியுள்ளது. பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற போட்டோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வைரல் போட்டோவில் பெண்களுடன் அமர்ந்து மொத்தமாக அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பெண் சிட்டி ரோபோ” மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்….. இஸ்ரோ சிவன் பேட்டி….!!

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள ரோபோவை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது.  விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் ககன்யான். இதற்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கிவிட்டது. ஏற்கனவே விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் இதுவரை செயல்படுத்தியது இல்லை. எனவே அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஆளில்லா இயந்திரத்தை வைத்து சோதனை […]

Categories

Tech |