மதுராவில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகேயுள்ள சுரீர் நகரில், சிறுமி ஒருவர் தனது பாட்டியுடன் தீவனம் சேகரிக்க காட்டுப்பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவரை மூன்று பேர் மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
Tag: India
ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான ராகுல் காந்தியை மக்கள் விரும்பவில்லை என பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திரா குஹா கூறியுள்ளார். கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, “ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான ராகுல் காந்தியை மக்கள் விரும்பவில்லை. ராகுல் திறமைமிக்கவர்தான் என்றாலும் ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான அவரை மக்கள் விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடி சுயமாக உருவான தலைவர். கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி அரசியலில் தொடர்வது மோடிக்கு […]
இன்று இந்தியா – இலங்கை மோதல் …!!
13-வது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா வில் வெள்ளியன்று தொட ங்கியது. இளசுகள் பங்கேற் கும் தொடர் என்பதால் கிரிக் கெட் உலகம் இந்த தொடரை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் கள மிறங்கும் இந்திய அணி (பிரி யம் கர்க் தலைமையில்) தனது முதல் லீக் ஆட்டத் தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்தியா – இலங்கை இடம் : மாங்குவாங் நேரம் : மதியம் 1:30 மணி
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவரின் மனைவியைபாலியல் தொழிலாளியாக்குவோம் என்று காவல்துறை மிரட்டிய சம்பவம், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த டிசம் பர் 20-ஆம் தேதி லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ராபின் வர்மாவும் ஒருவராவார். உத்தரப்பிரதேச பாஜக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள ராபின் குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமைச் சட்டத்தை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 19…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 19 கிரிகோரியன் ஆண்டு : 19_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 347_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 346_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 379 – பேரரசர் கிராத்தியான் உரோமைப் பேரரசின் கிழக்கு மாகானங்களுக்குப் பொறுப்பாக பிளாவியசு தியோடோசியசை நியமித்தார். 1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது. 1511 – இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின. 1661 – பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார். 1764 – உலகின் […]
உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர் வழக்கை வாபஸ் பெறக் கோரி, அந்த சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் ,அதில் ஒருவன் மட்டும் சிறுமியின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்று, வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளான். அவர்கள் மறுப்பு தெரிவித்ததும் சிறுமியின் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை வீசி சாதனை படைத்தவருமான பாபு நட்கர்னி வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாபு நட்கர்னி வயது மூப்பின் (86) காரணமாக நேற்று மும்பையில் காலமானார். காலமான நட்கர்னிக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்திய அணிக்காக விளையாடியுள்ள இவர் 41 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 88 விக்கெட்டுகளையும், 1,414 […]
ஒருநாள் போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது. இப்போட்டியில், 341 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் அந்த […]
எந்த இடத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சிதான் என்று இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் கூறியுள்ளார். சமீப காலமாக இந்திய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கியவர் கேஎல் ராகுல். இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார். ஆனால் அப்போட்டியில் சிறிதும் மாற்றமின்றி தனது அதிரடி ஆட்டத்தால் 80 ரன்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மட்டுமில்லாமல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். போட்டி […]
இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நேற்றைய லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை […]
126ஆவது சட்ட திருத்த மசோதாவுக்கு மத்தியப் பிரதேச சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 126ஆவது சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆங்கிலோ இந்தியர்களுக்கான நியமனம் தொடர தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலோ இந்தியர்களும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள்தான் என மாநில அமைச்சர் கோவிந்த் சிங் தெரிவித்ததைத் […]
பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். பாகிஸ்தான் சிந்து மாகாணத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு புலம்பெயர்ந்தவர் நீதா கன்வர். 2001ஆம் ஆண்டு கல்வி கற்பதற்காக அவர் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தார். 36 வயதான அவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார். அஜ்மரில் உள்ள சோபியா கல்லூரியில் 2005ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், 2011ஆம் ஆண்டு பூன்யா பிரதாப் கரணை திருமணம் செய்துகொண்டார். இந்தியரை திருமணம் செய்தபோதிலும் எட்டு […]
நான்கு வயது சிறுமியை இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நகரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் எட்டு வயது சிறுவனையும் 12 சிறுவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் […]
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கிராமத் தலைவராக 97 வயது மூதாட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பூரணவாஸ் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டியான வித்யா தேவி போட்டுயிட்டு வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த ஆரத்தி மீனாவைவிட 207 வாக்குகள் அதிகம் பெற்று கிராம தலைவராக வித்யா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வித்யா தேவி 843 வாக்குகளையும் மீனா 636 வாக்குகளையும் தேர்தலில் பெற்றனர். 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். […]
பேட்ஸ்மேன் அடித்த பந்து தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அடோனி பகுதியில் வசித்துவந்த மோஹின் (10) என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றுள்ளான். அப்போது, மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியைக் காண தனது இரண்டு நண்பர்களுடன் சென்றுள்ளான். அப்போது, பேட்ஸ்மேன் அடித்த பந்து நேராக மோஹின் நெஞ்சில் பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மோஹின், மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளான். இதைப் பார்த்த மோஹின் […]
நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக பின்னப்பட்ட சதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் தலைமையில் டெல்லி தாராகஞ்ச் பகுதியில் நடத்தப்பட்டது. போராட்டத்தில் வன்முறை வெடித்ததாகக் கூறி காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பலமுறை சிறை சென்றாலும் அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் […]
ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 6ஆவது சீசனின் 60வது ஆட்டம் சென்னை ஜவ ஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வியாழ னன்று(ஜன.16) இரவு நடைபெற்றது. நார்த் ஈஸ்ட் எஃப்சி (கவுகாத்தி)அணியும் சென்னை எஃப்சியும் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு அடிக்க கிடைத்த வாய்ப்பு கை நழுவிப் போனது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனாலும் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. […]
மருந்துத் தயாரிப்பு நிறு வனங்கள், மருத்துவர்களுக்கு லஞ்சமாக பெண்களை அனுப்பி வைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியதாக சர்ச்சை எழுந் துள்ளது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது தலைநகர் தில்லியில் கடந்த ஜனவரி 2-இல் ஜைடஸ் காடிலா, டொரண்ட் பார்மாஸிட்டிகல்ஸ், வாக்ஹார்ட் உள்ளிட்ட மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதி களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் சந்தைப்படுத்துதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மருந்துத் தயா ரிப்பு […]
பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காததை நக்கல் செய்யும் வகையில் ஆம் ஆத்மி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிவருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேபோல பாஜகவும் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற […]
நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு பெற்ற மாபெரும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மி முனைப்பு காட்டிவருகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஆட்சியை பிடிக்க போராடிவருகின்றன. ஆம் ஆத்மி சார்பில் ஏற்கனவே மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை […]
“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி”, ஆகயால் மக்களை கண்ணியமாக நடத்துங்கள் என அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவுரை வழங்கினார். ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக்,“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி. காவல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் அனைத்துமே அவர்களுக்காகத்தான் செயல்படுகிறது. இங்கு வேலை செய்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் ஊதியம் கொடுக்கிறார்கள். எனவே மக்களே உண்மையான […]
உள்நாட்டுத் தொடர்களில் வீரர்களைக் கவனம்செலுத்தக் கூறுவதில் சவால் ஏற்பட்டுள்ளது என ஐசிசி கிரிக்கெட் குழுத்தலைவர் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் டெஸ்ட் போட்டிகளின் நாள்களை நான்கு நாள்களாகக் குறைப்பதற்கு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி ஆலோசனை நடத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே பெங்களூருவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஐசிசி கிரிக்கெட் குழுத்தலைவர் கும்ப்ளே கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”அனைத்து வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதில் ஆர்வமாக உள்ளனர். […]
இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பதவியிலிருந்த லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம். நரவனே, ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். ராணுவ துணைத் தளபதியான சைனி தேசிய பாதுகாப்புக் காவலரின் பயிற்சி மையத்தில் ஆயுத பயிற்றுவிப்பாளராகவும், டெல்லியின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மூத்த இயக்குநராகவும்; இந்திய ராணுவ அகாடமியின் கமாண்டன்ட் டெஹ்ரா டன்னாகவும் பணியாற்றிய அனுபவமிக்கவர். இந்திய […]
நிர்பயாவின் தாயாரை பாஜக தவறாக வழிநடத்துகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நிர்பயா பாலியல் வழக்கு விவகாரத்தில் டெல்லி அரசு தனது பொறுப்புகளை சரியாகச் செய்துவருகிறது. நாங்கள் கருணை மனுவை சில மணி நேரங்களுக்குள் அனுப்பினோம். எனவே குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துவதில் டெல்லி அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்றார். டெல்லி அரசு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துகிறது என்று மத்திய […]
நிர்பயா வழக்கு விவகாரம் தொடர்பாக அரசியலில் செய்யாமல், இதுபோன்ற வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவினரிடம் வலியுறுத்தியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதமானதுக்கு ஆம் ஆத்மி அரசு காரணம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற பிரச்னையில் அரசியல் செய்வது வருத்தமாக இருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதிசெய்ய, ஒன்றிணைந்து செயல்பட […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவின் அழைப்புக்காகப் பாகிஸ்தான் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 19ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பு நாடுகளையும் அழைக்கப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அழைப்புக்காகப் பாகிஸ்தான் காத்திருப்பதாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தானை மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கும் பட்சத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இந்தியா வருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஜம்மு […]
வரலாற்றில் இன்று ஜனவரி 18…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 18 கிரிகோரியன் ஆண்டு : 18_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 348_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 347_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார். 1535 – எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்ச், இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தவான், கோலி, ராகுல் ஆகியோரால் ஆஸ்திரேலிய அணிக்கு 341 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு வழக்கம்போல் வார்னர் – ஃபிஞ்ச் […]
நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். அந்த மனுவை அளித்தவர் குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான பவன் குமார் குப்தா […]
இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பிட்ச்களில் ஓடியதால், 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்சு இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து இந்திய அணி சிறப்பாக ஆடியது. இந்திய பேட்ஸ்மேன்களான தவான், கோலி, ரோஹித், ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனிடையே இந்திய வீரர் ஜடேஜ ரன்கள் ஓடுகையில், பிட்ச்களில் […]
புதிய சீர்திருத்தங்கள் காரணமாக, நிறுவனங்களிடையே போட்டித்தன்மை அதிகரிக்கும், இதன் மூலம் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்பு காரணமாக, நிலக்கரியை வெட்டியெடுப்பதில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கத்துறையில் கோல் இந்தியா நிறுவனத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சுரங்கத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் நிறுவனங்கள் வணிக நோக்கத்துடன் சுரங்கத்துறையில் ஈடுபடவும் அனுமதி வழங்க […]
தேஜஸ் எக்ஸ்பிரஸ்ஸின் முதல் பயணத்தை ஆமதாபாத்தில் இன்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். ஆமதாபாத்- மும்பை இடையே ஐஆா்சிடிசி சாா்பில் தேஜஸ் விரைவு ரயில் இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது. தனியாா் சாா்பில் இயக்கப்படும் இரண்டாவது ரயில் இதுவாகும். நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னோ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது தனியார் ரயில் ஆமதாபாத்- மும்பை வழித்தடம் […]
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 341 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இன்று ராஜ்கோட்டில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் – தவான் இணை களமிறங்கி அதிரடி ஆட்டத்தை […]
சத்ரபதி சிவாஜி பெயரையும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரையும் ஒருபோதும் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தியதில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா, மும்பையின் நிழல் உலக தாதா கரம் லாலாவைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. சாம்னா செய்தித்தாளின் ஆசிரியர் சஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திர காந்தி மும்பை வரும்போதெல்லாம் கரம் லாலாவை சந்திப்பார் என்று சஞ்சய் […]
மோடியை வியக்கவைத்த கிராமங்கள்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள இரு கிராமங்கள் பிளாஸ்டிக் ஒழிப்பில் பிரதமர் மோடியின் பாராட்டுகளை பெற்று நாட்டுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆரா, கெரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் பல பாராட்டுகளை தக்கவைக்க முயற்சிகளை இந்த கிராமங்கள் மேற்கொண்டுவருகிறன. இந்த முன்மாதிரியான முயற்சிக்கு பிரதமர் மோடியும் பாராட்டுகளை தெரிவித்தார். ஒர்மன்ஜி தொகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு கிராமங்கள் பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்கும் […]
பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமை குறித்த விவரங்களைத் தனக்கு வெளியிட வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக இந்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்குவங்க மாநிலத்தில் தீவிர போராட்டம் நிலவிவருகிறது. இந்நிலையில், இந்தச் சட்டத்தை முன்வைத்து கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியிடம் விசித்திர கேள்வியை முன்வைத்துள்ளார். கேரளாவின் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த […]
உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அபராதத் தொகையை 2 மாதத்தில் கட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசித்த சிறுமியை, அப்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த […]
பத்திரிகைகளில் கூறுபடுவது போல நான் ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். அப்பொழுது அவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து சில மணி நேரங்கள் கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறபப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், […]
அரசின் திட்டங்கள் குறித்து முப்படைத் தலைமைத் தளபதி கருத்து கூறியிருப்பது மக்களாட்சியை கேள்விக்குறியாக்குகிறது என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர், பயங்கரவாதத்தை நோக்கிச் செல்லும் இளைஞர்களை மீட்கும் வகையில் விழுப்புணர்வு மையங்கள் தொடங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை விமர்சித்து […]
தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை (NPR) கேரளாவில் மேற்கொள்ளக் கூடாது என அம்மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கேரள அரசு சார்பில் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை (NPR) கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள கேரள அரசு, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, கேரள அரசு தலைமைச் செயலர் கே.ஆர். ஜோதிலால் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், “2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது […]
தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு விஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி- நிருபர்கள் சந்திப்பு: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவித்தேன். துரைமுருகன் என்ன பேசியுள்ளார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொண்டபின் கருத்துகளை தெரிவிக்கிறேன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி சம்பந்தமானது. […]
ஆண்டின் முதலாவது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ந் தேதி தொடங்குகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்கும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது, இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். எனவே, மரபுப்படி, கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31-ந் தேதி உரையாற்றுகிறார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி), 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான மத்திய […]
மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கபடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, பதிவேடு தயாரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகளும் , போராட்டங்களும் நடக்கின்றன. ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்தப் பணி நடைபெறும் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த […]
இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் – 30, இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரெஞ்சு கயானாவிலுள்ள கவுரவ் விண்வெளி மையத்திலிருந்து, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியேன் – 5 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக, இஸ்ரோ தற்போது ஜிசாட்-30 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள ஜிசாட் – 30 செயற்கைக்கோள் தொலைதொடர்பு, டி.டி.எச்., டிஜிட்டல் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 17…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 17 கிரிகோரியன் ஆண்டு : 17_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 349_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 348_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 395 – பேரரசர் முதலாம் தியோடோசியஸ் இறந்ததை அடுத்து, உரோமைப் பேரரசு நிரந்தரமாக கிழக்கு உரோமைப் பேரரசாகவும், மேற்கு உரோமைப் பேரரசாகவும் பிரிந்தன. 1287 – அரகொன் மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். 1362 – ஐரோப்பாவில் பிரித்தானியத் தீவுகள், நெதர்லாந்து, வடக்கு செருமனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1] 1377 – திருத்தந்தை பதினோராம் கிரெகரி தனது […]
குடியரசு தின விழாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்தனர். நாட்டின் குடியரசு தின விழாவில் பலத்த தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐந்து பயங்கரவாதிகளை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடிப்பொருட்கள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் நைட்ரிட் ஆசிட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முஹம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். காவலர்கள் கைது செய்த பயங்கரவாதிகள் ஐந்து பேருக்கும் காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புள்ளது. […]
பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அடுத்த 30 நாள்களுக்குள் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து விவரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தியாவில் பணவீக்கம் […]
இந்திரா காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சிவசேனா மூத்தத் தலைவர், தனது கருத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், மகாராஷ்டிரா கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நிழல் உலக தாதாவான ஹாஜி மஸ்தான் மந்திராலயாவுக்கு சென்றால் முழு அமைச்சகமே அவரை சந்திக்கச் செல்லும். கரிம் லாலாவை இந்திரா காந்தி […]
பயங்கரவாதத்தைக் கைவிட்டால் அனைத்து தரப்புடனும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று கலந்துகொண்டார். அப்போது, பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த அவர், “அரசே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்வரை நாம் அச்சுறுத்தலோடுதான் வாழ முடியும். பிரச்னையின் காரணியை கண்டுபிடித்து அதனை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான […]
சுமார் 8,000 யூனிட் ரயில்வே பெட்டிகளை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் உற்பத்தியில் 30 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே பெட்டிகள் உற்பத்திப் பிரிவு (Coach Manufacturing unit) 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 8,000 பெட்டிகளைத் தயாரிக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு 10,000 பெட்டிகளைத் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உற்பத்திப் பிரிவில் 30 விழுக்காடு அதிகரிக்கலாம் என்றும் இதனை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் […]