Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த டெல்லி அரசு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை இன்று நிராகரித்துள்ளது. இந்த மனு தற்போது டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கும், அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். 23 வயதான நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலத்த காயம் […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு வெற்றி – மண்ணைக் கவ்விய சீனா!

காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்பியபோது, அப்பிரச்னையை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் தீர்த்துக் கொள்ளும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மகமுது குரேஷி கடிதம் மூலம் சீனாவுக்கு தெரிவித்திருந்தார். இந்தக் கடிதத்தை பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்ப முயன்றது. ஆனால், கவுன்சிலின் மற்ற நாடுகள் தரப்பில், “காஷ்மீர் விவாகாரம் இருநாட்டுப் பிரச்னை; அதனை இந்தியா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இரு அணிகளும் முதலில் டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது. மீண்டும்வந்த வில்லியம்சன் இந்த டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு வந்த மர்ம விஷம் தடவிய கடிதம்…! போலீஸில் புகார் 

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு வி‌ஷ ரசாயனம் தடவப்பட்டு வந்த கடிதத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.என அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர். இவர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது அவரது வழக்கம். இந்நிலையில்  அவருக்கு கடந்த மாதம் அக்டோபரில் ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தை இப்போது தான் பிரித்தது படித்ததாகவும் பிரக்யா எம்.பி. கூறி இருக்கிறார்.  […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

வெளியானது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜ் செடாக்……!!

Bajaj Chetak புனேவில் விற்பனை செய்த பின்னர் தான் பெங்களூருவுக்கு விற்பனைக்கு வரும் என்று கூறி பஜாஜ் அதன் முழு விலை உள்ளிட்ட விவரங்களை அறிவித்துள்ளது. பஜாஜ் வாகனத் தயாரிப்பு நிறுவனம் Bajaj Chetak என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஒரு லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.இதுதான் பஜாஜ் நிறுவனம் வெளியிடும் முதல் எலக்ட்ரிக் வாகனமாகும். இது இரண்டு வெர்சனில் வெளியிடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ 1 லட்சம் என்று Chetak-ன் நகர்ப்புற வெர்ஷனுக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிப்ரவரியில் டிரம்ப் இந்தியா வருகை: கையெழுத்தாகுமா வர்த்தக ஒப்பந்தம்?

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபின் டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக அடுத்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரின் வருகையின் முக்கியத்துவம் குறித்து மூத்த ஊடகவியலாளர் ஸ்மிதா சர்மாவின் கருத்துகளின் தமிழாக்கம் இதோ… அமெரிக்க அதிபராக மூன்றாண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முதன்முறையாக இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது நாட்டில் பதவி நீக்க பிரச்னையை சந்தித்துவரும் டிரம்ப், பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019இல் வராத டிரம்ப் இதற்கு முன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தலையில் தாக்கிய பவுன்சர்; காயத்தால் விலகிய ரிஷப் பந்த்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் பேட்டிங் செய்தபோது, பட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த இரு போட்டிகள் பட்டாஸாக இருக்கப்போகிறது : கங்குலி நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், அடுத்த இரு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனை கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் பெரும் தோல்வி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சுக் கூட்டணியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிதறடித்தது இந்திய அணியின் மனஉறுதியைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் வேணும்னா அப்படி செய்யட்டுமா ? அணிக்காக ஷிகார் எடுக்கும் முடிவு …!!

இந்திய ஒருநாள் அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே உள்ளேன் என தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய மூவரும் அபாரமான ஃபார்மில் உள்ளதால், யாரை தொடக்க வீரராக களமிறக்கலாம், யாரை மிடில் ஆர்டரில் களமிறக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த மூவருக்கும் அணியில் இடம்கொடுக்க வேண்டும் என்பதால் கடந்த போட்டியில் விராட் கோலி, ராகுலுக்காக நான்காவது […]

Categories
தேசிய செய்திகள்

ஆத்தாடி…. 170 செமீட்டரா ? கின்னஸில் 17 வயது பெண் மெர்சல் சாதனை …!!

உலகில் நீளமான தலைமுடியை கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதேயான நிலன்ஷி படேல். கின்னஸ் சாதனை உலகில் பலரும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு கின்னஸ் எனப்படும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துவருகின்றனர். அந்தவகையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வித்தியாசமான கின்னஸ் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். தற்போதைய காலத்தில் பெண்கள் சுற்றுச்சூழலுக்குப் பயந்து முடிவளர்த்தலைக் குறைத்துவரும் நிலையில், இளம்பெண் ஒருவர் தனது தலைமுடிக்காகவே கின்னஸ் உலக சாதனையைப் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி எதுக்கு ? டிக்டாக்….. ”செயலியை ஓரங்கட்டு” ஃபேஸ்புக்கின் லஸ்ஸோ…..!!

அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம்செய்யப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலி, இந்தாண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ மக்களை தன்வசம் கவர்ந்துவைத்துள்ள செயலிகளில் ஒன்று டிக்டாக். ஆதரவையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ள டிக்டாக் செயலி அதுபோன்ற பல்வேறு வகை செயலிகளின் அரசனாக வலம்வருகிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றுள்ள இச்செயலிக்கு மாற்றாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலியை களமிறக்கவுள்ளது இந்நிறுவனம். ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக லஸ்ஸோ என்ற செயலியை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை குற்றவாளிகளுக்கு உறுதி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரும், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். இந்த மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து குற்றவாளிகள் வினய் குமார் சர்மாவும், முகேஷ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுத்தாக்கல் செய்தனர். அதனையும் நீதிமன்றம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 16…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 16 கிரிகோரியன் ஆண்டு : 16_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 350_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 349_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 27 – கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. 929 – குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது. 1362 – வடகடலில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் இங்கிலாந்தின் கிழக்குக் கரை பெரும் சேதத்திற்குள்ளானது. ருங்கோல்ட் என்ற செருமனிய நகரம் அழிந்தது. 1492 – எசுப்பானிய மொழியின் முதலாவது இலக்கண நூல் பேரரசி முதலாம் இசபெல்லாவிடம்]] கையளிக்கப்பட்டது. 1547 – இளவரசர் நான்காம் இவான் உருசியாவின் 1-வது (சார்) […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவின் ஜிசாட்30 ஜனவரி 17ல் பாய்கிறது

இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு  கயானாவில் இருந்து வரும் 17ஆம் தேதி அதிகாலை ஏவப்பட உள்ளது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவை களுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 15…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 15 கிரிகோரியன் ஆண்டு : 15_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 351_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 350_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 69 – உரோமைப் பேரரசின் ஆட்சியை ஓட்டோ கைப்பற்றித் தன்னைப் பேரரசராக அறிவித்தார். எனினும் மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார். 1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார். 1582 – லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை உருசியா போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்திடம் கையளித்தது. 1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய கனெடிகட் விடுதலையை அறிவித்தது. 1799 – இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

BREAKING :நிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்கள்  தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அதிரடி

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து 2 குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை  தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பீகாரில் இடமில்லை – நிதீஸ்குமார் உறுதி..!!

பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு கண்டிப்பாக செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் நிதீஷ்குமார் பிகார் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். பிகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை என்று கூறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் என்றார். இது குறித்து பிகார் சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், “பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த எந்தக் கேள்வியும் இல்லை. அது அஸ்ஸாம் மாநிலத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொருளாதாரக் கட்டமைப்பு மீது மோசடிகள் ஏற்படுத்தும் தாக்கம்!

இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மீது மோசடிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனைக் கட்டுரையாளர் டாக்டர். எஸ். ஆனந்த் விவரிக்கிறார். வணிகங்கள் தனது அன்றாட செயல்பாட்டில் பல அபாயங்கள், சிக்கல்கள், சவால்களை எதிர்கொள்கின்றன. இதில் பலவும் அவற்றின் லாபம், இழப்பு அல்லது அவற்றின் இருப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எதிர்பார்ப்பு வழக்கமாக ஆரம்பத்தில் எந்தவொரு வணிகமும் அபாயங்களுடன் மட்டுமின்றி அவற்றின் சாத்தியமான லாபங்கள், இழப்புகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துகள் பொதுவாக அவற்றின் பல செயல்பாட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்…  

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்  இன்று மும்பையில் நடைபெறவுள்ளது.  2019-ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் அசத்தலான வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு இந்த ஆண்டின் இரு அணிகளும் மோதும் முதல் போட்டிஇதுதான். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில்  இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆதிக்கம் செலுத்தி போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி பத்திரிகையாளர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமைதியான மக்களிடம் கதையளக்க வேண்டாம்…. 5 விமர்சகர்களின் கேள்விக்கு பதிலளிக்கத் தயாரா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விமர்சகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரா? என்று, மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: “குடியுரிமையை வழங்குவதற்காகவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்கிறார் பிரதமர். ஆனால், அச்சட்டம், தங்களை குடிமக்கள் இல்லை என அறிவித்து விடும் எனவும், தங்கள் குடியுரிமையை […]

Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்…. உ.பி. பாஜக அமைச்சர் வெறிப்பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராகப் பேசுபவர்களை உயிரோடுஎரிக்க வேண்டும்” என உத்தரப்பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அலிகார் நகரத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்துணைத் முதல்வர் கேசவ் பிரசாத்மவுரியா, தொழிலாளர் துறை அமைச்சர் ரகுராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போதுதான், “சிஏஏ-வைஎதிர்ப்பவர்கள் வெறும் 1 சதவிகிதம் பேர்தான். இந்தியாவில் தங்கியிருந்து, எங்கள் வரிகளைச் சாப்பிட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராக ‘முர்தாபாத்’ […]

Categories
உலக செய்திகள்

உயர்நிலை அலுவலர்கள் டிஸ்மிஸ்- வால்மார்ட் அதிரடி!

இந்தியா முழுவதும் 28 மொத்த விற்பனை மையங்களை நடத்திவரும் முன்னணி வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நாடு முழுவதும் உள்ள 56 உயர்நிலை அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வேலைத் திறனை காரணம் காட்டி சர்வதேச பெருநிறுவனமான வால்மார்ட், இந்தியாவைச் சேர்ந்த 56 அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அமேசான் நிறுவனரும் அதன் தலைமை செயல் அலுவலருமான ஜெஃப் பெசாஸ் தற்போது இந்தியா வரவுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை போட்டி நிறுவனமான வால்மார்ட் மேற்கொண்டுள்ளது. இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஓயோவில் 1000 பேரின் வேலை காலி!

ஓயோ நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஓயோ நிறுனத்தின் தலைவர் ரித்தீஸ் அகர்வால், ஓயோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், “ஓயோ நிறுவனத்தை மறுசீரமைக்கவுள்ளதால், சில ஊழியர்களை ஓயோ நிறுவனத்தைத் தாண்டி வேறு நிறுவனத்தில் வேலையில் சேரும்படி கேட்டுக்கொள்கிறோம். உண்மையைச் சொன்னால், இது எங்களுக்கு எளிதான முடிவல்ல. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி ஓயோ நிறுவனம் நகர்வதால், வேறுவழியின்றி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 14…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 14 கிரிகோரியன் ஆண்டு : 14_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 352_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 351_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1236 – இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார். 1301 – அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார். 1539 – எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது. 1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது. 1724 – எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான். 1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 1784 – அமெரிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக்கை தவிர்க்க சொல்லும் ஆமை!

குருக்ஷேத்திரத்தில் உள்ள இளைஞர்கள் குழு பைகளை கொண்டு ஆமை பொம்மையை உருவாக்கி பிளாஸ்டிக்குகளை தவிர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் உள்ள இளைஞர்கள் குழு ஒன்று 87 ஆயிரத்தி 297 பிளாஸ்டிக் பைகளை கொண்டு ஆமை பொம்மையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்குமாறு அக்குழு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட அந்த ஆமையின் உயரம் 6.6 அடியாகும். நீளம் 23 ஆடியாகும். குருக்ஷேத்திராவை சேர்ந்த மாணவி ரிது, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை சீராய்வு மனுக்களை விசாரிக்கமாட்டோம்: உச்ச நீதிமன்றம்!

சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த […]

Categories
விழாக்கள்

போகி பண்டிகையின் அர்த்தம் தெரியுமா?!

பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழையனவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள் இது. அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரம்ன்னு நம்முடைய தீயகுணங்களை விட்டொழித்து புதுமனிதனாக மாறுவதன் அடையாளமாய், வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி “போகி” என்றானது. இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. போகியன்று நம் முன்னோர்கள் நம் வீட்டுக்கு வருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை..!!

 சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 13…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 13 கிரிகோரியன் ஆண்டு : 13_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 353_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 352_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான். 1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை மம்தா பானர்ஜி அனுமதிப்பதில்லை – மோடி தாக்கு..!!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் இடைத்தரகர்களை ஒழிப்பதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அத்திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கொல்கத்தா துறைமுக அறைக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, “ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற திட்டங்களை மேற்கு வங்க மாநில அரசு அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியைப் போல் ஆட்டங்களை முடிக்க கற்றுக் கொள்ளவேண்டும்: ஆஸி. துணை கேப்டன்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனியைப் போல் ஆட்டங்களை வெற்றிகரமாக முடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 14ஆம் தேதி மும்பை வான்கடேவில் தொடங்கவுள்ளது. இதற்காக அந்த அணியின் துணை கேப்டன் அலெக்ஸ் கேரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஒருநாள் போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு எம்.எஸ்.தோனியைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஎன்யுவில் இயல்புநிலை திரும்பவில்லை – உதயநிதி ஸ்டாலின்!

ஜேஎன்யுவில் இயல்பு நிலை திரும்பவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 5ஆம் தேதி மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் தாக்கப்பட்டனர். இதற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக அக்கட்சியின் மகளிரணி […]

Categories
தேசிய செய்திகள்

கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றிய டிஐஜி – துடிதுடித்த ராணுவ வீரர்.!!

குடிக்க வெந்நீர் கேட்டதற்கு ராணுவ வீரர் கொதிக்கும் நீரை கொண்டுவந்ததால் ஆத்திரமடைந்த டிஐஜி, கொதிக்கும் நீரை வீரரின் முகத்தில் உற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் ராஜ்கீர் மாவட்டத்தில் குடிக்க வெந்நீர் கேட்ட சிஆர்பிஎஃப் டிஐஜி டி.கே. திரிபாதிக்கு, கொதிக்கும் நீரை அங்கு ராணுவ உணவகத்தில் இருந்த வீரர் வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிஐஜி, அந்தக் கொதிநீரை ஊழியர் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் முகம் மற்றும் உடம்பில் பயங்கர தீக்காயங்களுக்கு ஆளான அந்த ஊழியர், அருகிலிருந்த […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 12…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 12 கிரிகோரியன் ஆண்டு : 12_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 353_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 354_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1528 – முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். 1554 – பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார். 1848 – போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது. 1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது. 1866 – கொழும்பு மாநகரசபைக்கு முதல்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெற்றன.[1] 1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. 1872 – நான்காம் யொகான்னசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். 1908 – முதற்தடவையாக தூர […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 11…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டு : 11_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 355_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 354_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 630 – மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர். 1055 – தியோடோரா பைசாந்தியப் பேரரசியாக முடி சூடினார். 1569 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது. 1571 – ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது. 1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது. 1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார். 1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் எளிய முறையில் திருமணம் முடிக்க இருக்கும் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடி!

குஜராத்தில் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடியின் திருமணம் வருகிற 12ஆம் தேதி நடக்கிறது. குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் பலஜோடிகள் ஒரே நேரத்தில் மணமுடிக்கும் வகையில், பிரமாண்ட திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களாகப் பணியாற்றும் காதல் ஜோடியினர், இந்த திருமண ஏற்பாடுகளில் கலந்துகொண்டு, மிக எளிய முறையில் தங்களது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் காதல் ஜோடியின் இந்த முடிவுக்கு, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணமானது வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

‘என் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும்’ -நிர்பயா குற்றவாளி உருக்கம்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனு தாக்கல்செய்துள்ள நிர்பயா குற்றவாளி வினய் சர்மா, தன்னுடைய மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும் என உருக்கமாகக் கூறியுள்ளார். டெல்லியில் நடுநிசி இரவில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வரில் வினய் சர்மாவும் ஒருவர். இந்நிலையில் இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தேதி குறித்துவிட்டது. அதற்கான நீதிமன்ற கறுப்பு உத்தரவு கடந்த 7ஆம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 10…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 10 கிரிகோரியன் ஆண்டு : 10_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 356_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 355_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 9 – மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது. 236 – அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார். 1645 – முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். 1806 – கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர். 1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

நாட்டில் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போரட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து அச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கூறி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில், நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார் பவன் ஜலாட்!

நிர்பயா குற்றவாளிகள் இன்னும் சில நாள்களில் தூக்கில் போடப்பட உள்ளனர். இவர்களுக்கு தூக்கு தண்டனையை பவன் ஜலாட் என்பவர் நிறைவேற்றவுள்ளார். நிர்பயா வழக்கில் தூக்கு கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும்வகையில் பவன் ஜலாட், குற்றவாளிகளைத் தூக்கில்போட வேண்டும் என திகார் சிறை நிர்வாகம் விரும்புகிறது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் அவர் பணிபுரியும் சிறைக்கு, திகார் நிர்வாகம் ரகசிய கடிதமும் எழுதி உள்ளது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பவன் ஜலாட் தேவை என திகார் சிறை நிர்வாகம் விரும்ப […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்.!!

மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், மாநகராட்சியின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகளும் போராடிவருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாநகராட்சியால் ஊழியர்களுக்கு கடைபிடிக்கப்படும் தொழிலாளர் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வாய்ப்பில்லை ராஜா…. மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்த CSO ….!!

நடப்பாண்டில் ஜிடிபி 5 சதவிகிதத்தைத் தாண்டாது என்று மத்திய புள்ளியியல் அலுவலகமும் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019-20 நிதியாண்டிற்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Gross domestic product – GDP) குறித்து, தரமதிப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வந்தன. ‘பிட்ச்’ நிறுவனம் 4.6 சதவிகிதம், ‘மூடிஸ்’ 4.9 சதவிகிதம், ‘இந்திய ரிசர்வ்வங்கி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ மற்றும் ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ ஆகியவை 5 சதவிகிதம், ‘ஆசிய வளர்ச்சி வங்கி’ மற்றும் ‘கிரிசில்’ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ரூ 2,00,000,00,00,000 நலத்திட்டம் கட்” மத்திய அரசின் அதிரடி முடிவு ….!!

நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி அரசு கைகழுவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-20 நிதியாண்டில் ரூ. 24 லட்சத்து 60 ஆயிரம் கோடியை மொத்தவரி வருவாயாக ஈட்டுவதற்கு, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இதில் ஜிஎஸ்டி இழப்பீடு போன்றவை தவிர்த்து, மத்திய அரசுக்கு ரூ. 16 லட் சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, 2019-20 நிதியாண்டுக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை…. ”தோனிக்கு இடமில்லை”…. விவிஎஸ் லட்சுமண் கணிப்பு ….!!

நடைபெற இருக்கும் டி-20 உலகக் கோப்பை இந்திய அணி வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் VVS லட்சுமண் கணித்துள்ளார். 6-வது டி-20 உலகக் கோப்பை (ஆடவர்) ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் தொடங்க இன்னும் 9 மாத காலம் உள்ள நிலையில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தற்போதே பயிற்சியைத் தொடங்கியுள்ளன. சீனியர் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் கனவு அணி ஒன்றை அறிவித்து அதில் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி, அமித்ஷாவால் நாடு ஆபத்தில் உள்ளது… சிவசேனா எச்சரிக்கை

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் நாடு ஆபத்தில் உள்ளதாக, சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ, அதுநடந்து கொண்டு இருக்கிறது.நாடு ஆபத்தில் உள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது. மும்பையில் 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், முகமூடி அணிந்துஇருந்தனர். அதேபோலத் தான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களும் மூகமுடி அணிந்து […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 09…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 09 கிரிகோரியன் ஆண்டு : 9_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 357_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 356_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 475 – பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 1150 – சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார். 1349 – கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 1431 – ஜோன் ஒஃப் ஆர்க் மீதான […]

Categories
மாநில செய்திகள்

மத்திய சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதாக எத்தனை மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? என பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத் துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவர்களுக்குப் பரிசு வழங்கியது உள்ளிட்ட விற்பனை மேம்பாட்டுச் செலவினங்களை தங்கள் வருமானத்தில் இருந்து தள்ளுபடி செய்யக் கோரி, தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஈரான் வான்வெளியில் ஏர் இந்தியா பறக்காது!

அரசு நிறுவனமான ஏர் இந்தியா, ஈரான் வான்வெளியில் தற்காலிகமாக பறக்காது என்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் உட்சபட்ச போர் பதற்றம் நிலவிவருவதால், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்த்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பும் விமான குழுவின் பாதுகாப்பும்தான் முக்கியம். தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால், ஏர் இந்தியா விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்காலிகமாக ஈரானிய […]

Categories
தேசிய செய்திகள்

”எல்லாம் உங்க ஆதரவோடு நடந்த கொடூரம்” புது குண்டை தூக்கிப் போட்ட சித்தராமைய்யா …!!

டெல்லி ஜே.என்.யு.வில் நடைபெற்ற தாக்குதல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ஒன்று என சித்தராமைய்யா குற்றஞ்சாட்டினார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்திருந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், “அண்மையில் ஜே.என்.யு.வில் நடத்தப்பட்ட தாக்குதல் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒன்று. குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு எதிராகவே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

”அமெரிக்காவை வச்சு செய்யுங்க” இந்திய அரசே உடனே செய்யுங்க …..!!

ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயளாலர் டி ராஜா கூறுகையில், “அமெரிக்க ராணுவத்தால் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் ஈரானையே சார்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவை பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறது. […]

Categories

Tech |