மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால், சென்னை வருமான வரித்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அலுவலங்களில் உள்ள 6 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கும் மத்திய அரசைக் கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் […]
Tag: India
இன்று நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அண்ணா சாலை சிம்சனில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாணவரணி, திராவிடர் கழக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவர்களைக் […]
மருத்துவ கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தாததால் குழந்தையை கொடுக்க மருத்துவர் மறுப்பதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பாத் நகரிலுள்ள ‘உஷா நர்சிங் ஹோம்’ என்ற மருத்துமனையில் 2018ஆம் ஆண்டு ஷிகா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அப்போது மருத்துவச் செலவு ரூ. 40 ஆயிரம் செலுத்த பெற்றோர்களிடம் பணம் இல்லாததால் மருத்துவர் குழந்தை தர மறுத்துவிட்டார். இதுகுறித்து ஷிகா கூறுகையில், “செப்டம்பர் 2018ஆம் ஆண்டு எனக்கு ஆண் குழந்தை […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக ஜனவரி 30ஆம் தேதி மாபெரும் அமைதி போராட்டத்தை நடத்தவிருப்பதாக ஐக்கிய இஸ்லாமிய நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. ஐக்கிய இஸ்லாமிய நடவடிக்கை குழு சார்பில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் அகமத் கான், அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் தலைவரும் ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வரும் 30ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 06…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 08 கிரிகோரியன் ஆண்டு : 8_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 358_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 357_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 871 – பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார். 1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது. 1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது. 1499 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார். 1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச […]
புதுடெல்லி: நாளை நடைபெறவுள்ள பாரத் பந்தில் பங்கேற்கக் கூடாது என பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நாளை பொது அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிரான கொள்கைகளை செயல்படுத்திவரும் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும், இந்த பொது அடைப்பில், சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள பாரத் […]
அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தையில் 1, 944 பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று பங்குசந்தை தொடங்கிய போதே, சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவை சந்தித்தது. இந்த சரிவு நீண்ட நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பங்குசந்தையில் அனைத்து […]
பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கான இறுதி வரைவறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கான வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள், விற்பனை ஒப்பந்தத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என அரசு சார்பில் […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தத் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு குற்றவாளிகளும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், “இவ்வழக்கு குறித்த எந்த மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் இல்லை. மேல் […]
ஜே.என்.யூ. தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக மாணவர் அமைப்பு, காங்கிரஸ் மாணவர் அமைப்பு ஆகியவைக்கு இடையே குஜராத்தில் மோதல் வெடித்துள்ளது. ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ஏ.பி.வி.பி.) சேர்ந்தவர்களுக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஏ.பி.வி.பி. எனக் குற்றஞ்சாட்டி […]
வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, அதற்கு பதில் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியன் ரயில்வே அதன் ரயில்களிலும் நடைமேடைகளிலும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு பதில் பானைகள், கண்ணாடிகள், தட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பானை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி கீழ் இயங்கும் கடைகள், […]
உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், 7 மாநிலங்களுக்கு ரூ.5,908 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பல்வேறு பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூ.5,908.56 கோடியை வழங்க ஒப்புதல் அளித்தது. அதில், அஸ்ஸாமுக்கு ரூ.616.63 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு […]
மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஜெய்சுகின் என்பவர்தான் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதற்கு மூல மனுதாரராக இருந்தார்.அவர்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சட்ட போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தார். இவர் தற்போது தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்து இருக்கிறார். உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது இது […]
JNU பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லி JNU பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியினுள் நுழைந்த கும்பல் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடுமையாக தாக்கினார். கொடூர ஆயுதங்களோடு நுழைந்து மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP தான் காரணம் என்று ஒரு தரப்பினரும் , இடதுசாரி மாணவர் அமைப்புதான் […]
ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் நடிகர் அமிதாப் பச்சனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து-வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து-வருகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாய் திறக்காமல் மவுனம் காத்துவந்த நிலையில், […]
நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். வரும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி மிட்டல், அதானிக் குழுமத் தலைவர் கவுதம் அதானி, […]
கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் பந்தய மோசடி மற்றும் ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக சர்வதேச சூதாட்ட தரகர் ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். கே.பி.எல் சூதாட்ட மோசடி செய்த ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் இதை பற்றி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் விமான நிலையாளங்களில் ஜிதின் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் சர்குலர் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை அவர் நெதர்லாந்தில் இருந்து […]
ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி, உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய பருவநிலைத் தேர்வுக்காக ஜேஎன்யு மாணவர்கள் தங்களது விவரங்களைப் பல்கலைக்கழக இணைதளத்தில் பதிவிடுவதைத் தடுக்கும் விதமாக, ஜனவரி 3ஆம் தேதி குறிப்பிட்ட சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இணையதள மையத்துக்குள் புகுந்து வைஃபை கருவியைச் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கும், இன்னொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் அது கை கலப்பில் முடிந்துள்ளது. வைஃபை கருவிகளைச் செயலிழக்கச் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 07…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 07 கிரிகோரியன் ஆண்டு : 7_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 359_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 358_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார். 1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது. 1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது. 1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார். 1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது. 1785 – பிளான்சார்ட் […]
டெஸ்ட் போட்டிகளின் நாள்களைக் குறைக்கும் நடைமுறைக்கு பல்வேறு வீரர்களும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வரும் மார்ச் மாதம் மீண்டும் நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் டெஸ்ட் போட்டிகளின் நாள்களை நான்காகக் குறைப்பதற்கு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல் வெளியானதிலிருந்து விராட் கோலி, சச்சின், பாண்டிங், லயன் என பல்வேறு வீரர்களும் […]
கர்நாடகா – மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்குள் பாம்புகள் நுழைந்ததால், ஆட்டம் சிறிதுநேரம் தடையானது தெரிய வந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டின்போது மைதானத்தில் மழை குறுக்கிட்டாலோ அல்லது சரியான வெளிச்சம் இல்லாததாலோ, ஏன் நேற்று போல் பிட்ச்சில் ஈரம் அதிகமாக இருந்தால் கூட கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவிடும். சில நேரங்களில் நேரங்கள் தள்ளிப் போடப்படும். ஆனால், மும்பையில் நடந்த கர்நாடகா – மும்பை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் […]
‘சத்தம் நமது கவனத்தை திசைதிருப்பும். அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பாதுகாப்பு வளையத்திற்குள், யாரையும் அனுமதிக்கக் கூடாது. இது இளம் வீரர் ரிஷப் பந்த்திற்கு உதவலாம். எனக்கு இதுதான் உதவியது’ என்கிறார் ரோஹித் சர்மா. 2019ஆம் ஆண்டில் ரோஹித் சர்மாவை விடுத்து இந்திய அணியின் வெற்றிகளை எழுதிவிட முடியாது. சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன், உலகக்கோப்பைத் தொடரில் 5 சதம், அனைத்து விதமானப் போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது . நீட் தேர்விற்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11:50 மணியுடன் முடிவடைகிறது .நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது .விண்ணப்பித்ததில் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அதனை ஜனவரி 15 முதல் 31 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும் . மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .முறைகேடுகளை தவிர்ப்பதற்கான […]
பாகிஸ்தானிலுள்ள சீக்கிய குருத்வாரா மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் நடந்த சுவடு மறைவதற்குள் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஆகவே அனைத்துக் கட்சி சீக்கிய குழுவினரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் எனக் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினரான பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரின் நிலை பரிதாபமாக உள்ளது. குருநானக் […]
சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் எவ்வித ஆதாரமுமின்றி கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தனது ஆதங்கத்தை ப. சிதம்பரம் வெளிப்படுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், […]
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள சொத்துகளின் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதித்திரட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் உள்ள நிலையில், அதை லாபகரமானதாக மாற்ற பல்வேறு திட்டங்களை அரசு தீட்டிவருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிர்வாக இயக்குநர் பி.கே. […]
வரலாற்றில் இன்று ஜனவரி 06…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 06 கிரிகோரியன் ஆண்டு : 6_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 360_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 359_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். 1449 – பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1690 – முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1809 – நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் […]
மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியுடன் 1000க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். நீடூர் பள்ளிவாசலில் தொடங்கிய இப்பேரணி, முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று நெய்வாசல் என்ற இடத்தில் முடிவடைந்தது. பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து […]
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க சீக்கியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள நன்கான சாஹிப் குருத்வாரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சீக்கியர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் சிறுபான்மைப் பிரிவினரான சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசு சீக்கியர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை மட்டுமல்லாது, பாஞ்சாப் மாநிலத்தலைவர்களும் வலியுறுத்தினர். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பெஷவார் […]
மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்லில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பாவாருக்கு நிதித்துறை மற்றும் திட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]
பழைய மொபைல் போன்கள், கம்பிகளை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் உருவப்படத்தை அவரது தீவிர ரசிகர் செதுக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கவுகாத்தி நகரைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ராகுல் பாரெக் என்பவர் […]
இந்திய இஸ்லாமியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அசாதுதீன் ஓவைசி பதில் அளித்துள்ளார். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் நிறுவனரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, “வங்கதேசத்தில் நடந்த ஒன்றை, இந்தியாவில் நடந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் காணொலிக் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். முகமது அலி ஜின்னாவின் தவறான கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்கள் என்பதில் […]
பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது வெள்ளிக்கிழமை (ஜன. 3) இஸ்லாமியர்கள் சிலர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நடந்து 24 மணி நேரம் முடிவதற்குள் காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி […]
வரலாற்றில் இன்று ஜனவரி 05…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 05 கிரிகோரியன் ஆண்டு : 5_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 361_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 360_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. 1477 – பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது. 1554 – நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன. 1664 – பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். 1757 – பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் […]
வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மூன்று விழுக்காடு அதிகம் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு 2019 ஆம் ஆண்டு வந்து சென்ற வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதன் மூலம் வந்த வருமானம் குறித்த அறிக்கையை சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் வெளிநாடுகளில் இருந்து 96,69,233 சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2018 […]
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவியது. காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு அறையில் உள்ள கிருஷ்னகர்த்தி பகுதியில் இராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-ஹவுரா சென்னை-ஹூக்கிலா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் பயணிகள் ரயில் சேவை என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விவாதம் நடத்தப்பட உள்ளது. அந்த அறிக்கையின்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 100 வழித்தடங்கள் தனியார் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]
வருமானவரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் விதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் குறித்து நேரடி வரிகள் வாரியம் அறிக்கை விடுத்துள்ளது. அதில், வருமானவரி ரீதியாக குற்றங்கள் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி வருமானவரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வழி மற்றும் கூடுதல் வரி செலுத்தி வழக்குகளில் இருந்து […]
வரலாற்றில் இன்று ஜனவரி 04…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 04 கிரிகோரியன் ஆண்டு : 4_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 362_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 361_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 871 – ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் ஆல்பிரட் தென்மார்க் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார். 1384 – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார். 1493 – கொலம்பசு தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார். 1642 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை […]
மலேசியாவிற்கு சுற்றுலா வர விரும்பும் இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம் என்ற புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவை தவிர்த்து பிற உலக நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக விசா என்பது தேவைப்படும். அதை பெறுவதற்கு பல்வேறு முறைகள் தேவைப்படும் பட்சத்தில் இந்தியர்களை ஈர்க்கும் விதமாக மலேசிய அரசு புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு இதழில் வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, மலேசியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் விசா […]
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த தமது குடிமக்கள் ஆயிரம் பேரை கடந்த ஆண்டு கைது செய்துள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வங்கதேசத்தின் சர்வதேச எல்லை பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிலும் சட்டவிரோதமாக வசித்தவர்கள் குறித்து கடந்த மாதம் டெல்லியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் விவாதித்தனர். அதனடிப்படையில் முதன்முறையாக இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்திய எல்லையை கடந்து சென்று […]
அரசு கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடத்த தயார் என்று புதிய தலைமை தளபதி நவரானே தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து பேசிய புதிய ராணுவ தலைமை தளபதி, எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதையும் ஊடுருவல் நடக்காமல் இருப்பதையும் ராணுவம் உறுதி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு. காஷ்மீரில் ராணுவம் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ராணுவத்திடம் ஏராளமான திட்டங்கள் உள்ளதாகவும் அரசு கேட்டுக்கொண்டால் அவற்றை […]
கார் விற்பனையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கடந்த வருடம் இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் தங்களது உள்நாட்டு விற்பனை பல மடங்கு குறைந்துவிட்டது என முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகியோர் தெரிவித்தனர். 2018 ஆம் ஆண்டு 4,36,596 பைக்குகளை விற்ற ஹீரோ ஹோண்டா கடந்த ஆண்டு 4,12,000 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. பஜாஜ் […]
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் பாஜக ஒரு அடிகூட பின்வாங்காது என அக்கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி மக்களிடையே பேசினார். அதில், குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய குடியுரிமையும் பறிக்கும் சட்டம் கிடையாது என்றும், பிறருக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யும் சட்டம் எனவும் கூறினார். அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் […]
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு ராணுவ தளபதி ஜெனரல் நவரானே பதிலளித்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் முன்பு இருந்த இடத்திலேயே தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவற்றை இந்திய ராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ராணுவ தளபதி ஜெனரல் அவர் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை குறித்து விமர்சித்த அவர் தீவிரவாதம் என்ற பிரச்சனை புதிதானது அல்ல, பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் சந்தித்து வருவது தான் என்று தெரிவித்தார். தற்போதைய மத்திய […]
பிரதமர் மோடி தான் எனது தலைமை பண்பை வெளிப்படுத்தினார் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 திட்டம் தோல்வி அடைந்த பொழுது பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய, மற்றும் அன்பு செலுத்திய காட்சிகள் இணையத்திலும் ஊடகங்களிலும் வைரலாக பரவியது. தற்போது இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சந்திராயன்-3 திட்டத்தை வெற்றியாக கடுமையான முயற்சிகளை தற்பொழுது இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. […]
பிரதமர் மோடி மீது எந்தவித ஊழல் புகார்களும் லோக்பால் அமைப்புக்கு இதுவரை செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் உயர் பதவிகளில் வகிப்போர் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் லோக்பாலுக்கு 1190 புகார்கள் வந்துள்ளதாகவும் அவற்றில் 1,120 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
டெல்லி புனே உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மோகன் குப்தா மற்றும் புனேவை சேர்ந்த தொழில் அதிபர் மனோ ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதில் அரசியல் தலைவர்களுக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும் தொழிலதிபர்கள் இருவரின் வீடுகளிலும் வருமான வரித்துறை […]
ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, ஈவ்டீசிஸ், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று மாதம் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பெண்கள் முப்பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளில் இருந்து பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இதில் கல்லூரி மாணவிகள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களும் அடங்குவர். இந்த நிகழ்வில் பேசிய […]
அம்பேத்கர் மணிமண்டப கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஹிந்து மில்ஸ் பகுதியில் நடைபெற்றுவரும் அதன் கட்டுமானப் பணிகளை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க நாங்கள் முயற்சி […]