திருமண உறவில் நுழையவிருக்கும் ஹார்திக் பாண்ட்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கும் வேளையில், அவரது முன்னாள் காதலி என கிசுகிசுக்கப்பட்ட ஊர்வசி ரவுத்தேலாவின் வாழ்த்து அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. மும்பை: செர்பியா நாட்டின் நடிகையுடன் நிச்சயதார்த்தம் ஆகியிருப்பதை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அவரது முன்னாள் காதலி வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு தனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாகத் திகழும் திருமண பந்தம் குறித்து அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா. செர்பியா […]
Tag: India
இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் கபூருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மலைக்கா அரோராவை வயது வித்தியாசம் காரணமாக நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர். சினிமாத்துறையில் பெரிய வயது வித்தியாசத்தில் காதலிக்கும் அல்லது திருமணம் செய்யும் நடிகர்களை ரசிகர்கள் கேலி செய்யும் அவலம் நீண்ட நாள்களாகவே நடக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ், தமிழில் ஆர்யா – சையிஷா போன்ற நடிகர்களுக்கிடையே வெகு நாள்களாக காதலித்துவரும் மலைக்கா – அர்ஜுன் கபூர் ஜோடியும் மாட்டிக்கொண்டது. சமீபத்தில் தாங்கள் காதலிக்கும் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 03…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 03 கிரிகோரியன் ஆண்டு : 3_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 363_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 362_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார். 1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை. 1521 – திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார். 1653 – இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது. 1754 – அம்பலப்புழாவில் நடைபெற்ற […]
ஹாலிவுட்டில் 2018ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டராக அவதரித்த ‘எ குவய்ட் ப்லேஸ்-2’ படத்தின் இரண்டாம் பாக ட்ரெய்லர் வெளியானது. பாரமவுன்ட் பிக்சர்ஸ் சார்பில் ‘எ குவய்ட் ப்லேஸ்-2’ (Quiet Place: Part II) படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 2018ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த ‘எ குவய்ட் ப்லேஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இப்படம் முழு நீள திகில் படமாக வெளியாகவுள்ளது. இயக்குநர் ஜான் […]
ராஜாஸ்தானில் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளது குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சரிடம் சோனியா காந்தி விளக்கம் கோரியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து நேரில் விளக்கமளிக்க ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் அவினாஷ் பான்டே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் விளக்கம் கோரியுள்ளார். அதன்படி சோனியா காந்தியிடம் தற்போது நிகழும் சூழ்நிலையை அவினாஷ் பான்டே […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்ம ராவ் மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநில சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டு தீர்மானத்தை கொண்டுவந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய […]
மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளை (கியாஸ்) ரூ.19 உயர்வை சந்தித்துள்ளது. இந்த விலையேற்றம் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. மானியம் அல்லாத சமையல் உருளை விலை ரூ.19 அதிகரித்துள்ளது. இது 2.6 சதவிகித உயர்வாகும். கடந்த நான்கு மாதங்களுடன் ஒப்பிடும்போது சமையல் எரிவாயு உருளை ரூ.139.50 காசுகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் டெல்லியில் மானியம் அல்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளை ரூ.695லிருந்து ரூ.714 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தா, சென்னை முறையே ரூ.684.50, ரூ.734 […]
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 2020 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டின் கடவுள் என கொண்டாடப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். […]
சம்பளம் : Group X Trade – ரூ. 33,100 /- Group Y Trade – ரூ. 26,900 /- தகுதி : 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Diploma மூன்று ஆண்டுகள் படித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு தேதி : 19.03.2020 முதல் 23.03.2020 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ 02.01.2020 முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள: https://drive.google.com/file/d/1YVORu_szJN7PgXgHnS8ieDlZau7PMvGF/ விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2020
வரலாற்றில் இன்று ஜனவரி 02…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 02 கிரிகோரியன் ஆண்டு : 2_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 364_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 363_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 366 – அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். 533 – மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும். 1492 – எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது. 1757 – கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர். 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: […]
முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், நாட்டின் பொருளாதாரம் குறித்து தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 1) கேள்வி – நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக நீங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள். ஆனால் அரசு இதனை மறுத்து வருகிறதே? பதில் – பொருளாதாரம் குறித்து நான் அவ்வாறு கூறவில்லை. அதனை அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனே தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் இதுதொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் பொருளாதார நிலை […]
ககன்யான் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும். சந்திரயான் – 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டு, நிலம் […]
அபாயகரமான நிலையில் உள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான மிகப்பெரிய அளவில் அறுவை சிகிச்சை அவசியமாகிறது; அதனை உணர்த்தியது 2019. பொருளாதாரத்தை நீடித்த நல்ல நிலையில் நிலைநிறுத்த 2020ஆம் ஆண்டில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அது குறித்த சிறப்புக் கட்டுரை… மந்தநிலைக்கான அடிப்படைக் காரணம்: 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிலவிய மந்தமான பொருளாதாரம், மிகப்பெரிய அளவில் அபாயமாக உருவெடுத்துள்ளது. தற்போதுள்ள, பொருளாதார மந்தநிலை, இயல்பானதா அல்லது கட்டமைப்பிலுள்ள பிழையால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவாதமே, […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் புத்தாண்டின்போது மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நள்ளிரவில் சென்னை சைதாப்பேட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இதில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஜனநாயக கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள், பொதுமக்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என […]
2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. 1. முற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு: (ஜனவரி 9) அரசியல் சாசனப்பிரிவு 124இன்படி சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டை பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2. புல்வாமா தாக்குதல்: (14 பிப்ரவரி) ஸ்ரீநகரிலிருந்து காஷ்மீருக்கு மத்திய ஆயுத காவல்படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத […]
வரலாற்றில் இன்று ஜனவரி 01…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 01 கிரிகோரியன் ஆண்டு : முதல் நாளாகும். நெட்டாண்டு : 365_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 364_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 45 – உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிமு 42 – உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது. 1001 – முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டான். 1068 – நான்காம் ரொமானசு பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1502 – போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார். 1515 – […]
டிரெண்ட் மன்னனாக இந்தியாவையே கலக்கிவந்த கான்ட்ராக்டர் நேசமணி 2019 ஆண்டோடு விடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ்நாட்டுக்காரர்கள் குசும்புக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நூற்றாண்டை இணையதளம் ஆதிக்கம் செலுத்தும் காலமாக மாறிவிட்டது. ஒரு செய்தி காட்டுத்தீபோல் வைரலாக வேண்டும் அதுவும் மக்கள் மத்தியில் விஷ்வரூபம் எடுத்து விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முக்கியமாக ஒரு காணொலி, புகைப்படம், முக்கியத் தகவல்கள் எதுவாக இருந்தாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் டிரெண்டாக்குவது வழக்கமாகிவிட்டது. […]
மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிரது. இதற்காக கடந்த 2ஆம் தேதியிலிருந்து இன்றுவரை (31ஆம் தேதி) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீட் […]
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கார்கில் போர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு, முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க கார்கில் ஆய்வுக் குழு பரிந்துரை செய்தது. இருந்தபோதிலும், பின்னர் ஆட்சி அமைத்த அரசுகள் இப்பதவியை உருவாக்காமல் இருந்தது. இதையடுத்து, மோடி தலைமையிலான பாஜக அரசு இப்பதவியை உருவாக்க முடிவெடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலும் அளித்தது. இந்நிலையில், ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத்தை முப்படைகளின் […]
பிளாஸ்டிக்கால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் தன்னால் முடிந்த பங்கினை குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லாட் நகரம் ஆற்றிவருகிறது. பெட்லாட் நகரத்தை பிளாஸ்டிக் இல்லா நகரமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அக்கழிவுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதிகளவிலான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது. மறுமுனையில், ஐந்து விழுக்காடு கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது. நொடிக்கு நொடி உலகத்தின் பெரிய பிரச்னையாக பிளாஸ்டிக் மாறிவருகிறது. தரம் குறைந்த பிளாஸ்டிக்குகளின் […]
பெருகிவரும் மக்கள்தொகை நாட்டின் முன்னேற்றத்தை தொய்வுறச் செய்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை எந்தளவுக்கு சிக்கலாக உள்ளது, இதனை திறம்பட எதிர்கொள்ளவது எப்படி உள்ளிட்டவை குறித்து அலசி ஆராயும் கட்டுரை தொகுப்புதான் இது…. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, 2027ஆம் ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள்தொகை பெருக்கம் தற்காலமட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்துக்கும் தீங்கு […]
பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் வளர்வதற்கான ஆர்வத்தை இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது என ஐ.நா-வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அசோக்குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட ஆண்டு 2019. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள், மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடுதல் வலிமையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகியிருக்கிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க இது வழிவகுத்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறைக்கு ஆகஸ்ட் மாதத்தில் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டு : 365_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 366_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : இறுதி நாள். இன்றைய தின நிகழ்வுகள்: 535 – பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான். 1225 – வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது. 1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. 1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர். 1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு […]
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாரி சன்னா ரெட்டியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும். சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது, […]
உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் 36 பேர் இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். […]
இந்தியாவில் வாழவேண்டுமானால் ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புனேவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி..யின் 54ஆவது வருடாந்திர மாநாட்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ‘இந்திய விடுதலைக்காக பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் பெரும் தியாகம் செய்துள்ளனர். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து நுழைந்து வாழ்வதற்கு, இந்தியா என்ன தர்ம சத்திரமா?, அல்லது அப்படியொரு […]
முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது முப்படைகளுக்கும் ஒரு தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. அதைத்தொடர்ந்து அண்மையில் முப்படைகளுக்கும் தலைமை தளபதியை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்தநிலையில் ராணுவம், விமானப்படை கடற்படை ஆகிய முப்படை தளபதிகளின் ஆலோசகராக ஜெனரல் பிபின் ராவத் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராணுவ தளபதியாக உள்ள […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்த கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாசர் நந்தி மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாசர் நந்தி. துபாயில் வசித்து வந்த இவர், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்துவந்தார். அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் இறந்தால், அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அங்கேயே அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து வந்தார். கடவுச்சீட்டு பிரச்னையால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு பல்வேறு […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் செல்லுங்கள் எனப் பேசிய மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று (டிச. 29ஆம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) பிரசாந்த் […]
சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆண்டுக்கு 100 நாள்கள் செலவிடும் வகையில் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய ஆயுதக் காவல் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) அலுவலகத்தின் புதிய தலைமையக கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று (டிச.29) நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். விழாவில் பேசிய அமித் ஷா, “நரேந்திர மோடி அரசாங்கம் சிஆர்பிஎஃப் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு சிஆர்பிஎஃப் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் உத்தரப் பிரதேசக் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்ற பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரின் வீட்டிற்குச் சென்று, அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் […]
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூருக்கு செல்லவுள்ளார். திட்டமிட்டப்படி மோடி திஸ்பூருக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அஸ்ஸாம் மாணவர் […]
2019ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை மட்டும் சுமார் 55 மில்லியன் ஜிபி டேட்டாவை இந்தியா பயன்படுத்தியுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இது தொர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2014ஆம் ஆண்டு 281.58 மில்லியனாக இருந்த டேட்டா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாகி 664.80 மில்லியனாகியுள்ளது. இதுமட்டுமின்றி, 2014ஆம் ஆண்டு 828 மில்லியன் ஜிபி-ஆக இருந்த டேட்டா பயன்பாடு, வெறும் நான்கு ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து 2018-19 ஆண்டில் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டு : 364_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 365_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 1 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர். 1460 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர். 1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், […]
2019 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மூன்று விஷயங்களை மறக்காமல் செய்துவிடுங்கள்.இந்த ஆண்டு இறுதிக்குள் மறக்காமல் முடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் பான்-ஆதார் இணைப்பு பான் கார்டை (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி, வரும் 31ஆம் தேதிக்குள் வருமானவரி நிரந்தர கணக்கு எண் – ஆதார் இணைப்பு மேற்கொள்ளவில்லை என்றால் பான் கார்டு எனப்படும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி […]
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாமல் இருந்தால் இந்த நாடு எவ்வளவு அழகாக இருக்கும்? ஆனால், இன்றுவரை அது ஒரு அழகான கனவாக மட்டும்தானே இருக்கிறது. அழிந்துவரும் சமகால சமூக அறம் இந்தியாவில் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலநிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவை, சர்வதேச அளவில் தலை குனியவைத்துள்ளன. கொடியவனை நல்லவன் வீழ்த்துவதை பண்டிகைகளாகக் கொண்டாடுவது நம் இந்திய சமூகத்தின் […]
யாத்கிரில் 4 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 23 வயது இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் யாத்கிர் பகுதியைச் சேர்ந்தவர் நிங்கப்பா (23). இவர் தனது வீட்டருகே வசிக்கும் 4 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர், குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட பெற்றோர், சம்பவ இடத்திற்கு வரும் முன்னே […]
சாதியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை இளைஞர்கள் வெறுக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, இந்தாண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி இன்று உரையாற்றியுள்ளார். அதில் அவர், “நம் இளைஞர்கள் அமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கென தனிப்பட்ட கருத்து உண்டு. அந்த அமைப்பு […]
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனின் மகன் […]
ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில், ஆறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வென்றது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 29 கிரிகோரியன் ஆண்டு : 363_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 364_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 2 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 875 – இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்.. 1427 – மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது. 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் […]
பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் இன்று (டிச.28) ஆலோசனை நடத்தினார். டெல்லி ஜீவந்தீப் கட்டடத்தில் நடந்த இந்த ஆலோசனையின்போது “வங்கிகளால் இணைக்கப்பட்ட சொத்துகளை ஆன்லைனில் ஏலம் எடுப்பதற்கான மின் ஏல போர்ட்டலையும் (மின்னணு தளம்) தொடங்கி வைத்தார். பொதுத்துறை வங்கிகளின் (பி.எஸ்.பி) தலைவர்கள், இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி மற்றும் முன்னணி தனியார் துறை வங்கிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த […]
உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் கருத்துருக்களில் ஒன்று சுற்றுச்சூழல் மாசு. சுற்றுச்சூழல் மாசுபாட்டில் சர்வதேச தலைநகராக இந்தியா திகழ்வதாக கூறப்பட்டும் நிலையில், அது எதிர்காலத்திலும் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக Global Alliance on Health and Pollution (GAHP) என்ற சர்வதேச அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்களின் ஆரோக்கியத்தை கெடுப்பதில் சுற்றுச்சூழல் மாசுக்கு உள்ள பங்கு குறித்து சர்வதேச அளவில் 40 நாடுகளில் 400 அமைப்புகள் நடத்திய ஆய்வில், கடந்த 2017ஆம் ஆண்டில் […]
ஆப்கானிஸ்தான், சபாஹர் துறைமுகம் ஆகிய விவகாரங்களில் உஸ்பெகிஸ்தான் இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டுவருகிறது. உஸ்பெகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் அந்நாட்டின் ஜனநாயக சீர்திருத்தங்களை வலுப்படுத்தும். டிசம்பர் 22ஆம் தேதி, 150 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. ஐந்து முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. உஸ்பெகிஸ்தானின சுதந்திர ஜனநாயக கட்சி 43 தொகுதிகளை கைப்பற்றியது. தேசிய மறுமலர்ச்சி கட்சி 35 இடங்களில் வெற்றிபெற்றன. புதிய தேர்தலின் மூலம் புதிய உஸ்பெகிஸ்தான் உருவாக்கப்படும் என […]
தொழில் முனைதலை ஊக்குவிப்பதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சிறிய சோப் மற்றும் டிடர்ஜெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக “சோப் தயாரிப்பில் நவீன முறைகள்” குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான கூடுதல் தலைமைச் செயலர் […]
இந்திய பொருளாதாரம் தற்போது சரிவை சந்தித்தாலும், அது விரைவில் மீண்டு வரும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் உள்ள பி.டி.ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய பொருளாதார சங்கத்தின் 102ஆவது ஆண்டு மாநாட்டைத் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த நிதியாண்டின் வளர்ச்சி குறைந்துள்ளதால், இந்திய பொருளாதாரம் தற்போது சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. கடந்த காலங்களிலும்கூட, கிழக்கு ஆசிய நிதி […]
இஸ்லாமியர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட சிறும்பான்மையினர் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அவர்களை நீங்கள் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள் என்று சீத்தாராம் யெச்சூரி மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஹைதராபாத்திலுள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘சேவ் இந்தியா – சேவ் கான்ஸ்டியூசன்’ (save india – save constitution) நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “தேசிய குடியுரிமை பதிவேட்டால் அசாமில் 19 லட்சம் மக்கள் தங்களது […]
மத்திய முன்னாள் நிதியமைச்சர் மறைந்த அருண் ஜெட்லியின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அருண் ஜேட்லி. மகாராஜ் கிஷன் ஜேட்லி, ரத்னா பிரபா ஆகியோருக்கு 1952 டிசம்பர் 28ஆம் தேதி மகனாகப் பிறந்த ஜேட்லி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராகப் பதவி […]
தமிழ்நாட்டில் இந்திய-ரஷ்ய நிறுவனங்கள் இணைந்து ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீவ் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘2019-ல் இந்திய மாணவர்கள் கல்விக்காக ரஷ்யா செல்வது 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்தமாக 1,200 மாணவர்களுக்கு கல்வி விசா வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 90 விழுக்காடு பேர் மருத்துவ படிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளனர். ஜல்லிக்கட்டு விழாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் […]
பொதுமக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இந்தி நடிகை திஷா சவுத்ரி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலிவுட் நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் ட்ரீம் இன்ப்ரா இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட […]