இன்றைய தினம் : 2019 டிசம்பர் 28 கிரிகோரியன் ஆண்டு : 362_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 363_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 3 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 169 – இரண்டு நூற்றாண்டுகள் வெளியார் ஆட்சியின் பின்னரும், ஏழாண்டுகள் கிளர்ச்சியை அடுத்தும், எருசலேம் கோவில் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டதன் அறிகுறியாக மெனோரா விளக்கு எரிக்கப்பட்டது. மெனோரா எட்டு நாட்கள் எரிந்து, யூதர்களின் அனுக்கா என்ற எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது. 418 – முதலாம் போனிபாசு 42-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 457 – மஜோரியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 893 – ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற […]
Tag: India
ஆயுதப் படைகளுக்கு மனித உரிமைச் சட்டங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார். ராணுவத் தளபதிகள் மனித உரிமைச் சட்டங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவதாகவும் அவர்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் எதிரிகளையும்கூட ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லி மனவ் அதிகார பவனில், ‘போர் நடைபெறும் நேரங்கள் மற்றும் போர்க் கைதிகளில் மனித […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட சிறு குழுக்களுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது என உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். டெல்லி மேம்பாட்டு ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்பான எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. டெல்லியில் நிலவிய அமைதியான சூழ்நிலையை அவர்கள் சீர்குலைத்துவிட்டனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின்போது […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 361_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 362_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 4 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 36 – பிரிந்து சென்ற செங்சியா பேரரசை கைப்பற்றி இரண்டு நாட்களில் அதன் தலைநகர் செங்டூவைச் சூறியாடுமாறு ஆன் சீனத் தளபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டான். 537 – துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது. 1703 – இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது. 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது. […]
மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, பிசாசுகள் கொன்றுவிட்டதாக நாடகமாடியவரை காவலர்கள் கைது செய்து விசாரித்துவருகின்றனர். கர்நாடக மாநிலம் நிலமங்களா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்ஷிப் உல்லா. இவரது மனைவி ஹீனா கவுசர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரின் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் கொலைசெய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக ஹீனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து […]
மக்கள் உரிமைகளுக்கான போராட்டக் களத்தில் எப்பொதும் முன்னிலையில் நின்று சமரசமின்றி போராடும் தோழர் நல்லகண்ணு இன்று தனது 95ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப் பற்றிய சிறிய தொகுப்பு… போராட்டமே வாழ்க்கையென வாழும் நல்லகண்ணு, தனது 15 வயதிலிருந்து சமூக முன்னேற்றத்துக்காக போராடிவருகிறார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வைகுண்டத்தில் பிறந்து, தனது 18 வயதில் செங்கொடியேந்தி போராட்ட களம் சென்றவர் தோழர் நல்லகண்ணு. அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்களே என்று கூறுபவர்கள் கூட நல்லகண்ணுவை அதற்குள் அடக்குவதில்லை. அதற்கு அவருடைய […]
குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமை பதிவேட்டுக்கு எதிராக மாணவர்கள் பயமின்றி போராட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிராக நாடுமுறுவதும் போராட்டம் வலுத்து வருகின்றது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகம் , உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலத்தில் வன்முறை சம்பவமும் , அடக்குமுறையும் […]
பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவம் திவா பகுதியில் […]
இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது. இங்குள்ள மதம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைப் பொருட்படுத்தாமல் நாட்டின் 130 கோடி மக்களையும் […]
ட்விட்டர் பக்கம் ஓன்று உங்கள் புகைப்படம் மீமாக மாறுகிறது என தெரிவித்ததற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள், குழந்தைகள் உட்பட பலரும் பார்த்து ரசித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியாத சூழ்நிலையால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல தேனி, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளும் சூரிய […]
இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது. இங்குள்ள மதம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைப் பொருட்படுத்தாமல் நாட்டின் 130 கோடி மக்களையும் […]
மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். சூரிய கிரகணம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் சிறுவர்கள் என பலரும் பார்த்து ரசித்தனர். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்பதால் சோலார், சூரிய கண்ணாடி மூலம் பார்த்து கண்டுகளித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் பார்க்க […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 360_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 361_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 5 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 887 – முதலாம் பெரிங்கார் இத்தாலியின் மன்னராக லோம்பார்டி பிரபுக்களால் நியமிக்கப்பட்டார். 1489 – பெர்டினாண்டு, இசபெல்லா ஆட்சியாளர்களின் கத்தோலிக்கப் படைகள் அல்மேரீயாவை கிரனாதா அமீரகத்தின் சுல்தானிடமிருந்து கைப்பற்றின. 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: டிரென்டன் சண்டையில், அமெரிக்க விடுதலைப் படை எசியன் படைகளுடன் போரிட்டு வென்றது. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின. 1805 – ஆஸ்திரியாவும், பிரான்சும் பிரெசுபர்க் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1811 – வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் […]
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி (ஜே.எம்.எம்.) தலைவர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஜார்க்கண்ட் சட்டபேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன், டிச.29ஆம் தேதி பதவியேற்கிறார். இந்நிலையில் இன்று அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு […]
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தரப்பில் இருந்து அடிக்கடி, அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகிறது. இத்தாக்குதலுக்கு இந்தியாவும் தனது பதிலடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்துவருகின்றன. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் உரி என்னும் பிரிவில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போர்நிறுத்த […]
தங்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தியும் தாங்கள் கொத்தடிமைளாக இருக்க விருப்பமில்லை என்றும் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மத்திய விமானத் துறை இணை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில், தங்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி ‘இந்திய கமர்ஷியல் பைலட்ஸ் அசோஷியாஷேன்’ என்ற விமானிகள் […]
1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில்தான் முப்படைகளுக்கும் ஒரே தளபதி தேவை என்பதை இந்திய ராணுவம் வலுவாக உணர்ந்தது. ஏனென்றால், போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், இரண்டு வாரங்களுக்கு பின்னரே பாகிஸ்தானின் ஊடுருவல் இந்திய பாதுகாப்புத் துறைக்கு தெரியவந்தது குளோபல் பயர்பவர் (Global Firepower) எனப்படும் உலகில் சக்திவாயந்த ராணுவங்கள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பின் நான்காம் இடத்திலுள்ள இந்தியாவில் பாதுகாப்புதுறையை மேம்படுத்த புதியதொரு சீர்திருத்த நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் […]
தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) என்ற போர்வை மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) மத்திய அரசு செயல்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் எச்சரித்துள்ளார். குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்த மசோதாவை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த வேளையில், மற்றொரு விவகாரமும் பூதாகரமாக எழ தொடங்கியுள்ளது. அண்மையில் அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டு (என்.ஆர்.சி.) விவகாரம்தான் அது. அசாமில் நடத்தப்பட்ட இந்தக் […]
காஷ்மீரில் பாதுகாப்பு மறுஆய்வு செய்த பின்னர் 7,000 பாதுகாப்புப் படை வீரர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் அந்தஸ்த்தை நீக்குவதற்கு முன்பு வன்முறைச் சம்பவங்கள் வெடிக்காமல் இருப்பதற்காக ஏராளமான துணை ராணுவ பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அதில், மத்திய ஆயுத காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லைக் காவல் படை உள்ளிட்ட 72 பாதுகாப்புப் […]
மத்திய அரசிற்கு உட்பட்ட கட்டுமான நிதிக்கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 உதவி மேலாளர் பணியிடங்கள் நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். பணி : உதவி மேலாளர் (Grade -A) காலிப் பணியிடங்கள் : 08 தகுதி : ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, இரண்டு ஆண்டு பிஜிடிபிஎம் அல்லது சிஏ, பி.டெக், எல்எல்பி போன்ற துறைகள் படித்து குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.28,150 முதல் ரூ.64,000 வரையில் தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifcl.co.in/ என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலி அனுப்ப வேண்டும். கட்டணம் : ரூ.500. இதனை டில்லியில் மாற்றத்தக்க வகையில், India Infrastructure Finance Company Limited என்னும் பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 31.12.2019 […]
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Data Entry Operator பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Data Entry Operator (English / Hindi) காலியிடங்கள்: 100 சம்பளம்: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.19,572, பட்டதாரி அல்லதாவர்களுக்கு மாதம் ரூ.17,991 வழங்கப்படும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலம், இந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்ற பெயருக்கு […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 359_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 360_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 6 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 274 – சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது. 336 – உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது. 508 – பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார். 800 – சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான். 1000 – அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது. 1066 – நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1100 – முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார். […]
தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த அமித் ஷா விளக்கத்தை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2021 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நடத்த மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கியுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடத்துவதற்கான முன்னோட்டம் என்றும், குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக அமையும் […]
போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர், ஜூனியர் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இளம் வீராங்களை மனு பக்கர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக போபாலில் நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் ஜூனியர் மகளிர் தனிநபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இளம் நட்சத்திர வீராங்கனை மனு பக்கர் 241.5 புள்ளிகளை எடுத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். […]
என்.ஆர்.சிக்கும், என்.பி.ஆர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் பொதுமக்களிடையே பெரிய குழப்பங்கள் ஏற்பட்டநிலையில் இதன் மூலமாக குடியுரிமை பறிக்கப்படும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ANI செய்தி நிறுவனத்துக்கு விரிவான விளக்கம் அளித்தார். அப்போது அமித்ஷா கூறுகையில் NRC , NPR_க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக விளக்குகின்றார். இதனை தனித்தனியாக பாருங்கள் […]
அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) வழங்கும் இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதருக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் வென்றுள்ளார். முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லரை இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதராக அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கமுறையை பின்பற்றிவரும் மனுஷி சில்லர், இதுவரை தனக்குக் கிடைத்த பல்வேறு […]
கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில், காவல் துறையினரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் காவல் துறை அலுவலகம் முன் விஷம் அருந்தினார். சில மாதங்களுக்கு முன் மும்பையில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வாரணாசியிலுள்ள மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு முறையான […]
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிக்கு குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், உரிமைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ரபியா. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெறவிருந்த இவருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். குடியரசு தலைவர் சென்ற பின்னரே மாணவி நிகழ்வு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவர் மேடையில் ஏறி […]
கர்நாடகாவில், அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறையை செயல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் தேவையான அளவு குடிநீரை பருகுவதில்லை என்றும், அதன் காரணமாக உடல் ரீதியில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாற்றுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவில், குடிநீர் குடிப்பதற்காகவே காலை மற்றும்மதியம் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 24 கிரிகோரியன் ஆண்டு : 358_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 359_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 7 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார். 1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.[1] 1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன. 1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது. […]
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தலைவராக சங்கீதா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநராக சங்கீதா ரெட்டி இருந்துவருகிறார். இந்த நிலையில், இவர் தற்போது 2019-20 இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். சங்கீதா ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட எச்.எஸ்.ஐ.எல். (HSIL) நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தீப் சோமானி தோல்வியுற்றார். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவரும் ஸ்டார் & டிஸ்னி இந்திய […]
மேற்கு வங்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் மும்டங்காக உயர்ந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் சௌதிரி சரண் சிங் பிறந்தாளையொட்டி அவரை நினைகூறும் விதமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ” 2010-11ஆம் ஆண்டில் ரூ. 91 ஆயிரமாக இருந்த மேற்கு வங்க விவசாயிகளின் ஆண்டு வருமானம், 2018ஆம் ஆண்டில் 2.91 லட்சமாக (மூன்று மடங்கு ) உயர்ந்துள்ளது. […]
உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை காவலர்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கினர். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு தழுவிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து வன்முறையாளர்கள் மீது காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதில் சிலர் காயமுற்றனர். இந்த நிலையில் அரசு பொதுச்சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரின் […]
வெளிநாட்டு வெங்காயம் இந்திய சந்தைகளுக்கு வந்துள்ளது. இதற்கான விலை கிலோ ஒன்றிற்கு ரூ.57 முதல் ரூ.60 வரை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 790 டன் மும்பை வந்துள்ளது. இந்த வெங்காயம் ஆந்திரா, டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 12,000 டன் வெங்காயம் டிசம்பர் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும். அரசாங்கத்தின் சார்பாக வெங்காயத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு மாநில அரசின் எம்எம்டிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. […]
தனது விலை உயர்ந்த நாய் காணாமல் போயுள்ளதாகவும், அதனைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் நபர் ஒருவர் கூறியிருந்த நிலையில், அவரின் நாய் மீண்டும் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது வீட்டில் வளர்த்துவந்த நாயை காணவில்லை என்று கூறி ஹனுமந்தநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்திருந்த புகாரில், தனது நாய் அலாஸ்கன் மாலமுட்டே (alaskan malamute) வகையைச் சேர்ந்தது என்றும், அதன் மதிப்பு ரூ. […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்ள ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் சார்பாக டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு […]
ஒரே ஆண்டில் அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நடப்பு ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற மூன்றாவது […]
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவருகிறது. ஆளும் பாஜகவுக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 40 […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 357_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 358_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 8 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 562 – கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது. 962 – அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது. 1572 – செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார். 1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார். 1783 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கங்குலியின் மகள் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் 18 வயது மகள் சனா கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அவருடயை இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலானது. அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைத்து பாசிச ஆட்சிகளுக்கும், குழுக்களும், இனங்களும் தேவைப்படுகின்றன. அதன்மூலம் அரக்கத்தனத்தை […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் பேசிய இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஹாஜா முகைதீன், மோடி மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குகிறார் எனக் காட்டம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் திருவல்லிக்கேணி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஹாஜா முகைதீன் கூறுகையில்; அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக […]
ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் வெற்றிபெறுவதில் கடும் சவால் நிலவுவதாகக் கூறுகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. ரகுபர் தாஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தொகுதி பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆகவே இங்க நின்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் ரகுபர் தாஸ் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தார். அவருக்கு எதிர்ப்பு உள்கட்சியிலேயே கிளம்பியுள்ளது. அவரை […]
வங்கிகளின் செயல்படாத சொத்துகளில் (Non-performing asset – NPA) முன்னேற்றம் இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தலைவர் ரஜ்னீஷ் குமார் (Rajnish Kumar) கூறினார். பாரத ஸ்டேட் வங்கித் (SBI) தலைவர் ரஜ்னீஷ் குமார் (Rajnish Kumar) டெல்லியில் இன்று (டிச21) நடந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க கூட்டமைப்பின் 92ஆவது ஆண்டு கூட்டத்தில் பேசும்போது, “வங்கிகளுக்கு பெரும் அழுத்தம், தலைவலியை கொடுக்கும் செயல்படாத சொத்துகள் குறைந்து வருகிறது. அது […]
மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் பெற்றிருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைப்பதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்தன. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் அதிகளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் மகாராஷ்டிரா. […]
ICC கடந்த டிசம்பர் 13_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா புள்ளி 120 தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து புள்ளி 112 தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா புள்ளி 102 தரவரிசை : 3 […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 22 கிரிகோரியன் ஆண்டு : 356_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 357_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 9 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார். 401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர். 880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது. 1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார். 1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு […]
இந்தியர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய வேண்டியது அரசின் கடமை என மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தலைநகர் டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?நாம் அனைவரும் இந்தியர்களே. நம் குடியுரிமையை நிரூபிக்க யாரிடமும் எந்தச் […]
ஆட்சியே போனாலும் சரி குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டேன் என இஸ்லாமியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார், சிவா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், […]
இணைய சேவைகளைத் தொடங்கும்படி மாநில அரசுக்கு குவஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அங்கு இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததிலிருந்தே வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறியது. இதையடுத்து மசோதா சட்டமானதைத் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்தது. மாணவர்கள் மட்டும் கலந்துகொண்ட போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியது. இதை முடக்கும் விதமாக இணைய சேவைகள் அசாமில் துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் சார்பாக பொதுநல வழக்கு […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உத்தரப் பிரதேசத்திலுள்ள 20 மாவட்டங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி ஒ.பி. சிங் கூறுகையில், “ஐந்து உயிரிழப்புகள் இதுவரை நடந்துள்ளன. பிஜ்னோரில் இருவரும் மீரட், சம்பல், பிரோசாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். கான்பூரில் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், […]