டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக JNU பல்கலைக்கழக மாணவர்கள், jmu பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பயங்கரமாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது மனித உரிமை மீறல் என்று கூறி டெல்லி காவல்துறை உயர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் விடிய […]
Tag: India
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள்நீதிமய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று குடியுரிமை மசோதா திருத்த சட்டம். இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. தமிழகத்திலும் கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் இச்சட்டத்திற்கு எதிராக வலுப்பெற்றன. மேலும் இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டு : 350_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 351_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 15 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1431 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பிரான்சின் மன்னராக பாரிசு, நோட்ரே டேமில் முடிசூடினார். 1497 – வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார். 1575 – சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 1598 – கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது. 1653 – சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் […]
20 கிலோ வெங்காயத்தைத் திருடிச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள் . தெலுங்கானா மாநிலம் ,ஐதராபாத் ,சிக்கட்பள்ளி தோமலகூடா பகுதியில் காய்கறி மார்க்கெட் ஒன்று உள்ளது. இங்கு தள்ளுவண்டியில் வைத்திருந்த 20 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கடை உரிமையாளர் காவல் நிலையத்திக்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்துப் பார்த்தபோது, நள்ளிரவில் தள்ளுவண்டியில் இருந்து 20 கிலோ வெங்காயத்தை பெண் ஒருவர், அவரது இருசக்கர […]
திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக டெல்லியில் அமைந்துள்ள பாரத் நகர் என்ற பகுதியில் இன்று மாலை அரசு பஸ்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், […]
மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டு இதுவரை 22ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சத்திய நாகேஷ் என்ற நபர் இதுவரைக்கும் எத்தணை ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுள்ளார் .ரிசர்வ் வங்கி மூலம் அவருக்கு அளிக்கப்பட்ட தகவலில் சுமார் 22ஆயிரம் கோடிக்கும் அதிகமான நோட்டுகளில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் இது நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம் என தெரிவித்த […]
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 1000 பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 1000 பேர் 200-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் நேற்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே வழக்கம் போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வர மீனவர்களிடம் நீங்கள் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து […]
நித்தியானந்தா மீது சென்னை மாநகர ஆணையாளரிடம் மேலும் ஒரு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது நித்தியானந்தாவினுடைய முன்னாள் சீடர் தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர், நித்யானந்தா மீது புதிய புகாரை அளித்திருக்கிறார். புகார் மனுவில், தான் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் கடந்த 11வருடங்களாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 2015 ம் ஆண்டு நித்தியானந்தா என்னை வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் மனு […]
நாடு முழுவதும் பால் விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால் விலையை அதிகரித்து உள்ளது. இந்தியாவின் பெரிய பால் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் தனது பால் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது. குஜராத் கூட்டுறவு பால் சந்தை சம்மேளனம் அமூல் என்கிற நிறுவன பெயரில் தங்களின் பாலை விற்பனை செய்கிறது. அந்தவகையில் இன்று முதல் அமூல் பாலின் விலை 1 லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. அமூல் […]
நாளை முதல் அமலாகும் பாஸ்டேக்…!!
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது நாளை முதல் கட்டாயமாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நாளை முதல் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இனி […]
இன்று காலை மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. மகாராஷ்டிர மாநிலம் பால்கார் பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை இந்திய வானிலை மையமும் தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்த நிலநடுக்கதால் மக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு தெரு வீதியில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக பிரான்ஸ் தூதருடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். புதுச்சேரியில் பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன், பிரஞ்ச் கவுன்செல் ஜெனரல் கேத்தரின் சுவார்ட் ஆகியோர் நேற்று சட்டப்பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்தனர். அப்போது, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், குறிப்பாக மாசு இல்லாத போக்குவரத்து உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் வழங்குவதற்கு புதுச்சேரி […]
’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்த கருத்திற்கு ஆளும்கட்சி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது நேற்று தெரிவித்த ஒரு கருத்து ஆளும்கட்சி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் […]
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவிற்கு திமுக எதிர்ப்பும், அதிமுக ஆதரவும் தெரிவித்து வாக்களித்தன. இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழ் அகதிகளையும் வஞ்சிக்கும் இம்மசோதாவைக் கொண்டுவந்ததாக மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்த தமிழக அரசையும் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைதாபேட்டையில் திமுக இளைஞரணிச் செயலாளர் […]
மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில், அம்மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையின் தர்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவை […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அஸ்ஸாமில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மூவர் உயிரிழந்தனர். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவோடு டிசம்பர் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவளிக்க 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் […]
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, பூரண உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா (71), நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமை (டிச11) பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த ராமையாவுக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். […]
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்ட, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, […]
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக சார்பாக மாவட்டம் தோறும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக இளைஞரணி சார்பாக சென்னை மாவட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியுரிமை […]
இந்தியாவில் மின் தட்டுப்பாடு நிலவவில்லை என்று மக்களவையில் இன்று மத்திய அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்ற மக்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது ஒரு உறுப்பினர் நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் அதன் தேவை அளவு தொடர்பான கேள்விகளை கேட்டார். அதற்கு பதிலளித்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங், ”நாட்டில் தற்போது மின்தட்டுப்பாடு இல்லை. நாட்டில் நடப்பு ஆண்டு அதிகபட்ச நுகர்வாக 183 ஜிகா வார்ட் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. […]
கடந்த 18ம் தேதி தொடங்கப்பட்ட நாடாளுமன்ற குளிர்கால தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது. கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால தொடரில் பல்வேறு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு மசோதா, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா, மற்றும் டெல்லியில் காலனிகளில் வசிக்கக்கூடிய உரிமையை பாதுகாக்கும் திருத்த மசோதா, உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் மசோதா மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு […]
வெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேநேரம் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர அயல்நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. எகிப்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பபடும் வெங்காயம், தமிழ்நாடு உள்ளிட்ட […]
ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண்ணாக இந்தியாவைச் சேர்ந்த ஹிந்தி நடிகை ஆலியா பட் முதல் இடத்தை பிடித்துள்ளார் . பிரிட்டன் வாரா இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண்ணாக ஹிந்தி நடிகை ஆலியாபட் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .ஈஸ்டன் ஐ என்ற வார இதழ் ஆன்லைனில் கருத்துக்கணிப்பு நடத்தி அதன் விவரத்தை வெளியிட்டுள்ளது .இதில் ஆலியா பட் முதல் இடத்தையும் ,தீபிகா படுகோன் 2வது இடத்தையும் ,தொலைக்காட்சி நடிகை ஹினா ஹான் 3வது இடத்திலும் […]
பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாக பெண் ஒருவர் அளித்த புகரின் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சியின் நிர்வாகி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தின் முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியின் சமாஜ்வாடி யுவஜன் சபா என்ற அமைப்பின் தலைவரான ஆஃபாக் கான், தொடர்ந்து தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்திவருவதாக 36 வயது பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் டிசம்பர் 4ஆம் தேதி ஆஃபாக் கான் மீது முதல் தகவல் அறிக்கைப் […]
ரூ.1200 விலை கொண்ட அடிப்படை செல்போன்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க உற்பத்தியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரூ.1200 ரக செல்போன்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வகை கைபேசிகளின் மதிப்பு பங்கு சுமார் ரூ .12,000 முதல் ரூ.15,000 கோடியாக உள்ளது. இது […]
பாகிஸ்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு இந்த வாரம் 100 இந்திய பக்தர்கள் செல்லவுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் என்னும் இந்து கோயில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித்தத் தலமாகக் கருதப்படும் இந்த கோயிலுக்கு, வருடந்தோறும் நவம்பர்-பிப்ரவரி மாதங்களில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். அந்த வகையில், வரும் சனிக்கிழமை அன்று 100 இந்திய பக்தர்கள் கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு செல்லவுள்ளனர். “வரும் வெள்ளிக்கிழமை அன்று வாகா எல்லையைக் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று (டிச.12) மூன்றாம் கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்துக்கு மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மூன்றாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.அவர்களில் 32 பேர் பெண்கள். 17 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கான தொகுதிகளாகும். தேர்தல் அமைதியாக நடைபெறும்பொருட்டு 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 626 […]
பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை, மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முஷாபர்நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிகார் மாநிலம் முஷாபர்நகர் பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர், டிசம்பர் 9ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திருப்பினார். அப்போது, அந்த வழியாக டெம்போவில் வந்த மூவர், மாணவியை வீட்டில் சேர்ப்பதாகக் கூறினர். இதை நம்பிய மாணவி டெம்போவில் ஏறிச் […]
கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சித்தராமையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் வீடு திரும்பியதும் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, மருத்துவமனை முன் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு […]
நம் நாட்டில் உள்ள விரைவு நீதிமன்றங்களில் நீதி எவ்வளவு விரைவாக வழங்கப்படுகிறது என பார்க்கலாம். விரைவு நீதிமன்றங்கள் 2000ஆவது ஆண்டில் தொடங்கப்பட்டது. கீழைமை நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. விரைவான நீதியை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்களில் பல வழக்குகள் தற்போது தேங்கி நிற்கின்றன.வழக்குகளில் நீதி வழங்க பத்து ஆண்டுகள் வரை ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிஜம். சமீபத்தில் ‘திஷா’ வழக்கில் ஒரு விரைவு நீதிமன்றத்தை […]
பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டி மூலம், மும்பையைச் சேர்ந்த இந்திய வீரர் முதல் தரப் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தற்போது பல்வேறு நகரங்களில் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இதில், எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை – பரோடா அணிகளுக்கு இடையிலான போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தனது 400ஆவது சிக்சரை விளாசி அசத்தினார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, இன்னிங்ஸில் காட்ரோல் வீசிய […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி […]
ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல்: 3 ஆம் கட்ட வாக்குபதிவு தற்போது தொடங்கியது. ஜர்காண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைப்பெற்று வருகின்றன. இன்று 17 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்ட வாக்குபதிவு தொடங்கியுள்ளது. இதில் 12 தொகுதிகள் மாவேஸ்யிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது தேசத்தின் சகோதரத்துவத்தை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் அல்லாமல் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சியர்கள், பௌத்தர்கள் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் புலம் பெயர்ந்தோர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையில் மசோதாவிற்கு 105 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு : 346_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 347_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 19 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன. 884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். 1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர். 1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது. 1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு […]
ஆந்திராவிலுள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் வெங்காயம் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விண்ணை முட்டியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 180 முதல் 220 வரை விற்கப்பட்டுவருகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெங்காயம் வாங்காமல் சமையல் செய்து வருகின்றனர். ஆனாலும் சமையலில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படுவதை சமூக ஊடகங்களில் பலரும் மீம்ஸ் செய்து நக்கலடித்து வருகின்றனர். இந்நிலையில், […]
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை கே.சி. வேணுகோபால் ராஜினமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் கே.சி. வேணுகோபால். இவர் தனது பதவியை இன்று (டிச.11) ராஜினாமா செய்தார். இதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அளித்துள்ளார். அண்மையில் நடந்த கர்நாடக இடைத்தேர்தலின் முடிவுகள், நேற்று முன் தினம் (டிச.9) வெளியாகின. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடையே கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி […]
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘1995ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய […]
இந்தியாவின் நான்காம் இடத்துக்கும் எந்த வீரர் சரியாக இருப்பார் என்பது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் மிகப்பெரும் பிரச்னை நான்காம் இடத்தில் யாரை களமிறக்குவது என்பதுதான். இதற்காக இந்திய அணி மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் என பல வீரர்களை சோதனை செய்தது. ஆனால் இதில் […]
இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி, இந்தியாவின் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் (NADA) விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. நேற்று உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் மூலம் ரஷ்யா நாட்டிற்கு நான்கு ஆண்டுகள் அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடத் தடை விதித்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மேலும் அந்த அமைப்பு அனைத்து நாடுகளின் […]
ட்விட்டரில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த இந்த ஆண்டிற்கான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் பக்கத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த பிரபலங்களில் பதிவுகள் கொண்ட பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் இந்தியாவின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளினால் அதிக ரசிகர்களை ஈர்க்கப்பட்ட பட்டியலை ட்விட்டர் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஆண்கள் பட்டியலில் இந்திய […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இது குறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதன் மூலம் குறுகிய மனம், வெறுப்புணர்வு ஆகியவற்றையே இந்தியா நேசித்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை […]
மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்படும் இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன் கடிதம் எழுதியுள்ளார். பி. வில்சன் மத்திய அமைச்சருக்கு எழுதிய அக்கடிதத்தில், ”இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான (ஓபிசி) மருத்துவச் சேர்க்கையில் மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ) ஆகியவற்றில் அகில இந்திய இடஒதுக்கீட்டு முறை நடைமுறையிலுள்ளது. […]
யாரும் கவலைப்பட தேவையில்லை ரூ. 2,000 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். மத்திய அரசு அறிவிப்பு. பிரதமர் மோடி, தனது முந்தைய ஆட்சியில், 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு எழுந்தது. அதைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.தற்போது […]
பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பது அடிப்படை உரிமைகள் தோல்விடைவதைக் காட்டுகிறது எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பாராட்டி பேசிய அவர், “கால் நூற்றாண்டு காலமாகக் கண்காணிப்பு அமைப்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டுவருகிறது. எதிர்பார்த்ததைவிட பாரபட்சமின்றியும் அச்சமின்றியும் அது […]
கர்ப்பமாக்கிய காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் பேத்தியாவைச் சேர்ந்த 19 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அந்த இளைஞர் பலமுறை அவருடன் உறவில் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகவே, அதை அந்த இளைஞரிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ள அந்த இளைஞர் மறுத்துவிட்டார். இந்நிலையில், தன்னுடைய […]