இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 மாதம் மட்டுமே உள்ள நிலையில், இதற்குத் தயாராகும் வகையிலேயே தற்போது இந்திய அணி தங்களைப் பலப்படுத்திவருகிறது. அந்தவகையில், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், […]
Tag: India
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தன்னால் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் கலக்கிவருகிறார். எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் இவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது சற்று கடினமாகவே உள்ளது. ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பும்ரா தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இவர் சமீபத்தில் தனது பயிற்சியை தொடங்கினார். […]
ஆந்திர அரசின் சார்பில் கிலோ ரூ.25க்கு விற்கப்பட்ட வெங்காயத்தை வாங்க பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். தடுப்புகள் மீது ஏறி குதித்து கடைக்குள் புகுந்து வெங்காயம் வாங்க முயற்சித்த சம்பவங்களும் நடந்தது. ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சிப்ருபள்ளி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் ஆந்திர அரசின் கிலோ ரூ.25க்கு வெங்காயம் விற்பனை ஆனது. இதனை வாங்க பெண்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது.அதிக மக்கள் கூட்டம் காரணமாக பொறுமை இழந்த பெண்கள் தடுப்புகளை மீறி ஏறிக் […]
பாலியல் மற்றும் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமியார் நித்யானாந்தாவை விசாரிக்க குஜராத் காவலர்கள் சர்வதேச காவலர்களின் உதவியை நாட உள்ளனர். தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு பெங்களுரு, கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரின் ஆசிரமத்தில் 4 இளம் பெண்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்த ஆசிரமம் சென்றனர். அங்கு நித்யானந்தா […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 06 கிரிகோரியன் ஆண்டு : 340_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 341_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 25 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr. 1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர். 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம் பெயர்ந்தது. 1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் […]
விசாகப்பட்டினத்திலுள்ள HPCL நிறுவனத்தில் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. பணியின்பெயர்: Operations Technician காலியிடங்கள்: 66 சம்பளம்: 40,000 வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: கெமிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். பணியின்பெயர்: Boiler Technician காலியிடங்கள்: 6 சம்பளம்: 40,000 வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Boiler Competency சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக் கட்டணம்: ரூ. 590 மட்டும் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை : www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 21.12.19 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 05 கிரிகோரியன் ஆண்டு : 339_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 340_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 26 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார். 1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். 1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். […]
மும்பையிலுள்ள “HPCL” தொழிற்சாலையில் அதிகாரி பணிகளுக்கு 21 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேவை. assistant manager – 5 senior manager – 6 officer – 10 வயது: assistant manager பணிக்கு 34 வயதிற்குள்ளும், senior manager 40 வயதிற்குள்ளும், officer பணிக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். சம்பளம்: HPCL விதிமுறைப்படி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை : www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலமாக 31.12.19 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இரவில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் மாநில முதல்வர் […]
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவராக பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவராக லாலு பிரசாத் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 11ஆவது முறையாக கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், டிசம்பர் 23ஆம் தேதி 2017ஆம் ஆண்டு மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி, பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் உடல்நிலை பாதிப்படைந்தது. 2018ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, அவர் ராஞ்சியில் உள்ள தனியார் […]
ஒடிசா மாநிலத்தில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள பூரியில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து,அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பேருந்துக்காக நிமபாராவில் தான் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது காவலரும் அவரின் நண்பர்களும் வந்து தன்னை வீட்டிற்கு சென்று விடுவதாக நாடகமாடி பூரியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 04 கிரிகோரியன் ஆண்டு : 338_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 339_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 27 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. 1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர். 1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை […]
காலிப் பணியிடங்கள் : 231 பணி : Postal Assistant/Sorting Assistant – 89 ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில் பணி : போஸ்ட்மேன் – 65 ஊதியம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில் வயது வரம்பு : 31.12.2019தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குஉட்பட்டு இருக்க வேண்டும். பணி : Multi Tasking Staff (MTS) – 77 வயது வரம்பு : 31.12.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் […]
நாட்டின் எந்த ரேஷன் கடையிலும், ஒரு ரேஷன் கார்டைக் கொண்டு பொருட்கள் வாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அடுத்தாண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். நாட்டில் எந்தப் பகுதியில் வசித்தாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வகையில், ‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. முன்னதாக, இது […]
பாரதிய ஜனதா ஆட்சியில் செல்போன் சேவை கட்டணம் குறைவாக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் ஒரு ஜிபி இணைய சேவை பெற 269 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் செலவிட நேர்ந்ததாகவும் தற்போதைய ஆட்சியில் ஒரு ஜிபி 11 ரூபாய் 78 காசுகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 03 கிரிகோரியன் ஆண்டு : 337_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 338_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 28 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின்காலியை வந்தடைந்தது. 1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது. 1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன. 1818 – இலினொய் அமெரிக்காவின் […]
ஹனி டிராப் வழக்கில் சிக்கிய தொழிலதிபருக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் ஊடக அலுவலகங்களில் அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். மத்தியபிரதேச மாநிலத்தில் இளம் பெண்களை அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பெரிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கி அரசின் முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் சில காரியத்தை சாதித்துக் கொண்டதாக சிலர் மீது புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆர்த்தி தயால், மோனிகா யாதவ், ஸ்வேதா விஜய் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 02 கிரிகோரியன் ஆண்டு : 336_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 337_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 29 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான். 1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். 1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் […]
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மன அமைதி கெட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாள்தோறும் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சம்பவங்களால் வன்முறையை கைவிடும் எண்ணத்திற்கு நம் மண ஓட்டம் வந்துள்ளது. ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு […]
ஹைதராபாத்தில் பெண்மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்களது கருத்தை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் சல்மான் கானும் தனது எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் […]
அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் தொடர்பான பாலியல் வழக்கில், பிரபல செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தை காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் என்ற அரசு அலுவலர், தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக இரு பெண்கள் மிரட்டிவருகின்றனர் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பெண்களுடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக […]
மகாராஷ்டிராவில் புதிதாக அமைந்துள்ள சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி நானா படோலேவை அவைத் தலைவராக தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜகவை தனிமைப்படுத்தும் நோக்கில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி […]
அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று அழிக்கும் அக்னி ரக ஏவுகணையை முதன்முறையாக இரவில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி ரக ஏவுகணையை முதன் முறையாக இரவில் விண்ணில் செலுத்தி, இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இச்சோதனையில் அணுஆயுதத்தை தாங்கிச்சென்று 3 ஆயிரத்து 500 கி.மீ., இலக்கைத் தாக்கும் அக்னி-3 ரக விமானம் இரவில் விண்ணில் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்தச் சோதனை சிறப்பான […]
ஆந்திராவில் 2 பள்ளி மாணவர்கள் ஆசிரியரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களால் மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு கால்களும் கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளி ஊழியர்களிடம் விசாரித்த போது, அந்த இரண்டு மாணவர்களும் அதீத சேட்டை செய்கின்றனர். ஆகவே கயிற்றால் கட்டி வைத்துள்ளோம் என்று பதில் உரைத்துள்ளனர். இதுகுறித்த காணொலிக் காட்சிகள் […]
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பாதிரியார் பிராங்கோ முலக்கல்லுக்கு பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது சக கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காவலர்கள் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் வன்புணர்வு, வன்கொடுமை மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் நீதிமன்றத்தில் […]
உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இதை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 10ஆவது உடல் உறுப்பு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியமைக்காக தமிழ்நாட்டிற்கு 5ஆவது முறையாக விருது கிடைத்துள்ளது. இவ்விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய […]
கேரள நடிகை தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கின் விசாரணையை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு 2017ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் மூளையாக செயல்பட்டதாகக்கூறி அவரை காவல் துறையினர் கைது செய்து […]
மக்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூ. 35க்கு ஹெல்மெட் அணிந்த நிலையில் மாநிலத்தின் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் வெங்காய உற்பத்தி பற்றாக்குறையால் சில நாட்களாக வெங்காயத்தின் விற்பனை விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில், பீகாரின் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35க்கு விற்பனை செய்வதை அறிந்து பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால், பாதுகாப்பு கருதி ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து அங்காடி ஊழியர் […]
பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில், நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு சில கிலோ […]
பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் தன்னை தற்காத்துக் கொள்ள காங்கிரஸ் வேட்பாளர் வாக்குச்சாவடி அருகே கையில் துப்பாக்கி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாவட்டங்களின் 13 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கப்பட்டது. இந்நிலையில், சைன்பூர் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் தல்தோகாஞ் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திருப்பதிக்கு எதிராக பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கல்வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் முன்னேறி செல்வதை அவர்கள் தடுக்க […]
வேக்ஃபிட்.கோ நிறுவனம், 100 நாட்களுக்குத் தினமும் 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ரூ 1 லட்சம் உதவித்தொகை அளிக்கும் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” திட்டத்தை அறிவித்துள்ளது. மக்களுக்குத் தூங்குவதற்கு சொல்லியா தரவேண்டும், பள்ளி வகுப்பறையில் தொடங்கிய தூக்கம் அலுவலகத்தில் பணிபுரிவது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதைப் போல், பிரபல இந்திய நிறுவனம் வேக்ஃபிட்.கோ (Wakefit.co) என்னும் மெத்தை நிறுவனம் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில், 100 நாட்கள் நடைபெறும் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்கும் […]
பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து பின் கொலை செய்த 4 குற்றவாளிகளை தெலங்கானா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த பிரியங்கா தன் தங்கை பவ்யாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். […]
கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியானார். இவர், ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காந்தியை படுகொலை செய்த கோட்சே தேசபக்தர் என்று கூறியிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்திலும் அதையே மீண்டும் கூறினார். சிறப்பு பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீதான விவாதத்தின்போது திமுக […]
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனது குற்ற வழக்குகளை மறைத்ததற்காக நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்தார் காவல் நிலையத்தில் இருந்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்திற்குச் சம்மன் கடிதம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர், தன் மீதுள்ள இரண்டு குற்ற வழக்குகளை மறைத்து, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான ‘மகா […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவை குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வரச்சொல்லி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அழைப்பையேற்ற அவர், இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியா வந்தடைந்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் வந்திறங்கிய அவரை, மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். கோத்தபயவுடன் இலங்கை வெளியுறவுத் துறை […]
ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அரசு கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு மிருகத்தனமான கொடும் வெறியர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் […]
விடுதலை செய்ய முடியாவிட்டால், தன்னையும் தன் கணவரையும் கருணைக் கொலை செய்து விடுங்கள் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு நளினி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில், இவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து […]
ஹைதராபாத்தில் அரசு கால்நடை பெண் மருத்துவரைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபத் அருகே ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டியின் மகள் பிரியங்கா ரெட்டி (26). மெஹபூப் நகர் மாவட்டம், கொல்லூர் என்ற பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது. இதனிடையே […]
அரசியல் படமான ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ படத்தின் ட்ரெயல்ரை வெளியிட்ட சில நாட்களில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்ற டேக்லைனுடன், அதிரடி மன்னன் என்ற போற்றப்பட்ட புரூஸ்லீ பிறந்தநாளன்று ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ என்ற தனது அடுத்த படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார் சர்ச்சை புகழ் இயக்குநர் ராம்கோபால் வர்மா இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்று கூறி, ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ என்ற படத்தின் டீஸசரை ராம்கோபால் […]
கோட்சேவை தேசபக்தன் என குறிப்பிட்ட பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங், தான் கூறியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு குழு மசோதா 2019 தாக்கல் செய்யப்பட்டபோது, கோட்சே கூறிய கருத்துகளை திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா எடுத்துரைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங், கோட்சே ஒரு தேச பக்தன் என முழங்கினார். இது மக்களவையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க […]
நாதுராம் கோட்சே தேசபக்தன் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பிரக்யா சிங் தாக்கூரின் நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாலேகான் பகுதி ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குற்றமச்சாட்டப்பட்டவாரன சர்ச்சை எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி பதவியைப் பறிகொடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பிரக்யா சிங் தாக்கூர், அண்மையில் நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை நிலைக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். மகாத்மா காந்தியைக் கொன்ற […]
பள்ளி மாணவர்களுக்கு சரியான உணவை வழங்க முடியாத அரசு தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் வழங்குவதன் மூலம், மனிதர்கள் எப்படி போனா எங்களுக்கு என்ன எங்களுக்கு மாடுகள்தான் முக்கியம் என்பது போல் இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களை பாஜகவே ஆட்சி செய்துவருகிறது. அப்படி பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மறைமுகமாக பசுக் காவலர்கள் ஆட்சி மறைமுகமாக நடந்துவருகிறது. அப்படி உத்தரப் பிரதேசத்திலும் பசுக்காவலர்களின் ஆட்சி படு ஜோராக நடக்கிறது. மாடுகள் இறந்து […]
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று, இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றி பெற்றதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். மோடியின் வரவேற்பை ஏற்ற, கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா வரும் கோத்தபய ராஜபக்ச, குடியரசுத் […]
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-47 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலமாக கார்டோசாட் 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைக்கோள்களும் அடங்கும். இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ குழுவினருக்கு […]
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்குத் திரும்பிய ஊழியர்கள் அனுமதிக்கப்படாததால் தெலங்கானாவில் பதற்றம் நிலவிவருகிறது. தெலங்கானா மாநிலத்தில் கடந்த 52 நாட்களாக, போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். நவம்பர் 5ஆம் தேதிக்குள் போராட்டத்தை நிறுத்தி வேலைக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் […]
இந்திய பந்துவீச்சாளர் பும்ரா பயிற்சியின்போது மிடில் ஸ்டெம்பை உடைத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழும் பும்ரா தோள்பட்டையில் ஏற்பட்ட காயணம் காரணமாக தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார். இதனால், அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான […]
இந்தியாவில் விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ள நிலையில் இ-சிகரெட் தடைச் சட்டம் குறித்து விவாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர், “இ-சிகிரெட் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் 1.02 விழுக்காடு மக்கள் மட்டுமே, இந்த விவாதத்திற்கு என்ன அவசரம். தேசிய அளவில் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம், அனைவருக்கும் சமமான அதிகாரம் அளித்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளன. இதற்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை விட […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 331_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 332_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 34 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். 1095 – திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். 1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. […]
அயோத்தி வழக்கில் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக , சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாமா ? வேண்டாமா ? என்பது குறித்த முடிவு எடுக்க உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு ஒருமித்த குரலாக சீராய்வு மனுவையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஒரு […]
மகாராஷ்டிராவில் பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பெரும்பான்மைக்கான […]