கர்நாடகா அரசியலில் குமாரசாமி அரசு கவிழ்ப்பதற்கு நடைபெற்ற அனைத்தும் அமித்ஷா_வுக்கு தெரிந்தே நடந்ததாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறிய ஆடியோ ஓன்று வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா அரசுக்கு எதிராக அந்த கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை போர்க்கொடி தூக்கியதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் பாஜக […]
Tag: India
காருக்கு காருக்கு 30 மாதங்களில் 34 டயர்கள் அரசு பணத்தில் மாற்றியது குறித்து எழுந்த விமர்சனத்திற்கு கேரள அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். கேரள மின் துறை அமைச்சரான மணி தனது இன்னோவா காருக்கு 30 மாதங்களில் 34 டயர்கள் மாற்றி உள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்தது. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டயருக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக […]
ஊடகங்கள் மீது மாநில அரசு செயல்படுத்திவரும் கடுமையான உத்தரவுகளை திரும்பப்பெறும் வரை ஓயப்போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வண்ணமே ஊடக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அரசுத் துறைகளின் செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கிய உத்தரவு தொடர்பாக ஒய்.எஸ். […]
‘எனது 50 வயதான அம்மாவுக்கு ஹேண்ட்சமான மாப்பிள்ளை வேணும்’ என பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று பலர் சொல்வார்கள். பல இடங்களில் திருமணம் நடத்துவதில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவார்கள். பலர் முன்னிலையில், பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு தான் நடைபெற வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்தத் திருமணங்களை பெரும்பாலும் பெற்றோர்களே நடத்திவைக்கின்றனர். ஆனால் இங்கு இளம்பெண் ஒருவர் தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கே மணமகன் வேண்டும் என ட்விட்டரில் தைரியமாக பதிவிட்டுள்ளார். […]
டிக்டாக் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 (Smartisan Jianguo Pro3) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. டிக் டாக் நிறுவனம் தனது ஒரு செயலியில் அனைத்து மக்களையும் தன்பக்கம் ஈர்த்து சாதனைப்படுத்தியது. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 என்ற புதிய கைப்பேசி மூலமாக டிக் டாக் செல்போன் தயாரிப்பில் கால் பதித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பைட் டான்ஸ் நிறுவனம் அதிகார்ப்பூரவாக செல்ஃபோனை வெளியிட்டுள்ளது. இந்த […]
இந்தியாவைச் சேர்ந்த 13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் என்பது இணையதளத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அனைவராலும் இந்த டார்க வெப்-க்கு செல்ல முடியாது. சர்வதேச அளவில் போதைப்பொருள், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இந்த டார்க வெப்தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, டார்க் வெப்பிலுள்ள ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் (Joker’s Stash) என்ற தளத்தில் 13 லட்சம் இந்திய பயனாளர்களின் […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகையின்போது வெடித்த பட்டாசுகளால் டெல்லியில் வசித்துவரும் பொதுமக்கள் முகமூடியுடன் அலைந்து திரிந்துவரும் வேளையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இந்தியாவுக்கு பயணம் வருவதற்கு முன்னதாக வங்கதேச வீரர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தடை என வங்கதேச அணி நிர்வாகத்திடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையெல்லாம் சமாளித்து இந்தியா […]
உலகின் தலைசிறந்த அணிகளையும் வெல்லக்கூடிய அணியாக வங்கதேச கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா – வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே நேற்றைய பயிற்சிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் எதிரணிக்கு எதிராக நமது அணியின் யுக்தி, திட்டம் மற்றும் நமது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களால் […]
இந்தியாவைச் சேர்ந்த பலர் வாட்ஸ்அப் மூலம் வேவு பார்க்கப்பட்ட நிலையில், தன்னையும் மத்திய அரசு வேவு பார்த்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை, இஸ்ரேல் நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் செயலி மூலம் வேவு பார்த்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் பல இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு அவர்களுக்கு […]
உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிலிப்பிட் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது விவசாய கழிவுப் பொருட்களை தெருக்களில் வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து சுமார் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் பில்சந்தா, நேரியா, அமரியா, புரன்பூர், சேரமாவூ, மதோடண்டா, ஜகனபாத், பிசால்பூர் மற்றும் கஜ்ராவூலா கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.விவசாயிகள் […]
திருக்குறள், மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்கிறார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது. தாய் மொழியில் திருக்குறள் : முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் மத்தியில் நடந்த விழாவில், தாய்லாந்து மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். இதையடுத்து […]
பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை பங்கேற்க வைப்பதற்காக விராட் கோலியிடம் பேசியபோது, அவர் மூன்றே விநாடிகளில் பதில் கூறியதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான சவுரவ் கங்குலி கடந்த 24ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பு குறித்து தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார்.அவர் […]
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள் நிகழ்த்த ஜெய்ஷ்-இ-முகமது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திரும்பும் அமைதியை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா தளபதி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரும் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்தியாவில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலை சந்திக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் போரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 தீவிரவாத அமைப்புகளின் […]
ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திரக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பட மாட்டாது என்று தற்காலிக பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான கிரியாஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தூதரான கிரியாஸ் நவம்பர் மாதத்திற்கான தற்காலிக பாதுகாப்பு கவுன்சிலிங் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பற்றி விவாதம் ஏதும் நடைபெறாது என்று தெரிவித்த அவர், ஜம்மு விவகாரத்தை ஏற்கனவே விவாதித்து விட்டதாகவும், அது தொடர்பாக […]
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உஸ்பெகிஸ்தான் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ மருத்துவமனை கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஒப்பந்தத்தில் உஸ்பெகிஸ்தான் உடன் கையெழுத்திட்டார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், அதனை மேம்படுத்தவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற சாகி அமைப்பு மாநாட்டிலும் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்கள் […]
தாய்லாந்து வாழ் இந்தியர்களிடையே உரையாற்றவுள்ள நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். அங்கு நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியின் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சீக்கிய மதகுரு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிடவுள்ளார். திருக்குறளை தாய்லாந்து மக்களின் பிரதான மொழியான ‘தாய்’ மொழியில் வெளியிட்டு […]
மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்ண்ட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இருநாள்கள் நடக்கும் மாநாடு இன்று நிறைவடைகிறது. இந்தியா சார்பில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கிடையே பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடன் உறவை வலுப்படுத்த […]
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக மூத்தத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 145 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனைத் தனக்குச் சாதகமாகப் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 02 கிரிகோரியன் ஆண்டு : 306_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 307_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 59 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 619 – மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார். 1675 – பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். 1795 – ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது. 1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர். 1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு […]
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு முக்கிய நகரங்களில் பேரணி நடத்தினர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றை பாகிஸ்தான் முடக்கிக்கொண்டது. இந்நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் போன்ற […]
அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் டிமா ஹசோ மாவட்டத்தில் மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து டிமா ஹசோ மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் மூன்று கனரக வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. அதேபோல் கபிலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, […]
இளவரசர் சார்லஸ் இரண்டே ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் அரியணையின் வாரிசான இளவரசர் சார்லஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும், இந்த பயணம் நிலையான சந்தைகள், காலநிலை மாற்றம் மற்றும் சமூக நிதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது எனவும் அவரது அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது. 70 வயதான இளவரசர் சார்லஸ் நவம்பர் 13ஆம் தேதி புதன்கிழமை இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இது சார்லஸின் 10ஆவது […]
விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் தெலுங்கில் ரீமேக் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தந்தை – மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் பிகில். அட்லி இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜயின் மைக்கேல் கதாபாத்திரம் கால்பந்தாட்ட பயிற்சியாளராவும், ராயப்பன் கதாபாத்திரம் லோக்கல் டானாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், இந்துஜா, யோகி […]
தமிழ்நாட்டில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை விழுந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத […]
மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்துவரும் பரபரப்பான சூழலில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்துப் பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 162 இடங்களை கைப்பற்றியுள்ளது. 104 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பாஜக-வுக்குக் கிடைக்கவில்லை. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, வெறும் […]
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்லவிருக்கிறார். மேலும் பல்வேறு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்லவிருக்கிறார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான எரிசக்தி, பாதுகாப்பு, கொள்முதல் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.இப்பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். மோடியின் 2016ஆம் […]
டெல்லியில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்ததால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் எந்தவொரு சம்பவத்திலும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர், தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளியன்றும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக நகரம் முழுவதும் இருந்து தங்களுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன என்றும், அதில் அதிகபட்சமாக […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 28 கிரிகோரியன் ஆண்டு : 301_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 302_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 64 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 97 – உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். 306 – மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 312 – மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார். 456 – போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் […]
சவுதி அரபியாவிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. […]
ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திற்குச் சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களைச் சந்தித்து தன் வாழ்த்துகளை தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய ராணுவம் காஷ்மீருக்குச் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 27 கிரிகோரியன் ஆண்டு : 300_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 301_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 65 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். 1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இறம்பெற்றது. 1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. 1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்து கொள்ளப்பட்டது. 1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர். […]
பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி பல சுர்ஜித்துகள், தன் இன்னுயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் கதறல்கள் வெளியே கேட்காவிட்டாலும், நீதிமன்ற வாயில்களில் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாடு முழுவதும் அனைவரின் கவனமும் திருச்சியை நோக்கித் திரும்பியுள்ளது. அதற்கான காரணம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் அழுகுரல். அந்த குழுந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ஐஐடி குழுவினர் என அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுபோன்று பல ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி […]
ஐ.எஸ்.எல். கால்பந்து ஆறாவது சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. அணி ஒடிசா எஃப்.சி. அணியை வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனின் ஏழாவது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. – ஒடிசா எஃப்.சி. அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டியாகும். முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி டிராவும், ஜம்ஷெட்பூர் அணியிடம் […]
இந்திய அணி பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கு தயார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்து வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளை பார்க்க நேரம் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐசிசி டெஸ்ட் போட்டிகளை ஒருநாள் போட்டிகள் போல் பகல் – இரவு போட்டிகளாக நடத்த முடிவு செய்து சில போட்டிகளை நடத்தியது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ள நிலையில், […]
பிசிசிஐயின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி கங்குலி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்தச் சூழலில் கங்குலியின் நியமனம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் பிரபல ஆங்கில […]
இந்திய அணியின் நான்காவது இடத்தின் தேடல் பல ஆண்டுகளாக முடிவு பெறாமல் இருந்துவரும் நிலையில், அந்த இடத்திற்கு விஜய் ஹசாரே தொடரில் நடுவரிசையில் களமிறங்கி சிறப்பாக ஆடிய மணீஷ் பாண்டே சரியாக இருப்பார் என ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இந்திய அணியில் பல ஆண்டாக நான்காவது இடத்தில் மியூசிக்கல் சேர் ஆடிவரும் நிலையில், அந்த இடத்தை மணீஷ் பாண்டே நிச்சயம் நிரப்புவார் என இந்திய அணி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவாவுடன் ரிலாக்ஸ் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி எப்போது அணிக்குத் திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் ஓய்வை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தோனி அது குறித்து மவுனம் காத்துவருகிறார்.அது மட்டுமல்லாது அதன்பின் ராணுவத்தில் 15 நாள்கள் பயிற்சி எடுத்து திரும்பிய தோனி தனக்கு டிசம்பர் மாதம்வரை […]
ஓசூர், சென்னையில் இயங்கிவரும் சுந்தரம் கிளைட்டன் நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாள்களை அறிவித்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல முதலீடுகள் குறைப்பு, தற்காலிக ஊழியர் பணி நீக்கம், உற்பத்தி நாள்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.டிவிஎஸ் (TVS) குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகள் சென்னை, ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கிவருகிறது. […]
திரிச்சூரில் மூங்கில் மூலம் ஒருவர் புத்தர் சிலை வடிவமைத்துள்ளதை அடுத்து மூங்கிலிலிருந்து வீணாகும் பொருள்களை வைத்தும் அவர் சிலைகள் வடிவமைத்து அசத்திவருகிறார். கேரள மாநிலம் திரிச்சூர் கலாசார, பண்பாடு மிகுந்த கைவினைப் பொருள்கள் அதிகம் தயாரிக்கப்படும் இடம். பல்வேறு கைவினைப் பொருள்கள், சிலைகள் உள்ளிட்டவை இப்பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதனிடையே, திரிச்சூரில் உள்ள வடக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மோகனன் தச்சராக உள்ளார். இவர் சிலைகள் செய்து அசத்திவருகிறார். சிலைகள் அனைத்தும் மூங்கில் மூலமும் […]
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியைத் தழுவினார். ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரில் மகளில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தைவானின் தை சூ யிங்கை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து முதல் செட் கணக்கை 21-16 என்ற கணக்கில் […]
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க்கும் பணியில் தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழு இணைந்துள்ளது. திருச்சி மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். அவனை மீட்பதற்கு கடந்த இருபது மணி நேரமாக மீட்புக்குழு போராடி வந்துள்ளது. இதையடுத்து முதல் கட்டடங்களில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை மீட்பு பணியின் போது மணல் சரிந்து 70 அடியில் தற்போது சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் […]
இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவப் படையினரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, திரிப்புரா மாநிலம் அகர்தலா பகுதியில் எல்லை ராணுவப் படையினர் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக இந்திய-வங்கதேச எல்லைப் படை ராணுவத்தினர் அகவுரா ஒருங்கிணைந்த சோதனைப் பகுதியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இரு நாடும் நல்லுறவை மேம்படுத்த ஆண்டு தோறும் தேசிய நிகழ்ச்சியில் இதுபோல இனிப்புகளை பரிமாறிக் […]
மகாராஷ்டிரா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வொர்லி தொகுதியில் வெற்றிபெற்ற ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவிடம் வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்டு, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற விருக்கிறது. இருந்தபோதிலும், யாருக்கும் தனிப் […]
தீபாவளியையொட்டி ஜியோ நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது அந்நிறுவன மொபைல்ஃபோன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜியோ நிறுவனம் தங்கள் பயனர்களை குளிர்விக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனம் 75 ரூபாயிலிருந்து 185 வரையிலான 4 வகையான புதிய மாதாந்திரத் திட்டங்களை உருவாக்கியதுடன், மற்ற நெட்வொர்க் பயன்பாட்டாளர்களை அழைக்க 500 நிமிடம் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. ஜியோவின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடக்க […]
மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் பாஜக 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மும்பையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சியோன் கோலிவாடாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் இரண்டாவது முறையாக வெற்றி வாகைச் சூடியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி […]
இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி கிரண் திவாரி அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டுவரும் இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அக்டோபர் 18-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. அதையடுத்து […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 26 கிரிகோரியன் ஆண்டு : 299_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 200_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 66 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 740 – கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 1341 – ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது. 1377 – பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார். 1520 – புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார். 1640 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1689 – ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் […]
இந்தியா – சீனா இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா – சீனா உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்ட வரவேற்பு […]
மஹாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் போட்டியிட்ட அதே தொகுதியில் அவரது இளைய மகன் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணியை நோட்டா பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் எஸ்சி எஸ்டி வாக்குகள் அதிகம் உள்ள லத்தூர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் மரணமடைந்த நிலையில், அவரது இளைய மகன் தீரஷ் தேஷ்முக் அதே தந்தை நின்ற அதே தொகுதியில் நின்று 67.63 வாக்கு சதவிகிதமும் மொத்தம் […]
வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவருகின்றன. இதற்கு சரியான விளக்கத்தை தற்பொழுது வங்கிகள் அளித்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதன் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது எனவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கான […]