Categories
கால் பந்து விளையாட்டு

கம்பேக் தந்து வெற்றி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ்….!!

ஐஎஸ்எல் ஆறாவது சீசனின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ கொல்கத்தாவை வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் ஸ்டைலில், இந்தியாவில் ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து தொடர் நடத்தப்பட்டுவருகிறது. இந்தத் தொடரின் ஆறாவது சீசன் இன்று கொச்சியில் கோலகலமாகத் தொடங்கியது. இந்த சீசனின் முதலில் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, அத்லெடிக்கோ கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.   இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 12 போட்டிகளில் கேரளா அணி இரண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சினுக்குப் அப்புறம் நாதான் டா.. இதோ என்னோட புதிய சாதனை….!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் உமேஷ் யாதவ் சுவாரஸ்யமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். பொதுவாக, பேட்டிங்கில் டெய்லெண்டர்ஸ்கள் களமிறங்கியவுடனே அதிரடியான பேட்டிங்கில் ஈடுபட்டால், பலருக்கும் ஆச்சரியமாகதான் இருக்கும். பந்தை வீசுவதில் செலுத்தும் வேகம் சில சமயங்களில் அவர்களது பேட்டிங்கிலும் பிரதிபலிக்கும். அந்தவகையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத ஏவுதளங்களை பந்தாடிய இந்திய பாதுகாப்புப் படை!

பயங்கரவாத ஏவுதளங்களை இந்திய பாதுகாப்புப் படை தாக்கியதைத் தொடர்ந்து, இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவந்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்களின் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.காஷ்மீர் பள்ளத்தாக்கின் நீலம் பகுதியில் உள்ள நான்கு ஏவுதளங்களை இந்தியா பாதுகாப்புப் படை தாக்கியதில், நான்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். முன்னதாக, இந்திய […]

Categories
இந்திய சினிமா சினிமா

உங்க மேல எப்படி காதல் வந்துச்சுனு தெரிலங்க – சன்னி லியோன்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பரின் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு ‘ஜிஸம் 2’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சன்னி லியோன். அதைத் தொடர்ந்து ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் இந்தி மட்டுமல்லாது சில தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்தும், தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார். கூகுள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கூகுளின் அடுத்த மொபைல்போன் இந்தியாவுக்கு வராது….!!

கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல்போன் மாடல்கள் இந்தியாவுக்கு விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்ப்பாபேட் (Alphabet) நிறுவனத்தின் அடுத்த மொபைல் மாடல்களான Google Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவை கடந்த வாரம் நியூயார்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 90hz டிஸ்பிளே, ஆண்டிராய்டு 10 இயங்குதளம் என்று பல அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மொபைலின் முக்கிய அம்சமே இதிலுள்ள சோலி ரேடார் சிப். மொபைலை தொடாமலேயே நமது கையசைவுகளின் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில்…. உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்கள் செலவிட தயார்- நிர்மலா சீதாராமன்..!!

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியகத்தின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியகத்தின் (IMF) வருடாந்திரக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு..!!

மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியை மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாமல்லபுரத்தில் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, சீன திரைப்படமான ‘டையிங் டு சர்வைவ்’ படத்தில் இந்திய மரபுவழி மருத்துவத்தைப் பற்றிய கூறியிருப்பது மிகுந்த தாக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

எங்க ஊர் பாகிஸ்தான்… பேர மாத்துங்க… வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள்..!!

பிகார் மாநிலத்தில் பூர்னியா மாவட்டத்திலுள்ள பாகிஸ்தான் கிராம மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தான் பெயரைக் கேட்டாலே, பெரும்பாலான இந்திய மக்கள் அதிருப்தியடைகின்றனர். அப்படிப்பட்ட மனநிலையிலிருக்கும் காலத்தில், பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்திலும் பாகிஸ்தான் என்ற பெயர்கொண்ட ஒரு கிராமம் இருக்கிறது. இந்தியா நாட்டில், பாகிஸ்தான் எனும் பெயர் கொண்ட கிராமத்தால், அப்பகுதி மக்கள் மிகவும் எரிச்சலடைகின்றனர். இப்பெயரைக் கண்டு நாங்கள் மிகவும் வருத்தமடைவதாகவும் தெரிவிக்கின்றனர். […]

Categories
பல்சுவை

ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.6,345 கோடி.!!

தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.6,345 கோடியாக உள்ளது. நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை (ஜூலை – செப்டம்பர் வரை) ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தாக்கல் செய்துள்ளது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,345 கோடியாக இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாயும் 14.9 சதவீதம் உயர்வைக் கண்டு, ரூ.13,515 கோடியாக உள்ளது. நடப்பு, சேமிப்பு கணக்குகள் எண்ணிக்கை 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சேமிப்பு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

யப்பா….!! 117,10,00,000 இவளோ பேர் ….. வச்சு இருக்காங்களா ?

கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செல்போன் இன்றி தனியொருவர் யாருக்கும் பொழுது போகாது என்பது உண்மையே. ஒரு தனக்கென்று 1 இல்ல 4 செல்போன் வரை வைத்து பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். தனிமையில் இருக்கும் ஒருவர் கையில் செல்போன் இருந்தால் அவர்களுக்கு நேரம் செல்வதே  அந்தவகையில் மனித வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒரு இடத்தை செல் போன் பிடுத்துள்ளது. அண்மையில் செல் போன் சேவைக்குகளை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் …!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். ரூ. 280 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தகவல். மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் தமிழகம், புதுச்சேரி இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவையொட்டி, வாக்குச்சாவடிகளில் உச்சகட்ட பாதுகாப்பு. கனமழை காரணமாக கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. அடுத்து வரும் 2 நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. ”பாலினால் வருகிறது ஆபத்து”…… ஆய்வில் அதிர்ச்சி தகவல் …!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாலில் 38 சதவீதம் தரமற்றவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு தர ஆணையம் நாடு முழுவதும் 1103 நகரங்களிலிருந்து 1432 பாக்கெட் பால் மாதிரிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வறிக்கையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் அகர்வால் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் போதும் விவசாயம் வேண்டாம்” மோடியின் பிரசாரம் பின்னடைவு …!!

மோடியின் தேர்தல் பரப்புரையில் காஷ்மீர் விவகாரத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு, காஷ்மீர் போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தந்து மோடி இந்த பரப்புரைகளில் தொடர்ந்து பேசிவந்தார்.ஆனால், விவசாய பிரச்னைகளை அவர் எழுப்பாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை தருவதாகவும் இது முக்கிய பிரச்னைகளை மடைமாற்றுவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு மட்டுமா …? இல்ல… இல்ல நாங்களும் கொடுப்போம் …..!!

தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிராவில் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் அங்கு தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை மொத்தம் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 975 சட்டவிரோதமான ஆயுதங்களையும் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே வாக்குக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 1,00,00,000 தரேன்…. ”அவ தலையை வெட்டு” சிவசேனா தலைவர் ஆவேசம் …!!

கமலேஷ் திவாரி கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மா காந்தி எண்ணங்கள் உலகெங்கும் எதிரொலிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி

தேசப்பிதா மகாத்மா காந்தியின் எளிமை, எண்ணங்கள் உலகின் மூலை முடுக்கெங்கிலும் எதிரொலிக்கும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பல்துறை அறிஞர்கள், பொழுதுப்போக்கு துறையைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்களுடன் கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது, உருவாக்கும் திறமை மகத்தானது. உருவாக்குதல் என்பது நாட்டுக்குத் தேவை. உருவாக்குதல் என்பது நாட்டுக்கு உத்வேகத்தை அளிக்கும். சிலர் வெளிநாட்டு பொழுதுபோக்குத் துறைகளிலும் வேலை பார்க்கின்றனர். அவர்கள் தங்களின் துறை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 20…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 20 கிரிகோரியன் ஆண்டு : 293_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 294_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 72 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :  1740 – மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது. 1803 – அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. 1818 – அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1827 – துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வெட்டுடா தலையை.. ”ரூ 1 கோடி தரேன்’’….. அதிரவைத்த சிவசேனா தலைவர்…!!

சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக், கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக். இதுகுறித்து காணொலிப் பதிவை வெளியிட்டுள்ள அவர், “கொலையாளைகளின் தலையை எடுப்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என […]

Categories
பல்சுவை

#GreatIndianFestival…. தீபாவளி சிறப்பு விற்பனை 21 ஆம் தேதி முதல் தொடக்கம் – அமேசான் அறிவிப்பு..!!

தீபாவளி சிறப்பு விற்பனைக்கான தேதியை அமேசான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் இந்தியா நிறுவனம் Great Indian Festival சிறப்பு விற்பனை காலத்தை அறிவித்துள்ளது. இதில் தீபாவளி சிறப்பு விற்பனையாக பல சலுகைகளை வழங்கவுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினி, கேமரா, சமையலறை பொருட்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையானது அக்டோபர் 21 நள்ளிரவு முதல் அக்டோபர் 25 இரவு 11.59 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம உறுப்பினர்கள் (Prime members) அக்டோபர் 20ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டெஸ்ட் – இந்தியா பேட்டிங்….!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. Virat […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பொருளாதார புரிதல் மோடிக்கு இல்லை” – ராகுல் காந்தி கடும் விமர்சனம் …!!

மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லையென்றும் அவர் மக்களுக்காக செயல்படுவதை விடுத்து பெரு முதலாளிகளுக்காக செயல்படுகிறார் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானாவில் மகேந்திர கர் பகுதியில் சோனியாகாந்தி பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும், பணமதிப்பு இழப்பாலும் சிறு தொழில் நிறுவனங்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு இந்த இரண்டும் இந்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மும்பை தாக்குதலுக்கு பிறகும் காங்கிரஸ் செயல்படவில்லை – மோடி

மும்பை தாக்குதலில் காரணமானவர்கள் குறித்து விசாரணைக்கு பின்பும் கூட காங்கிரஸ் அரசு உரிய முறையில் செயல்படவில்லை என்று நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணாமக பாஜக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன் தனது கடைசி பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மும்பையில் நடைபெற்ற பயங்வாதிகள் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

”தோனியாக களமிறங்கிய ராகுல்” உற்சாகமாக கிரிக்கெட் ஆடினார் …!!

ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி அங்குள்ள மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வைரலாகி வருகிறது. ஹரியானாவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ராகுல் காந்தி இன்று மகேந்திரகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின் டெல்லி திரும்பியபோது, மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தி சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் கல்லூரி ஒன்றில் தரையிறக்கப்பட்டது. அப்போது கல்லூரியில் உள்ள மைதானத்தில் இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினர். ராகுல் காந்தி விளையாடும் காணொலிக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமிதாப் பச்சன் ….!!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், அதன் காரணமாகவே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் வழக்கமான உடல் பரிசோதனை நிமித்தமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தங்கி சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்ப பாத்துடேன்… இது அவங்களேதான்- இந்திய வீரர்களை புகழ்ந்த முன்னாள்  ஜாம்பவான் …!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள்  ஜாம்பவான்களில் ஒருவருமான பிரைன் லாரா இந்திய அணியையும், வேகப்பந்து வீச்சாளர்களைப் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பார்க்கும் பொழுது 80களில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்ப்பதைப் போல் உள்ளது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜாஸ்ப்ரிட் பும்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோரை காணும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் போடல …. வேற ஆள அனுப்பலாம்னு இருக்கேன்… டூபிளஸ்ஸிஸ் ஐடியா …!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடுவதற்கு வேறு வீரரை அனுப்பவுள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்பயாவது பாக்கலாம்ல….. ”ராஞ்சி டெஸ்ட் போட்டியில் தோனி” கொண்டாடும் ரசிகர்கள் …!!

 இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் 3_ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தோனி நேரில் காணவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், நாளை இந்தப் போட்டி தொடங்குகிறது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடைபெற்றாலும் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவர் என்னா பண்ணிட்டாரு? – கங்குலி ‘நச்’ பதில் …….!!

BCCI_யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி, தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்ப  ட்டுள்ளார். அவர் வரும் 23ஆம் தேதி அப்பதவியில் பொறுப்பேற்கவுள்ளார். இந்தச் சூழலில் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுரவ் கங்குலி அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் ரவி சாஸ்திரியிடம் பேசினீர்களா என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நான் எப்பவும் உங்க பக்கம் தான் மம்மி” ஹர்திக் பாண்டியா பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது முதுகில் ஏற்பட்ட காயத்தையடுத்து லண்டன் சென்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருந்துவரும் பாண்டியா, ட்விட்டரில் ஓய்வின்றி ஏதேனும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப்பின் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோவை கடந்த […]

Categories
விளையாட்டு ஹாக்கி

”ஒலிம்பிக் தகுதிச் சுற்று” இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு …!!

 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணியில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஹாக்கி அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையே இந்திய ஹாக்கி அணிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.     இந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்திய ஆடவர் அணி ரஷ்யாவை எதிர்த்தும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்துத்துவா vs இன்குலாப் – சவால் விடும் இடதுசாரிகள்….!!

இந்துத்துவாவை எதிர்க்ககூடிய வலிமை இடதுசாரி கொள்கைக்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டோடு கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆக உள்ளது. இதனை ஆண்டு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கொல்கத்தாவில் அக்கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.அப்போது அவர் கூறுகையில், “இந்துத்தவாவின் தாக்குதலை தடுக்க சிவப்பு வண்ண கொடியால் மட்டுமே […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் கன்னக்குழி அழகி ஷாலினி….!!

நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகை ஷாலினி பாண்டே பாலிவுட்டில் அடியெடுத்துவைக்கிறார். ரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். தமிழில் ‘கொரில்லா’ படத்தில் அறிமுகமாகி, ஜீ.வி.பிரகாஷுடன் ‘100% காதல்’ திரைப்படத்திலும் நடித்தார்.பிறகு ‘மூடர் கூடம்’ திரைப்படத்தை இயக்கிய நவீனின் இயக்கும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதிலிருந்து அவர் பின்வாங்கவே அப்படத்தில் அக்ஷ்ரா ஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து பாலிவுட்டில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜெயேஷ்பை ஜோர்டர்’ திரைப்படத்தில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 19…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 18 கிரிகோரியன் ஆண்டு : 291_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 292_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 74 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :  கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர். 1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். 1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி  முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கமலின் ஃபேவரைட் படம்…. கணவருடன் ரசித்த வித்யாபாலன் ..!!

உலகநாயகனின் சூப்பர் ஹிட் படத்தை கணவருடன் பார்த்து ரசித்துள்ளார் நடிகை வித்யா பாலன். தென்னிந்திய திரையுலகில் ராசியில்லாதவராக பார்க்கப்பட்டு, பின் பாலிவுட் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் வித்யாபாலன், தற்போது மனிதக்கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவருகிறார்.தென்னிந்திய சினிமாக்களான தமிழ், மலையாள மொழிகளில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்ட பின், படத்தில்இருந்து விலக்கப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்று பேச்சுகள் எழுந்த நிலையில், பெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் எனத்தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நாக்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சரத் அரவிந்த் பாப்டே என்பதாகும். இவரை தலைமை நீதிபதியாக்க தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்”… அமித்ஷா வலியுறுத்தல்..!!

வெள்ளையர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்றை மாற்றி, இந்தியர்களின் கண்ணோட்டத்தில் புதிதாக எழுத வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் வாரணாசி பனராஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் 1857ஆம் ஆண்டின் சிப்பாய்க்கலகம் குறித்து பிரிட்டன் குறிப்புகளில் இடம் பெறாத தகவல்களை சுட்டிக்காட்டினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“T10 கிரிக்கெட்” மீண்டும் களத்தில் இறங்கும் சிக்ஸர் நாயகன்…… உலக பௌலர்களுக்கு அதிர்ச்சி….. இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி….!!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் அபுதாபில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக கிரிக்கெட் வரலாறானது டெஸ்ட் வடிவில் தொடங்கி காலப்போக்கில் ஒருநாள், டி20 என்பதையெல்லாம் தாண்டி தற்போது டி10 தொடராக உருமாறியுள்ளது. அந்த வகையில் டி10 தொடர்கள் 2017ஆம் ஆண்டு முதல் அபுதாபியில் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு நடைபெறவுள்ள டி10 தொடரில் பல முன்னணி அணிகளின் நட்சத்திர வீரர்கள் களமிறங்கவுள்ளனர். அந்த வரிசையில் இந்திய […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

“கல்கி ஆசிரமத்தில் ரைடு” ரூ33 கோடியா…?? பக்தர்கள் ஷாக்…!!

தன்னைத்தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட கல்கி விஜயகுமார், ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 33 கோடி ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதய பாளையத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமாக அரண்மனை போன்று பிரம்மாண்ட ஆசிரமம் உள்ளது. எல்ஐசி முகவராக இருந்த விஜயகுமார் என்ற கல்கி பகவானும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்திவருகின்றனர்.அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனா். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ஐந்தாயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ருசியா சாப்பிடலாம்”… ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் அனுமதி..!!

 ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு மற்றும் மேற்கத்திய கழிவறை உள்ளிட்ட வசதிகளை அளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிறையில் வைத்தே விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தது. மேலும், ப. சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள 14 நாட்கள் அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 500 நோட்டில் 121 % போலி ….. ரூ 2000 நோட்டில் 21.9 % போலி …… விவாதித்த நாடாளுமன்றக் குழு …!!

போலி ரூபாய் நோட்டுகள் பற்றியும் , அதை கட்டுப்படுத்துவதற்கான முறைகள் பற்றியும் நாடாளுமன்றக் குழு விதித்துள்ளது. போலி ரூபாய் நோட்டுகளால் நிகழும் பிரச்னைகள் குறித்தும், உச்சபட்ச பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி எவ்வாறு இந்தப் போலி நோட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பிரதி எடுக்கின்றன என்பது குறித்தும் நாடாளுமன்றக் குழு ஒன்று விவாதித்துள்ளது.அதிக மதிப்புள்ள இந்திய ரூபாயின் போலி நோட்டுகள் பரிமாற்றத்தைத் தடுக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது பற்றி நாடாளுமன்றக் குழு ஒன்று, 16-10-2019 அன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”மம்தா பானர்ஜி எனக்கு அக்கா” தாதா கங்குலி அதிரடி …!!

பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு எதைக் குறிக்கிறது? முதன்முறையாக நான் பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு நேரில் அமித்ஷா அவர்களை சந்தித்தேன். இது முற்றிலும் மரியாதை நிமித்தமானது. எதிர்காலத்தில் பிசிசிஐ-ல் இருந்து அரசியலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா? (ஒரு சின்ன புன்னகையுடன்) அரசியல் எங்கு தான் இல்லை? இந்தியாவில் மிகவும் முக்கியம் அது! நம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#HBDAnilKumble : ஆஸியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அனில் கும்ப்ளே…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், பயிற்சியாளரான அனில் கும்ப்ளே நேற்று  தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் மிரட்டியது கங்குலி என்றால், அதே ஆஸ்திரேலியாவை இந்தியாவை பார்த்து பயப்பட வைத்தவர், அனில் கும்ப்ளே. சாந்தமாக இருந்த அவரும் அந்தத் தொடரின் போது ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு சென்றார்.அனில் கும்ப்ளே என்ற பெயரை 90ஸ் கிட்ஸ்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தாடை உடைந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 14 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”சேட்டை செய்யும் ஹர்பஜன்” ஜான்டி ரோட்ஸ் அதிரடி பதில் …..!!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கோரிக்கைக்கு, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் சரியாக பதிலளித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் விளையாடுவது மட்டுமின்றி அவ்வப்போது சமூகவலைதளங்களிலும் வார்த்தைகளால் விளையாடுகின்றனர். அது மட்டுமல்லாது சக வீரரின் பதிவுகளுக்கு கேலியான பதில்களை பதிவிட்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் மாறுகின்றனர்.அந்த வகையில் ஃபீல்டிங் ஜாம்பவானான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”அனில் கும்ளே_க்கு வாழ்த்துக்கள்” சேவாக்கின் சேட்டைய பாருங்க….!!

முன்னாள் சக கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேயின் பிறந்த நாளுக்கு வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான அனில் கும்ளே நேற்று  தன்னுடைய 49ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரபலங்களும் ரசிகர்களும் ட்வீட் செய்து வருகின்றனர்.அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அனில் கும்ளேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்தியாவின் பெரிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

11 ஆண்டுக்கு முன்….. ”மொஹாலியில் தீபாவளி”….. சச்சினை நினைவு கூறும் BCCI ..!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாராவின் சாதனையை இந்திய ஜாம்பவான் சச்சின் முறியடித்து நேற்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2008ஆம் ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது.   இப்போட்டியில் சச்சின் 15 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நானும் மனுஷன்தாங்க”… எனக்கும் கோபம் வரும் – மனம் திறந்த தோனி …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனக்கு ஏற்படும் கோபம் குறித்து மனம் திறந்துள்ளார். கிரிக்கெட் என்றாலே பரபரப்பான ஆட்டங்கள், நெயில் பைட் நிமிடங்கள் என பல்வேறு தருணங்கள் இருப்பது எதார்த்தமான ஒன்று தான். அதிலும் அணியை வழிநடத்தும் கேப்டன்கள் இதுபோன்ற சமயங்களில் தவறுகள் நேரும்போது, பிறர் மீது கோபத்தை வெளிப்படுத்துவதுண்டு. உதாரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்றோர் மிகவும் உணர்ச்சிகரமிக்க கேப்டன்களாக வலம் வந்தனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட்டில் அறிமுகமாகும் மேகா ஆகாஷ் ….!!

நடிகை மேகா ஆகாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘சாட்டிலைட் ஷங்கர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், நேற்று அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகா ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். ‘சாட்டிலைட் சங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சூரஜ் பன்சோலிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 18…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 18 கிரிகோரியன் ஆண்டு : 291_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 292_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 74 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். 1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. 1016 – அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். 1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். 1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. 1565 – சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெறித்தனமான ”கேம் பிரியர்களுக்கு” களமிறங்கியுள்ள Nubia Red Magic 3s…!!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது அடுத்த கேம்மிங் ஸ்மார்ட்போனாக Nubia Red Magic 3s என்ற புதிய மாடலை இன்று வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. அவர்களை திருப்திபடுத்தும் வகையில் புதுப்புது கேம்களும் வந்தவண்ணம் உள்ளன.வேகமாக வளரும் இந்த மார்கெட்டை பிடிக்க கேமர்களுக்கென பிரத்யேகமாகவும் மொபைல்களும் வெளியாகிவருகின்றன. அதன்படி தற்போது சீனாவைச் சேர்ந்த நுபியா நிறுவனம் புதிதாக Nubia Red Magic 3s என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பரபரப்பு : பிளிப்கார்ட், அமேசான் மீது விசாரணை ….!!

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- தள்ளுபடி, விலைக் குறைப்பு என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் பொருட்களை விற்பதாக புகார்கள் வந்துள்ளன. இதில் சில விதிமீறல்களும் நடந்துள்ளதாக அந்த புகார்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுபோன்ற சலுகைகளை வழங்க அவர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது […]

Categories

Tech |