காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பாஜக செல்ல வேண்டுமென்றால் தாராளமாக செல்லுங்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடியை பாராட்டினர். இதனால கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை இருவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இவர்கள் இருவரின் கருத்து பல்வேறு மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது , காங்கிரசிலிருந்து […]
Tag: India
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கின்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேஷமாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வர கூடாது என்று மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 9_ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் […]
பீகாரில் பாலியல் தொல்லையை தடுத்த உறவினர்கள் மீது ஒரு கொடூர கும்பல் ஆசிட் வீசி தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் கும்பல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதனையறிந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கும்பலை தட்டிக்கேட்டு தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் , மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் […]
ப.சிதம்பரத்துக்கு 3-ஆவது முறையாக கைது தடை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கான முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களாக அபிஷேக் மனு சிங்வி , கபில் சிபில் வாதங்களை முன்வைத்த நிலையில் மதியம் 2 மணியிலிருந்து அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். அப்போது இந்த வழக்கு என்பது பழிவாங்கும் […]
புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வந்த இருவரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர். ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஹதீர் கோலி மற்றும் மன்சூர் அகமது கோலி ஆகியோர் டிரால் (Tral) பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 20- ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் லாச்சி டாப் பெஹாக் காட்டில் (Lachi Top Behak forest) இருவரையும் போலீசார் சடலமாக மீட்டனர். பின்னர் இவர்களது […]
ப.சிதம்பரம் அறிவாளி மற்றும் சாதுரியம் மிக்கவர் என்பதால் இது போன்ற சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட முடிந்தது என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் கைது செய்ய கூடாது என்ற முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததில் அமலாக்கத் துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்த போது , சட்டவிரோத பண […]
E சிகரெட் விற்றால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கும் வரைவு அவசரச் சட்டம் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புகையிலை சிகரெட்டுக்கு மாற்றாக சில நாடுகளில் E சிகரெட் என்று கூறப்படும் மின்னணு சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றனர். இதுவும் உடல் நலத்திற்கு கேடு என்பதால் இதனை தடை செய்ய ஒரு வரைவு அவசரச் சட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதன்படி E சிகரெட் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், வினியோகம் மற்றும் விற்க செய்யவும் தடை […]
காஷ்மீர் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. இதில் பாகிஸ்தானோ அல்லது வேறுநாடுகளோ உடன்பட இடமில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி […]
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியாக முற்றிலும் பறக்க தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370- ஐ மத்திய அரசு நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த பிரச்சனையை ஐநா சபைக்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு அளித்த நிலையில் மற்ற நாடுகள் கைவிட்டன. இந்நிலையில் இந்தியா […]
காஷ்மீரில் ஊடகத்திற்கு அனுமதி வழங்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் […]
அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பி அனுமதி பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்என்டி நிறுவனத்துடன் அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவு ஓட்டுவதற்கு சுமார் 1000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்என்டி நிறுவனங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவில் இருந்து […]
ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்முவில் சிறப்பு சட்டப்பிரிவு 370_ஐ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தற்போது அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்திருக்கிறார்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் பொதுமக்களுக்கு அங்கு சரிவர எந்தவித […]
ஜம்மு காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீத்தாராம் யெச்சுரி-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அதே […]
சந்திராயன்-2 விண்கலம் நிலவு வட்டப்பாதையில் மூன்றாவது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது. கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2,650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 ,375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 28 கிரிகோரியன் ஆண்டு : 240_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 241_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 125 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான். 632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது. 1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர். 1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: […]
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் பும்ராவைப் பாராட்டி புகழ்ந்துள்ளார் . இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டானது ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பும்ராஒரு விக்கெட்டையும் , 2-வது இன்னிங்சில் 8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இந்நிலையில் , அவரது பந்து வீச்சை கண்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் அசந்து போனார்கள் . இதில் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் […]
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரானது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த , புதிய க்விட் கார் பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , இந்த புதிய […]
உத்தர பிரதேசத்தில் புது ஆடை வாங்கி கொண்டு போகாததால் மனைவியிடம் சிறையில் இருக்கும் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது கணவனை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வரும்படி கூறியுள்ளார். ஆனால் இவர் புது ஆடை வாங்கி கொண்டு செல்லவில்லை. இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு அவர் முத்தலாக் கூறி […]
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனானது ஏற்கனவே அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த , கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. மேலும் , 13 எம்.பி., 2 எம்.பி. பிரைமரி கேமரா, மற்றும் 8 எம்.பி. […]
கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் போது பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்று பாஜக எம்.எல்.ஏ. திலிப் குமார் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின்பால் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது , கடவுள் கிருஷ்ணர் ஆடிக்கொண்டு இருக்கும் போது புல்லாங்குழல் ஊதுவார். அப்போது அவர் ஊதியதை கேட்டால் பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்றும் , இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்து அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாஜகவினர் இது […]
பாஜக மீது எதிர் கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டுள்ளதாக போபால் MP கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் பாஜகவின் முக்கிய , மூத்த தலைவர்கள் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர் , சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜெட்லி ஆகிய முக்கிய தலைவர்கள் இறந்துள்ளனர்.பாஜகவின் அடுத்தடுத்து மரணங்கள் குறித்து போபால் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர் கூறியது சர்சையை ஏற்படுத்தியது. அதில், பாஜகவின் […]
கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் […]
நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். 1973ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சன் சௌத்ரி 1974 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பிஜேபி ஆக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி அதிகாரி என்ற சாதனையை படைத்தார். தனது பதவியிலிருந்து 2007ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரியானா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் […]
சந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்க இருப்பது மிக பெரிய சாதனை என்று நாசா_வின் முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டிள்ளார். கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பள்ளங்கள் […]
டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் […]
ப.சிதம்பரம் குறித்து பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவரின் குடும்பத்தினர் அறிக்கை விடுத்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் வழக்கு நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் ப.சிதம்பரம் வழக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அவரின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் , […]
ஐ.என்.எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நாளை நடைபெறுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் கபில் சிபில் , அபிஷேக் மனு சிங்வி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. எங்களின் தரப்பு வாதங்களை […]
வங்க தேச எல்லையில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததன் காரணமாகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் நோக்கிலும் கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ந்து இந்திய உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் வங்கதேச எல்லையில் இருந்து 26 பேர் மேற்கு […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓன்று சரக்கு ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]
விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர் ரவீந்திர செல்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக செல்வா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது நியமனத்திற்கு இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையின்போது ரவீந்திர செல்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தில் குறிப்பிடப்படபட்டிருப்பதை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் கொழும்புவில் […]
பொருளாதார சீரழிவை போக்க இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பயனற்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணமாக ஆட்டோ மொபைல் வீழ்ச்சியை பார்க்க முடியும்.இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக […]
மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி கடன் கொடுப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன.மேலும் பல்வேறு தொழில்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் பல்வேறு விமர்சனம் எழுந்தது. இதையடுத்து கடந்த 23_ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற […]
ப.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது. இந்தநிலையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கேட்டு ஒருபக்கம் வாதம் நடந்தாலும் இன்னொரு பக்கம் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் குழு சிபிஐ சிதம்பரத்தை கைது செய்தது சட்டத்துக்கு […]
அருண்ஜெட்லி மறைவில் கலந்து கொள்ள முடியாததால் பிரதமர் மோடி அருண் ஜெட்லி வீட்டிற்கு சென்று குடும்பத்தருக்கு ஆறுதல் கூறினார். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய […]
தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவியலில் எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை. இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது தொடர்பாக […]
பாஜக மீது எதிர் கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டுள்ளதாக போபால் MP பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் பாஜகவின் முக்கிய , மூத்த தலைவர்கள் மரணடைந்துள்ளனர். பாஜகவினரின் இந்த மரணம் நாடு முழுவதும் உள்ள அவர்களின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர் , சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜெட்லி ஆகிய முக்கிய தலைவர்கள் இறந்துள்ளனர். பாஜகவின் அடுத்தடுத்து மரணங்கள் ஏற்படுவதால் போபால் […]
அருண் ஜெட்லி இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.பி பாபுல் சுப்ரியோ மற்றும் திஜாரவாலா உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 27…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 27 கிரிகோரியன் ஆண்டு : 239_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 240_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 126 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 410 – விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது. 1172 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை. 1593 – பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி […]
ஹோன்டா நிறுவனம் புதியதாக ஹோன்டா சி.பி.150எம் என்ற மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . ஹோன்டா நிறுவனம் தற்போது சர்வதேச ஜப்பானிய மோட்டார் சைக்கிளான யு.ஜே.எம் அடிப்படையில் ஹோன்டா சி.பி.150எம் என்ற அதிநவீன மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . இந்த ஹோன்டா சி.பி.150எம் மோட்டார் சைக்கிளானது யமஹா நிறுவனத்தின் எம்.டி 15 டிரேசர் மாடலுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் , சி.பி.150எம் என்ற பெயரில் தாய்லாந்தில் இந்த மோட்டார் சைக்கிள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இது சி.பி. 150 ஆர். ஸ்ட்ரீட்ஸ்டெர் மாடலை […]
2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றன. ஆனாலும் சாலை விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு சமயங்களில் நிகழும் சாலை விபத்துக்களில் அதிக பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஒரு நாளுக்கு 405 பேர் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக 4,64,000 சாலை விபத்து […]
ஒடிஷா_வில் வீட்டுக்கு வந்த பார்சலில் பாம்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் ஒடிசாவின் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் வேலை செய்கின்றார். இவருக்கு அண்மையில் ஒரு பார்சல் வந்துள்ளது. ஆந்திராவின் குண்டூரில் வந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் என்று எண்ணிய முத்துக்குமார் அதை திறந்து பார்த்தார். அப்போது பார்சலில் இருந்து விஷம் கொண்ட ஒரு பாம்பு வெளியே தலைகாட்டியதை கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. #WATCH […]
தற்போது நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 நிலவை இரண்டாவது புகைப்படம் எடுத்திருக்கிறது. கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது.அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் […]
குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் , முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக […]
ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கபட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுத்தியது. இதில் சிபிஐ தரப்பில் மேலும் 5 நாட்கள் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க […]
ப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவலை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று கோரிய வழக்கில் இன்னும் 20 நிமிடங்களில் சிறப்புநீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க இருக்கின்றது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுத்தியது. இதில் சிபிஐ […]
காஷ்மீர் விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்ற்றுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இந்நிலையில் பிரதமர் மோடியும் , அமெரிக்க அதிபர் டிரம்ப்_பும் […]
5 நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதில் மேலும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ […]
ப.சிதம்பரத்தின் அமலாக்கத்துறை கைது தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தேவையற்றது என்று முன்ஜாமீனை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்து விட கூடாது என்று ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான […]
என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]
ப.சிதம்பரத்தின் வெளிநாட்டில் சொத்து வாங்கியதற்கான ஆதாரத்தை காட்டினாள் வழக்கை வாபஸ் பெறுகின்றோம் என்று ப.சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.அதில் , ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டுவிட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் இருக்கின்றார் , விசாரணை […]