மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய தோழி அழைத்ததாக கூறி கடந்த கடந்த மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது தோழியுடன் தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் கொண்டாட்டத்திற்கு பின் அங்கிருந்து சொந்த ஊரான அவுரங்காபாத் திரும்பினார். அப்போது […]
Tag: India
அடைக்கலம் தேடி அண்டிய நாயை உணவாக்க முயன்ற முதலை வீடியோ இணைதளத்தில் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் விஷ்வாமித்ரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வதோதரா நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் வெள்ளத்தினால் ஆற்றிலிருந்த முதலை அடித்து வரப்பட்டு ஊருக்குள் புகுந்தது.வேறு வழியின்றி குடியிருப்பு பகுதிக்குள் உலாவிய அந்த முதலை வெள்ளத்தில் மாற்றிக்கொண்டு அடைக்கலம் தேடிய நாயை கடித்து உணவாக்கிக் கொள்ள முயன்றது. ஆனால் நூலிழையில் உயிர் தப்பிய நாய் தப்பிச்செல்ல வேறு வழியின்றி முதலைக்கு அருகிலேயே நின்றுக்கொண்டிருந்தது. […]
குஜராத் மாநிலம் கோத்ராவில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்களை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்த மெக்கானிக் கடை நடத்திவரும் சித்திக் பகத் என்பவர் போலீசில் 3 பேரை ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கூறி தாக்கியதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகன் சமீர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் சல்மான் கீதெலி சோஹைல் பகத் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மோட்டார் […]
ஜம்முவில் உஷார் நிலையில் விமானப்படையும் , இராணுவமும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின விழா இன்னும் 12 நாட்களில் வரக்கூடிய நிலைகளில் இதற்காக காஷ்மீரில் வழக்கமாகவே ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஏனெனில் இந்த நேரத்தில் அதிக அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தபடுவது மிக அதிகமாக இருக்கும். எனவே அதனை முறியடிக்க ராணுவம் அதிகரிக்கப் பட்டுள்ளது. அதே இன்னும் சில மாதங்களில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் கடுமையான குளிர் நிலவும் அந்த சமயத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகளவில் இருக்கும். மேலும் ஜம்மு காஷ்மீர் […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது ராணுவத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் பாதுகாப்பு […]
மும்பைக்கு இன்றும் நாளையும் மிக கனமழை வாய்ப்புள்ளது என்று மும்பை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. மும்பைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பெய்த இந்த மழையால் அங்குள்ள தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.இதனால் மும்பைக்கு பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு மீட்பு பணியை தூரிதப்படுத்தியது. மழையின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மக்களின் இயல்பு […]
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவமே […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 03…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 03 கிரிகோரியன் ஆண்டு : 215_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 216_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 150 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது. 435 – நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார். 881 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார். 1057 – பெல்ஜியரான ஒன்பதாம் இசுடீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1492 – கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார். 1601 – நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது. 1645 – முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் சமரில் பிரெஞ்சுப் படைகள் புனித உரோமைப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி […]
இயக்குனர் கரண் ஜோகர் மும்பையில் வைத்த விருந்தில் போதைப் பொருளை கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மும்பையில் நடிகர் நடிகைகளுக்கு விருந்து வைத்தார் அதில் தீபிகா படுகோன் ரன்பீர் கபூர் ஷாகித் கபூர் அர்ஜுன் கபூர் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், தீபிகா படுகோன் கணவரான ரன்வீர் சிங் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றதால் விருந்தில் கலந்து கொள்ளவில்லை . இந்த விருந்தில் கலந்து கொண்ட […]
அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்புப்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை […]
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உபா சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. மத்திய அரசு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனையை வலுப்படுத்த சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்தது. இதனையடுத்து இந்த உபா சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் உபா சட்டத் திருத்த […]
அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழுவால் தீர்வுகாண முடியவில்லை என்று உச்சநீதிமன்றம் மத்தியஸ்தக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் […]
உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டு பின்னடைவை சந்தித்துள்ளது . நாட்டின ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்திருப்பதால் பொருளாதார வலிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. 2018ம் ஆண்டு கணக்கீட்டின்படி உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் 20.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வழக்கம்போல் 2 முதல் 5 வரையிலான இடங்களில் இருக்கின்றனர். 2017 […]
எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று பிரச்சாரத்தில் OPS உறுதியாக கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணி […]
அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் தாக்கல் செய்தநிலையில் அதன் மீதானம் விசாரணை இன்று நடைபெறுகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை […]
இந்தியா-பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா வரைபடத்தின் மேல் முனையில் இருக்கும் மாநிலம் ஜம்மு காஷ்மீர் . இதனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகின்றது. இரண்டு நாடுகளுமே காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வை நாடுகின்றன. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்ப்_பை சந்தித்தார். பின்னர் அதிபர் டிரம்ப் காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். […]
ஜம்முவில் பயங்கவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புபடை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜம்முவில் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் , ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து சண்டை ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. கடந்த ஜூலை 31_ஆம் தேதி அங்குள்ள கன்சல்வான் கிராமத்தில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு படையினரால் 2 பாயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்திலுள்ள பந்தோஷன் கிராமத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் மோதல் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 02…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 02 கிரிகோரியன் ஆண்டு : 214_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 215_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 151 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 338 – பண்டைய மக்கெடோனிய இராணுவம் இரண்டாம் பிலிப்பு தலைமையில் ஏதன்சு, தீபசு படைகளை கெரோனியா சமரில் தோற்கடித்து, மக்கெடோனிய ஆதிக்க அரசியலை கிரேக்கத்தில் அது நிலைநிறுத்தியது. கிமு 216 – கார்த்தீனிய இராணுவம் ஹன்னிபால் தலைமையில் கனே சமரில் உரோமை இராணுவத்தை வென்றது. 1274 – முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து திரும்பி வந்தார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1610 – வடமேற்குப் பெருவழியைக் கண்டுபிடிக்கும் தனது கடற் பயணத்தின் […]
உத்திர பிரதேச கன்வர் யாத்திரை பக்தர்கள் மது அருந்துவதாக வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் உட்பட அதை சுற்றியுள்ள மாநிலத்தை சேர்ந்த கன்வாரியாஸ் என்று அழைக்கப்படும் சிவ பக்தர்கள் கன்வர் யாத்ரா என்ற பெயரில் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங் கோவிலுக்கு யாத்திரை செல்வது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் இந்த புனித யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் சிலர் மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கங்கை ஆற்றின் கரையின் ஓரத்தில் பக்தரான இளைஞர்கள் […]
ஹூவாய் நிறுவனம் ஹுவாய் Y9 பிரைம் 2019 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் தனது Y9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 NM பிராசஸர், 4 GB ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 MP. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 MP […]
தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருவதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கான மசோதா அண்மையில் மக்களவையில் வெளியேறியது. இதனை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை […]
காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரஜோரி மாவட்டத்தில் டெல்டார், பியூக்கிய,சுண்டர்பணி, குரு செக்டார் உள்ளிட்ட இடங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரரான நாயக் கிஷன் லால் […]
இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் உன்னாவ் பிரச்சனையை ஆரம்பம் முதல் சிபிஐ விசாரணை வரை முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற நிகழ்வுகள் திரைப்பட காட்சிகளுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக நடந்தது. குறிப்பாக பலாத்காரம், மிரட்டல், அடுத்தடுத்து கொலைகள், விபத்து, அரசியல் தலையீடு என சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் […]
மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது, என்னை நம்புங்கள் பொருளாதரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவையில் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அசுரத்தனமான வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை […]
கேரளாவில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் 15 லட்சம் என்ற வதந்தி பரவியதால் 1500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். வாட்ஸ் அப் உலக மக்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலியாகும். இதில் சில சமயம் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. இதனால் சில அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கேரளாவின் மூணாறு பகுதியில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாயை தவணை முறையில் தர உள்ளதாக போலி தகவல் ஒன்று கடந்த சில […]
குஜராத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் முதலைகள் தெருவுக்குள் அடித்து வரபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள வதோதராவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதி வெள்ளநீரால் மிதக்கிறது. மழையால் ஏற்பட்டு முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை மழை குறைவால் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்ற சூழலில் அங்குள்ள மக்களுக்கு அடுத்த பிரச்சனை உருவாகிள்ளது.கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள விஷ்வாமித்திரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. […]
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்படட 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 […]
மாலத்தீவு அதிபர் கொலை முயற்சி வழக்கிற்கு அஞ்சி மாலத்தீவில் இருந்து தப்பிய முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடி அருகே பிடிபட்டுள்ளார். தூத்துக்குடி துறைமுகம் அருகே சிறிய வகை கப்பல் ஒன்று சந்தகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மத்திய மாநில உளவுத் துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின் படகை சோதனையிட்ட அதிகாரிகள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் 9 பேர் […]
சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர் என்று ஒடிஷா மாநில பா.ஜ.க. MLA பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு விதங்களில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. முஸ்லீம் மக்களை ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி துன்புறுத்துவது என்று பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. மேலும் மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது. […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரை இழுக்காதீர்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]
தபால் துறை பேமெண்ட் வங்கியில் சிறுகடன் பெற நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிராமப்புற மக்களும் வங்கிச் சேவைகளைப் பெறும் வகையில் இந்திய தபால் துறையில் பேமெண்ட் வங்கி சேவையானது தொடங்கப்பட்டது. மேலும் தபால் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது india post பேமெண்ட் வங்கியை சிறு கடன்கள் வழங்கும் வங்கியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது. அதன் படி இந்தியா போஸ்ட் […]
அமேசான் நிறுவனம் தனது ஃபிரீடம் சேல் விற்பனையை விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் தனது ஃபிரீடம் சேல் விற்பனையை ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனைக்காக எஸ்பிஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனாளர்கள் அனைவரும் 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு இந்த ஃபிரீடம் சேல் துவங்கவுள்ளது. மொபைல் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 01…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 01 கிரிகோரியன் ஆண்டு : 213_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 214_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 152 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 30 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். 527 – முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1498 – கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார். 1571 – உதுமானியப் பேரரசு சைப்பிரசைக் கைப்பற்றியது. 1664 – உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன. 1714 – அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் […]
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கால் டாக்சி நிறுவனங்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது . இந்திய நாடானது பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றனர் ஆகையால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்தது. அதில் , நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி , சுவாய் […]
ஜம்மு காஷ்மீரில் மண்சரிவில் இரவெல்லாம் சிக்கிக் கிடந்த இளைஞரை பாதுகாப்பு படையினர் மீட்டனர் . ஜம்மு காஷ்மீரில் ரம்பான் மாவட்டம் லூட்பால் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் நேற்று இரவு மேகத் சாலை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையினால் சாலையை ஒட்டி இருந்த மலையிலிருந்து மண்ணும் பாறையும் சரிந்து விழுந்தது. இதற்குள் பிரதீப் குமார் சிக்கிக்கொண்டார் . பின் இரவு முழுவதும் மண்ணுக்குள் சிக்கித் தவித்தார் பிரதீப் குமார். இதையடுத்து , […]
தெலுங்கானாவின் துணை சபாநாயகர் சிறுவனை பாராட்டும் விதமாக வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . தெலுங்கானாவில் செகந்திராபாத் இல் நடைபெற்ற கோனலு எனும் திருவிழா கொண்டாட்டத்தின்போது டிரம்ஸ் கருவியை வாசித்துக் கொண்டிருந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் கைதட்டி பாராட்டி கொண்டிருந்தனர். பின்னர் , தெலுங்கானாவின் துணை சபாநாயகர் பத்மராவ்கவ் அந்த சிறுவனை பாராட்டும் வகையில் அவனது வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்தார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி […]
இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் உணவை நான் கேன்சல் செய்கிறேன் என்று ஒருவர் கூறியதற்கு சொமாட்டோ உணவுக்கு மதம் எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆனால் ஆர்டர் செய்த உணவை வழங்கும் போது அதனை கேன்சல் செய்துவிட்டார். ஏன் வேண்டாம் என்ற காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதாவது, இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 150 ரக மாடல் மற்றும் டாமினர் 400 பைக்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 150 ரக மாடலின் விலையை ரூபாய் 479 இல் தொடங்கி ரூபாய் 2,980 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை மாற்றம் தனது மூன்று வேரியண்ட்டுகளாண நியான்,சிங்கிள் டிஸ்க் ஏ.பி.எஸ் மற்றும் ட்வின் டிஸ்க் ஏ.பி.எஸ்-களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதேபோல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் […]
ரிலையன்ஸின் நிறுவனம் தனது புதிய ஜியோஜிகாஃபைபரின் கட்டணம் மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளது. Reliance இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோஜிகாஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியது . ஜியோஜிகாஃபைபர் சேவையின் கீழ் தொலைகாட்சி சேனல்கள்,நேரலை , ரிலையன்ஸ் ஜியோ அதிவேக பிராட்பேண்ட் சேவை, மற்றும் தொலைபேசி இணைப்பு போன்றவை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2019-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறு இருக்கிறது. Telecom சந்தையை தொடர்ந்து Reliance ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் (Broadband) சந்தையில் கால்பதிக்க இருக்கின்றது. பிராட்பேண்ட் சேவையுடன் கூடிய செட்-டாப் பாக்ஸ் வாய்ஸ் கண்ட்ரோல், 4K ரெசல்யூஷன் […]
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை எப்போதுமில்லாமல் அதிகமாகி உள்ளதாக வெளியான தகவலை அடுத்து போக்குவரத்து துறை சார்ந்த பல்வேறு சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற கட்டாய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் பொதுமக்கள் இதனை பின்பற்றவில்லை. இதையடுத்து அரசு சார்பிலும், போக்குவரத்து […]
சன்னி லியோனுடன் பேச வேண்டுமென்று இரண்டு நாட்களில் 500க்கும் மேற்பட்ட தவறான அழைப்பு வந்துள்ளதாக டெல்லி வாலிபர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் என்ற 26 வயதான வாலிபர் சிறிய வணிகத்தை நடத்திக் கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மயூரா என்க்லேவ் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு ஓய்வு கிடைக்காத அளவுக்கு என்னுடைய மொபைல் எண்ணுக்கு தேவையற்ற அழைப்புகள் வருகின்றது.கடந்த 2 நாட்களில் மட்டும் […]
கடந்த 14-ம் தேதி ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு கடந்த 13-ம் தேதி இந்தியா முழுவதும் இனி வரும் தபால் துறை தேர்வுகளுக்கான கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் இருக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் 14-ஆம் தேதி நாடு முழுவதும் தபால் துறையில் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க பிரியங்கா காந்தி சரியான நபர் என்று தமிழக காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]
ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அரசு பரிசோதித்துப் பார்க்க தவறியதால் வரி வருவாய் குறைந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் தலைமைத் தணிக்கையாளர் மகரிஷியின் தன்னுடைய முதல் சிஏஜி அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு அம்சங்களை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் ரசிது சரி பார்க்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அமுல்படுத்தப்படவில்லை. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பான படிவங்கள் தாக்கல் செய்யப்படுவது முழுமையாக இல்லை .அது மாதம் தோறும் குறைந்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அந்த […]
தமிழகத்தில் நுழைந்து கொலை செய்து கொள்ளையடித்த பவாரியா கும்பலை ஒழித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் சங்காராம் ஜாங்கிட். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜாங்கிட் முதுகலை பொருளாதாரம் படித்தார். பின்னர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அதன்பின் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 1985 ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ் பதவி பெற்றார். […]
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தகுதி நீக்கம் […]
இந்திய கிரிக்கெட் வீரர்களை சரியாக கையாள தெரிந்தவர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளரில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் விமர்சனம் எழுந்தது. மேலும் ரவிசாஸ்திரி தன்னிசையாக முடிவுகளை எடுப்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் காலக்கெடு முடிந்த […]
காணாமல் போனதாக தேடப்பட்ட வி.ஜி. சித்தார்த்தின் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காஃபி டே நிறுவனருமான விஜி சித்தார்த் காணாமல் போயுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக சிலர் தெரிவித்தனர்.மேலும் விஜி சித்தார்த்தை தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தேடும் பணியை மேற்கொண்டனர். மேலும் நேற்று விஜி சித்தார்த் கடைசியாக நிறுவனத்துக்கு எழுதிய கடிதம் சிக்கியது. இதில் நான் யாரையும் […]
வரலாற்றில் இன்று ஜூலை 31…!!
இன்றைய தினம் : 2019 ஜூலை 31 கிரிகோரியன் ஆண்டு : 212_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 213_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 153 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் அடுத்தநாள் தற்கொலை செய்து கொண்டான். 781 – பூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது. 1009 – நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1423 – நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது. […]
தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு நடத்தும் பணியிடங்களுக்கு தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 23.77 லட்சம் பேர் எழுதினார். அதில் 3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளமான https://ctet.nic.in -ல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பதிவு என்னை குறிப்பிட்டு தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.