Categories
தேசிய செய்திகள்

ஹோலி கொண்டாடிய பாஜக MLA மீது துப்பாக்கிசூடு…..!!

ஹோலி பண்டிகையின் போது பாஜக MLA மீது துப்பாக்கிசூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக , சிறப்பாக கொண்டாடப்படும் . இன்று அதே போல மக்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அதே போல உத்தரப் பிரதேச மாநிலத்தின் நேபாள எல்லை உள்ளது லக்கிம்பூர் கேரி தொகுதி மக்கள் கலர் பொடியை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதில் அந்த தொகுதியை சேர்ந்த பிஜேபி  சட்டமன்ற உறுப்பினர் யோகேஷ் வர்மா கலந்துகொண்டார்.   […]

Categories
சினிமா

எந்த கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது சல்மான்கான் ..

எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு  கிடையாது என்றும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் சல்மான் கான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. மக்களவைத் தேர்தல் ஆனது  நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிக்கையாக வெளியாகின நாடு முழுவதும் தேர்தல் தேர்தல் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றனர் அனைத்து கட்சிகளும் பிரச்சார […]

Categories
தேசிய செய்திகள்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கு – சாமியார் உட்பட 4 பேர் விடுதலை…!!

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4-பேரை விடுதலை செய்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் அருகே கடந்த 2007ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயிலில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 68-பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதல்  காரணமான 4-பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பஞ்ச்குலாவில் அமைந்துள்ள என்.ஐ.ஏ நீதி மன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

13,000 கோடி மோசடி செய்த நிரவ் மோடி லண்டனில் கைது…!!

இந்தியாவில் பண மோசடி செய்து விட்டு வெளிநாடான  பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில்  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்  பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி. இவருக்கு வயது 48. நிரவ் மோடியும் அவரின்  நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்துவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பி சென்று  விட்டனர். இந்த மோசடி  தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர்கள் […]

Categories
அரசியல்

பெரும்பாண்மை வாக்கெடுப்பில் வெற்றி…… ஆட்சியை தொடர்கிறது பாஜக…!!

கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி .  கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு   உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி  கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக  பிரமோத் சாவந்த் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி மற்றும் கோவா பார்வேர்ட் கட்சி ஆதரவுடன் முதல்வராக தேர்வானார். மேலும் ஆதரவு தெரிவித்த கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” வழிபட்டு தளங்களில் தேர்தல் பரப்புரை ” தேர்தல் ஆணையம் வேண்டுகோள்…!!

வழிபட்டு தளங்களை தேர்தல் பரப்புரை செய்ய பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .இந்நிலையில் கோவில் மற்றும் வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தக் […]

Categories
அரசியல்

” தமிழகத்தில் வீதிக்கொரு கட்சி ” சில மாதங்களில் 15 கட்சிகள் பதிவு…!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 15 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.   வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு என்ற பாடல் வரிகள் வேகமாக நிஜமாகி வருவதாகவே தெரிகிறது . இந்தியாவில் இதுவரை 2 ,293 அரசியல் கட்சிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .பொதுவாக வெளிநாடுகளில் குறைந்தபட்சமாக இரண்டு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு கட்சிகள் இருக்கும் . இதனால் மக்கள் குழப்பம் இன்றி வாக்களிப்பது […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு உறுதுணையாக நிற்கும் சீனா..!!

புல்வாமா தாக்குதல் காரணமாக உலக நாடுகள்  கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சீனா, பாகிஸ்தானுக்கு என்றும் உறுதுணையாக  இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது.  சீனநாட்டின்  துணை அதிபர் வாங் குவிசானுடன் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இவர்கள் இருவரும் சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது    காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில்  இந்த பழைய கொள்கையை இந்தியா மாற்றிக் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 550 கோடி கடன் …. கைது நடவடிக்கை….. தப்பிய அனில் அம்பானி ….!!

எரிக்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 550 கோடி கொடுக்க வேண்டிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார் அனில் அம்பானி. ஸ்வீடன் நாட்டிலுள்ள எரிக்ஸன் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளை அளிக்க கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ததில் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டி இருந்தது . ரூ.45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனம் கடனில் இருப்பதால்  ரூ.550 கோடி பெற்று கொள்ள எரிக்ஸன் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கோவா மாநில புதிய முதல்வர்…… இன்று இரவு 11 மணிக்கு தேர்வு……!!

கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று இரவு 11 மணிக்கு பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக […]

Categories
பல்சுவை

“2019-ல் பாமாயில் எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும்”- வல்லுநர்கள் கணிப்பு..!!

பாமாயில் எண்ணெய் இறக்குமதி முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா பாமாயில் எண்ணெயை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. மேலும் அர்ஜென்டினா பிரேசில் நாடுகளிடமிருந்து சோயா எண்ணெயையும், உக்ரைன் நாடுகளிடமிருந்து   சூரியகாந்தி எண்ணெயையும்  இந்தியா வாங்குகிறது. தற்போது பாமாயில் எண்ணெயின் விலை குறைந்திருப்பதால் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெய் ஒரு டன் 34, 292 ரூபாயாக உள்ளது எனவே 2018- 2019 சந்தைப்படுத்துதல் ஆண்டில் பாமாயில் […]

Categories
உலக செய்திகள்

“மசூத் அசார் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு” – சீன தூதர்…!!

மசூத் அசார் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. காஷ்மீர் மாவட்டம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி வாகனங்களில் சென்ற துணை ராணுவ படைகள் (CRPF)  மீது  தற்கொலை படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-இ – முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் ஜெய்ஷ்-இ […]

Categories
அரசியல்

வேட்பாளர்களின் செலவுகள் கண்காணிப்பு…… செலவின பார்வையாளர்கள் தமிழகம் வருகை…!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து தமிழகத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையிலிருந்து 26ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது . பின்னர்  27ம் தேதி வேட்பு மனுக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம்….. 1 நாள் நாடு தழுவிய துக்கம் அனுசரிப்பு……!!

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி இன்று ஒருநாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்க படுகின்றது  கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக […]

Categories
அரசியல்

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்….!!

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் காலமானார். கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புறநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக சிகிக்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் தற்போது […]

Categories
அரசியல்

பா.ஜ.க தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம்….. மோடி வாரணாசியில் போட்டியா….?

டெல்லியில் நடைபெற்ற  பா.ஜ.க வின் தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடப்போவதாக ராஜ்நாத் சிங் கூறியதாக சொல்லப்படுகிறது.  வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் 543 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் மே 11ம் தேதி தொடங்கி, மே 19ஆம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து , மே 23ஆம் தேதி வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியான  […]

Categories
தேசிய செய்திகள்

கடன் நெருக்கடியில் அனில் அம்பானி …… எரிக்சன் வழக்கில் சிறை செல்வாரா..?

எரிக்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 453 கோடி கொடுக்க வேண்டிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார் அனில் அம்பானி. ஸ்வீடன் நாட்டிலுள்ள எரிக்ஸன் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளை அளிக்க கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ததில் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டி இருந்தது . ரூ.45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனம் கடனில் இருப்பதால்  ரூ.550 கோடி பெற்று கொள்ள எரிக்ஸன் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது . […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எதிர்கட்சிகளை விட கூடுதலாக பிரசாரம்…… மோடியின் தேர்தல் யூக்தி….!!

உத்தரபிரதேசத்தில் மோடி எதிர்கட்சிகளை விட கூடுதலாக 20 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ல்  தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்கு பதிவு  உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது.   உத்தரபிரதேசத்தில் வருகின்ற ஏப்ரல் 7_ஆம் தேதி உ.பி.யின் சஹரான்பூரில் மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அகிலேஷ், மாயாவதி இணைந்து பேசும் முதல் பிரசார […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் – பஞ்சாப் எல்லையில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை…..!!

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படை போர்  விமானங்கள் அதிவேகத்தில் பறந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.  புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின்  தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக  இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து  தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில்   ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து  இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல்  நடத்த முயன்ற போது இந்திய விமானப்படை அந்நாட்டு விமானங்களை  விரட்டியடித்தது. இதையடுத்து எல்லையோரப் பகுதிகளில் இந்திய விமானப் படையும், விமானத் தாக்குதல் தடுப்பு அமைப்புகளும் தயார் […]

Categories
தேசிய செய்திகள்

கர்தார்பூர் சிறப்பு வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை….!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கர்தார்பூர் சிறப்பு வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுமுகமாக நடைபெற்றது.    சீக்கிய பக்தர்களுக்காக பஞ்சாப்பின் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து குருத்வாரா தர்பார் சாஹிப் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. சீக்கிய பக்தர்கள் விசா இன்றி சென்று வர இந்த சிறப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் புல்வாமா தீவிரவாத தாக்குதலை […]

Categories
அரசியல்

தோல்வி அடைந்தவர் ராகுல் , தோல்வியடைய போறவர் ராகுல்…… தமிழிசை விமர்சனம்….!!

தோல்வியடைந்தவர் ராகுல் தோல்வியடைய போறவர் ராகுல் என்று தமிழிசை சௌந்த ராஜன் விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் பிரசார கூட்டத்தை நாகர்கோவிலில் ராகுல்காந்தி தொடங்கி வைத்தார் . மேலும் இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ராகுல் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறுகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5-ஆவது ஒருநாள் போட்டி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா…..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.    இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான   5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற்றது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் க்வாஜாவும் களமிறங்கினர். ஆரோன் பின்ச் 27 ரன்னில் ஆட்டமிழக்க ஹேண்ட்ஸ் கோம்ப்பும், உஸ்மான் க்வாஜாவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய அணி 272 ரன் குவித்துள்ளது….!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில்  272  ரன்கள் குவித்துள்ளது.   இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான   5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில்நடைபெற்று வருகின்றது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் க்வாஜாவும் களமிறங்கினர். ஆரோன் பின்ச் 27 ரன்னில் ஆட்டமிழக்க ஹேண்ட்ஸ் கோம்ப்பும், உஸ்மான் க்வாஜாவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5-ஆவது ஒருநாள் போட்டி : மீண்டும் சதம் விளாசிய க்வாஜா!! ஆஸி 45 ஓவர் முடிவில்228/6….!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி   45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்துள்ளது.   இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான   5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் 1 : 30 மணிக்கு  தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் க்வாஜாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான […]

Categories
அரசியல்

காங்கிரஸ் ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி…. ராகுல் காந்தி உறுதி…..!!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுமென்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நாகர்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5ஆவது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம்….. 10 ஓவர் முடிவில் 52/0…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  டாஸ் வென்று பேட்டிங் தேர்வு சிறப்பாக விளையாடி வருகிறது.   இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், அடுத்த 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5ஆவது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்ற இரு அணிகள் தீவிரம்!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், அடுத்த 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும்  2 : 2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

பாலகோட் தாக்குதல் : பயங்கரவாதிகள் சடலங்கள் எரிக்கப்பட்டதாகவும், ஆற்றில் வீசப்பட்டதாகவும் தகவல்…!!

பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் நேரில் பார்த்ததாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.     ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாக பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான  காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் ஜெய்ஷ்- இ -முகமது தீவிரவாத அமைப்பினர்  முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், தாக்குதல் நடந்த அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்டை விமர்சனம் செய்வது தவறு” – ஷிகர் தவான்!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் சொதப்பியதால் நெட்டிசன்கள்  விமர்சனம் செய்து  வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக  ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார்.  இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 359 ரன்கள் குவித்து வெற்றியை பறித்தது.இந்த போட்டியில் டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக  ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரிஷப் பண்ட், […]

Categories
அரசியல் டெக்னாலஜி தேசிய செய்திகள்

தேர்தல் முறைகேடுகளை சரி செய்ய செயலி அறிமுகம்….. தேர்தல் ஆணையம் வெளியிட்டது…!!

மக்களவை தேர்தலையடுத்து பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப வாயிலாக பல்வேறு செயலி மற்றும் இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட்து முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வருகின்றது. இது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது . இந்நிலையில் வாக்காளர்கள் , வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செயலிகள் மற்றும் இணைய […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – சுனில் அரோரா…!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம், 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் இந்த முறை 8 கோடியே 40 லட்சம் புதிய  வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. டெல்லியில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் அதிகாரி சுனில் அரோரா பள்ளித் தேர்வுகள்,மத ரீதியான விழாக்களை  கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை […]

Categories
அரசியல்

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்…..கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்….. பிரேமலதா பேட்டி…!!

அதிமுக , தேமுதிக  கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமென பிரேமலதா தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம்,   இணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பொருளாளர் பிரேமலதா துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் சென்று ஆலோசனை நடத்தினர் . இதில் அதிமுகவின் கூட்டணியில் தேமுதிகவுக்கு […]

Categories
அரசியல்

70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை , 5 ஆண்டுகளில் பாஜக செய்துள்ளது…. மோடி பெருமிதம்…!!

ஆட்சி செய்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு  செய்ய முடியாததை, வெறும் 5 ஆண்டுகளில் பா.ஜ.க  அரசு செய்து சாதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , எல்லோருடனும் இணைந்து அனைவருக்கும் முன்னேற்றம் என்ற முறையில்  பிஜேபி கூட்டணி அரசு மீண்டும் உங்களின் ஆசியை நாடுகின்றது . ஆட்சி செய்த கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை, பாரதீய […]

Categories
அரசியல்

முடிவாகியது அதிமுக + தேமுதிக கூட்டணி…… கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு ….!!

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தமாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தொடர்பாக நீண்ட இழுபறி_க்கு பின்பு  அதிமுக-தேமுதிக கூட்டணி  இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி தொடர்பான இரண்டு கட்சிகளுக்கு -மிடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற இந்த தொகுதி உடன்பாட்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர். அதே போல தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் , பொருளாளர் பிரேமலதா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டர்னர் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா…… 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆ.ஸி அசத்தல் வெற்றி…!!

இந்தியா VS ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 4_ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற்று அசத்தியுள்ளது . இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மட்டும் T20 போட்டி தொடர்களை விளையாடி வருகின்றது . 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணியும் ,  3_ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்று  இந்திய அணி  2–1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.இந்நிலையில் இந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 4–வது ஒரு நாள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” 7 கட்டமாக மக்களவை தேர்தல் ” தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம்…!!

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 17_ஆவது மக்களவை தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த சந்திப்பு நடைபெற்ற பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாராளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும்” சுனில் அரோரா…!!

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 17_ஆவது மக்களவை தேர்தலின் ஆயத்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது . இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையில்  அதிகாரிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தவுடன் மக்களவையின் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலை ஓட்டியே சில மாநிலங்களின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தமிழக்த்திற்கு ஏப்ரல் 18_இல் மக்களவை மற்றும் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ….. தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!

ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா  செய்தியாளர்கள்  சந்திப்பு கூட்டம் நடத்தினர். அதில் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தார். 17_ஆவது மக்களவை_க்கு  7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென்றும் வருகின்ற ஏப்ரல் முதல் கட்ட தேர்தல் நடைபெறு மென்றும் தெரிவிக்கப்பட்ட்து. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக மக்களவை தேர்தல்….. மே 23_ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை….தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தைப்பெறுமென தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார். இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா  செய்தியாளர்கள்  சந்திப்பு கூட்டம் நடத்தினர். அதில் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தார்.17_ஆவது மக்களவை_க்கு  7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென்றும் வருகின்ற ஏப்ரல் முதல் கட்ட தேர்தல் நடைபெறு மென்றும் தெரிவிக்கப்பட்ட்து. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு 359 ரன்கள் இலக்கு….. தவான் 143, ரோஹித் 95 ரன்கள் குவிப்பு….!!

4- வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 358 ரன்களை  குவித்துள்ளது.  இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தவான் 143 ரன்களில் ஆட்டமிழந்தார்….. இந்திய அணி 40 ஓவர் முடிவில்  267/3….!!

இந்திய அணி  தற்போது 40 ஓவர் முடிவில்  267/3  ரன்களில் விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி நல்ல தொடக்கம்….10 ஓவர் முடிவில் 58/0…..!!

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.  இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.   இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது குற்றமா….. பாகிஸ்தானுக்கு புரிய வைத்த ஐ.சி.சி..!!

இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதற்கு பாகிஸ்தான் குற்றம் சுமத்திய நிலையில் ஐ.சி.சி அதற்க்கு விளக்கம் அளித்துள்ளது.   புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் (CRPF) 40 பேர் கொல்லப்பட்டனர். CRPF வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற  3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய  ராணுவத்துக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டியின் மூலம் வரும் […]

Categories
அரசியல்

விடுதலை சிறுத்தை கட்சிக்கு மோதிரம் சின்னம் இல்லை….. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிய மோதிரம் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் தமிழநாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது . தமிழகத்தை பொறுத்தவரை திமுக , அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி ஒப்பந்தம் ஏறக்குறைய முடிவாகி இறுதி செய்யப்பட்டு விட்டது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்று மாலை மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் செய்தயாளர்கள் சந்திப்பு நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகின்றது. இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது . இதில் தலைமை தேர்தல் ஆணையர் , உயரதிகாரி கலந்து கொள்கின்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில்  மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகின்றது. குறிப்பாக ஆந்திரா , […]

Categories

Tech |