ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி […]
Tag: #IndiaAgainstCAA
டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்கு வெளியே மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டார் இதில்ஒருவர் காயம் அடைந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. CAA திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் என்பதால், ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியாக சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் அதனைப் பொதுவாக வன்முறை என ரஜினி கருத்து பதிவு செய்ததற்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நடிகர் ரஜினி, ‘ தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது ‘ […]
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இப்போராட்டத்தில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே […]