Categories
தேசிய செய்திகள்

காட்டி கொடுத்தால் ரூ 5000…. உ.பியில், வன்முறையாளர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை.!

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை காவலர்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கினர். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு தழுவிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து வன்முறையாளர்கள் மீது காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதில் சிலர் காயமுற்றனர். இந்த நிலையில் அரசு பொதுச்சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல்” – ராஜேந்திர பாலாஜி..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொய்யான வதந்தியை ஏற்படுத்துவது தீவிரவாதத்தை வளர்க்கின்ற செயல் என்று பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்துக் காலங்களிலும் அதிமுக அரசு தொடர வேண்டும் என மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலிலும் […]

Categories
தேசிய செய்திகள்

‘சனா சுதந்திரமாக கருத்து தெரிவிக்க கங்குலி அனுமதிக்க வேண்டும்’ – நடிகை நக்மா..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கங்குலியின் மகள் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் 18 வயது மகள் சனா கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அவருடயை இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலானது. அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைத்து பாசிச ஆட்சிகளுக்கும், குழுக்களும், இனங்களும் தேவைப்படுகின்றன. அதன்மூலம் அரக்கத்தனத்தை […]

Categories
மாநில செய்திகள்

‘மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் மோடி’ – இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம்..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் பேசிய இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஹாஜா முகைதீன், மோடி மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குகிறார் எனக் காட்டம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் திருவல்லிக்கேணி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஹாஜா முகைதீன் கூறுகையில்; அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: கலவர பூமியான உ.பி… 6 பேர் மரணம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உத்தரப் பிரதேசத்திலுள்ள 20 மாவட்டங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி ஒ.பி. சிங் கூறுகையில், “ஐந்து உயிரிழப்புகள் இதுவரை நடந்துள்ளன. பிஜ்னோரில் இருவரும் மீரட், சம்பல், பிரோசாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். கான்பூரில் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், […]

Categories

Tech |