மத்திய அமைச்சரவை கூட்டம் , குடியரசுத்தலைவருடன் சந்திப்பு என்று இரண்டு சம்பிரதாயங்களை கடந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது. 2020 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலே பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச ரீதியாகவும் சரி , இந்தியாவிலும் சரி வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது நன்றாக அறிந்ததே. 5 சதவீதம் வளர்ச்சி என்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் குறைவானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் […]
Tag: Indianeconomy
நரேந்திர மோடி அரசில் நிதியமைச்சராக அங்கம் வகிக்கும் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்திக்கு பிறகு […]
இந்திய நிதி அமைச்சர்களில் மொரார்ஜி தேசாய் பத்து முறையும், ப. சிதம்பரம் ஒன்பது முறையும், எட்டு முறை பிரணாப் முகர்ஜியும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்து இருக்கின்றனர். இந்திய அரசின் நிதி அமைச்சகம் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் துறையாகும். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதித்துறை அமைச்சராக ஆர். கே. சண்முகம் பணியாற்றினார். தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆர். கே. சண்முகம் […]
கடல்வளம் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் வெள்ளி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், “கடல் வளம் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. […]
தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஆதித்யா பிர்லா குடும்பத்தின் சிறப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஆதித்யா பிர்லா குடும்பத்தினரின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் முதலீடு செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும் உலகிலேயே மிகச் சிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டார். எளிதாக தொழில் செய்வதற்கான சூழல் வாழ்க்கை தரம் உட்கட்டமைப்பு உற்பத்தி திறன் காப்பு உரிமைகளின் […]
உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டு பின்னடைவை சந்தித்துள்ளது . நாட்டின ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்திருப்பதால் பொருளாதார வலிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. 2018ம் ஆண்டு கணக்கீட்டின்படி உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் 20.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வழக்கம்போல் 2 முதல் 5 வரையிலான இடங்களில் இருக்கின்றனர். 2017 […]
பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில், 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா […]
நிதி ஆயோக் கூட்டத்தில், 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். […]
இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான […]