நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவை 6 மாதங்கள் இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மும்பையில் இருந்து லக்னோவுக்கு அண்மையில் இன்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் கம்ரா பல கேள்விகளை கேட்டுள்ளார். ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார். மேலும் நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா […]
Tag: #IndiGo
சென்னையில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகருக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு 172 பயணிகள், ஆறு விமான ஊழியர்கள் என 178 பேருடன் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுப்பிடித்தார். இதையடுத்து விமானம் புறப்படவில்லை. விமான பொறியாளா்கள் பழுதடைந்த இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டனா். எனினும் உடனடியாக சரிசெய்யமுடியவில்லை. இதனால் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. […]
குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, கத்தார் ஏர்வேஸுடன் ஒரு வழி குறியீட்டுப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விமானச் சேவை அளிப்பதில் முன்னணி நிறுவனமான இண்டிகோ, வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை அளித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் சர்வதேச விமான போக்குவரத்துக் கழகத்தின் (IATA) அங்கமானது இண்டிகோ ஏர்லைன்ஸ். தங்களின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்நிறுவனம் பல திட்டங்களையும், பயணிகளுக்குச் சலுகைகளையும் அளித்து வருகிறது.இதனிடையில் கத்தார் ஏர்வேஸுடன் ஒரு வழி குறியீட்டுப் பகிர்வு […]
நடிகை சோனாக்ஷி சின்ஹா, விமானப் பயணத்தின்போது தன் பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் சேதாரமடைந்ததால் அவ்விமானசேவை நிறுவனத்தை சாடி ட்விட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. பிரபல உள்ளூர் தனியார் விமானசேவை நிறுவனமான இண்டிகோ ஒன்றின் விமானத்தில் பயணித்துத் திரும்பிய பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தனது பயணத்தின்போது தன் பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் சேதாரமடைந்ததால் ட்விட்டரில் அந்நிறுவனத்தை கேலிசெய்யும் தொனியில் சாடி, காணொலி ஒன்றை பகிர்ந்தார். தன் சூட்கேஸின் இரண்டு கைப்பிடிகள் உடைந்தும், சூட்கேஸிம் ஒரு […]
மகாராஷ்டிராவில் புறப்பட தயாரான நிலையில் இருந்த விமானத்தின் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு 6E 636 என்ற எண் கொண்ட இன்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் ரன்- வேக்கு (Run- way) சென்று பறக்க தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து […]