தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசிய நாட்டில் அதிக அளவில் தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்த தங்க சுரங்கங்களில் அந்நாட்டு அரசினுடைய அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள கினண்டி கிராமத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் 20 பேர் ஈடுபட்டுள்ளனர். அந்த […]
Tag: Indonesia
கொரோனா பரிசோதனைக்காக ஒருவருக்கு பயன்படுத்திய மூக்கு குச்சிகளை கொண்டு மற்றொருவருக்கு பயன்படுத்திய மருந்து நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் மேடன் பகுதியில் kualanamu விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்திருக்க வேண்டும். இதனால் அந்த விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள அரசுக்கு சொந்தமான […]
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் பலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் ஒரு மின் ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலை சீனாவின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் சுமத்ரா தீவில் நேற்று முழுவதும் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் அப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மின் ஆலை பகுதிகளிலும் நிலச்சரிவு […]
ஜாவா தீவின் கடற்கரையில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உருவாகி 6 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தோனேசியாவில் ஜாவா தீவில் சனிக்கிழமை மதியம் சுமார் 2 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடபடவில்லை. இந்த நிலநடுக்கம் கிழக்கு ஜாவாவில் மலாங் நகரிலிருந்து தென்மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் 50 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. […]
கூகுள் மேப் மூலம் தவறுதலாக வேறு திருமண மண்டபத்திற்கு வந்த மாப்பிள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் ஒரே கிராமத்தில் இரண்டு இடத்தில் வெவ்வேறு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஒரு இடத்திற்கு வர வேண்டிய மாப்பிள்ளை மற்றொரு திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டிருந்ததால் அவர் மாப்பிள்ளையை கவனிக்கவில்லை. அங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இதுதான் மாப்பிள்ளை என நினைத்திருந்தனர். ஆனால் மாப்பிள்ளையின் நண்பர் தான் இதனை அடையாளம் […]
மது குடித்துவிட்டு சூதாட்டம் ஆடுயதற்காக 2 பேரை பொது இடத்தில் வைத்து கம்பால் அடித்து தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணம் இஸ்லாமிய சட்டத்தை விதிக்கும் முஸ்லிம் பெரும்பான்மையுடைய ஒரே மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாகாணத்தில் கடந்த திங்களன்று மது அருந்திவிட்டு 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரில் 5 பேர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மது அருந்தியது மட்டும் அல்லாமல் தகாத உறவில் ஈடுபட்டதல் […]
கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமெரு எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் இடம் தான் இதோனேசியா. இங்கு அடிக்கடி சுனாமி, நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்றவைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளதுதான். மேலும் இங்கு 130 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் உள்ள ஜாவா மாகாணத்தில் சுமார் 3676 மீட்டர் உயரமுள்ள […]
இந்தோனேசியாவில் தரமில்லாத போலி முககவசங்கள் தயாரித்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. 95 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு முகக்கவசத்தின் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்கள் பொது வெளியில் செல்லும்போது நோய் தாக்காமல் இருக்க ஒவொருவரும் முகக்கவசம் அணிந்து கொண்டுதான் செல்கின்றனர். தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் முன்பை விட அதிகமாக தேவைப்படுகிறது. இதனை […]
இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மெராபி மவுண்ட் (Mount Merapi) எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் ஆறு கிலோமீட்டர் உயரத்திற்கு சென்றது. இந்தோனேசியாவில் உயிர்ப்புடன் உள்ள நூற்றுக்கணக்கான எரிமலைகளில் ஒன்றான 2,930 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் மெராபி எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது.கடந்த செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் 6 கிமீ உயரம் சென்றது. எரிமலை வெடித்ததால், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் கரும்புகை சூழ்ந்ததுடன், வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது. எரிமலை வெடிப்பின் போது […]
இந்தோனேஷிய வனப்பகுதியில் யார் பலசாலி என்ற என்பதை நிரூபிக்க 4 கொமோடோ டிராகன்கள் கட்டிப்புரண்டு சண்டை போடும் வீடியோ வைரலாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய பல்லி இனம் என்றால் அது கொமோடோ டிராகன்கள் தான். ஆம் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் இந்த கொமோடோ பல்லி இனங்கள் இந்தோனேஷிய தீவுகளில் மட்டுமே காணப்படும் அரிய வகையான ஓன்று. இது சுமார் 10 அடி நீளமும், 80 கிலோ வரை எடையும் கொண்டது. அதேசமயம் இந்த டிராகன்களின் எச்சில், கடுமையான விஷத்தன்மை கொண்டவை. […]
இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறி காட்சியளிப்பதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது இந்தோனேசியாவின் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்ட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கு பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் அனைத்தும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மீட்புப்படையினர் பொதுமக்களை பத்திரமாக ரப்பர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். மேலும் வெளுத்து வாங்கும் வெள்ளத்தால் ஜாவா, பாலி, நுசா […]
இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் யோககர்த்தா (Yogyakarta) மாகாணத்தில் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத மாணவர்கள், ஆற்று நீரில் அடித்து […]
இந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நில நடுக்கத்தால் பலர் தங்கள் வீடுகளையும், உயிர்களையும் இழந்துள்ளனர். அதன்படி அதிகாலை 3.24 மணியளவில் வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சயூம்லாகி பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது 157 கி.மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]
இந்தோனேசியாவில் சகதியில் சிக்கிய ஒருவருக்கு மனித குரங்கு ஒன்று உதவும் மனதுடன் தனது கரங்களை நீட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக தனியார் அமைப்பு ஒன்று அந்த காட்டில் உலவும் பாம்புகளை பிடித்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்து விட்டார். இடுப்பளவு சகதி நிரம்பி இருந்த அந்த குட்டையில் அவர் சிக்கிக்கொண்டார். அப்போது […]
இந்தோனேசியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கார் நகரில் ஆற்றின் மீது புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், திடீரென பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பாலத்தின் மீது 30 பேர் வரை இருந்துள்ளனர். விபத்தின்போது சிலர் ஆற்றில் மூழ்கினர். இந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 3 பேரை காணவில்லை. சில […]
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு மாகாணம் மலுகுவில் இருக்கும் அம்பான் நகரில், நேற்று அதிகாலை திடீரென பெரும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உருவான நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6. 5 ஆக பதிவானது. இதில் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்குள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு மட்டுமில்லாமல் சில இடங்களில் பெரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மக்களின் […]
அரசு முறை பயணமாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு முறை பயணமாக வெளிநாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தற்போது இவர் இந்தோனேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்று அந்த நாடுகளின் வன உயிரியல் பூங்கா மற்றும் சரணாலயங்கள் ஆகிவற்றை பார்வையிடடுகிறார். அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு தமிழகத்தில் அந்த செயல்முறைகளை […]
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஜாவா கடலின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் போர்னியோ தீவில் புதிய தலைநகரை கட்டமைக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது. மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் ஜகார்தாவில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகிய காரணங்களால் புதிய தலைநகரை உருவாக்க அந்நாட்டு அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலகின் மிகப்பெரிய மூன்றாவது தீவான போர்னியாவில் புதிய தலைநகரை கட்டமைக்க உள்ளதாக இந்தோனேசிய அதிபர் […]
இந்தோனோஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.7_ஆக பதிவாகியுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவின் மாலுக்கு தீவுப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.3 என்று பதிவாகியது. இத்தோனோசியா என்றாலே அடிக்கடி ஏதாவது இயற்க்கை சீற்றத்துக்கு பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது . இந்தோனேசியா பூமியின் ‘நெருப்புக் கோளம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது தான் காரணம். இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள பாலி பிராந்திய பகுதியில் இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. […]
தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் இந்தோனேசிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோகோ விடோடோ_வுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தோனேசியாவில் அதிபர் பதவிக்கான காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த மாதம் 17_ஆம் தேதி அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிபர் ஜோகோ விடோடா_ வை எதிர்த்து ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஜெனரல் பிரபாவோ சுபியாந்தா வேட்பாளராக போட்டியிட்டார்.கடந்த 17_ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதையடுத்து வார கணக்கில் நீடித்து வந்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்து […]
இந்தோனேசியாவில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நாட்டில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.54 மணிக்கு தீடிரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால்சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. தீடிரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தினால் பொது மக்களுக்கோ […]