Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருந்த வாலிபர்…. கையில் பாய்ந்த தூண்டில் கொக்கி…. தீவிர சிகிச்சை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அடைக்கன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தூண்டிலில் இருந்த கொக்கி அடைக்கனின் கையில் குத்தியது. அதனை எடுக்க முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அடைக்கனை மீட்டு மூக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அடைக்கனின் கையில் சிக்கியிருந்த தூண்டில் கொக்கியை அகற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுக்குநூறாக நொறுங்கிய ஆம்னி பேருந்து…. படுகாயமடைந்த 7 பேர்…. செங்கல்பட்டில் கோர விபத்து…!!

லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? வெடித்து சிதறிய தின்னர் டப்பா…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தின்னர் டப்பா வெடித்து சிதறியதால் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டியில் இருக்கும் இந்தியன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 20 லிட்டர் எடை கொண்ட தின்னர் டப்பாவை கட்டுமான தொழிலாளர்களான மஞ்சுநாத் மற்றும் காளி ஆகிய 2 பேரும் கீழ் தளத்திற்கு இறக்கி கொண்டிருந்தனர். அப்போது தின்னர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து வெடித்து சிதறியதால் மஞ்சுநாத் மற்றும் காளி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1/2 கி.மீ தூரத்திற்கு கேட்ட பயங்கர சத்தம்…. ஆடிட்டர் உள்பட 3 பேர் படுகாயம்….. சென்னையில் பரபரப்பு…!!

கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் ஆடிட்டரான அகமது என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அதிகாலை நேரத்தில் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அகமது, அவரது மனைவி நாகமுனிஷா, சகோதரி மலிதா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்… நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சோகம்..!!

ஆந்திராவில் மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில், அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்ற பகுதியில் பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு சென்றது.. இந்தநிலையில் மாட்டின் வாய் பகுதி கொடூரமாக கிழிந்து தொங்கிய நிலையில், இரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக திரும்பி வந்தது.. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர், இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்… உணவில் வெடி வைத்து பசுவின் தாடையை அறுத்த அரக்கர்கள்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உணவில் வெடி வைத்து பசுவின் தாடை அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்திலுள்ள கின்ஜ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் அகர்வால் என்பவர் தனக்குச் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகின்றார். இவர் வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்தில் மாடுகளை மேய்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதை  வழக்கமாக வைத்துள்ளார்.. இதனிடையே ஜூன் 14ஆம் தேதி மேய்ச்சலுக்காக சென்ற பசு ஒன்று மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு காயம் இருக்கு… சிகிச்சைகொடுங்க… மருத்துவமனை வாசலில் காத்திருந்த குரங்கு… அழைத்து சென்ற ஊழியர்… வைரல் வீடியோ..!!

  கர்நாடகாவில் காயமடைந்த லாகூர் குரங்கு ஒன்று சிகிச்சை பெறுவதற்காக  மருத்துவமனைக்கு வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.   கர்நாடக மாநிலம் கன்னடா மாவட்டம் தண்டேலியில் அமைந்துள்ளது பாட்டீல் மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் நுழைவாயிலில் காயமடைந்த லங்கூர் வகையை சேர்ந்த குரங்கு ஓன்று நீண்ட நேரமாக பொறுமையாக உட்கார்ந்திருந்தது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து, மருத்துவமனை ஊழியர் ஒருவர் வந்து லங்கூரை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அங்கு, அந்த குரங்கின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சங்கத்தை வீட்டு நீக்கம்…. ஆத்திரத்தில் கொலை முயற்சி…

ஜீப் ஓட்டுநரை விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் வாடகைக்கு ஜீப் ஓட்டி வருபவர் ராஜமணி. அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரை ஜீப் ஓட்டுநர் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். இதற்கு காரணம் ராஜமணி தான் என நினைத்த மோகன் ராஜமணி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று ராஜமணியை  மோகன் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் மோகன் கஞ்சா போதையில் இருந்ததாக கூறியுள்ளனர். காவல் துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

BELT வைத்து ஆசிரியரை வெளுத்த மாணவனின் தந்தை….. தாமதமாக வந்த மாணவனை அடித்ததால்…. ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை..!!

மகனை அடித்த ஆசிரியரை தந்தை பெல்டால் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்தவர் எட்வின் ராஜ். இவர் புதுவையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருந்தபொழுது தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் எட்வின் ராஜ் அடித்துள்ளார். பின்னர் அதே மாணவன் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்ததை கண்டித்துள்ளார் எட்வின் ராஜ். இதனைத்தொடர்ந்து மாணவன் கோபம்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறியுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்…. எதிர்பாராத பிரேக்…. சரிந்த புல்லட்….. அடியில் சிக்கியவர் மரணம்

எதிர்பாராதவிதமாக பிரேக் போட்ட காரணத்தினால் புல்லட் சரிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆதம்பாக்கம் விவேகானந்தா தெருவைச் சேர்ந்த குமரவேல் என்பவர் தனது நண்பர் மகனான கார்த்திகேயனுடன் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புல்லட்டில் பயணித்துள்ளார். அப்போது வேகமாக கார் ஒன்று வந்ததைத் தொடர்ந்து கார்த்திகேயன் எதிர்பாராதவிதமாக பிரேக் போட்டுள்ளார். இதில் புல்லட் நிலைதடுமாறி கார்த்திகேயன் புல்லட்டுடன் கீழே விழ புல்லட்டின் அடியில் சிக்கி குமரவேல் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குமரவேலை மீட்டு போரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களின் உற்சாக பயணம்… எதிரே வந்த மாடு… பள்ளத்தில் கவிழ்ந்த காரு…. காயங்களுடன் மருத்துவமணையில் அனுமதி….

கார் பள்ளத்தில் கவிழ்ந்து இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் காமராஜ் மற்றும் அவரது நண்பர் இளங்கோ இருவரும் சொந்தமாக ட்ரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று திருச்சிக்கு காரில் சென்றுள்ளனர். காரை இளங்கோ ஓட்டிச் சென்றுள்ளார். திருச்சியிலிருந்து தஞ்சைக்கு இருவரும் காரில் வந்துள்ளனர். அப்போது தஞ்சை – திருச்சி சாலையில் வரும் பொழுது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய கார் அருகில் இருந்த பள்ளத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் குடிக்க பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றிய சகோதரர் – காப்பாற்றிய உறவினரும் படுகாயம்..!!

குடிப்பதற்கு பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற போது சகோதரரும் , காப்பாற்றிய உறவினரும் தீவிபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (39). இவர், திருமணம் நடைபெறாத விரக்தியில் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில், மகேஷ் திருவள்ளுவரில் வசிக்கும் தனது சகோதரி மஞ்சுளா(36) வீட்டிற்கு துக்க காரியத்துக்கு வந்துள்ளார். அங்கு குடிக்க பணம் கேட்டு, தனது சகோதரி மஞ்சுளாவிடம் தகராறு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டிக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து – தொழிலாளி காயம்

குப்பைத் தொட்டிக்குள் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி காயம் அடைந்தார். புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெருமாள் நாயுடு வீதி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டிலிருந்து பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி செல்வம் என்பவர் பிளாஸ்டிக், பேப்பர்களை சேகரித்து கடையில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை குப்பை தொட்டியிலிருந்த பேப்பர்களை எடுத்துக்கொண்டிருந்த போது, அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

1…. 2….3….. ”எல்லாமே வேஸ்ட்” நொந்து போன ராகுல் …!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி  மக்களிடம் பேசும் போது அடுத்தடுத்து மைக் வேலை செய்யாததால் அவர் நொந்து போயினார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – […]

Categories
தேசிய செய்திகள்

”வயநாட்டில் ராகுல்” வெள்ள பாதிப்பை பார்வையிடுகின்றார்…!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் […]

Categories
தூத்துக்குடி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கேரள முதல்வர் வேண்டுகோள்…. நிறைவேற்றிய தூத்துக்குடி கல்லூரி… குவியும் பாராட்டு…!!

கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை நம்பும் கேரளா ”மீண்டும் தமிழ் ட்வீட்” அசத்திய பினராய் விஜயன் ….!!

கேரளாவுக்கு உதவுங்கள் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் மீண்டும் தமிழில் ட்வீட் செய்துள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரள வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழப்பு..!!

கேரளா வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழந்ததாக அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

புதைந்து போன மக்கள்…”தோண்டி எடுக்கும் ரேடார்”… தீரா வலியில் கேரளா….!!

கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

தமிழில் 5 ட்வீட் ”உங்களை போல யாருமில்லை” அசத்திய கேரள முதல்வர் …!!

கேரளாவுக்கு உதவுங்கள் எங்களுக்கு உதவி வேண்டுமென்று கேரளா முதல்வர் அடுத்தடுத்து 5 ட்வீட் தமிழில் பதிவிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை வச்சு செய்ய போகும் மழை…. “இன்றும் ரெட் அலர்ட்” எச்சரிக்கை …!!

கேரளாவுக்கு இன்று ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எட்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , […]

Categories
தேசிய செய்திகள்

91 பேர் மரணம்… 34 பேர் காயம் …. 59 பேர் மாயம் ….. கேரளாவை புரட்டிய மழை…!!

கேரளாவை உலுக்கிய கனமழையால் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  34 பேர் காயமடைந்ததாகவும், 59 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் 11 உயிரிழப்பு , 122 பேர் காயம் …..!!

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்து , 122 பேர் காயமடைந்ததுள்ளனர். சீனாவில் உள்ள சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு 10.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இது ரிக்டர் அளவுகோளில்  6.0 ஆக பதிவானது.   பின்னர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில்  5.3 ஆக பதிவானது. தொடர்ந்து இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் உயரமான கட்டிடங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை…..!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து நடந்த  தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என IS  பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரிமாறியதாக NIA தரப்பில் சொல்லப்படுகின்றது. இதையடுத்து  கோவை  உக்கடம், […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு “IS அமைப்புடன் தொடர்பு” கோவையை சேர்ந்தவர் கைது…!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IS அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவையை சார்ந்தவர் உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து 3 ஓட்டல்கள் , 3 தேவாலயங்கல் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இலங்கை தாக்குதல் சம்பவத்தில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக உளவுத்துறை தலைவர் பதவி நீக்கம்…!!

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து 3 ஓட்டல்கள் , 3 தேவாலயங்கல் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. […]

Categories
உலக செய்திகள்

தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை….!!

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி   தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 300_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 500_க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலை நடத்தியதாக ISIS பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ மீது தாக்குதல்…!!

பழனியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை போதையில் தாக்கிய கேரள மாநில போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பழனி பாதவிநாயகர் கோயிலில்  சப்-இன்ஸ்பெக்டர் இளவரசு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட  ஒரு கும்பல் மது போதையில் மலைக்கோயில் செல்ல முயற்சித்தபோது அவர்களை தடுக்க முயன்ற இளவரசை சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது . இதில்  காயம் அடைந்த அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி…மேலும் 7 பேர் காயம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில்  பெண் ஒருவர் பலியானதோடு மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இறப்பு வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வதற்காக திருப்பூரிலிருந்து சிவகிரிக்கு காரில் 8 பேர் சென்றுகொண்டிருந்தனர் .அப்போது  கார் கிருஷ்ணன் கோவில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.  இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில்  பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும்  விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேரை அக்கம் பக்கத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மினி பஸ் கவிழ்ந்ததில் 20 பேருக்கு காயம் …

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே, மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் . ஆலங்குளதிற்கு  சென்று கொண்டிருந்த மினி பஸ் , துத்திக்குளம்  சாலை அருகே வளைவில் அதிவேகத்தில் திரும்பியபோது,  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில்   ஓட்டுனர் அருள்ராஜ், நடத்துநர் பால்ராஜ் மற்றும் 23 பயணிகள் காயமடைந்தனர். ஆலங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனைகளில், அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் .இதுக்குறித்து  ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர் .

Categories
உலக செய்திகள்

திக்..திக்..இலங்கை “மீண்டும் குண்டு வெடிப்பு” அமெரிக்கா இரண்டாவது எச்சரிக்கை …!!

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம்  தேதி  நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 250_க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த கொடூர தாக்குதலில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மீண்டும் தற்கொலை […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையே வேண்டாம்” இந்திய அரசு வேண்டுகோள்…!!

இலங்கைக்கு யாரும் செல்லவேண்டாம், கூடுமானவரை தவிருங்கள் என்று இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து  குண்டுவெடிப்பு  நிகழ்ந்தது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 300_க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியதாக IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதையடுத்து நேற்று இலங்கையின் கல்முனையில் உள்ள  வீட்டில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் […]

Categories
உலக செய்திகள்

“39 நாடுகளுக்கு விசா கட்” இலங்கை அரசு அதிரடி…..!!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று எழுந்த  சந்தேகத்தையடுத்து 39 நாடுகளுக்கான விசா சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி  நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த தேவாலயங்கள், அங்கு இருந்த ஓட்டல்கள் என அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை […]

Categories
உலக செய்திகள்

திக்..திக்..இலங்கை..! மீண்டும் குண்டு வெடிப்பா…? அமெரிக்கா எச்சரிக்கை …!!

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம்  தேதி  நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் 11 பேர் சேர்த்து 36 வெளிநாட்டினர் பலி….. அறிக்கையை வெளியிட்டது இலங்கை…!!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11_ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக இது வரை […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் சிறிசேனா தலைமையில் ஆலோசனை” அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?

இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகின்றது.   இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதலை பல்வேறு நாட்டின் தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு” நீடிக்கிறது பதற்றம் ….!!

இலங்கை தலைநகர் கொழும்புவில்  மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

“குண்டு நிரப்பப்பட்ட லாரி , வேன்” இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…..!!

கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 310 பேர்வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது .   மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…”மக்களிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை”

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் வரை உயிரிழந்ததாக தெரிகின்றது. மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது . மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு…!!

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து  வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் நேற்று  முன்தினம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில்  290-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த குண்டு வெடிப்பினால்  இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம்  மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை , ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.   இந்நிலையில் , வேதாரண்யம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது …!!

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 290 பேர் வரை உயிரிழந்ததாக தெரிகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இலங்கையின்  முக்கிய நகரம் உட்பட பல்வேறு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

“அதிகரிக்கும் உயிர் பலி” 290 பேரின் உயிரை பறித்த குண்டு வெடிப்பு ……!!

இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 290_ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. இலங்கையில் தலைநகர் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் , அதே போல  கொழும்பு புறநகரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடிபு மற்றும் உருகொடவட்டாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, அங்கே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி வெடித்தது […]

Categories
உலக செய்திகள்

8 குண்டுகள்…. 215 உயிர் பலி ….. 500 பேர் சிகிச்சை …… ஊரடங்கு உத்தரவில் இலங்கை….!!

இலங்கையில் தேவாலயங்கள்மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் எண்ணிக்கை 215ஆக உயர்ந்தது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என  குண்டு வெடித்தது. பின்னர் மாலையில் கொழும்பு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 8 பேர் கைது…. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி…!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 207_ஆக அதிகரித்துள்ளது. 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இலங்கையில் தொடர் பதற்றம் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கை தாக்குதல்” 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை…!!

இலங்கை தேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் , குடியிருப்புகள் என 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 207 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து  கடந்த 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து இலங்கை நாட்டின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு…. 3 இந்தியர்கள் உயிரிழப்பு….!!

இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற  குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 185_க்கும் அதிகமானோர் பேர் பலியாகியதாகவும் , 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை […]

Categories
அரசியல்

“இலங்கை குண்டு வெடிப்புக்கு அதிமுக கண்டனம் “அறிக்கை வெளியிட்ட இபிஎஸ்,ஓபிஎஸ்!!..

மனிதாபிமானமற்ற முறையில் சிறிதும் இரக்கம் பாராமல் இலங்கையில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக  அதிமுக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடபட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்புவில்  அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடித்தது . அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரிலா, சின்னமான்கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து 8 குண்டுகள்…. 185 பேர் பலி…500 பேர் காயம்…..கண்ணீரில் இலங்கை…!!

இலங்கையில் 7 மற்றும் 8 என தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவத்தால் 185_திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என  குண்டு வெடித்தது. 3 தேவாலயம், 3 நட்சத்திர […]

Categories
உலக செய்திகள்

கதிகலங்கி நிற்கும் இலங்கை…. 7_ஆவதாக மீண்டும் குண்டு வெடிப்பு…!!

இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த  பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்த்தையடுத்து  மேலும் ஒரு இடத்தில் தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர் இறந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என  குண்டு […]

Categories
உலக செய்திகள்

102 பேர் பலி….. 300_க்கும் அதிகமானோர் காயம்….. இலங்கையில் தொடர் பதற்றம்…!!

இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த  பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 102 பேர்  பலியாகி , 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டு பிராத்தனையில் இருந்தனர். காலை 8.30 மணி இருக்கும் போது  கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் என பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருக்கும்போது திடீரென சக்தி வாய்ந்த […]

Categories

Tech |