கள்ளத்துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தி.மு.க பிரமுகரின் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் தி.மு. க பிரமுகரான பெர்னார்டு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ளத்துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பெர்னார்டின் வீட்டிற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் கள்ளத் துப்பாக்கி எதுவும் சிக்கவில்லை. […]
Tag: inspection
காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ரயில் நிலையம் உள்பட பல பகுதிகளில் திடீர் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சாவை மர்மநபர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயிலின் மூலமாகக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ரயில் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார். […]
நெற்பயிர்களை குலை நோய் தாக்கியதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் கிராமத்தில் நெல் சாகுபடியானது 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பயிர்களையும் குலை நோய் தாக்கி சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் இந்நோயால் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் இந்நோய் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வேளாண் […]
சீனாவில் கொரோனா வைரசை கண்டறிய தானாக வந்து பரிசோதிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 10,000 பரிசளிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 906 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சீன அரசு தினமும் முடிந்த அளவுக்கு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து கொண்டு தான் வருகிறது. ஆனாலும் நாளுக்குநாள் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். […]
ஜேப்பியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 350 கோடி ரூபாய் சொத்து கணக்கில் காட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஜேப்பியார் கல்வி நிறுவனம் அதிகப்படியான வரி ஏய்ப்பு செய்ததாகவும், வருமானத்தை மறைத்து கணக்கு காட்டாமல் இருந்ததாகவும் புகார் எழுந்தது.இதனையடுத்து சென்னை சூளைமேடு, பெருங்குடி, பூந்தமல்லி, அண்ணா நகர் உள்ளிட்ட 32 இடங்களில் அமைந்துள்ள ஜேப்பியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் அலுவலகங்களில் நவம்பர் 7ஆம் தேதி வருமான […]
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் உருக்கு உற்பத்தி நிறுவன அதிபர்கள் மற்றும் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனர். சென்னை உட்பட தமிழகம் , ஆந்திர மாநிலத்தில் ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தொடர்புடைய 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தமிழகம் , ஆந்திராவில் இந்த சோதனை நடப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதிலும் , இந்த ஸ்டீல் பொருட்களை உற்பத்தி […]
உலகம் முழுவதும் 220 கோடி பேர் காதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பதாக ஐநா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவ மழை போதிய அளவு பெய்யாமல் இருந்ததால் இந்தியாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகின்றது. மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கடுமையாக அவதிப்படுகின்றனர். வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் வீதியெங்கும் அலைந்து திரிகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் , ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான யூனிசெப் அமைப்பும் இணைந்து ஆய்வு ஒன்றினை நடத்தியது.அந்த ஆய்வில் கடந்த […]