விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கிய பயணிக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது. நூற்றுக்கும் அதிகமானோரை சீனாவில் காவுவாங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில், சீனாவிலிருந்து வரும் பயணிகளை நவீன கருவி மூலமாக ஸ்கேன் செய்து, கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அப்பயணிக்கு உடனடியாக எவ்வாறு சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை […]
Tag: #Internationalairport
கோவா விமான ஓடுதளத்தில் நாய்கள் இருந்த காரணத்தினால் ஏர் இந்தியா விமானம் தரை இறங்க முடியாமல் கடைசி நேரத்தில் தடைபட்டது. கோவாவின் டபோலி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணி அளவில் அந்த விமானம் தரையிறங்க இருந்த நிலையில் விமான ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமானி பார்த்துள்ளார். உடனடியாக விமானத்தை தரையிறக்குவதை நிறுத்திய விமானி வானத்திலேயே வட்டமடித்து கொண்டிருந்தார். இதையடுத்து ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு […]
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பை பலப்படுத்த மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் தொடர்ந்து போராட்ட்டங்கள் மற்றும் அசாதாரண சூழல் நிலவுவதால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை புறநகர் திண்டுக்கல் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் […]
துபாய் விமான நிலையம் அருகே சிறிய குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனம் ‘ஹனிவெல்’. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் மேற்கொண்டனர்.இந்த சிறிய விமானம், விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் திடீரென தரையில் வேகமாக விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பும் பதட்டமும் […]