செப்டம்பர் 8-ஆம் தேதி ஏன் சர்வதேச எழுத்தறிவு தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். கல்வியறிவு குறித்த மனித கவனத்தை ஊக்குவிப்பதற்கும் சமூக மற்றும் மனித வளர்ச்சிக்கான உரிமைகளை அறிந்து கொள்வதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒருவர் உணவு , உடை , இருப்பிடம் அனைத்தையும் முழுமையாக பெற்று நிம்மதியான வாழ்வுக்கு கல்வியறிவு முக்கியம். வறுமையை ஒழிப்பதற்கும், குழந்தை இறப்பைக் குறைப்பதற்கும், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை அடைவதற்கும் இது ஒரு அவசியமான கருவியாகும். கல்வியறிவு ஒரு குடும்ப நிலையை […]
Tag: InternationalLiteracyDay
சர்வதேச எழுத்தறிவு தினத்தை அனுசரித்து வரும் யுனெஸ்கோ 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவரும் கல்வி அறிவு பெறுவார்கள் என்று உறுதியளித்துள்ளது. சர்வதேச எழுத்தறிவு தினம் கல்வியறிவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், உலகளவில் கல்வியறிவுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொள்ளவும் உதவுகிறது. எழுத்தறிவு என்பது ஒரு நபரின் வாசிப்பு அல்லது எழுதும் திறன், மக்களை இணைக்கும் மற்றும் மேம்படுத்தும் திறன், உலகத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் திறன் மற்றும் இது ஒரு அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் […]
சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டத்தில் யுனெஸ்கோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டங்களின் அனைத்து நாடுகளின் குறிக்கோள்களும் கல்வி மற்றும் எழுத்தறிவு திட்டங்களுக்கு ஏற்ப பல்வேறு திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் “கல்வியறிவு மற்றும் ஆரோக்கியம்”, சுகாதாரக் கல்வியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது ஐக்கிய நாடுகளின் எழுத்தறிவு சகாப்தத்தில் 2007-2008 ஆண்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. குறிப்பாக 2008-ஆம் ஆண்டுக்கான சர்வதேச […]
உலகளவில் சுமார் 775 மில்லியன் மக்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்று யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 775 மில்லியன் அளவுக்கு மக்கள் குறைந்தபட்ச கல்வியறிவு திறன் கூட இல்லாமல் இருக்கின்றனர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் 5 நபர்களில் ஒருவர் இன்னும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதில் மூன்றில் இரண்டு விழுக்காடு பெண்கள் தான் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கின்றனர். 60.7 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கல்வியறிவு அற்றவர்கள் எண்ணிக்கை மீது அதிக […]
செப்.8 சர்வதேச கல்வியறிவு நாள் …!!
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8_ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு நாள் கடைபிடிக்கப்படுகின்றது. யுனெஸ்கோ என்று பொதுவாக அழைக்கப்படும் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார நிறுவனம் எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965 ம் ஆண்டு செப்டம்பர் 8 -ம் நாள் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின்மாநாடு ஒன்றை நடத்தியது. இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது. எழுத்தறிவின்மையை உலகிலிருந்து அறவே அழிப்பதற்காக ஆற்ற வேண்டிய பணிகள் நடைமுறைகள் ஆகியவைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கையையும் அளித்தது. […]