வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை பகுதியில் லெனின் என்பவர் தனது மனைவி ரம்யாவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கும் அதே பகுதியில் வசித்து வந்த பெர்தின் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் லெனின் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் அவரது மனைவி ரம்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயம் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த பெர்த்தின் அங்கிருந்த டிவி, கதவுகள் மற்றும் ஜன்னல்களை […]
Tag: Intimidation
தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம். இங்கு வெடிக்குண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மோப்ப நாய், வெடிக்குண்டு நிபுணர்கள் உதவியோடு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தி மொழியில் பேசிய அந்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தி. நகர் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மேனேஜரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்ட அதிமுக உறுப்பினர் மற்றும் ஐந்து வழக்குரைஞர்கள் உட்பட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை திருவேற்காடு அருகேயுள்ள சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் தி. நகரில் உள்ள எலைட் சரவணா தங்க நகைக்கடையில் கடந்த 3ஆம் தேதி பழைய தங்க நாணயங்கள் கொடுத்து மூன்று சவரன் செயின் வாங்கி உள்ளார் . […]
தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, லண்டனுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை அங்கிருந்து நாடு கடத்தி, இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கில் கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியை லண்டன் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது லண்டனின் வானண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் […]
அய்யம்பாளையத்தில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிற்குள் இருந்த எரிவாயுவை பற்ற வைத்து தற்கொலை செய்வதாக மிரட்டிய மகனை நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது இளைய மகனான கார்த்திக் (27) வேலைக்கு எதுவும் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தந்தை காசிலிங்கத்திற்கும், கார்த்திக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியில் சென்ற கார்த்திக் அதிகளவு […]