போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரியாம்பட்டியில் முனியப்பன் என்பவர் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு முனியப்பன் உயிரிழந்து விட்டதால் அவரது மகன் திருநாவுக்கரசு என்பவர் கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது திருநாவுக்கரசு […]
Tag: investigation
குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா(11), கௌசிகா(9) என்ற மகள்களும், ஹரிஹரன்(7) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நந்தினி தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் அவர்கள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் முருகேசனும், உறவினர்களும் நந்தினி மற்றும் குழந்தைகளை […]
காரில் செம்மரக்கட்டைகளை கடத்தியவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லியூர் தரகப்பனூர் வட்டம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது அதே வழியாக வந்த சொகுசு கார் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி மரத்தின் மீது மோதி நின்றது. உடனடியாக கார் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அதில் 260 […]
நூதன முறையில் திருடப்பட்ட பணத்தை போலீசார் மீண்டும் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் செலுத்தினர். சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் ரோமி பைநாடன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என எனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்றால் செல்போனில் தொடர்பு கொள்ளவும் என அதில் ஒரு எண்ணும் இருந்தது. பின்னர் அந்த […]
குழந்தையை தந்தை கடத்தி சென்றதாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் பிரியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ரவி என்பவருடன் பிரியாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த குழந்தையை ரவி தூக்கி சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை ரவி கடத்தி […]
காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை மீட்டு தருமாறு கணவர் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளியான சூர்யா(22) என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா ஆசிரியர் காலணியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். […]
சடலமாக மீட்கப்பட்ட நபரின் விவரம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகுளம் விநாயகர் நகர் பகுதியில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்கு அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ஆணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படத்தை மாப்பிள்ளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். அந்தப் பெண் தனது புகைப்படத்தை செல்போன் மூலம் வாலிபருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் உனது சொத்தை எனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து […]
வருவாய் ஆய்வாளரின் கார் மீது கற்களை வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வீரபத்ரசாமி கோவில் தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி விட்டு இரவு நேரத்தில் தூங்க சென்றுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த போது கார் கண்ணாடியை மர்ம நபர்கள் கற்களை வீசி […]
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் இருக்கும் ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
பேருந்து ஓட்டுநரும், கண்டக்டரும் இணைந்து பொதுமக்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து அதிக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. இதனை அங்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநரும், கண்டக்டரும் கீழே இறங்கி வந்து பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இருவரும் இணைந்து பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் புனிதா அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் புனிதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து புனிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரிபட்டி ஏரியில் வாலிபரின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் […]
பல்கலைகழக மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 26 வயதுடைய மாணவி முதுகலை 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கும் பிரேம்குமார் என்பவர் எனக்கு கடந்த ஓராண்டாக பாலியல் தொந்தரவு அளித்து வருகிறார். அந்த பேராசிரியர் சாதியை […]
வங்கி கணக்கில் இருந்து 54,999 ரூபாய் மாயமான சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் ஆன்லைனில் ஒரு நிறுவனத்தின் பெயரில் வந்த விளம்பரத்தை பார்த்து உடைகள் வாங்குவதற்காக 420 ரூபாய் போன் பே மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் அந்த நிறுவனத்திலிருந்து எந்த உடைகளும் வராத காரணத்தினால் […]
சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி நகரில் இருக்கும் ஒரு வீட்டில் சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து ஒரு வீட்டில் 35 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள், நாட்டு துப்பாக்கி, கோடாரி, துப்பாக்கி […]
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த வருண் என்பவருடன் பேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதால் வருண் அந்த […]
சொத்து தகராறில் தம்பி அக்காவை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி மைக்கேலை விட்டு பிரிந்து சகோதரனான தனக்கோடி என்பவரது வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அக்கா தம்பி இருவருக்கும் இடையே […]
தபால் துறை அதிகாரி மீது மோசடி புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சங்கம்பட்டி ரெட்டியார் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சரவணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரவணன் தனது ஊரில் இருக்கும் கிளை தபால் நிலையத்தில் வைப்பு நிதியாக 2 லட்ச ரூபாயை தபால் நிலைய அதிகாரியான சுதாவிடம் கடலை 2019-ஆம் ஆண்டு கொடுத்துள்ளார். இதனை அடுத்து தபால் நிலைய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த போது […]
தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பண்டசோழநல்லூர் பகுதியில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிச்சைமுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டார். இதனையடுத்து ஊருக்கு செல்வதற்காக இரவு 11 மணி அளவில் பிச்சைமுத்து செல்லப்பாக்கம் கூட்டு சாலை […]
வகுப்பறைக்குள் கற்கள் மற்றும் செங்கல் வீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 231 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்களும், மாணவர்களும் வழக்கம்போல வகுப்பறைக்கு சென்றுள்ளனர். அப்போது வகுப்பறையில் கற்கள், செங்கல் வீசப்பட்டு கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து கழிப்பறையில் இருக்கும் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள மூர்த்திகுப்பத்தில் கொத்தனாரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷிற்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். எனவே சிறுமியின் தாயார் சுரேஷ் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கடலூர் […]
2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டாவது, மூன்றாவது பிளாட்பாரங்களில் மறைவான பகுதிகளில் சிறுசிறு மூட்டைகளாக வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்தது ரயில்வே காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் […]
தங்க நகையை திருடி சென்ற 2 பெண்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் பிரபல தங்க நகை கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல சென்றுள்ளனர். இந்நிலையில் கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி 2 1/2 பவுன் தங்க காப்பு ஒன்றை பெண்கள் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சிறிது நேரத்தில் தங்க நகை திருடு போனதை அறிந்த கடை […]
நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிமெண்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமது அலியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் பிரபல சிமெண்ட் நிறுவனத்தின் மேலாளராக இருப்பதாகவும், 850 சிமெண்ட் மூட்டைகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி அதற்குரிய விலைப்பட்டியலை முகமது […]
அரசு ஊழியரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை ஈங்கூர் மேற்கு வீதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிசாமியின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பான் கார்டு குறித்த விவரத்தை தெரிவிக்க ஒரு லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. எதார்த்தமாக பழனிச்சாமி […]
தொழிலாளியிடம் தகராறு செய்த தந்தையை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் தொழிலாளியான சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதுகுறித்து சுந்தரமூர்த்தி ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மகன் செல்வக்குமார் ஆகியோர் சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து […]
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மெட்டுகுண்டு கிராமத்தில் ஜோதி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது. இதனால் கண் விழித்து வெளியே வந்து பார்த்த ஜோதிமுருகன் தனது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]
பிரியாணி கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீர்த்தனா நகர் பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு அருகில் மது பாட்டில்கள் மற்றும் விஷ பாட்டில் ஆகியவை கிடந்துள்ளது. […]
கல்லூரி மாணவி மற்றும் பேருந்து கண்டக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து கண்டக்டரான தியாகராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவரது குடும்பத்திற்கும் 20 வயதுடைய கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி முடிந்து அரசு பேருந்தில் அந்த மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பேருந்தில் இருந்து இறங்க சிறிது தாமதமானதால் அந்த மாணவியை தியாகராஜன் ஆபாசமாக […]
அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெற்றிலை மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்திற்கு அருகே இருக்கும் தனியார் கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த வாலிபர் […]
தம்பதியினர் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பழவந்தாங்கல் கிராமத்தில் பிரபாகரன்-சுஜாதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 8-ஆம் தேதி சுஜாதாவிற்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று சுஜாதாவின் மாமியார் அவரை கழிவறைக்கு அழைத்து சென்று திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது. இது குறித்து குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியபோது, ஒரு தம்பதியினரை […]
சாமியாரை கடத்தி சென்ற மர்ம நபர்கள் 35 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தீத்திபாளையம்- கள்ளுக்கடை பிரிவு சக்தி கார்டன் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் சரவணன் ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் மள்ளன்குழி ஆதீனம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி, யாகம், வேள்வி பூஜை மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி சாமியார் போல செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் […]
அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் எஸ்.எல்.எஸ் நகரில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரதீப் என்பவர் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்க்கும் தன்யா என்பவரை தனக்கு தெரியும் எனவும், அவரிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவார் […]
வகுப்பறையில் மின்விசிறி கழன்று சிறுவன் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் ராஜமன்னார் சாலை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வத் கமல் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி மாணவர்கள் வகுப்பறையில் இருந்துள்ளனர். அப்போது மின்விசிறி ஒன்று கழன்று அஸ்வத்கமலின் தலையில் விழுந்துவிட்டது. அப்போது சிறுவன் அம்மா என்று அலறியபடி கீழே விழுந்துவிட்டார். அதன் […]
பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இவர் அரியலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா உடையார்பாளையம் தெற்கு காலனி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரியங்காவை […]
கிராம நிர்வாக அலுவலர் பெண் ஊழியர்களை தாலுகா அலுவலகத்திற்குள் சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொக்கிரகுளத்தில் ஜோசப் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை தாலுகா அலுவலகத்தில் இருக்கும் சர்வே பிரிவில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சாரதா பணியில் இருந்த போது துலுக்கர் குளம் கிராம நிர்வாக அலுவலரான சூரிய தேவன் என்பவர் அங்கு சென்று ஒரு ஆவணம் குறித்து […]
தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் அரைநிர்வாண கோலத்துடன் பெண்களை அச்சுறுத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளியில் தீவன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, சின்னியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அரை நிர்வாண கோலத்துடன் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொழிற்சாலைக்கு பின்புறம் வசிக்கும் பெண்களிடம் தவறான […]
கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை ரயில்வே குடியிருப்பில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டயானா என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் டயானா மாலை நேரத்தில் கல்லூரியில் இருந்து பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பேருந்திலிருந்து இறங்கி டயானா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் வீட்டிற்குள் நுழைந்து கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் 12-வது வார்டு வாக்குச்சாவடியில் வெளியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் 18 […]
டிக்கெட் எடுக்குமாறு கூறியதால் கண்டக்டரை வடமாநில வாலிபர்கள் பேருந்தில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு டவுன் பேருந்து திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவாச்சூர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வடமாநில வாலிபர்கள் சிலர் பேருந்தில் ஏறி உள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயகோபலபுரம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கண்டக்டர் ஆறுமுகம் என்பவர் டிக்கெட் எடுக்காதவர்களிடம் […]
கடன் வசூலிக்க வந்த நபரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் எலக்ட்ரீசியனான முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கடன் தொகையை வசூலிப்பதற்காக சிவாவின் வீட்டிற்கு முருகானந்தம் சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால் முருகானந்தம் சிவா மனைவியின் தோழி ஒருவரது வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். இது பற்றி எனக்கு தெரியாது என்று அந்த பெண் […]
வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து குற்றத்திற்காக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் 2-வது வார்டு ராம்குமார் என்பவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் பதிவான ஓட்டு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக ராம்குமாரிடம் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் வேட்பாளர் என்ற முறையில் ராம்குமார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று அதிகாரிகளிடம் வாக்கு பதிவு விவரங்களை கேட்டுள்ளார். அப்போது வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்கிற்கும் […]
சிறுமியின் ஆபாச புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஒரு புகார் வந்தது. அந்த புகாரில் மதுரையில் வசிக்கும் ஒருவர் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
நண்பராக பழகிய வாலிபரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை துப்பாக்கி முனையில் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டாம்பட்டி கிராமத்தில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் சென்னையை சேர்ந்த ஹரி என்பவரும் பேஸ்புக் மூலம் பழகி நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் ஹரியின் ஆலோசனைப்படி 20 ஆயிரம் ரூபாய்க்கு மோட்டார்சைக்கிளை வாங்க சுரேஷ்குமார் முடிவெடுத்தார். இதனால் தனது நண்பரான சங்கர் என்பவருடன் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக சுரேஷ்குமார் கவரைபேட்டை பகுதிக்கு சென்றுள்ளார். […]
சட்ட கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் சட்ட கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த அப்துல் ரஹீமை விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விடிய விடிய தாக்கியுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் […]
15 வயது ஆண் காட்டு யானை வனப்பகுதிக்குள் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வனத்துறையினர் சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள தேரன் கிணறு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்காடு வனப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது மிகவும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட […]
ஒருவர் தங்கத்தை மாத்திரைகளாக விழுங்கி கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவரை பிடித்து […]
ரகசிய காதலனை காப்பாற்ற கார் விபத்தை, தான் ஏற்படுத்தியதாக கூறிய பெண்ணை கணவரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். மெக்சிகோவில் கார் ஒன்று சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இருந்தது. இத்தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அக்காரினூல் ஒரு பெண் இருப்பதை பார்த்து அவரை மருத்துவ குழுவினர் உதவியுடன் மீட்டனர். பின்பு அவரை விசாரித்த பொழுது அவர் பெயர் எட்னா என்றும் காரில் தான் மட்டும் இருந்ததாகவும் கூறினார் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து அவர்களை மிரட்டி ஆடையின்றி நடனமாட வைத்த சம்பவம், மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கணேஷ் நகரில் மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இவ்விடுதியில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு என தங்கும் வசதியும் இலவச உணவும் அளிக்கப்பட்டு வந்தன . இந்நிலையில் போலீசார் மற்றும் அங்கு தங்கியிருக்கும் ஊழியர்கள் […]