சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உறுப்பினர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளராக பெண் தூதர் ஒருவர் இருந்துள்ளார். அவர் இன்று காலை அவர் வசித்துவந்த மிக உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து கிடந்துள்ளார். அதன்பின் ஒரு தூதரக ஊழியர் அவரை பார்ப்பதற்காக அவரது குடியிருப்புக்கு வந்துள்ளார். ஆனால் அவர் எங்கு தேடியும் இல்லாததால் அவரது தோட்டக்காரரிடம் இது குறித்து […]
Tag: Iran
கொரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் முக்கியமானது ஈராக் நாட்டில் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி நோயாளிகள் இருக்கும் அறைக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள் தப்பிக்க முடியாமல் அங்குள்ள 82 பேரும் தீயில் […]
யுரேனியம் செறிவூட்டல் நடைபெறும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதற்கு காரணம் இஸ்ரேல் என ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்பஹான் மாகாணத்தில் நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலையை கட்டுவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. அதனை கண்டுகொள்ளாமல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளை திரும்பவரும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக […]
சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் நாட்டு ஆயுதமேந்திய படைகளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டுக்கு சொந்தமான Saviz என்ற சரக்கு கப்பல் இந்த வார தொடக்கத்தில் சிவப்புக் கடலில் பயணித்து கொண்டிருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் கப்பலுக்கு அடியில் பொருத்தப்பட்ட கன்னி வெடி அல்லது ஏவுகணை மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஈரான் ஆயுதமேந்திய […]
ஈரானில் விமானத்தை கடத்த முயன்றதாக பயணி ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் . ஈரானில் அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போக்கர் 100 விமானம் பயணிகளை ஏற்றி விட்டு மஷாத் நோக்கி வியாழக்கிழமையன்று இரவு 10: 22 மணிக்கு புறப்பட்டது. அப்போது விமானத்தில் உள்ளே பயணிகளில் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள், புரட்சிகர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சென்று கொண்டிருந்த விமானத்தை அவசர அவசரமாக ஈரானில் உள்ள இஸ்பாஹான் […]
அமெரிக்கா உடனான மோதலை நாங்கள் ஆரம்பிக்க மாட்டோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி (Hassan Rouhani), கட்டார் இளவரசர் ஷேக் தமீம்மிடம் (Sheikh Tamim) தொலை பேசியில் உரையாடினார். இருவருக்குமான இந்த உரையாடன் போது, ‘அமெரிக்காவின் செயல்பாடுகளை ஈரான் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், எனினும் அமெரிக்காவுடன் நாங்கள் மோதலை ஆரம்பிக்க மாட்டோம்’ என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக சில நாட்களுக்கு முன்னதாக சர்வதேச […]
அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் 7ஆவது இடத்தில் இருக்கின்றது. ஈரானில் இதுவரை 60,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,739 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க […]
ஈரானில் கொரோனா வராமல் தடுக்கும் என்ற வதந்தியை நம்பி எரி சாராயத்தை குடித்த 300 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,200 பேர் பலியாகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன நாடாக ஈரான் இருக்கிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக, போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததாலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பியதாலும் […]
ஈரானில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 1556 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரசால் 2 லட்சத்துக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது. சீனாவில் கொரோனா தாக்கம் வெகுவாக […]
கொரோனா வைரசால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ஈரானியர் பலியாவதாக ஈரான் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kiyanush Jahanpur) தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸ் ஈரானிலும் நாளுக்குநாள் மக்களை கொன்று […]
ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 103 வயதான மூதாட்டி சிகிச்சை பெற்று பூரண நலமுடன் குணமாகி வீடு திருப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொடிய கொரோனா உலகையே கதிகலங்க செய்து வருகின்றது. 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 9 ஆயிரரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது. ஆனால் இதில் பலியானவர்கள் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் தான். ஆம், கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் முதியவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்தான் […]
ஈரான் நாட்டில் தடையை மீறி புனித தலங்கள் மற்றும் பள்ளி வாசல்களுக்குச் சென்றதால் அந்நாட்டு அரசு செய்வதறியாது திகைப்பில் உள்ளது. சர்வதேச அளவில் மிரட்டி வரும் கொரோனா வைரசால் 7,500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் 988 பேர் பலியாகி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரான் அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னதாக கொரோனா வேகமாக பரவியதை […]
ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சர்வதேச 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மத்திய கிழக்கு நாடான ஈரான் நாட்டில் கொரோனா மின்னல் வேகத்தில் […]
பஹ்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்றுவந்த 67 வயதுடைய பெண்மணி மரணமடைந்தார். சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது. இந்த வைரஸ் தொற்று வளைகுடா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளையும் தாக்கியுள்ளது. இதனால் குவைத், துபாய், சவூதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய […]
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ஈரானில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து மனுக்கள் குவிந்த வண்ணமிருந்தன. இதை ஏற்ற மோடி தலைமையிலான அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி இதுவரை 336 பேர் சிறப்பு […]
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்படும் என ஈரான்அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் […]
கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவை தவிர்த்து அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். சீனாவில் உண்டான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனா, இத்தாலியை தொடர்ந்து ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இதனை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 237ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் மட்டும் கொரோனா தொற்றால் 7,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் சுமார் […]
ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா தாக்காது என்று நம்பி போய் மதுக்குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் இந்த வைரசால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஈரான் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. ஈரானில் இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், […]
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் […]
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்தது சீனாவில் தொடங்கி 109 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரான் நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kianoush Jahanpour) இன்று கூறுகையில், கடந்த 24 […]
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி […]
கொரோனா வைரஸ் அமெரிக்காவின் தயாரிப்பு என்று ஈரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தலைவர் தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பீதி , காட்டி உயிர்பலி வாங்கும் கொரோனா வைரஸ் ஈரானையும் விட்டுவைக்கவில்லை. ஈரானில் 3513 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் பலி எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஈரானில் 92 பேர் உயிரிழந்துள்ளனர் சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள நாடுகள் தென் கொரியா, இத்தாலி, ஈரான். இதில் ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகரையே, கொரானா காவு வாங்கி விட்டது. மேலும் பொதுமக்கள் […]
ஈரானில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரானுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]
கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2800-ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000-ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர்த்து அடுத்தப் படியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,022ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக […]
குவைத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் ஒட்டு மொத்தமாக 2,800 பேர் […]
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான், இத்தாலி தென் […]
கொரோனா வைரஸினால் பலியானவர்களின் உண்மையான விபரங்களை ஈரான் மறைப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஈரானில் 95 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, ஈரான் நாட்டில் பாதிக்கப்பட்டோர் என அந்நாட்டு அரசாங்கத்தினால் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, உண்மையாக அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பிரபல செய்தி தொலைக்காட்சியான பி.பி.சி. தெரிவித்துள்ளது. ஈரானின் துணை சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி (Iraj […]
ஈரானிய கப்பல்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு குவைத் தற்காலிக தடை விதித்துள்ளது. உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் சீனாவில் 2,592 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 77, 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல ஈரானில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்து, 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தங்கள் நாட்டுக்கும் (குவைத்) கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் […]
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்து விட்டனர் என ஈரான் அறிவித்தது. ஆனால் அப்படி யாரும் […]
சிறிய தவறு செய்தாலும் அந்த இருநாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தளபதி ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. இதற்கு பதிலடியாக, ஈரான் இராணுவம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. தற்போது போர் பதற்றம் தணிந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதன் […]
ஈரானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் தரையிறங்கியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். பொதுவாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எப்பொழுதுமே ஒருவித அச்சத்தில் இருப்பார்கள் . காரணம் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் தான். சில சமயங்களில் இன்ஜின் கோளாறு, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி பயணிகள் உயிரிழக்க நேரிடும். அதே சமயம் விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிரும் தப்பியுள்ளது. இந்த நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் ஈரானின் மசாஹா் […]
ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்காவை கண்டிப்பாக பழிவாங்குவோம் என்று ஈரான் அறிவித்தது. இதையடுத்து அவ்வப்போது, ஈராக்கிலுள்ள அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குல் நட்த்திவருகிறது. இரு நாடுகளுக்கிடையே இப்போது உச்சகட்ட போர் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், ஈராக் […]
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே உள்ள பசுமை பகுதி எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் அயல்நாட்டு தூதுவர்கள் மற்றும் நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை மூன்று ராக்கெட்கள் விழுந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராக்கெட்டுகள் பாக்தாதின் அண்டை மாவட்டமான […]
176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சிடம் ஒப்படைக்க கோரி கனடா அரசு ஈரானை வலியுறுத்தியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளாகியது.இந்த விபத்தில் 57 கனடா நாட்டு மக்கள் உட்பட மொத்தம் 176 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதலில் அறிவித்த ஈரான், பின்னர் ஈரான் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக […]
அமெரிக்காவை தவறாகப் பேசியதால் சுலைமானியை கொன்றோம் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுலைமானி கொலை குறித்து புதிய காரணத்தைக் கூறியுள்ளார். புளோரிடாவில் பாம் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் சுலைமானி கொலை குறித்துக் கூறியதாவது,”ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவைப் பற்றி […]
ஈரான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரியான ஹாசன் ஷாவர்பூர் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் க்யுஷேஸ்தான் மாகாண கமாண்டோவாக இருப்பவர் ஹாசன் ஷாவர்பூர். இவர் தனது படை மூலம் ஈரான் நாட்டு போராட்டக்காரர்களைப் படுகொலை செய்ததாக அமெரிக்க குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், குற்றம் இழைத்தவரின் பட்டியலில் அமெரிக்கா இவர் பெயரைச் சேர்த்துள்ளது. இதன்மூலம், இவரும் இவரின் குடும்பத்தாரும் அமெரிக்க நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. […]
உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஆயுதப்படை பொது தலைமை யகத்தின் துணைத் தளபதி அலி அப்துல் லாஹி, உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெ ரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரண மாக இருக்கலாம் என்றார். ஏவுகணையை வீசிய ஆபரேட்டருக்கு கட்டளை மையத்தின் செய்தியைப் பெறுவதில் சிரமம் இருந்ததாக அவர் கூறினார். அமெரிக்க […]
ஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கோழைத்தனமாக கொன்றுள்ளதாக ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) விமர்சித்துள்ளார். இஸ்லாமிய நாடான ஈரானில் வெள்ளிதோறும் பிரார்த்தனைகள் சிறப்பாக நடைபெறும். அவ்வாறு இன்று (ஜனவரி 17) நடைபெற்ற பிரார்த்தனையில் திடீரென்று பங்கேற்ற ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். அப்போது பேசிய அவர், “அமெரிக்கா எவ்வளவு அழுத்தங்களைத் தந்தாலும் ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது. […]
ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது. […]
உக்ரைன் நாட்டு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 […]
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் கொன்றது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குல் நடவடிக்கைகளை கண்டித்து நியூ யார்க்கில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், ‘ஈரானுடன் போர் வேண்டாம்’ (Say no to war with Iran), ‘ஈரானுக்கு எதிராக போரோ பொருளாதாரத் தடைகளோ விதிக்கப்படக்கூடாது’ (No […]
உக்ரைன் விமான விபத்து குறித்து தெளிவான விசாரணை வேண்டும் என்று கனடபிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், எங்கள் […]
உக்ரைன் விமான விபத்து அதிகப்படியான சந்தேகங்களை எழுப்புகிறது, யாராவது தவறு செய்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் […]
அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மோதலால் உலகளவில் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் அதிகரித்துவரும் போர் பதற்றங்களால் உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. மேலும் டோக்கியோ பங்குச்சந்தை கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. ஹாங்காங்கின் பங்குச்சந்தை ஏறக்குறைய ஒரு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. அதேபோல் ஷாங்காய், சிட்னி, தென்கிழக்கு ஆசிய சந்தைகளும் சரிவை சந்தித்தன. ஈராக்கில் உள்ள இரண்டு விமானத் தளங்களுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல் பற்றிய செய்தி வெளியான நிலையில், டோக்கியோ […]
உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் […]
அரசு நிறுவனமான ஏர் இந்தியா, ஈரான் வான்வெளியில் தற்காலிகமாக பறக்காது என்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் உட்சபட்ச போர் பதற்றம் நிலவிவருவதால், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்த்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பும் விமான குழுவின் பாதுகாப்பும்தான் முக்கியம். தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால், ஏர் இந்தியா விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்காலிகமாக ஈரானிய […]
ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயளாலர் டி ராஜா கூறுகையில், “அமெரிக்க ராணுவத்தால் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் ஈரானையே சார்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவை பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறது. […]