Categories
உலக செய்திகள்

ஈரான் விமான விபத்து: வீடியோ எடுத்தவர் கைது! 

உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான வீடியோவை பதிவு செய்தவர் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 – 800 விமானம் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று விபத்துக்குள்ளானது. விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – ஈரான் அதிபர்

ஈரானில் நடைபெற்ற விமான விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி உறுதியளித்தார். ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கியிவ் செல்லவிருந்த போயிங் 737 பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் இந்த விபத்தில உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டது என்று ஈரான் […]

Categories
உலக செய்திகள்

நாங்க ஏற்கனவே அவதிப்பட்டுட்டோம்… அதனால இவங்க பிரச்சனையில தலையிடமாட்டோம் – இம்ரான் கான் திட்டவட்டம்!

அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் தலையிடாது என அந்நாடு பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல் கவலை அளிப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஈரான் வான்வெளியில் ஏர் இந்தியா பறக்காது!

அரசு நிறுவனமான ஏர் இந்தியா, ஈரான் வான்வெளியில் தற்காலிகமாக பறக்காது என்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் உட்சபட்ச போர் பதற்றம் நிலவிவருவதால், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்த்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பும் விமான குழுவின் பாதுகாப்பும்தான் முக்கியம். தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால், ஏர் இந்தியா விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்காலிகமாக ஈரானிய […]

Categories
உலக செய்திகள்

BREAKING : உச்ச கட்ட பதற்றம்… 80 ராணுவ வீரர்கள் பலி… ஈரானின் அதிகாலை அதிரடி!!

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், […]

Categories
உலக செய்திகள்

ஈரான் ஏவுகணைத் தாக்குதல் : “எல்லாம் நலம்தான்” – ட்ரம்ப் ட்வீட்..!!

அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து ட்வீட் செய்திருந்த ட்ரம்ப், எல்லாம் நலமாக இருப்பதாகவும் இதுகுறித்து நாளை அறிக்கைவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர், எவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்பன குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரையில் எல்லாம் நலமாகவே உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை. உலகம் […]

Categories

Tech |