அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் தலையிடாது என அந்நாடு பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல் கவலை அளிப்பதாக […]
Tag: #Iranian
அரசு நிறுவனமான ஏர் இந்தியா, ஈரான் வான்வெளியில் தற்காலிகமாக பறக்காது என்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் உட்சபட்ச போர் பதற்றம் நிலவிவருவதால், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்த்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பும் விமான குழுவின் பாதுகாப்பும்தான் முக்கியம். தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால், ஏர் இந்தியா விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்காலிகமாக ஈரானிய […]
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், […]
அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து ட்வீட் செய்திருந்த ட்ரம்ப், எல்லாம் நலமாக இருப்பதாகவும் இதுகுறித்து நாளை அறிக்கைவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர், எவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்பன குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரையில் எல்லாம் நலமாகவே உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை. உலகம் […]
அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் மரியாதை செலுத்தினர். ஈரான் தலைநகர் தெங்ரேனில் கடல் போல திரண்டிருந்த பொதுமக்கள், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கண்ணீருடன் சுலைமானிக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இறுதி ஊர்வலம் நடைபெற்ற தெஹ்ரேன் பல்கலைக்கழகத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை முதலே, பெருந்திரளான மக்கள் ஈரானிய கொடிகளுடனும் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவருக்கு 80 மில்லியன் டாலராக ஈரான் பரிசுத்தொகை நிர்ணயம் செய்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொலைசெய்ய உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்து ஈரான் அறிவித்துள்ளது. சுலைமானியின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்பிய ஈரான் அரசு ஊடகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஈரானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பில் 80 மில்லியன் டாலர் என்பது 576 […]
ஈரான் புரட்சி படையின் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, குவைத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகரம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் அந்நாடு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு (Quds Force) தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இவருடன் மேலும் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகமெங்கும் பேசும் பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து […]
ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஈரான் எம்.பி.கள் அமெரிக்காவுக்கு எதிராக தங்கள் நாடாளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பினர். ஈராக்கில் உள்ள பாக்தாதில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க மக்களின் நலன் கருதியே கசோம் சுலைமானி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் சுலைமானியின் மரணத்துக்கு கண்டிப்பாக பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் நாடாளுமன்றம் 290 […]
ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார். ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் செல்வாக்குமிகுந்த ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவத் தளபதி அபு மஹதி அல் முகந்திஸி உள்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பழித் தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்தது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க […]
ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நஸ் ரீன்,என்ற பெண் வழக்கறிஞர் மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடுபவர். இவர் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர் நிலையில் உள்ள தலைவர்களை மரியாதை குறைவாக அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த காரணத்தால் பெண்கள் உரிமை மற்றும் மனித […]
ஈரானில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். ஈரான் நாட்டில் உள்ள தலைநகரான தெஹரானுக்கு அருகே உள்ள அராக் என்ற இடத்தில் வசித்து வந்த ஒரு இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் அருகே இருந்த வணிக வளாகம் சென்றார். அப்போது அந்த வணிக வளாகத்தில் இருந்த தனது தோழியிடம் அந்த இளைஞன் காதலை வெளிப்படுத்த அவரது தோழியும் காதலை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர், தான் வைத்திருந்த மோதிரத்தை காதலிக்கு அணிவித்தார். இதை தொடர்ந்து இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். அப்போது அந்த இடத்தில் பொதுமக்கள் சூழ்ந்து […]