அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் தலையிடாது என அந்நாடு பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல் கவலை அளிப்பதாக […]
Tag: iranvsusa
அரசு நிறுவனமான ஏர் இந்தியா, ஈரான் வான்வெளியில் தற்காலிகமாக பறக்காது என்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் உட்சபட்ச போர் பதற்றம் நிலவிவருவதால், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்த்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பும் விமான குழுவின் பாதுகாப்பும்தான் முக்கியம். தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால், ஏர் இந்தியா விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்காலிகமாக ஈரானிய […]
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், […]
அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து ட்வீட் செய்திருந்த ட்ரம்ப், எல்லாம் நலமாக இருப்பதாகவும் இதுகுறித்து நாளை அறிக்கைவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர், எவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்பன குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரையில் எல்லாம் நலமாகவே உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை. உலகம் […]
அணுசக்தி ஒப்பந்தத்தில் வரம்பு மீறி செயல்பட்டால் ஈரான் அரசின் மீதான பொருளாதார தடை அதிகமாக உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை அந்நாடு திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து,இரு நாடுகளுக்கிடையே மோதல் உருவானது. அணு சக்தி திட்டத்தை ஈரான் கை விட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியதையடுத்து, ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த நிலையில்,இரு நாடுகளுக்கிடையே மோதல் அதிகரித்தது.இந்நிலையில் அணு […]