ஈரானில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் பாப் அல் ஷர்க்கி என்ற முக்கியமான வணிக பகுதி உள்ளது. இங்கு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் பலியாகினர். இதனையடுத்து எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு இன்னும் பொறுப்பு ஏற்காத நிலையில், இது […]
Tag: Iraq
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் […]
நான்கு மாதமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 536 பேர் உயிரிழந்ததாக ஈராக்கில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பாக்தாத், மத்திய மற்றும் தெற்கு ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொண்டு ஊழலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் எனவும் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இந்த […]
ஈராக்கின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவி என்பவரை அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார். தொடர் போர்கள், நாட்டின் பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் என அரசாங்கத்துக்கு எதிராக ஈராக்கில் கடந்த நான்கு மாதங்களாகப் போரட்டங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடில் அப்துல் மஹ்தி நவம்பர் மாதம் பதவி விலகினார். இதனையடுத்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி, முன்னாள் தகவல் […]
ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானியின் கொலைக்கு காரணமான மைக்கேல் தே ஆன்ரே உள்ளிட்ட பல மூத்த சிஐஏ அலுவலர்கள் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஊடகம் செய்தி […]
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஈராக் மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் அலிகார் நகரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பி.ஹெச்.டி. மாணவராக இருந்தவர் ஏ. ஏ. ஹமித். ஈராக் நாட்டைச் சேர்ந்த இவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தார். நீண்ட நேரமாகியும் சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு இவர் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்டை வீட்டில் […]
ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்காவை கண்டிப்பாக பழிவாங்குவோம் என்று ஈரான் அறிவித்தது. இதையடுத்து அவ்வப்போது, ஈராக்கிலுள்ள அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குல் நட்த்திவருகிறது. இரு நாடுகளுக்கிடையே இப்போது உச்சகட்ட போர் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், ஈராக் […]
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே உள்ள பசுமை பகுதி எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் அயல்நாட்டு தூதுவர்கள் மற்றும் நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை மூன்று ராக்கெட்கள் விழுந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராக்கெட்டுகள் பாக்தாதின் அண்டை மாவட்டமான […]
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் பாக்தாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக இரண்டு செய்தியாளர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஜிப்பில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அந்தக் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியது. இதில், அந்த இரண்டு […]
அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மோதலால் உலகளவில் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் அதிகரித்துவரும் போர் பதற்றங்களால் உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. மேலும் டோக்கியோ பங்குச்சந்தை கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. ஹாங்காங்கின் பங்குச்சந்தை ஏறக்குறைய ஒரு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. அதேபோல் ஷாங்காய், சிட்னி, தென்கிழக்கு ஆசிய சந்தைகளும் சரிவை சந்தித்தன. ஈராக்கில் உள்ள இரண்டு விமானத் தளங்களுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல் பற்றிய செய்தி வெளியான நிலையில், டோக்கியோ […]
உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் […]
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டத்தில் இதுவரையில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. ஈராக்கில் அதிகரித்துவரும் வேலையின்மை, ஊழல், தவறான நிதி மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளைக் காரணம்காட்டி, அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒருமாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் இதுவரையில் 300 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் ஈராக்கின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈராக் அரசு, […]
ஈராக்கில் அரசைக் கவிழ்க்க நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தடியடி நடத்தி கண்ணீர் குண்டுகளை வீசி காவல்துறையினர் போராட்டத்தைக் கலைத்தனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 1700க்கும் அதிகமனோர் படுகாயம் அடைந்தனர்.ஈராக்கில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கடந்த மூன்று வார காலமாக அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் பாக்தாத் தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு உள்ளிட்டவற்றுக்கு எதிராக […]
அமெரிக்கா மற்றும் ஈராக் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 IS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராக் நாட்டின் அன்பர் பாலைவனம் அண்டை நாடுகளான சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா எல்லை பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு IS பயங்கரவாத அமைப்பு மிக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. இங்குள்ள பொதுமக்கள் கடத்துவது , கொலை செய்வது என தொடர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2017_ஆம் ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் உள்ள IS தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிவக்கையை ஈராக் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். […]
ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டார்கள். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழித்து விட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு மீண்டும் ஐ.எஸ். அமைப்பு தலைதூக்க தொடங்கியுள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் […]