வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய போது உண்டான புகை மூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதற்கேற்ப போகிப் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதற்கு தீ வைத்து கொளுத்தியும், அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் மேளம் அடித்தும் போகிப்பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மேலும் அதிகாலை வேளையில் இந்த பழைய பொருட்களை எரித்ததால் பனி […]
Tag: issue
ஆஸ்திரேலியா புதர் தீக்கு எதிரொலியாக தமது இந்திய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் புதர் பற்றி எரிந்து வரும் சூழலில் நாட்டை விட்டு செல்வது பொருத்தமானதாக இருக்காது என்ற விமர்சனம் எழுந்த நிலையில், இம்மாதம் 13-ம் தேதி இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்துள்ளார் ஆஸ்திரேலியா பிரதமர். ஏற்கனவே இம்மாதிரியான ஒரு பிரச்சினை ஆஸ்திரேலியாவில் நிலவிய பொழுது அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு […]
ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. அரசு சலுகைகள், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்பதால், அம்மாநில மக்கள் அனைவருக்கும் ஆதார் பதிவை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகளாக ஜம்மு- காஷ்மீர் முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அதிகளவிலான பொது சேவை […]
எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில் உலக கோப்பை இறுதி போட்டியில் சர்ச்சைக்குள்ளான ஓவர் த்ரோவ் விதி குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நியூசிலாந்து இடையே 2019 உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது மார்டின் குப்டில் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு திசை திரும்பி பவுண்டரி சென்றது. இதனால் ஓவர் த்ரோவ் விதி அனைவரிடமும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், இந்த ஓவர் த்ரோவ் போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது. இதனைதொடர்ந்து எம்சிசி-யின் ஓவர் த்ரோவ் விதியை மறுபரிசீலனை செய்யும்படி முன்னாள் […]
பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் , அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் தரக்குறைவாக பேசும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வந்தது . இழிவாக பேசியவர்களை கண்டித்து சம்மந்தப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெளியாகிய ஆடியோ தொடர்பாகவும் , அதை சமூக வலைதளத்தில் பரப்பியவர் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு […]