குடியுரிமை திருத்த சட்டம் இந்தியருக்கு எதிராகவோ பிராந்தியத்திற்கு எதிராகவோ மதத்திற்கு எதிராகவோ கொண்டுவரப்படவில்லை என மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் வன்முறை வெடித்துள்ளது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி, “நாடு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், லக்னோவில் மூன்று இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொது சொத்தை சேதப்படுத்துபவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். […]
Tag: #ISupportCAA_NRC
காங்கிரஸ் கட்சி தன்னை ஓரங்கட்டியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் வேதனை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் சார்பாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “போராட்டம் மக்களின் ஒற்றுமையை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி போராட்டத்தில் அனைத்து மதத்தவரும் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற கொள்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது இதன் மூலம் தெரிகிறது” என்றார். […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் அதனைப் பொதுவாக வன்முறை என ரஜினி கருத்து பதிவு செய்ததற்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நடிகர் ரஜினி, ‘ தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது ‘ […]
குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய தங்களது கருத்தை முதலில் சொல்லுங்கள் என நடிகர் ரஜினிகாந்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் வெடித்தன.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருவரும் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என நாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, அப்பல்கலைக்கழகத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, சில செய்திகளையும் ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் கிளர்ச்சியுறச் செய்தது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறை பல்வேறு விதமான தடுப்பு முறைகளை மேற்கொண்டபோதிலும், […]