இந்தியர்களை மீட்பதே நோக்கம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. சர்வதேச நாடுகள் அந்நாட்டில் சிக்கியிருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்டு வருகின்றனர்.. இந்திய அரசு தரப்பிலும் இரண்டு கட்டங்களாக 250 தூதரக அதிகாரிகள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.. மேலும் இந்தியர்கள் அங்கு சிக்கியிருக்கின்றனர்.. பிரதமர் மோடி தலைமையில் ஆப்கான் விவகாரம் தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டது.. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு […]
Tag: Jaishankar
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது, ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈரானில் உணவின்றி தவித்து […]
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தேசியவாதம் அதிகம் முன்வைக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் முன்பை விட தற்போது தேசியவாதத்தை அதிகம் முன்வைத்துவருகின்றன. இதனால் உலக நாடுகளின் பலதரப்பு பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. இதற்கு காரணம் என்ன? கடந்த 20 […]
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் “டைமண்ட் பிரின்சஸ்” என்ற சொகுசுக் கப்பல் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட பயணிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். அதில் 162 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பு அரசியல் கட்சிகள், பொது […]
இந்தியர்களுக்கு டோக்கியோவில் இந்திய தூதரகம் தேவையான உதவிகளை அளித்து வருகிறது என ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை 1367 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனிடையே சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ […]
இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 70 வயதான கோத்தபய ராஜபக்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, சஜித் பிரேமதாசவை சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். […]
அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து அத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதில் இந்தியாவின் குரல் சர்வதேச அளவில் ஓங்கி ஒலித்து வருவதாகவும் , யோகா உள்ளிட்ட இந்திய கலாச்சார நிகழ்வுகள் சர்வதேச அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை […]