ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 480 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் வந்தனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து […]
Tag: Jallikattu
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நெஞ்சுப்பகுதியில் காளை முட்டியதில் காயமடைந்த 18 வயது இளைஞர் பாலமுருகன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மேலும் 60 பேர் சிறிய காயங்களுடன் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரில் பார்வையிட்ட காங்கிரஸ் திரு ராகுல்காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதுணையாக இருப்பேன் என கூறினார். பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சமாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். விழாவில் இடையே பேசிய அவர் தமிழ் கலாச்சாரத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்காகவே நேரில் வருகை தந்தாக தெரிவித்தார். ராகுல் காந்தி தமிழ் […]
தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டை காண்பதற்கு ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி ஆகியோர் பொங்கலன்று வருகை தர இருக்கிறார்கள். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும். அதேபோல் இந்தாண்டும் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உலகப் புகழ் வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையின் போது நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நாட்டா மதுரை மாவட்டம் அவனியாபுரம் வருகை […]
வேலூர் அருகே காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வேலூர் மாவட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காதலர் தினத்தையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டியானது மேல் வல்லம் கிராமத்தில் நடைபெற்றது. வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 199 காளைகள் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டன. காதலன் காதலியுடன் கொண்டாடவேண்டிய நாளில் காதலி இல்லாத முரட்டு […]
ஜல்லிக்கட்டு நிறைவு
திருச்சியில் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றுள்ளது. கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. கருங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 633 காளைகள் 429 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 22 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். இருந்தும் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டினை நடத்தி முடித்துள்ளனர்.
குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டினை தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பார்வையிட்டனர். தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும்விதமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை உள்பட மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான காளைகளும், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு களமாடினர். போட்டியின்போது, காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட […]
திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. உலகம் பட்டியில் உள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் , அலங்காநல்லூர், பாலமேடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த இந்த காளைகளை அடக்க 400க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர் . காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, […]
புனித அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 450க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளது. அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம் . இந்நிலையில் இந்தாண்டு அக்கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் 450 காளைகள், 250க்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாற்று மையம் அமைக்கப்படும் என்பது தவறான தகவல் என்றும், ஜல்லிக்கட்டு குறித்து சி.டி. வடிவில் மாணவர்களுக்கு வழங்கப்படும். பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படமாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 82 மையங்களில் 14 ஆயிரத்து 217 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டார மருத்துவர்கள், சுகாதார மருத்துவர்கள், செலிவியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 348 பணியாளர்கள் […]
கரூர் மாவட்டம், தோகை மலையை அடுத்த இராச்சா ண்டார் திருமலை என்கின்ற ஆர்.டி.மலையில் 58 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 850 காளைகள் பதிவு செய்து கலந்துகொண் டன. அவற்றிற்கு கால்நடை துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். காளைகளை அடக்க 420 மாடு பிடி வீரர்கள், 75 பேர் கொண்ட குழுவாக களம் இறங்கினர். ஒரு சில மாடு கள் பிடிபட்ட நிலையில் மற்ற மாடுகள் பிடிபடாமல் வீரர் களை மிரட்டிச் சென்றன. […]
ஜல்லிக்கட்டு போட்டியில் ஸ்ரீதர் என்பவர் தனது காளையுடன் நின்றுகொண்டிருந்தபோது மற்றொரு காளை அவரது வயிற்றில் முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 700 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே அலங்காநல்லூர் கிராமத்திற்கு வருகைதந்தனர். வீரர்கள் காளைகளை அடக்குவதை பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர். இளைஞர் உயிரிழந்த சோகம் இந்நிலையில், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த […]
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டை காண பாலமேட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப்பொங்கலான இன்று பாலமேட்டிலும் காணும் பொங்கலான நாளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடலில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் 936 வீரர்களும் முன்பதிவு செய்து தயார் நிலையில் உள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கி […]
திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் […]
தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மதுரை அவனியாபுரத்தில் 700 காளைகள், 650 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது . மேலும் விழாவில் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்கும். காவல் ஆணையர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் […]
பொங்கல் அன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நெரிசல் இன்றி நிற்பதற்கு போதுமான ஏற்பாடுகளை மாநகர காவல் துறை செய்துள்ளது. மதுரை மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் காளைகள் பங்கு பெறுவதற்கு ஏதுவாக தேவையான ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை செய்துள்ளது. அதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காளைகள் நெரிசல் இன்றி செல்வதற்கும் காளைகள் கூடுவதற்கும் அவனியாபுரம் காவல் நிலையத்திலிருந்து முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் […]
ஜல்லிக்கட்டுப் போட்டியில் களமிறங்கும் மாடு பிடி வீரர்களுக்கு டோக்கனும் ஜன. 13ஆம் தேதி காளைகளுக்கு டோக்கனும் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காளைகள் செல்லும் பாதை, வாடிவாசல், மாடுகள் வந்து சேருமிடம் ஆகியவற்றை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார் இதன் […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை காணும் வகையில் சிறப்பு சுற்றுலா பயணத்தை சுற்றுலா துறை அறிமுகம் செய்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இதை காண பல்வேறு மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் வருவார்கள். இந்த போட்டியை காணும் வகையில் சுற்றுலா துறை சிறப்பு சுற்றுலா பயணத்தை அறிமுகம் செய்துள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை வளாகத்திலிருந்து ஜனவரி 16ஆம் தேதி இரவு 9 மணிக்கு சுற்றுலா சொகுசு பேருந்து புறப்படும். 17ஆம் தேதி […]
வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் 650 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கி அனுமதிக்க மாவட்ட ஆட்சியரிடம் முறையிட பாலமேடு ஜல்லிக்கட்டு குழு முடிவு செய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விழாவானது, பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியன்றும், அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியன்றும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு குழு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் மட்டுமே […]
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது .போட்டி நடைபெறும் முன் புனித அந்தோணியார் தேவாலயத்தில் காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின் சீர்வரிசை தட்டுகளுடன் காளைகளை அழைத்து சென்று சென்று, அங்கு வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்நது செல்லும் காளைகளை வீரர்கள் அடக்கிப் பிடிக்கும் காட்சியை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் […]