டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, பல்கலைக்கழக வளாகத்தில், ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து, மனித சங்கிலி பேரணி நடத்தினர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி மாலை, உருட்டுக் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென புகுந்த முகமூடி அணிந்த கும்பல், மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில், 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும், ஆசிரியர்களும் படுகாயமடைந்தனர். பல்கலைக்கழக நிர்வாக நிர்வாகத்தின் […]
Tag: #JNUattack
டெல்லி ஜே.என்.யு.வில் நடைபெற்ற தாக்குதல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ஒன்று என சித்தராமைய்யா குற்றஞ்சாட்டினார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்திருந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், “அண்மையில் ஜே.என்.யு.வில் நடத்தப்பட்ட தாக்குதல் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒன்று. குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு எதிராகவே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு […]
ஜே.என்.யூ. தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக மாணவர் அமைப்பு, காங்கிரஸ் மாணவர் அமைப்பு ஆகியவைக்கு இடையே குஜராத்தில் மோதல் வெடித்துள்ளது. ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ஏ.பி.வி.பி.) சேர்ந்தவர்களுக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஏ.பி.வி.பி. எனக் குற்றஞ்சாட்டி […]
ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆசியர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு முகமூடி அணிந்து ஊடுருவிய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாணவர்கள், பேராசிரியர்களைச் சரமாரியாகத் தாக்கினர். இரும்புக் கம்பிகள், கம்புகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]
JNU பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லி JNU பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியினுள் நுழைந்த கும்பல் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடுமையாக தாக்கினார். கொடூர ஆயுதங்களோடு நுழைந்து மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP தான் காரணம் என்று ஒரு தரப்பினரும் , இடதுசாரி மாணவர் அமைப்புதான் […]
ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் நடிகர் அமிதாப் பச்சனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து-வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து-வருகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாய் திறக்காமல் மவுனம் காத்துவந்த நிலையில், […]
ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அம்மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஹைதராபாத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகமூடி அணிந்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இடதுசாரி மாணவ அமைப்பச் சேர்ந்த பலரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், மவுலான ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஒஸ்மானிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பல்கலைக்கழகத்தைச் […]
ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியது தாங்கள்தான் என்று இந்து ரக்ஷா தல் என்ற இந்து அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் பருவநிலை (செமஸ்டர்) தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்த முகமூடி கும்பல் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், பேராசிரியர்கள், […]
ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி, உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய பருவநிலைத் தேர்வுக்காக ஜேஎன்யு மாணவர்கள் தங்களது விவரங்களைப் பல்கலைக்கழக இணைதளத்தில் பதிவிடுவதைத் தடுக்கும் விதமாக, ஜனவரி 3ஆம் தேதி குறிப்பிட்ட சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இணையதள மையத்துக்குள் புகுந்து வைஃபை கருவியைச் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கும், இன்னொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் அது கை கலப்பில் முடிந்துள்ளது. வைஃபை கருவிகளைச் செயலிழக்கச் […]
ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன் என ஜே.என்.யு. பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்கள் விடுதிகள், வரவேற்பறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து […]
ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மாணவர்கள் விடுதிகள், வரவேற்பு அறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து உடைத்தது. இதில், […]
ஜே.என்.யூ. பல்கலைக்கழக்கத்தில் மாணவர்கள் மீது முகமூடி கும்பல் நடத்திய வன்முறைத் தாக்குதலின் பின்புலம் குறித்து பார்ப்போம். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) வளாகத்தில் பருவநிலைத் (செமஸ்டர்) தேர்வுப் பதிவை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்து அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட […]