அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்திய வழக்கில் கைதான கே சி பழனிச்சாமி ஜாமின் மனு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததை தொடர்ந்து அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்த […]
Tag: Judge
திரைப்பட இயக்குனர் முருகதாஸுக்கு பாதுகாப்பு தருவது குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பார் திரைப்படம் நஷ்டம் தொடர்பாக மிரட்டல் வருவதால் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாசின் கோரிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கம் அளிக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சேலம் அருகே வனத்துறையையொட்டி உள்ள பகுதியில் வசித்து வந்த மக்களை வனத்துறையினர் கட்டாயமாக வெளியேற்றி, அவர்களது வீடுகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தியது தொடர்பாக மாவட்ட சார்பு நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் தரையில் விழுந்து கதறி அழுததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரால்நத்தம் ஊராட்சியில், ஜல்லுத்துமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையையொட்டி உள்ள பகுதியான சூரியூர் என்ற இடத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை […]
நீலகிரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் நீதித்துறை நடுவர் மன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட மற்றும் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இதைத்தவிர பந்தலூர் பகுதியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் கடந்த 1 ½ ஆண்டுகளாக நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கடந்த 1 ½ வருடத்தில் போடப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. அவசர […]
பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி வலியுறுத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தில் தம்மை மிரட்டி ஓராண்டுக்கும் மேல் தன்னை கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சுவாமி சின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி தனது புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இன்னும் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு கூட […]
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
கோடநாடு விவகாரத்தில் முதல்வரும் , ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோடநாட்டில் நடைபெற்ற கொலை , கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையை தொடர்ந்த நீதிமன்றம் ஸ்டாலின் மீதான விசாரணைக்கு […]
டிக் டாக் ஷோ வழக்கில் குறும்பு வீடியோ எடுப்பதற்கும் , வெளியிடுவதற்கும் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. டிக் டாக் என்ற பிராங்க் ஷோ செயலியை தடைசெய்ய வேண்டும் என மதுரை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், டிக்-டாக் செயலியை தடைவிதிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி கிருபாகரன் […]