இன்றைய தினம் : 2019 ஜூலை 25 கிரிகோரியன் ஆண்டு : 206_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 207_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 159 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 306 – முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசராக அவரது இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டார். 1261 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிக்காயப் படையினர் கைப்பற்றி பைசாந்தியப் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர். 1467 – மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 1547 – இரண்டாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1554 – முதலாம் மேரி, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரைத் திருமணம் புரிந்தார். 1583 – குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. […]
Categories