இன்றைய தினம் : 2019 ஜூலை 31 கிரிகோரியன் ஆண்டு : 212_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 213_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 153 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் அடுத்தநாள் தற்கொலை செய்து கொண்டான். 781 – பூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது. 1009 – நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1423 – நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது. […]
Categories