இலங்கை அணி வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடியதை விட ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், ஒட்டுமொத்த நாடும் கோலாகலமாக கொண்டாடியது வைரலாகி வருகிறது. 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. […]
Tag: #Kabul
ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை படிப்படியாக கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முழுவதுமாக கைப்பற்றிய தலிபான்கள் தற்போது அங்கு ஆட்சி செய்து வருகின்றனர்.. இந்த ஆட்சி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. […]
ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து போய் அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பி செல்கின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல 3 கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 335 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. […]
ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உட்பட மேலும் 168 பேரை இந்தியா மீட்டுள்ளது.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து போய் அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பி செல்கின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல 3 கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 335 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. […]
காபூலில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து 2 பேர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டு மக்கள் உட்பட பல்வேறு நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.. அங்கிருந்து புறப்படும் விமானத்தில் ஏறி எப்படியாவது வெளி நாடுகளுக்கு சென்று விட வேண்டும் என்று முயல்கின்றனர்.. இந்தநிலையில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் டயர் அமைந்துள்ள பகுதியின் மேல் தொங்கியபடி சென்ற […]
ஆப்கானிஸ்தான் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு காபூலில் இருக்கும் ஒரு மசூதியில் நேற்று காலை திடீரென குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களில் வன்முறை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தமாத […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நடந்த அரசியல் பேரணியில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பின்னர், நேற்று பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி, 1995 ல் நடந்த கடுமையான உள்நாட்டுப் […]
ஆப்கானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலைப் படைத் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் அடிக்கடி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் அங்குள்ள தலைநகர் காபூலில் உள்ள மார்ஷல் ஃபாஹிம் ராணுவப் பயிற்சி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், […]
ஆப்கானிஸ்தானில் இன்று பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 83 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஹிரட் நகரில் இருந்து தலைநகர் காபுல் நோக்கி இன்று ஒரு பயணிகள் விமானம் 83 பேருடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானம் டெக்யாக் மாவட்ட பகுதியை கடந்து சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 83 பேரும் பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து சம்பவம் அறிந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு […]
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 இந்தியர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்துள்ளனர். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்த 900த்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்தனர். ஆப்கான் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பயங்கரவாதிகளில் இந்தியர்கள் பத்துபேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆப்கான் அதிகாரிகள், சரணடைந்த நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும், விசாரணைக்குப் பின் […]
ஆப்கானிஸ்தானில் திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 6 ஆம் தேதி அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இதை தொடர்ந்து 7-ஆம் தேதி அங்கு நடந்த குண்டுவெடிப்பு […]
ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ர்- இ -துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இத்திருமண விழாவுக்காக ஏராளமான விருந்தினர்கள் அங்கு வந்திருந்தனர். விழா நடைபெற்று கொண்டிருந்த போது உடல் முழுவதும் குண்டுகளை சுற்றி அணிந்து இருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சத்தத்துடன் அந்த குண்டு வெடித்ததில் அங்கிருந்த்த பலர் உடல் சிதறி கோரமான முறையில் […]